Shopify Collective செயலி மூலம் ஷிப்பிங்கை நிர்வகித்தல்
நீங்கள் Shopify Collective செயலியைப் பயன்படுத்தும்போது, உங்கள் ஸ்டோரின் ஷிப்பிங் மற்றும் டெலிவரி அமைப்புகளில் இயல்புநிலை Shopify Collective ஷிப்பிங் சுயவிவரம் உருவாக்கப்பட்டிருக்கும். சப்ளையர்களின் நேரலை ஷிப்பிங் கட்டணங்களைப் பெறவும், உங்கள் ஸ்டோரின் செக்அவுட்டில் அவற்றை வாடிக்கையாளர் ஆர்டர்களில் சேர்க்கவும் இந்த ஷிப்பிங் சுயவிவரம் உங்களை அனுமதிக்கிறது.
நீங்கள் தனிப்பயன் Shopify Collective ஷிப்பிங் சுயவிவரத்தை உருவாக்கினால் தவிர, Shopify Collective-இல் சப்ளையர்களிடமிருந்து நீங்கள் இறக்குமதி செய்யும் தயாரிப்புகள் தானாகவே உங்களின் இயல்புநிலை Shopify Collective ஷிப்பிங் சுயவிவரத்தில் சேர்க்கப்படும்.
உங்கள் ஸ்டோரின் செக்அவுட்டில் எந்த சப்ளையரின் ஷிப்பிங் கட்டணங்கள் காட்டப்பட வேண்டும் என்பதை வரையறுக்கவும், ஷிப்பிங் கட்டணப் பெயர்கள் மற்றும் போக்குவரத்து நேர விளக்கங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதை அமைக்கவும் ஷிப்பிங் கொள்கைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
இப்பக்கத்தில்
ஷிப்பிங் கட்டணங்களைக் கணக்கிடுதல்
சப்ளையர்கள் தங்களின் விலைப்பட்டியல்களைப் பயன்படுத்தி வெவ்வேறு தயாரிப்புகளுக்கு உங்களிடம் வெவ்வேறு ஷிப்பிங் கட்டணங்களை வசூலிக்கலாம். அவர்கள் ஷிப்பிங் செய்யும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் நிலையான ஷிப்பிங் கட்டணங்கள் அல்லது கணக்கிடப்பட்ட ஷிப்பிங் கட்டணங்களை அவர்கள் அமைக்கலாம்.
குறிப்பிட்ட தயாரிப்புகளுக்காகச் சில்லறை விற்பனையாளர்களை மேனுவலாக இன்வாய்ஸ் செய்கிறார்களா அல்லது குறிப்பிட்ட ஷிப்பிங் மண்டலங்களுக்குக் குறிப்பிட்ட தயாரிப்புகளை ஷிப்பிங் செய்ய வேண்டாம் எனத் தீர்மானிக்கிறார்களா என்பதையும் சப்ளையர்களால் குறிப்பிட முடியும்.
சப்ளையர்கள் தங்களின் விலைப்பட்டியல்களில் வெவ்வேறு ஷிப்பிங் கட்டணங்கள் மற்றும் அமைப்புகளுக்கிடையே எப்படித் தேர்வு செய்யலாம் என்பது குறித்து மேலும் அறிய, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்:
| சப்ளையர் ஷிப்பிங் அமைப்பு | விளக்கம் |
|---|---|
| நிலையான கட்டணம் | சப்ளையரால் அமைக்கப்பட்ட நிலையான தொகை, இது ஷிப்மென்ட்டின் எடை, வாடிக்கையாளர் இடம் அல்லது பிற அளவுகோல்களுக்கு ஏற்ப மாறுபடாது. |
| செக்அவுட்டில் கணக்கிடப்பட்டது | சப்ளையரின் அமைப்புகளில் இருந்து ஒத்திசைக்கப்பட்டு, உங்கள் ஸ்டோரின் செக்அவுட்டில் காட்டப்படும் கணக்கிடப்பட்ட கட்டணம். சப்ளையரின் ஷிப்பிங் சுயவிவரங்களில் உள்ளமைக்கப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் கட்டணங்கள் கணக்கிடப்படுகின்றன. விதிகளுக்கான எடுத்துக்காட்டுகளில் ஷிப்மென்ட்டின் எடை, வாடிக்கையாளர் இடம் அல்லது குறைந்தபட்ச விலைக்கு மேலான ஆர்டர்களுக்கான இலவச ஷிப்பிங் சலுகை ஆகியவை அடங்கும். |
