Shopify Collective செயலியில் ஆர்டர்களை நிர்வகித்தல்

உங்கள் ஸ்டோரில் வாடிக்கையாளர் ஆர்டரை அளித்த பிறகு, உங்களுக்கும் உங்கள் சப்ளையருக்கும் உங்கள் Shopify ஸ்டோர்களில் ஓர் ஆர்டர் கிடைக்கும். உங்கள் சப்ளையர் ஆர்டரை நிறைவேற்ற வேண்டும், நீங்களே ஆர்டரை நிறைவேற்றத் தேவையில்லை.

ஒரு சப்ளையர் ஆர்டரை நிறைவேற்றும்போது, தடமறிவதற்கான எண் போன்ற ஆர்டர் நிறைவேற்ற விவரங்களுடன் அந்த ஆர்டர் உங்கள் ஸ்டோரிலும் நிறைவேற்றப்படும். வாடிக்கையாளருக்குச் சப்ளையரின் ஸ்டோருக்குப் பதிலாக உங்கள் ஸ்டோரில் இருந்து ஷிப்பிங் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் அறிவிப்பு கிடைக்கும்.

Shopify Collective ஆர்டர்களுக்கான பேமெண்ட்டுகளைப் பெறுதல்

உங்கள் Shopify Collective ஆர்டர்களுக்கான பேமெண்ட்டுகளை நீங்கள் எப்படிப் பெறுகிறீர்கள் என்பதைப் பொறுத்து, Shopify Collective ஆர்டர்களுக்கான உங்கள் ஆர்டர் நிறைவேற்ற முறை மாறுபடலாம்:

  • உங்கள் ஆர்டர்களுக்கான பேமெண்ட்டுகளைத் தானாகவே பெற்றால், உங்கள் ஸ்டோரில் உள்ள ஆர்டருக்குப் பணம் செலுத்தப்பட்ட பிறகு, உங்கள் சப்ளையருக்கு என ஒரு தானியங்கு நிறைவேற்றக் கோரிக்கை உருவாக்கப்படும்.
  • உங்கள் ஆர்டர்களுக்கான பேமெண்ட்டுகளை மேனுவலாகப் பெற்றால் அல்லது ஓர் ஆர்டர் நிறைவேற்றப்படும் வரை பேமெண்ட்டுகளைப் பெறாத விற்பனைச் சேனலைப் பயன்படுத்தினால், ஓர் ஆர்டரிலுள்ள Shopify Collective தயாரிப்புகளுக்கான நிறைவேற்றத்தை உங்கள் சப்ளையரிடம் நீங்கள் கோர வேண்டும். ஆர்டர் நிறைவேற்றத்தைக் கோர, உங்கள் ஆர்டரில் உள்ள நிறைவேற்றத்தைக் கோரு > நிறைவேற்றக் கோரிக்கையை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் Shopify Collective தானியங்கு பேமெண்ட்டுகளைப் பயன்படுத்தினால், உங்கள் ஆர்டர் கட்டணம் செலுத்தப்பட்டதாகக் குறிக்கப்பட்டிருந்தாலும், நிறைவேற்றத்தைக் கோரிய உடனேயே Shopify Collective தயாரிப்புகளுக்கான கட்டணம் உங்களிடம் வசூலிக்கப்படும்.

சப்ளையர்களை மோசடியான ஆர்டர்கள் சென்றடைவதைத் தடுக்க உதவுங்கள்

ஆர்டர்கள் கட்டணம் செலுத்தப்பட்டதாகக் குறிக்கப்பட்டு, இரண்டு நிமிடங்கள் கடந்து, ஆர்டர் நிறுத்திவைக்கப்படாமல் இருந்தால் சப்ளையர் ஸ்டோர்களில் ஆர்டர்கள் உருவாக்கப்படும். இந்தத் தாமதமானது உங்கள் மோசடிச் சரிபார்ப்புகளுக்கும் தானியக்கமாக்கல்களுக்கும் பின்னணியில் செயல்படுவதற்கான நேரத்தை வழங்குகிறது. இந்தக் காலக்கட்டத்தில், சந்தேகத்திற்கிடமான ஆர்டர்களுக்கான நிறைவேற்றத்தை நீங்கள் மேனுவலாகவோ அல்லது Shopify Flow போன்ற தானியக்கமாக்கல் கருவிகளைப் பயன்படுத்தியோ ரத்துசெய்யலாம் அல்லது நிறுத்திவைக்கலாம்.

