Shopify Collective விற்பனைச் சேனலில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுடனான இணைப்பைத் துண்டித்தல்

உங்களின் கூட்டாண்மையை முடிக்க முடிவு செய்தால், உங்கள் Shopify Collective விற்பனைச் சேனலில் உள்ள சில்லறை விற்பனையாளருடனான இணைப்பைத் துண்டிக்கலாம். சில்லறை விற்பனையாளருடனான இணைப்பை நீங்கள் துண்டிக்கும்போது, உங்கள் ஸ்டோர்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். சில்லறை விற்பனையாளர்களுடனான இணைப்பைத் துண்டிப்பதால் அவர்களுடனான தயாரிப்பு ஒத்திசைவு நிறுத்தப்படும்.

சில்லறை விற்பனையாளருடனான இணைப்பைத் துண்டிக்கும் முன், நிறைவேற்றப்பட்ட ஆர்டர்களுக்காக நிலுவையில் உள்ள ஏதேனும் பேமெண்ட்டுகள் குறித்துப் பேசுவதற்கும், நிறைவேற்றப்படாத ஆர்டர்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்து ஒப்புக்கொள்வதற்கும் அவர்களைத் தொடர்புகொள்ளவும்.

சில்லறை விற்பனையாளர்களுடனான இணைப்பைத் துண்டிக்கும் முன் கவனிக்க வேண்டியவை

உங்கள் Shopify Collective விற்பனைச் சேனலில் உள்ள சில்லறை விற்பனையாளருடனான இணைப்பைத் துண்டிக்கும் முன், கவனிக்க வேண்டிய கீழ்க்காணும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • ஒரு சில்லறை விற்பனையாளருடனான இணைப்பைத் துண்டிப்பது உங்கள் Shopify ஸ்டோர்களுக்கு இடையிலான இணைப்பை உடனடியாகத் துண்டிக்கிறது. சில்லறை விற்பனையாளருக்கு மின்னஞ்சல் மூலம் இது தெரிவிக்கப்படும்.
  • சில்லறை விற்பனையாளரின் Shopify ஸ்டோரில், உங்களிடமிருந்து அவர்கள் இறக்குமதி செய்த அனைத்துத் தயாரிப்புகளின் சரக்கு இருப்பும் 0 என அமைக்கப்படும்.
  • நிறைவேற்றப்படாத எந்தவொரு ஆர்டர்கள் குறித்தும் பேச, நீங்கள் சில்லறை விற்பனையாளரைத் தொடர்புகொள்ள வேண்டும் அல்லது நிறைவேற்றப்படாத ஆர்டர்களை உங்கள் Shopify நிர்வாகியில் ரத்துசெய்யலாம்.
  • சில்லறை விற்பனையாளருடனான இணைப்பை நீங்கள் துண்டித்த சில நிமிடங்களிலேயே ஆர்டர் ஒத்திசைவு நின்றுவிடும்; ஆர்டர்களுடன் தடமறிவதற்கான எண்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவையும் ஒத்திசைக்கப்படாது.
  • நிறைவேற்றப்பட்ட ஆர்டர்களுக்கான பேமெண்ட்டுகள் பாதிக்கப்படாது, அத்துடன் பணத்தைத் திரும்பப்பெறுதல்களைத் தொடர்ந்து செயல்படுத்தலாம்.

கூட்டாண்மை முடிந்த பிறகு பேமெண்ட்டைப் பெறுதல்

இணைப்பைத் துண்டித்த ஒரு சில்லறை விற்பனையாளருடன் புதிய ஆர்டர்களை உருவாக்க முடியாது, ஆனால் உங்களுக்கு இன்னும் பேமெண்ட் கிடைக்கப்பெறாத நடப்பு ஆர்டர்கள் இருக்கலாம். இந்த ஆர்டர்களுக்கு நீங்கள் எப்படிப் பேமெண்ட் பெறுகிறீர்கள் என்பது Shopify Collective விற்பனைச் சேனலில் உள்ள உங்களின் பேமெண்ட் அமைப்புகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுடன் நீங்கள் செய்துள்ள தனிப்பட்ட ஏற்பாட்டைப் பொறுத்ததாகும்.

