Shopify Collective செயலியில் உங்கள் சப்ளையர்களுக்குப் பணம் செலுத்துதல்

வாடிக்கையாளர் உங்கள் ஸ்டோரில் ஆர்டர் செய்யும்போது, அந்த ஆர்டருக்கான முழு பேமெண்ட்டையும் பெறுவீர்கள். அந்தப் பேமெண்ட்டிலிருந்து, விற்கப்பட்ட தயாரிப்பின் செலவுக்கும் ஷிப்பிங் செலவுக்கும் உங்கள் சப்ளையருக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.

Shopify Collective தானியங்குப் பேமெண்ட்டுகள்

நீங்கள் Collective இன் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்தால், Shopify Collective ஐ நிறுவும் போது தானியங்குப் பேமெண்ட்டுகள் இயக்கப்படும். தயாரிப்புகளுக்கும் ஷிப்பிங்கிற்கும் உங்கள் சப்ளையர்களுக்குப் பணம் செலுத்தப் பரிந்துரைக்கப்படும் வழி இதுவாகும். Shopify Collective இன் தானியங்குப் பேமெண்ட்டுகள் அம்சத்தைப் பயன்படுத்துவதற்குக் கூடுதல் கட்டணங்கள் ஏதுமில்லை.

Shopify Collective இல் உங்களுக்கும் உங்கள் சப்ளையருக்கும் தானியங்குப் பேமெண்ட்டுகள் இயக்கப்படும் போது, நீங்கள் விற்கும் எந்தவொரு Shopify Collective தயாரிப்பின் அடக்க விலையும் உங்கள் Shopify Payments இருப்பிலிருந்து தானாகவே கழிக்கப்படும். அதன்பின், அவர்கள் ஆர்டரை நிறைவேற்றப்பட்டதாகக் குறிக்கும் போது, நிதியானது உங்கள் சப்ளையரின் Shopify Payments கணக்கிற்குத் தானாகவே மாற்றப்படும்.

நீங்கள் Shopify Collective செயலியில் நேரடியாக Shopify Collective பேமெண்ட்டுகளைப் பார்க்கலாம் மற்றும் தடமறியலாம்.

சப்ளையருக்கான தானியங்குப் பேமெண்ட்டுகளை நீங்கள் முடக்கினால், அவர்களிடமிருந்து நீங்கள் வாங்கும் எந்தவொரு தயாரிப்புகளின் செலவுக்கும் சப்ளையருக்கு எப்படிப் பணம் செலுத்துவது என்பதை ஒப்புக்கொள்வது உங்கள் பொறுப்பாகும். உதாரணமாக, உங்கள் சப்ளையர் உங்களுக்கு ஒரு விலைப்பட்டியலை அனுப்பலாம்.

இணைக்கப்பட்ட சப்ளையர்களுடன் தானியங்குப் பேமெண்ட்டுகளைப் பயன்படுத்துவதற்கான தேவைகள்

ஒரு புதிய இணைப்புடன் தானியங்குப் பேமெண்ட்டுகளைப் பயன்படுத்த, நீங்களும் உங்கள் சப்ளையரும் பின்வரும் அளவுகோல்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்:

உங்களுக்குச் சொந்தமான ஸ்டோர்களுக்கு இடையே Shopify Collective இல் தானியங்குப் பேமெண்ட்டுகளைப் பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

நீங்கள் Shopify Collective ஐ சில்லறை விற்பனையாளராகவும் சப்ளையராகவும் பயன்படுத்தினால், ஆர்டர்களுக்காக உங்களுக்குச் சொந்தமான சப்ளையர் ஸ்டோருக்குப் பணம் செலுத்தத் தானியங்குப் பேமெண்ட்டுகளைப் பயன்படுத்தலாம். அனைத்து நிதிகளையும் (கட்டணத் தொகைகளைக் கழித்து) அனுப்ப, 0% தள்ளுபடியை அமைக்கவும் அல்லது நிதியின் ஒரு சதவீதத்தை அனுப்ப வேறு சதவீதத் தள்ளுபடியைச் சேர்க்கவும்.

