Shopify Collective செயலியில் தயாரிப்புக் கொள்கைகள்

Shopify Collective செயலியில் தயாரிப்புக் கொள்கைகளைப் பயன்படுத்தும்போது, உங்களின் தயாரிப்பு இறக்குமதி மற்றும் நிர்வாகப் பணிகளை நீங்கள் தானியக்கமாக்கலாம்.

தயாரிப்புகளை எப்படி இறக்குமதி செய்து ஒத்திசைப்பது என்பது குறித்துக் குறிப்பிட்ட விதிகளை நீங்கள் அமைக்கலாம், அத்துடன் விற்பனைக்குக் கிடைக்காத தயாரிப்புகளை எப்படிக் கையாளுவது என்பதையும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.

உங்கள் கொள்கை அமைப்புகளைப் புதுப்பிக்கும்போது, புதுப்பிப்புகள் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்படும், மேலும் நீங்கள் மாற்றியமைத்த எந்தவொரு தயாரிப்புத் தகவலும் சப்ளையரின் தயாரிப்புத் தகவலாலேயே மேலெழுதப்படும். உங்களிடம் பெரிய தயாரிப்பு அட்டவணை இருந்தால், உங்கள் கொள்கை விதிகளின்படி உங்கள் தயாரிப்புகளைப் புதுப்பிக்கச் சிறிது நேரம் ஆகலாம்.

இயல்புநிலைத் தயாரிப்புக் கொள்கைகள்

சில்லறை விற்பனையாளராக நீங்கள் Shopify Collective இல் இணையும்போது, இயல்புநிலைத் தயாரிப்புக் கொள்கை தானாகவே உருவாக்கப்படும். நீங்கள் இயல்புநிலைக் கொள்கையைத் திருத்தலாம், தனிப்பயன் கொள்கைகளை உருவாக்கலாம். உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தயாரிப்புக் கொள்கைகளில் நீங்கள் சரிசெய்யக்கூடிய வெவ்வேறு விதிகள் உள்ளன.

இயல்புநிலைத் தயாரிப்புக் கொள்கையானது பின்வரும் இயல்புநிலை விதிகளையும் அமைப்புகளையும் கொண்டுள்ளது:

  • தயாரிப்பு இறக்குமதி:
    • இறக்குமதி செய்யும் முறை: கைமுறையாக
    • இவ்வாறு இறக்குமதி செய்: செயலில் உள்ளது
    • இங்கு வெளியிடு: அனைத்துச் சேனல்களும்
  • தயாரிப்பு விவரங்களின் ஒத்திசைவு:
    • சரக்கு இருப்பு (சப்ளையரிடமிருந்து எப்போதுமே ஒத்திசைக்கப்படும்)
  • தயாரிப்புப் பிழைகள்: தயாரிப்பை விற்க முடியாவிட்டால் சரக்கு இருப்பை 0 என அமை

தயாரிப்புக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளுதல்

சப்ளையரின் தயாரிப்புகளை உங்கள் ஸ்டோருக்குக் கைமுறையாக இறக்குமதி செய்ய வேண்டுமா அல்லது தானாகவே இறக்குமதி செய்ய வேண்டுமா என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மேலும், எந்தெந்தத் தயாரிப்பு விவரங்களைச் சப்ளையரிடமிருந்து உங்கள் ஸ்டோருக்குத் தானாகவே ஒத்திசைக்க வேண்டும் என்பதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், அத்துடன் கிடைக்காத தயாரிப்புகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் தீர்மானிக்கலாம்.

தயாரிப்பு இறக்குமதி

தலைப்பு, படங்கள், விலை போன்ற அசல் தயாரிப்பு விவரங்களுடன் ஒரு சப்ளையரின் தயாரிப்புகள் உங்களுக்குக் கிடைக்கின்றன. தயாரிப்புத் தலைப்பைக் கிளிக் செய்யும்போதோ உங்கள் ஸ்டோருக்கு ஒரு தயாரிப்பை இறக்குமதி செய்த பிறகோ அசல் தயாரிப்பு விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் ஸ்டோருக்குத் தயாரிப்பை இறக்குமதி செய்யும்போது, அதன் விவரங்களை உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் சரிசெய்யலாம். இருப்பினும், உங்கள் தயாரிப்புக் கொள்கை அமைப்புகளின் அடிப்படையில் சில விவரங்கள் சப்ளையரின் தகவலுடன் தானாகவே ஒத்திசைக்கப்படும். சரக்கு இருப்பு சப்ளையரால் கட்டுப்படுத்தப்பட்டு, எப்போதுமே ஒத்திசைக்கப்படும். இயல்புநிலையாக ஒப்பீட்டு விலை ஒத்திசைக்கப்படாது, ஆனால் அதை உங்களின் தயாரிப்புக் கொள்கை அமைப்புகளில் ஒத்திசைக்கத் தேர்ந்தெடுக்கலாம்.

Shopify Collective இல் உள்ள தயாரிப்பு இறக்குமதியைப் பற்றி மேலும் அறிய, பின்வரும் அட்டவணையைச் சரிபார்க்கவும்.