| மேனுவலாக இன்வாய்ஸ் செய் | உங்கள் சப்ளையரின் தயாரிப்புப் பட்டியலில் தொடர்புடைய ஷிப்பிங் மண்டல நெடுவரிசையில் மேனுவல் எனக் காட்டப்படும். மேனுவல் இன்வாய்ஸ் உடன் ஷிப்பிங் கட்டணத்தைத் தொடர்புபடுத்த முடியாது, எனவே வாடிக்கையாளர்களின் கார்ட்டில் தொடர்புடைய தயாரிப்புகள் இருக்கும்போது, உங்கள் ஸ்டோரின் செக்அவுட்டில் இயல்பாகவே '$0 USD இலவச ஷிப்பிங்' எனக் காட்டப்படும். சப்ளையரின் ஷிப்பிங் செலவுகளை ஈடுகட்ட, செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பயன் கட்டணங்களை அனுப்ப அனுமதிக்கும், ஒரு தனிப்பயன் ஷிப்பிங் சுயவிவரத்திற்கு இந்தத் தயாரிப்புகளை நகர்த்துவது குறித்துப் பரிசீலிக்கவும். Shopify Collective-க்கு வெளியே நீங்கள் எந்த மேனுவல் பேமெண்ட் முறையைப் பயன்படுத்துவீர்கள் மற்றும் எந்தெந்த விதிமுறைகளின் கீழ் பயன்படுத்துவீர்கள் என்பதை உங்கள் சப்ளையரிடம் ஒப்புக்கொள்ள மறக்காதீர்கள். |
| மண்டலத்திற்கு ஷிப்பிங் செய்யப்படவில்லை | உங்கள் சப்ளையரின் தயாரிப்புப் பட்டியலில் தொடர்புடைய ஷிப்பிங் மண்டல நெடுவரிசையில் – எனக் காட்டப்படும். சப்ளையர் ஷிப்பிங் செய்யாத இடத்தில் உள்ள வாடிக்கையாளருக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு அவர்களின் முகவரிக்கு ஷிப்பிங் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கும் செய்தி செக்அவுட்டில் காட்டப்படும். |
Shopify Collective-இல் இரண்டு ஸ்டோர்களிலும் தானியங்கி பேமெண்ட்டுகள் இயக்கப்படும்போது, நிலையான கட்டணங்கள் மற்றும் கணக்கிடப்பட்ட கட்டணங்களின் பேமெண்ட் சில்லறை விற்பனையாளரிடமிருந்து சப்ளையருக்கு அனுப்பப்படும்.
சப்ளையர் ஷிப்பிங் கட்டணங்களைப் பார்த்தல்
உங்கள் Shopify Collective செயலியின் சப்ளையர்கள் பகுதிக்குச் செல்வதன் மூலம் எந்தத் தயாரிப்புகளுக்கு எந்த ஷிப்பிங் கட்டணங்களைச் சப்ளையர்கள் வசூலிக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து செயலிகள் > Collective என்பதற்குச் செல்லவும்.
சப்ளையர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் ஷிப்பிங் கட்டணங்களைப் பார்க்க விரும்பும் சப்ளையரைக் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கிறது அல்லது இறக்குமதி செய்யப்பட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அமெரிக்கா, கனடா மற்றும் சர்வதேச மண்டலங்களுக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள ஷிப்பிங் கட்டணங்கள் உள்ளிட்ட, தயாரிப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தகவல்களை மதிப்பாய்வு செய்யவும்.
ஷிப்பிங் கட்டணங்கள் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களின் செக்அவுட் அனுபவம்
உங்கள் ஸ்டோரின் செக்அவுட்டில் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் ஷிப்பிங் கட்டணங்கள் மற்றும் உத்தேச டெலிவரி நேரங்கள் பின்வரும் காரணிகளைப் பொறுத்து அமையும்:
- சப்ளையரால் அமைக்கப்பட்டுள்ள ஷிப்பிங் கட்டணங்கள்.
- உங்கள் ஷிப்பிங் கொள்கைகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பங்கள்.
- உங்கள் ஸ்டோரில் நீங்கள் அமைக்கும் தனிப்பயன் Collective ஷிப்பிங் சுயவிவரங்கள் எவையேனும்.
வாடிக்கையாளர் தங்களுடைய கார்ட்டில் Collective தயாரிப்புகளுடன் உங்கள் ஸ்டோரின் செக்அவுட்டிற்குச் செல்லும்போது, உங்கள் சொந்த ஷிப்பிங் கட்டணங்களுடன் தனிப்பயன் Collective ஷிப்பிங் சுயவிவரத்தை நீங்கள் உருவாக்கியிருந்தாலன்றி, அந்தத் தயாரிப்புகளுக்கு உங்கள் சப்ளையர் விதிக்கும் ஷிப்பிங் கட்டணங்களே அவர்களுக்குக் காட்டப்படும்.
