Shopify Collective விற்பனைச் சேனலில் ஆர்டர்களை நிறைவேற்றுவதும் ரிட்டர்ன்களை நிர்வகிப்பதும்
ஒரு சில்லறை விற்பனையாளருடன் இணைந்து அவர்களுக்கு விலைப்பட்டியலைப் பகிர்ந்த பிறகு, சில்லறை விற்பனையாளர் உங்கள் தயாரிப்புகளைத் தங்களின் Shopify ஸ்டோரில் விற்கத் தொடங்கலாம்.
உங்கள் தயாரிப்புகள் அடங்கிய விற்பனையைச் சில்லறை விற்பனையாளர் செய்யும்போது, உங்கள் Shopify நிர்வாகியில் ஓர் ஆர்டரைப் பெறுவீர்கள். உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள ஆர்டர்கள் பக்கத்தில் Shopify Collective ஆர்டர்களை வடிகட்டலாம், மேலும் ஆர்டரை நேரடியாக வாடிக்கையாளருக்கு அனுப்புவதன் மூலம் அதை நிறைவேற்றலாம். ஆர்டர் எந்தச் சில்லறை விற்பனையாளரிடமிருந்து வருகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில், ஆர்டர் விவரங்கள் பக்கத்தில் சில்லறை விற்பனையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள் ஒரு Shopify Collective ஆர்டரை நிறைவேற்றிய பிறகு, அந்த ஆர்டர் உங்களுடைய ஸ்டோரிலும் உங்கள் சில்லறை விற்பனையாளரின் ஸ்டோரிலும் நிறைவேற்றப்பட்டது எனக் குறிக்கப்படும்.
இந்தப் பக்கத்தில்
Shopify Collective ஆர்டர்களை வடிகட்டுதல்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
ஐகானைக் கிளிக் செய்யவும்.
வடிகட்டியைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, சேனல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
Shopify Collective என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இவ்வாறு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஆர்டர் வடிகட்டிக்குப் பெயரிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
Shopify Collective ஆர்டர்களை நிறைவேற்றுதல்
உங்கள் Shopify நிர்வாகியில் பிற ஆர்டர்களை நிறைவேற்றுவதைப் போலவே Shopify Collective ஆர்டர்களையும் நீங்கள் நிறைவேற்றலாம். மேலும் தகவலுக்கு, உங்கள் சொந்த ஆர்டர்களை நிறைவேற்றுதல் என்பதைப் பார்க்கவும். நல்ல வணிக உறவைப் பேணுவதற்கும் உங்கள் சில்லறை விற்பனையாளர்களுக்குச் சரியான எதிர்பார்ப்புகளை அமைப்பதற்கும், மதிப்பிடப்பட்ட ஆர்டர்ச் செயலாக்க நேரத்தை (எடுத்துக்காட்டாக 2 வணிக நாட்கள்) அவர்களுக்கு வழங்குவதைப் பரிசீலிக்கவும்.
நீங்கள் ஒரு Shopify Collective ஆர்டரை நிறைவேற்றும்போது, ஷிப்பிங் உறுதிப்படுத்தல் அறிவிப்பு மின்னஞ்சலானது உங்கள் ஸ்டோருக்குப் பதிலாகச் சில்லறை விற்பனையாளரின் ஸ்டோரிலிருந்து அனுப்பப்படும்.
Shopify Collective ஆர்டர்களை நீங்கள் திருத்தவோ அவற்றிற்குப் பணத்தைத் திரும்பப்பெறவோ முடியாது. நீங்கள் ஆர்டரை ரத்துசெய்துவிட்டு, சில்லறை விற்பனையாளரைப் புதிய ஆர்டரைச் செய்யுமாறு கேட்க வேண்டும்.
Shopify Collective ஆர்டர்களுக்கான ரிட்டர்ன்களை நிர்வகித்தல்
ரிட்டர்ன்கள், ரிட்டர்ன் கட்டணங்கள், ரிட்டர்ன் நிராகரிப்புகள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் ஆகியவற்றை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதற்கான விதிகளை அமைக்க, சில்லறை விற்பனையாளர்கள் கொள்கைகளை உருவாக்கலாம்.
நீங்கள் இணைந்து பணியாற்றும் ஒவ்வொரு சில்லறை விற்பனையாளருடனான உங்கள் இணைப்பு விவரங்கள் பக்கத்தில், சில்லறை விற்பனையாளரின் ரிட்டர்ன் கொள்கையை நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு சில்லறை விற்பனையாளருக்குமான Shopify Collective ஆர்டர்களுக்கு ரிட்டர்ன் செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை ரிட்டர்ன் கொள்கையின் விதிகள் வரையறுக்கின்றன.