உங்களுக்குச் சொந்தமில்லாத சப்ளையர் ஸ்டோரில் தானியங்குப் பேமெண்ட்டுகள் செயல்படுவதைப் போலவே, நிதியானது உடனடியாக வசூலிக்கப்பட்டு, ஆர்டர் ஷிப் செய்யப்படும் வரை வைத்திருக்கப்படும். உங்களின் சப்ளையர் ஸ்டோருக்குப் பணம் செலுத்துவதற்காக உங்கள் சில்லறை விற்பனை ஸ்டோரில் இருந்து நிதி கழிக்கப்படாமல் இருக்கவும், நிலுவையில் உள்ள ஷிப்மெண்ட்டுக்கான பேமெண்ட் நிறுத்திவைக்கப்படாமல் இருக்கவும் உங்களுக்குச் சொந்தமான ஸ்டோர்களுக்கு இடையேயான தானியங்குப் பேமெண்ட்டுகளை நீங்கள் முடக்கலாம்.

சப்ளையருக்கான தானியங்குப் பேமெண்ட்டுகளை இயக்குக

Collective செயலியைப் பயன்படுத்த உங்களுக்குத் தகுதி இருந்தால், நீங்கள் தானியங்குப் பேமெண்ட்டுகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும் உங்கள் சப்ளையர்களைப் பார்க்கலாம்.

உங்கள் Collective செயலியில் இருந்து நேரடியாக சப்ளையருக்கான தானியங்குப் பேமெண்ட்டுகளை நீங்கள் இயக்கலாம், மேலும் இந்த மாற்றம் குறித்துச் சப்ளையருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collective என்பதற்குச் செல்லவும்.

  2. சப்ளையர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தானியங்குப் பேமெண்ட்டுகள் நெடுவரிசையில், ஒவ்வொரு சப்ளையருக்கும் தானியங்குப் பேமெண்ட்டுகள் இயக்கத்தில் அல்லது முடக்கத்தில் உள்ளதா என்பதைப் பார்க்கவும்.

  4. சப்ளையருக்கான தானியங்குப் பேமெண்ட்டுகளை இயக்க, தொடர்புடைய சப்ளையரைக் கிளிக் செய்யவும்.

  5. பேமெண்ட்டுகள் பிரிவில், தானியங்குப் பேமெண்ட்டுகள் பொத்தானை இயக்கவும்.

  6. உரையாடல் பெட்டியில், இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

சப்ளையருக்கான தானியங்குப் பேமெண்ட்டுகளை முடக்குக

தானியங்குப் பேமெண்ட்டுகள் இயக்கத்தில் இருக்கும்போது சப்ளையர்களால் மட்டுமே அவற்றை முடக்க முடியும். இதைக் கோர, அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.

உங்கள் Shopify Collective பேமெண்ட்டுகளைப் பார்க்கவும்

Shopify Collective செயலியின் பேமெண்ட்டுகள் பக்கத்தில் உங்கள் Shopify Collective பேமெண்ட்டுகளைப் பார்க்கலாம். ஒவ்வொரு வரிசையிலும் ஒரு ஆர்டருக்கான ஒரு சப்ளையரின் பேமெண்ட் விவரங்கள் காட்டப்படும். பல சப்ளையர்களைக் கொண்ட ஆர்டர்களுக்கு, ஒவ்வொரு சப்ளையருக்கும் தனித்தனி வரிசைகள் இருக்கும்.