நிறைவேற்றத்தின் மீது ஒரு நிறுத்திவைப்பு உருவாக்கப்பட்ட பிறகு, அந்த நிறுத்திவைப்பு விடுவிக்கப்பட்டால், சப்ளையர் ஸ்டோரில் ஆர்டர் உருவாக்கப்படும்.

நிறைவேற்றமானது 2 நிமிடங்களுக்குள் ரத்துசெய்யப்படாவிட்டால் அல்லது நிறுத்திவைக்கப்படாவிட்டால், சப்ளையர் ஸ்டோரில் ஆர்டர் உருவாக்கப்படும்.

சப்ளையர்களுடன் பகிரப்படும் வாடிக்கையாளர் தகவல்

உங்கள் சப்ளையர் ஆர்டரை அனுப்பும் வகையில், உங்கள் சப்ளையரின் ஸ்டோரில் உருவாக்கப்படும் ஆர்டரில் உங்கள் வாடிக்கையாளரின் பெயர் மற்றும் ஷிப்பிங் முகவரி ஆகியவையும், தொலைபேசி எண்ணை அவர்கள் வழங்கியிருந்தால் அதுவும் சேர்க்கப்பட்டிருக்கும்.

உங்கள் வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரி, உங்கள் சப்ளையருடன் பகிரப்படாது. அதற்குப் பதிலாக, சப்ளையரின் ஆர்டரானது உங்கள் Shopify Collective செயலி அமைப்புகளின் தொடர்பு விவரங்கள் பிரிவில் உள்ள மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தும், அத்துடன் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு பிரத்தியேக அடையாளங்காட்டி சேர்க்கப்படும். உதாரணமாக, உங்கள் தொடர்பு மின்னஞ்சல் orders@example.com ஆக இருந்தால், சப்ளையரின் ஆர்டர் orders+12345@example.com போன்ற ஒரு முகவரியைப் பயன்படுத்தும்.

இந்த முகவரிக்கு உங்கள் சப்ளையர் அனுப்பும் எந்தவொரு மின்னஞ்சல்களும் உங்கள் வாடிக்கையாளருக்குப் பதிலாக உங்களுக்கே வரும். இந்த முகவரியில் ஒரு சப்ளையரிடமிருந்து மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களைப் பெற்றால், உங்கள் சப்ளையரைத் தொடர்புகொண்டு அதை நிறுத்தச் சொல்லவும்.

Shopify Collective ஆர்டர்களுக்கான ரிட்டர்ன்களை நிர்வகித்தல்

உங்கள் ரிட்டர்ன் செயல்முறைகளை நிர்வகிப்பதற்கான கொள்கைகளைப் பயன்படுத்துவது பற்றித் தெரிந்துகொள்ள, Shopify Collective செயலியில் ரிட்டர்ன் கொள்கைகளை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

Shopify Collective ஆர்டர்களை ரத்துசெய்யுங்கள்

ஆர்டரின் நிலை நிறைவேற்றம் செயல்பாட்டில் உள்ளது என்பதாக இருக்கும்போது Shopify Collective ஆர்டரை ரத்துசெய்ய நீங்கள் கோரலாம். ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஆர்டர்களை ரத்துசெய்ய நீங்கள் கோர முடியாது. ஆர்டரை ரத்துசெய்ய நீங்கள் கோரிய பிறகு, ஆர்டரை ரத்துசெய்வதற்கான மின்னஞ்சல் சப்ளையருக்கு அனுப்பப்படும். ஒரு சப்ளையர் ஏற்கனவே ஆர்டரைச் செயல்படுத்தியிருந்தால், அவர்கள் ஆர்டர் ரத்துசெய்தலைத் தொடர மாட்டார்கள்.