எடுத்துக்காட்டாக, உங்கள் சப்ளையர் ஷிப்பிங்கிற்கு $5 USD-ஐ நிலையான கட்டணமாக விதித்தால், உங்கள் செக்அவுட்டில் ஷிப்பிங்கிற்கான நிலையான கட்டணம் $5 USD எனக் காட்டப்படும். உங்கள் சப்ளையர் $6 USD-ஐ நிலையான கட்டணமாக விதித்தாலோ அல்லது $45 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு இலவச ஷிப்பிங் போன்ற சலுகையை வழங்கியிருந்தாலோ, உங்கள் செக்அவுட்டில் அதுவும் காட்டப்படும்.
உங்கள் சப்ளையரின் அனைத்துக் கணக்கிடப்பட்ட கட்டணங்களையோ குறைந்த செலவுள்ள கட்டணத்தை மட்டுமோ காட்ட நீங்கள் தேர்வுசெய்யலாம், அத்துடன் சப்ளையரின் கணக்கிடப்பட்ட கட்டணங்களை உங்கள் சொந்த ஷிப்பிங் கட்டணப் பெயர்கள் மற்றும் போக்குவரத்து நேர விளக்கங்களுடன் மறுபெயரிடலாம். மேலும் அறிய, Shopify Collective செயலியில் ஷிப்பிங் கொள்கைகள் என்பதைப் பார்க்கவும்.
பல சப்ளையர்களின் தயாரிப்புகளைக் கொண்டுள்ள கார்ட்டுகளுக்கான ஷிப்பிங் கட்டணங்கள்
வாடிக்கையாளரின் கார்ட்டில் ஒன்று அல்லது பல Shopify Collective சப்ளையர்களின் தயாரிப்புகளும் அத்துடன் உங்கள் சொந்தத் தயாரிப்புகள் ஒன்று அல்லது பலவும் இருந்தால், நீங்கள் உங்கள் ஷிப்பிங் சுயவிவரங்களை உள்ளமைத்துள்ள விதத்தின்படி செக்அவுட்டில் ஷிப்பிங் கட்டணங்கள் இணைக்கப்படும். ஒற்றை இணைக்கப்பட்ட ஷிப்பிங் கட்டணம் உங்கள் வாடிக்கையாளருக்குக் காட்டப்படும்.
பல சப்ளையர்களிடமிருந்தான தயாரிப்புகளைக் கொண்ட ஆர்டர்களுக்காக, உங்கள் ஸ்டோரின் செக்அவுட்டில் ஷிப்பிங் கட்டணங்கள் கணக்கிடப்படும்போது, சப்ளையர் வழங்கும் ஷிப்பிங் விருப்பங்களிலேயே குறைந்த செலவுடையதையே உங்கள் வாடிக்கையாளர் எப்போதும் செலுத்துவார்.
Shopify Checkout இல் பிரித்து அனுப்புதல்
செக்அவுட்டில் பிரித்து அனுப்புதல் செயல்படுத்தப்படும்போது, வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஷிப்மென்ட்டிற்குமான ஷிப்பிங் கட்டணம் காட்டப்படும். செக்அவுட்டில் பிரித்து அனுப்புதல் அம்சமானது, வாடிக்கையாளர்களின் ஆர்டரில் உள்ள தனிப்பட்ட தயாரிப்புகள் எப்போது வந்து சேரும் என்பது குறித்தும், வெவ்வேறு சப்ளையர்களால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு ஷிப்மென்ட்டிற்கும் தாங்கள் எவ்வளவு செலுத்துகிறோம் என்பது குறித்தும் கூடுதல் கட்டுப்பாட்டையும் தெளிவையும் அவர்களுக்கு வழங்குகிறது.
இயல்பாகவே, செக்அவுட்டில் பிரித்து அனுப்புதல் அம்சமானது, ஆர்டரில் உள்ள அனைத்து ஷிப்மென்ட்டுகளுக்கும் மிகக் குறைந்த மொத்த ஷிப்பிங் செலவைத் தேர்ந்தெடுக்கிறது.