Shopify Collective இல் சில்லறை விற்பனையாளர் ரிட்டர்ன் கொள்கைகளுடன் நடக்கும் தானியக்கமாக்கல்களின் பின்வரும் எடுத்துக்காட்டுகளைச் சரிபார்க்கவும்:
- உங்கள் Shopify நிர்வாகியில் ரிட்டர்ன்கள் தானாகவே உருவாக்கப்படும்.
- திருப்பியனுப்பல் லேபிள்களும் ரிட்டர்னுக்கான காரணங்களும் உங்கள் Shopify நிர்வாகியுடன் ஒத்திசைக்கப்படும்.
- நீங்கள் ஒரு ரிட்டர்னை மூடும்போது, இது சில்லறை விற்பனையாளரின் ஸ்டோருடன் ஒத்திசைக்கப்படும்.
Shopify Collective ஆர்டர்களுக்குப் பணத்தைத் திரும்பப்பெறுதல்
Shopify Collective ஆர்டர்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து உங்கள் சில்லறை விற்பனையாளருடன் நீங்கள் உடன்பட வேண்டும்:
- நீங்களும் உங்கள் சில்லறை விற்பனையாளரும் Collective இல் தானியங்கி பேமெண்ட்டுகளைச் செயல்படுத்தியிருக்கும் போது, நீங்கள் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கையைத் தொடங்கிய பிறகு, அந்தப் பணம் தானாகவே சில்லறை விற்பனையாளருக்கு மாற்றப்படும்.
- நீங்களோ உங்கள் சில்லறை விற்பனையாளரோ தானியங்கி பேமெண்ட்டுகளைச் செயல்படுத்தவில்லை எனில், நீங்கள் நிதியை உங்கள் சில்லறை விற்பனையாளருக்கு அனுப்பிவிட்டு, அதுகுறித்து அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
உங்கள் Shopify நிர்வாகியில் பிற ஆர்டர்களுக்குப் பணத்தைத் திரும்பப்பெறுவது போலவே Shopify Collective ஆர்டர்களுக்கும் பணத்தைத் திரும்பப்பெறலாம். மேலும் தகவலுக்கு, ரிட்டர்ன்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்களை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.
Shopify Collective ஆர்டர்களை ரத்துசெய்தல்
நிறைவேற்றப்படாத Shopify Collective ஆர்டரை ரத்துசெய்யுமாறு சில்லறை விற்பனையாளர் கோரலாம். அவர்கள் ஆர்டரை ரத்துசெய்யக் கோரிய பிறகு, ஆர்டரை மதிப்பாய்வு செய்து அதை ரத்துசெய்வதற்கான மின்னஞ்சல் உங்களுக்கு வரும். மேலும், ஆர்டரில் ஒரு குறிப்பும் சேர்க்கப்படும்.
உங்கள் Shopify நிர்வாகியில் பிற ஆர்டர்களை ரத்துசெய்வது போலவே Shopify Collective ஆர்டர்களையும் ரத்துசெய்யலாம். மேலும் தகவலுக்கு, ஆர்டர்களை ரத்துசெய்தல், காப்பகப்படுத்துதல் மற்றும் அழித்தல் என்பதைப் பார்க்கவும்.
தானியங்கி பேமெண்ட்டுகளைப் பயன்படுத்தும்போது, Shopify Collective ஆர்டரைத் தானாகவே ரத்துசெய்கிறது:
- ரத்துசெய்தல் கோரப்பட்ட போது பேமெண்ட் வசூலிக்கப்படவில்லை எனில், ஆர்டர் நிலை பேமெண்ட் நிலுவையில் உள்ளது என்பதாகவே இருக்கும்.
- ரத்துசெய்தல் கோரப்பட்ட போது பேமெண்ட் வசூலிக்கப்பட்டிருந்து, நீங்கள் 14 நாட்களுக்குள் ஆர்டரை நிறைவேற்றவில்லை என்றால்.
நீங்கள் ஒரு ஆர்டரை ரத்துசெய்யும்போது, சில்லறை விற்பனையாளரின் ஸ்டோரில் ஆர்டர் நிலை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என மாறி, தேர்ந்தெடுக்கப்பட்ட ரத்துசெய்தல் காரணத்தைக் காண்பிக்கும். அதன் பிறகு, வாடிக்கையாளருக்குப் பணத்தைத் திரும்பப்பெறுதலை வழங்க சில்லறை விற்பனையாளர் தங்கள் ஸ்டோரில் ஆர்டரை ரத்துசெய்ய வேண்டும்.