Shopify Collective செயலியில் உள்ள தயாரிப்பு இறக்குமதி விதிகளின் பட்டியல்.
விதிவிருப்பங்கள்விளக்கம்
இறக்குமதி செய்யும் முறை
  • கைமுறையாக
  • தானாகவே
அனைத்துச் சப்ளையர் தயாரிப்புகளையும் உங்கள் ஸ்டோருக்குத் தானாகவே இறக்குமதி செய்ய வேண்டுமா அல்லது கைமுறையாக இறக்குமதி செய்ய வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கைமுறையாக இறக்குமதி செய்யும் முறையைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் சப்ளையர் தயாரிப்புகளை உங்கள் ஸ்டோருக்குக் கைமுறையாக இறக்குமதி செய்யவேண்டும். உங்களின் தயாரிப்புக் கொள்கை அமைப்புகளைப் பொருத்து, சப்ளையரின் ஸ்டோரில் இருந்து பின்வரும் தயாரிப்புத் தகவல் இறக்குமதி செய்யப்பட்டு ஒத்திசைக்கப்படும்:
  • ஒப்பீட்டு விலை - உங்களின் தயாரிப்புக் கொள்கை அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே ஒத்திசைக்கப்படும்
  • சரக்கு இருப்பு - சப்ளையரிடமிருந்து எப்போதுமே ஒத்திசைக்கப்படும்
  • தயாரிப்புச் சில்லறை விலை
  • தயாரிப்புத் தலைப்பு
  • தயாரிப்பு மீடியா
  • தயாரிப்பு விளக்கம்
  • மாறுபாடுகள்
  • விற்பனையாளர் (சப்ளையரின் பெயர்)
  • வகை
  • தயாரிப்பு வகை
  • SKU (ஸ்டாக் கீப்பிங் யூனிட்)
  • பார்கோடு
  • எடை
  • மூல நாடு/பிராந்தியம்
  • ஹார்மோனைஸ்டு சிஸ்டம் (HS) குறியீடு
இவ்வாறு இறக்குமதி செய்
  • வரைவு
  • செயலில் உள்ளது
சப்ளையர் தயாரிப்புகளை உங்கள் ஸ்டோருக்கு இறக்குமதி செய்யும்போது அமைக்க வேண்டிய தயாரிப்பு நிலையைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு வெளியிடு
  • அனைத்துச் சேனல்களும்
  • குறிப்பிட்ட சேனல்கள்
  • வெளியிட வேண்டாம்
உங்களின் சப்ளையர் தயாரிப்புகள் எந்தெந்த விற்பனைச் சேனல்களில் வெளியிடப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

தயாரிப்பு விவரங்களின் ஒத்திசைவு

சப்ளையர் தயாரிப்புகளை உங்கள் ஸ்டோருக்கு இறக்குமதி செய்த பிறகு, சரக்கு இருப்பு உங்கள் சப்ளையர்களிடமிருந்து தானாகவே ஒத்திசைக்கப்படும். சப்ளையர்களிடமிருந்து பின்வரும் கூடுதல் தயாரிப்பு விவரங்கள் எவற்றையேனும் தொடர்ந்து ஒத்திசைக்க நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்:

  • தலைப்புகள்
  • விளக்கம்
  • மீடியா
  • வகை
  • சில்லறை விலை
  • ஒப்பீட்டு விலை
  • தயாரிப்பு வகை
  • SKU
  • பார்கோடு
  • எடை
  • மூல நாடு/பிராந்தியம்
  • ஹார்மோனைஸ்டு சிஸ்டம் (HS) குறியீடு

வாடிக்கையாளர் ஒருவர் உங்கள் ஸ்டோரில் ஆர்டரைச் செய்யும்போது, அந்த ஆர்டரில் Shopify Collective தயாரிப்புகள் இருந்தால், உங்கள் ஸ்டோரிலும் சப்ளையரின் ஸ்டோரிலும் தயாரிப்பின் சரக்கு இருப்பு தானாகவே சரிசெய்யப்படும்.

தயாரிப்புப் பிழைகள்

சப்ளையர் உங்களுடன் பகிர்ந்த தயாரிப்பு கிடைக்காமல் போனால், உங்கள் ஸ்டோரில் கிடைக்காத தயாரிப்புகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் ஸ்டோரில் கிடைக்காத தயாரிப்புகளைக் கையாள்வதற்கான வெவ்வேறு விருப்பங்களைப் பற்றி மேலும் அறிய, பின்வரும் அட்டவணையைச் சரிபார்க்கவும்.

Shopify Collective இல் கிடைக்காத தயாரிப்புகளை எப்படிக் கையாள்வது என்பதற்கான விருப்பங்களின் பட்டியல்.
விருப்பம்விளக்கம்
சரக்கு இருப்பை 0 என அமைதயாரிப்பு கையிருப்பில் இல்லாமல் போகும், மேலும் உங்கள் வாடிக்கையாளர்களால் தயாரிப்பைப் பார்க்க முடியும், ஆனால் வாங்க முடியாது.
வரைவாக அமைஉங்கள் ஸ்டோரிலிருந்து தயாரிப்பு வெளியிடப்படாமல் போகும், மேலும் உங்கள் வாடிக்கையாளர்களால் அதைப் பார்க்கவோ வாங்கவோ முடியாது.
தயாரிப்புகளை நீக்குஒரு தயாரிப்பு உங்கள் ஸ்டோரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும். இந்தச் செயலைச் செயல்தவிர்க்க முடியாது.