சப்ளையரின் ஷிப்பிங் கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்குச் செலுத்துதல்
சப்ளையர்கள் வழங்கும் ஷிப்பிங் கட்டணங்களை நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் செலுத்த விரும்பும்போது, செக்அவுட்டில் கட்டணங்கள் வாடிக்கையாளர்களுக்கு எப்படிக் காட்டப்படும் என்பதற்கான பின்வரும் எடுத்துக்காட்டுகளை மதிப்பாய்வு செய்யவும்.
| வாடிக்கையாளர் கார்ட் | விரும்பிய செக்அவுட் அனுபவம் | சப்ளையர் ஷிப்பிங் கட்டணங்கள் | செக்அவுட்டில் வாடிக்கையாளர் பெறும் கட்டணம் | சில்லறை விற்பனையாளர் சப்ளையருக்குச் செலுத்துவது |
|---|---|---|---|---|
| சப்ளையர்-மட்டுமான கார்ட் ஹெல்மெட் & ஷார்ட்ஸ் | சப்ளையர் கட்டணங்களைச் செலுத்துதல் (கணக்கிடப்பட்டது) | ஹெல்மெட் = கணக்கிடப்பட்ட கட்டணங்கள் (UPS இலிருந்து $8.65 USD பெறப்பட்டது) ஷார்ட்ஸ் = கணக்கிடப்பட்ட கட்டணங்கள் (UPS இலிருந்து $5 USD பெறப்பட்டது) | வாடிக்கையாளர் $8.65 USD செலுத்துகிறார் (கணக்கிடப்பட்ட கட்டணங்கள் நிலையான கட்டணங்களை மீறுகின்றன) | $8.65 USD |
| சப்ளையர்-மட்டுமான கார்ட் ஹெல்மெட் & ஷார்ட்ஸ் | சப்ளையர் கட்டணங்களைச் செலுத்துதல் (நிலையானது) | ஹெல்மெட் = $6 USD நிலையான கட்டணம் ஷார்ட்ஸ் = $5 USD நிலையான கட்டணம் | வாடிக்கையாளர் $6 USD செலுத்துகிறார் (அதிகபட்ச மதிப்பு) | $6 USD |
| கலப்பு கார்ட் சில்லறை விற்பனையாளர் சைக்கிள் & சப்ளையர் ஹெல்மெட் | சப்ளையர் கட்டணங்களைச் செலுத்துதல் (கணக்கிடப்பட்டது) | சில்லறை விற்பனையாளரின் சைக்கிள் = இலவச ஷிப்பிங் சப்ளையர் ஹெல்மெட் = கணக்கிடப்பட்ட கட்டணங்கள் (UPS இலிருந்து $8.65 USD பெறப்பட்டது) | வாடிக்கையாளர் $8.65 USD செலுத்துகிறார் செக்அவுட்டில் பிரித்து அனுப்புதலுடன்: சில்லறை விற்பனையாளர் சைக்கிள் = இலவச ஷிப்பிங் சப்ளையர் ஹெல்மெட் = $8.65 USD | $8.65 USD |
| கலப்பு கார்ட் சில்லறை விற்பனையாளர் சைக்கிள் & சப்ளையர் ஹெல்மெட் | சப்ளையர் கட்டணங்களைச் செலுத்துதல் (நிலையானது) | சில்லறை விற்பனையாளரின் சைக்கிள் = இலவச ஷிப்பிங் சப்ளையர் ஹெல்மெட் = $6 USD நிலையான கட்டணம் | வாடிக்கையாளர் $6 USD செலுத்துகிறார் செக்அவுட்டில் பிரித்து அனுப்புதலுடன்: சில்லறை விற்பனையாளர் சைக்கிள் = இலவச ஷிப்பிங் சப்ளையர் ஹெல்மெட் = $6 USD | $6 USD |
சப்ளையர் ஷிப்பிங் கட்டணங்களைத் தனிப்பயன் ஷிப்பிங் சுயவிவரங்களுடன் மீறுதல்
உங்கள் சப்ளையரின் ஷிப்பிங் கட்டணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என நீங்கள் தேர்வுசெய்யலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் தளத்தில் உள்ள ஷிப்பிங் சலுகையுடன் பொருந்தும் வகையில் சப்ளையரின் $5 USD நிலையான ஷிப்பிங் கட்டணத்தை $20 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு இலவச ஷிப்பிங் என மாற்ற நீங்கள் விரும்பலாம், அல்லது உங்கள் சப்ளையர் பயன்படுத்தும் கேரியர் சேவைக்குப் பதிலாக வேறு கேரியர் சேவையைப் பயன்படுத்த நீங்கள் விரும்பலாம்.