சப்ளையர் ஒரு Shopify Collective ஆர்டரை ரத்துசெய்தால், உங்கள் ஆர்டர் நிலை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என மாறும், மேலும் ரத்துசெய்ததற்கான காரணமும் காட்டப்படும்.

தானியங்கு பேமெண்ட்டுகளைப் பயன்படுத்தும்போது, Shopify Collective தானாகவே ஆர்டரை ரத்துசெய்கிறது:

  • நீங்கள் ரத்துசெய்யக் கோரும்போது பேமெண்ட் இன்னும் பெறப்படவில்லை எனில் உடனடியாக
  • நீங்கள் ரத்துசெய்யக் கோரியபோது பேமெண்ட் பெறப்பட்டிருந்தாலும், சப்ளையர் ஆர்டரை ஷிப் செய்யவில்லை எனில் 14 நாட்களுக்குப் பிறகு

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. ரத்துசெய்வதற்கு நீங்கள் கோர விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் ரத்துசெய்யக் கோர விரும்பும் உருப்படிக்கு அடுத்துள்ள நிறைவேற்றப்பட்டது பிரிவில், Horizontal menu என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ரத்துசெய்தலைக் கோரு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. விருப்பத்திற்குரியது: இந்த ஆர்டரை ஏன் ரத்துசெய்யக் கோருகிறீர்கள் என்பது போன்ற ஒரு குறிப்பைச் சப்ளையருக்காக உள்ளிடவும்.

  5. ரத்துசெய்யக் கோரு என்பதைக் கிளிக் செய்யவும்.

Shopify Collective ஆர்டர்களுக்குப் பணத்தைத் திரும்பப்பெறுதல்

உங்கள் வாடிக்கையாளருக்குப் பணத்தைத் திரும்பப்பெற, உங்கள் சொந்த Shopify நிர்வாகியில் ஆர்டரை ரத்துசெய்ய வேண்டும். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள உங்களின் மற்ற ஆர்டர்களை ரத்துசெய்வதைப் போலவே Shopify Collective ஆர்டர்களையும் ரத்துசெய்யலாம். மேலும் தகவலுக்கு, ஆர்டர்களை ரத்துசெய்தல், காப்பகப்படுத்துதல் மற்றும் நீக்குதல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் சப்ளையரிடமிருந்து பணத்தைத் திரும்பப்பெறக் கோருவதற்கு:

  • நீங்களும் உங்கள் சப்ளையரும் Collective இல் தானியங்குப் பேமெண்ட்டுகளைச் செயல்படுத்தியிருந்தால், சப்ளையர் பணத்தைத் திரும்பப்பெறுதல் செயல்முறையைத் தொடங்கிய பிறகு, நிதியானது உங்களுக்குத் தானாகவே மாற்றப்படும்.
  • உங்களுக்கும் உங்கள் சப்ளையருக்கும் இடையே தானியங்குப் பேமெண்ட்டுகள் அம்சம் செயல்படுத்தப்படவில்லை எனில், சப்ளையர் நிதியை கைமுறையாக உங்களுக்கு அனுப்பி, பணத்தைத் திரும்பப்பெறுதல் பரிமாற்றச் செயல்முறை குறித்து உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

Shopify Collective மூலம் ஃப்ளாஷ் விற்பனையை நடத்துதல்

Shopify Collective ஃப்ளாஷ் விற்பனையைச் சாத்தியப்படுத்துகிறது, அதேசமயம் அதிக டிராஃபிக் உள்ள காலகட்டத்தில் சரக்கு இருப்பின் அதிக விற்பனை அல்லது குறைவான விற்பனையிலிருந்து பாதுகாக்கிறது. சில்லறை விற்பனையாளர்கள் சப்ளையர்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளை நிமிடத்திற்கு 6,100 செக்அவுட்கள் வரையிலான விகிதத்தில் நம்பிக்கையுடன் விற்கலாம்.

செக்அவுட்டின்போது, அதிக அளவிலான விற்பனையை ஆதரிப்பதற்காக, சமீபத்திய சரக்கு இருப்புத் தகவலைப் பயன்படுத்திப் பல சரிபார்ப்புகளை Collective மேற்கொள்கிறது.