ஒரு சில்லறை விற்பனையாளரிடம் தானியங்கி பேமெண்ட்டுகள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தால்

சில்லறை விற்பனையாளரிடம் நீங்கள் தானியங்கி பேமெண்ட்டுகளைப் பயன்படுத்தினால், அவர்களுடனான இணைப்பைத் துண்டித்த பிறகும், நீங்கள் நிறைவேற்றிய ஆர்டர்களுக்காக அவர்களிடம் இருந்து தானாகவே பேமெண்ட்டைத் தொடர்ந்து பெறுவீர்கள்.

சில்லறை விற்பனையாளருடனான இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு, நீங்கள் தொடரும் எந்தவொரு நிறைவேற்றப்படாத ஆர்டர்களுக்கும் தானாகவே பேமெண்ட் கிடைக்காது. நிறைவேற்றப்படாத ஆர்டர்களை ஷிப்பிங் செய்வதற்கு முன்பாக, மேனுவல் பேமெண்ட் முறை மற்றும் நிபந்தனைகள் குறித்துச் சில்லறை விற்பனையாளருடன் ஒப்புக்கொண்டுள்ளதை உறுதிசெய்யவும்.

ஒரு சில்லறை விற்பனையாளரிடம் தானியங்கி பேமெண்ட்டுகள் டீஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தால்

சில்லறை விற்பனையாளருடன் நீங்கள் தானியங்கி பேமெண்ட்டுகளைப் பயன்படுத்தவில்லை என்றால், அவர்களுடனான இணைப்பைத் துண்டித்த பிறகு, முன்பே நிறைவேற்றப்பட்ட அனைத்து ஆர்டர்களுக்கும் அவர்களிடம் இருந்து மேனுவலாகப் பேமெண்ட்டுகளைத் தொடர்ந்து வசூலியுங்கள். Collective இல் உங்களது கூட்டாண்மை முடிவடைந்த பிறகு, நீங்கள் ஷிப்பிங் செய்ய ஒப்புக்கொள்ளும் எந்தவொரு நிறைவேற்றப்படாத ஆர்டர்களுக்கும் மேனுவல் பேமெண்ட் வசூல் பொருந்தும்.

சில்லறை விற்பனையாளருடனான இணைப்பைத் துண்டி

Shopify Collective இல் கூட்டாண்மையை முடிக்க விரும்பினால், சில்லறை விற்பனையாளருடனான உங்கள் இணைப்பைத் துண்டிக்கலாம். இணைப்பைத் துண்டிக்கும்போது, நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய ஏதேனும் தவறான நடத்தை குறித்த புகாரையும் விருப்பத்தின் பேரில் அனுப்பலாம்.

சில்லறை விற்பனையாளருடனான இணைப்பைத் துண்டித்த பிறகும், Shopify Collective விற்பனைச் சேனலில் உள்ள உங்களின் சில்லறை விற்பனையாளர்கள் பக்கத்தில் இருக்கும் காப்பகம் தாவலில் அவர்களின் தொடர்பு விவரங்களையும் உங்கள் ஆர்டர்கள், விற்பனை அளவீடுகளையும் தொடர்ந்து பார்க்க முடியும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Collective: Supplier என்பதற்குச் செல்லவும்.

  2. சில்லறை விற்பனையாளர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. இணைக்கப்பட்டது தாவலில், நீங்கள் இணைப்பைத் துண்டிக்க விரும்பும் சில்லறை விற்பனையாளரைக் கிளிக் செய்யவும் அல்லது தேர்ந்தெடுக்கவும்.

  4. சில்லறை விற்பனையாளருடனான இணைப்பைத் துண்டி என்பதைக் கிளிக் செய்யவும்

  5. விருப்பத்தேர்வு: சில்லறை விற்பனையாளர் குறித்து Collective குழுவுக்குப் புகாரளிக்க விரும்பினால், தவறான நடத்தை குறித்துச் சில்லறை விற்பனையாளர் மீது புகாரளி என்பதைத் தேர்ந்தெடுத்து, செய்தியை உள்ளிடவும்.

  6. இணைப்பைத் துண்டி என்பதைக் கிளிக் செய்யவும்.