இயல்பான Shopify Collective ஷிப்பிங் சுயவிவரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் இவற்றைப் செய்யலாம்:
- Collective தயாரிப்புகளைத் தனிப்பயன் ஷிப்பிங் சுயவிவரத்திற்கு நகர்த்துதல்
- இலவச ஷிப்பிங் தள்ளுபடியை உருவாக்குதல்
செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பயன் ஷிப்பிங் கட்டணத்தைக் காட்ட சப்ளையரின் ஷிப்பிங் கட்டணத்தை நீங்கள் மீறினால், சப்ளையர் அவர்களின் Collective ஷிப்பிங் அமைப்புகளில் குறிப்பிடும் நிலையான அல்லது கணக்கிடப்பட்ட ஷிப்பிங் கட்டணத்தையே நீங்கள் இன்னமும் அவர்களுக்குச் செலுத்த வேண்டும்.
தளம் முழுவதுக்குமான ஷிப்பிங் கொள்கையை வழங்குதல்
தளம் முழுவதுக்குமான ஷிப்பிங் கொள்கையை வழங்க நீங்கள் விரும்பும்போது, செக்அவுட்டில் வாடிக்கையாளர்களுக்குக் கட்டணங்கள் எப்படிக் காட்டப்படும் என்பதற்கான பின்வரும் எடுத்துக்காட்டுகளை மதிப்பாய்வு செய்யவும்:
| வாடிக்கையாளர் கார்ட் | விரும்பிய செக்அவுட் அனுபவம் | சில்லறை விற்பனையாளர் உள்ளமைவு | சப்ளையர் ஷிப்பிங் கட்டணங்கள் | சில்லறை விற்பனையாளர் சப்ளையருக்குச் செலுத்துவது |
|---|---|---|---|---|
| சப்ளையர்-மட்டுமான கார்ட் ஹெல்மெட் & ஷார்ட்ஸ் | $10 USD ஷிப்பிங் அல்லது $50 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு இலவச ஷிப்பிங் | $50 USD-க்கு மேலான கார்ட் மதிப்பிற்கு இலவச ஷிப்பிங் தள்ளுபடியை உருவாக்குகிறது | ஷார்ட்ஸ் = $5 USD நிலையான கட்டணம் ($40 MSRP) ஹெல்மெட் = $6 USD நிலையான கட்டணம் ($15 MSRP) | $6 USD நிலையான கட்டணம் |
| சப்ளையர்-மட்டுமான கார்ட் ஹெல்மெட் & ஷார்ட்ஸ் | $10 USD ஷிப்பிங் அல்லது $50 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு இலவச ஷிப்பிங் |
தனிப்பயன் ஷிப்பிங் சுயவிவரத்தில் $10 USD நிலையான கட்டணம் அல்லது $50 USD-க்கு மேல் இலவசம் எனத் தயாரிப்புகளைச் சேர்க்கிறது Shopify Collective ஷிப்பிங் சுயவிவரத்திலிருந்து Collective கேரியர் சேவையை அகற்றுகிறது | ஷார்ட்ஸ் = $5 USD நிலையான கட்டணம் ($40 MSRP) ஹெல்மெட் = $6 USD நிலையான கட்டணம் ($15 MSRP) | $6 USD நிலையான கட்டணம் |
| கலப்பு கார்ட் சில்லறை விற்பனையாளர் சைக்கிள் & சப்ளையர் ஷார்ட்ஸ் & ஹெல்மெட் | $10 USD ஷிப்பிங் அல்லது $50 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு இலவச ஷிப்பிங் | $50 USD-க்கு மேலான கார்ட் மதிப்பிற்கு இலவச ஷிப்பிங் தள்ளுபடியை உருவாக்குகிறது | ஷார்ட்ஸ் = $5 USD நிலையான கட்டணம் ($40 MSRP) ஹெல்மெட் = $6 USD நிலையான கட்டணம் ($15 MSRP) | $6 USD நிலையான கட்டணம் |
| கலப்பு கார்ட் சில்லறை விற்பனையாளர் சைக்கிள் & சப்ளையர் ஷார்ட்ஸ் & ஹெல்மெட் | $10 USD ஷிப்பிங் அல்லது $50 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு இலவச ஷிப்பிங் |
தனிப்பயன் ஷிப்பிங் சுயவிவரத்தில் $10 USD நிலையான கட்டணம் அல்லது $50 USD-க்கு மேல் இலவசம் எனத் தயாரிப்புகளைச் சேர்க்கிறது Shopify Collective ஷிப்பிங் சுயவிவரத்திலிருந்து Collective கேரியர் சேவையை அகற்றுகிறது | ஷார்ட்ஸ் = $5 USD நிலையான கட்டணம் ($40 MSRP) ஹெல்மெட் = $6 USD நிலையான கட்டணம் ($15 MSRP) | $6 USD நிலையான கட்டணம் |