உங்கள் பேமெண்ட்டுகள் தொடர்பான பின்வரும் தகவல்களை நீங்கள் பார்க்கலாம்:

  • ஆர்டர் தேதி
  • ஆர்டர் எண்
  • சப்ளையர்
  • பேமெண்ட் நிலை
  • நிகரத் தயாரிப்பு மார்ஜின் என்பது, ஷிப்பிங் மற்றும் வரிகள் சேர்க்கப்படாமல் சில்லறை விலையிலிருந்து தள்ளுபடிகள், பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் மற்றும் அந்த ஆர்டரிலுள்ள சப்ளையரின் தயாரிப்புகளுக்கான அடக்க விலையைக் கழித்து வருவதாகும்
  • சப்ளையர் பேஅவுட் என்பது, பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் மற்றும் ரத்துசெய்தல்களுக்கான மாற்றங்கள் செய்யப்பட்ட தயாரிப்புகள், ஷிப்பிங் மற்றும் பொருந்தக்கூடிய வரிகளுக்கான பேமெண்ட் தொகையாகும்

ஒரு சப்ளையர் பேமெண்ட் முடிந்துவிட்டதா என்பதை உறுதிசெய்ய, பேமெண்ட் நிலையைச் சரிபார்க்கவும்.

நிகரத் தயாரிப்பு மார்ஜின் புதுப்பிக்கப்பட 24 மணிநேரம் வரை ஆகலாம். ஒரு ஆர்டருக்கு மேனுவலாகப் பணத்தைத் திரும்பப்பெறுதல் செய்யப்பட்டிருந்தால், அதற்கான நிகரத் தயாரிப்பு மார்ஜினைக் காட்ட முடியாது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தேதி வரம்பிற்கான உங்கள் மொத்த லாபத்தை, மொத்த லாபம் சுருக்கத்திலும் பார்க்கலாம். மொத்த லாபம் என்பது உங்களின் நிகர விற்பனையிலிருந்து, ரிட்டர்ன்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் ஆகியவற்றுக்குப் பிறகு தயாரிப்புச் செலவுகளைக் கழித்து வருவதாகும். இதில் வரிகள் மற்றும் நீங்களோ உங்கள் வாடிக்கையாளரோ செலுத்தும் எந்தவொரு ஷிப்பிங் செலவும் அடங்காது.

உங்கள் Shopify நிர்வாகியிலும் உங்கள் ஸ்டோரின் அனைத்துப் பேஅவுட்களுடனும் சேர்த்து Shopify Collective பேமெண்ட்டுகளையும் பார்க்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collective என்பதற்குச் செல்லவும்.

  2. பேமெண்ட்டுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. ஆர்டர் பேமெண்ட்டுகள் பிரிவில், Shopify Collective பேமெண்ட்டுகளைப் பார்க்கவும்.

போதிய நிதி இல்லாததைக் கையாளுதல்

சில நேரங்களில் Shopify Collective இல் உங்கள் சப்ளையர்களுக்குப் பணம் செலுத்த, உங்கள் Shopify Payments இருப்பில் போதிய நிதி இல்லாமல் இருக்கலாம். பின்வரும் சூழ்நிலைகளில் இது நிகழலாம்:

  • உங்கள் வாடிக்கையாளர்கள் PayPal போன்ற மாற்றுப் பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும்போது, ஏனெனில் இந்த நிதி உங்கள் Shopify Payments இருப்பில் கிடைக்காது.
  • உங்கள் Shopify Payments பேஅவுட்கள் அடிக்கடி நிகழும்போது, உதாரணமாக, தினசரி பேஅவுட்களைப் பெற்றால், சப்ளையர்களுக்குப் பணம் செலுத்த உங்களுக்குக் கிடைக்கும் நிதி குறைவாக இருக்கும்.
  • Shopify Payments பேஅவுட்டிற்குப் பிறகு உங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் அல்லது சார்ஜ்பேக்குகள் ஏற்பட்டிருந்தால்.

நிதி போதுமானதாக இல்லாதபோது என்ன நடக்கும்

சப்ளையர் பேமெண்ட்டிற்காக உங்கள் Shopify Payments இருப்பிலிருந்து Collective ஆல் நிதியைக் கழிக்க முடியாதபோது, பின்வருவன நிகழும்:

  • தானியங்கு மறுமுயற்சிகள்: பேமெண்ட் வெற்றிகரமாக முடியும் வரை, அதை எடுக்க Collective தானாகவே மறுமுயற்சி செய்யும். நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.
  • சப்ளையர் ஆர்டர்கள் 'பேமெண்ட் நிலுவையில் உள்ளது' எனக் காட்டப்படும்: உங்கள் கணக்கிலிருந்து வெற்றிகரமாகக் கழிக்கப்படும் வரை சப்ளையர் தரப்பில் ஆர்டர்கள் செலுத்தப்படாதவை எனக் காட்டப்படும்.
  • சப்ளையர்கள் ஆர்டர் நிறைவேற்றத்தைத் தாமதப்படுத்தலாம்: சில சப்ளையர்கள் ஆர்டர்களை ஷிப் செய்வதற்கு முன், பேமெண்ட் உறுதிப்படுத்தலுக்காகக் காத்திருக்கலாம்.

போதிய நிதி இல்லை என்பதைத் தடுப்பது எப்படி

பேமெண்ட் தாமதங்களைத் தவிர்க்கவும் உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சரியான நேரத்தில் ஆர்டர் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யவும், பின்வரும் படிகளை மேற்கொள்வதைக் கருத்தில் கொள்ளவும்:

  • உங்கள் பேஅவுட் அட்டவணையைச் சரிசெய்யவும்: உங்கள் Shopify Payments பேஅவுட் அதிர்வெண்ணைத் தினசரி என்பதற்குப் பதிலாக வாராந்திரம் அல்லது மாதாந்திரம் என அமைக்கவும். இது Collective பேமெண்ட்டுகளுக்கு அதிக இருப்பை வைத்திருக்க உதவுகிறது. உங்கள் பேஅவுட் அட்டவணையை எப்படி மாற்றுவது என்பதை அறிந்துகொள்ளவும்.
  • செக்அவுட்டில் Shopify Paymentsஐப் பயன்படுத்தவும்: Shopify Payments மூலம் செலுத்தப்படும் ஆர்டர்களுக்கான நிதிகள் Collective டெபிட்டுகளுக்கு உடனடியாகக் கிடைக்கும். PayPal போன்ற மாற்றுப் பேமெண்ட் முறைகள் உங்கள் Shopify Payments இருப்பில் சேர்க்கப்படாது.
  • பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் மற்றும் சார்ஜ்பேக்குகளைக் குறைக்கவும்: இவை உங்களது கிடைக்கக்கூடிய Shopify Payments இருப்பைக் குறைக்கக்கூடும் என்பதோடு உங்கள் Collective சப்ளையர்களுக்கான பேமெண்ட்டுகளில் தாமதங்களை ஏற்படுத்தக்கூடும்.

உங்களிடம் போதிய நிதி இல்லாதபோது சப்ளையர்களிடம் என்ன சொல்ல வேண்டும்

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவான ஷிப்பிங்கை உறுதிசெய்ய, பேமெண்ட் உறுதிசெய்யப்படுவதற்கு முன்பே சில சப்ளையர்கள் ஆர்டர்களை நிறைவேற்றத் தேர்வுசெய்யக்கூடும். ஒரு ஆர்டர் பேமெண்ட் நிலுவையில் உள்ளது எனக் காட்டப்படுவது குறித்து ஒரு சப்ளையர் உங்களைத் தொடர்புகொண்டால், உங்கள் Shopify Payments இருப்பு நிரப்பப்படுகிறது என்றும் இதற்குச் சில வணிக நாட்கள் ஆகலாம் என்றும் அவர்களிடம் தெரிவிக்கவும். Collective டெபிட் பேமெண்ட் வெற்றிகரமாக முடிந்ததும், அவர்களின் ஆர்டர் விவரங்கள் பக்கத்தில் அந்த ஆர்டர் செலுத்தப்பட்டது எனக் காட்டப்படும்.