Shopify Collective விற்பனைச் சேனலில் பேமெண்ட்டைப் பெறுதல்

வாடிக்கையாளர் ஒருவர் சில்லறை விற்பனையாளரின் ஸ்டோரில் ஒரு ஆர்டரைச் செய்த பிறகு, அந்த ஆர்டருக்காகச் செலுத்தப்பட்ட முழுத் தொகையையும் சில்லறை விற்பனையாளர் பெறுவார். அதன் பிறகு, அவர் பணத்தின் ஒரு பகுதியை உங்களுக்குச் செலுத்த வேண்டும். இந்தத் தொகையானது விற்கப்படும் தயாரிப்பின் அடக்க விலை மற்றும் நீங்கள் அமைக்கும் ஷிப்பிங் செலவுகள் ஆகியவற்றைச் சார்ந்தது.

Shopify Collective தானியங்கிப் பேமெண்ட்கள்

Collective-இன் தகுதித் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்தால், நீங்கள் Shopify Collective-ஐ நிறுவும்போது தானியங்கிப் பேமெண்ட்கள் இயக்கப்படும். ஒரே நிறுவனத்தில் உள்ள இரண்டு ஸ்டோர்களுக்கு இடையே நீங்கள் பணத்தை நகர்த்தினால் தவிர, சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பேமெண்ட்டைப் பெறப் பரிந்துரைக்கப்படும் வழிமுறை இதுவாகும்.

நீங்களும் உங்கள் சில்லறை விற்பனையாளரும் Shopify Collective-இல் தானியங்கிப் பேமெண்ட்களை இயக்கியிருந்தால், சில்லறை விற்பனையாளர் உங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையானது அவருடைய Shopify Payments இருப்பில் போதுமான நிதி இருந்தால் அதிலிருந்து தானாகவே கழிக்கப்படும். வாடிக்கையாளருக்கு நீங்கள் ஆர்டரை அனுப்பிய பிறகு, சில்லறை விற்பனையாளரிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதி தானாகவே உங்கள் இருப்புக்கு இடமாற்றப்படும்.

நீங்களும் உங்கள் சில்லறை விற்பனையாளரும் Shopify Collective-இல் தானியங்கிப் பேமெண்ட்களை முடக்கியிருந்தால், உங்களுக்கு எவ்வாறு பேமெண்ட் செய்ய வேண்டும் மற்றும் அதற்கான நிபந்தனைகள் என்ன என்பதை நீங்கள் இருவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, விலைப்பட்டியலை அனுப்புவதன் மூலமாகவோ அல்லது நேரடி வங்கிப் பரிமாற்றத்தின் மூலமாகவோ நீங்கள் பேமெண்ட்களை நிர்வகிக்கலாம்.

இணைக்கப்பட்டுள்ள சில்லறை விற்பனையாளர்களுடன் தானியங்கிப் பேமெண்ட்களைப் பயன்படுத்துவதற்கான தேவைகள்

புதிய இணைப்புடன் தானியங்கிப் பேமெண்ட்களைப் பயன்படுத்த, அந்த அம்சத்திற்கு அவர்களும் தகுதிபெற்றிருக்க வேண்டும். நீங்களும் உங்கள் சில்லறை விற்பனையாளரும் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

உங்களுக்குச் சொந்தமான ஸ்டோர்களுக்கு இடையே Shopify Collective-இல் தானியங்கிப் பேமெண்ட்களைப் பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

நீங்கள் Shopify Collective-ஐ ஒரு சப்ளையராகவும் சில்லறை விற்பனையாளராகவும் பயன்படுத்தினால், உங்களுக்குச் சொந்தமான சில்லறை விற்பனை ஸ்டோரில் செய்யப்படும் ஆர்டர்களுக்கான பேமெண்ட்டைப் பெற தானியங்கிப் பேமெண்ட்களைப் பயன்படுத்தலாம். எல்லா நிதிகளையும் பெறுவதற்கு (பேமெண்ட் கட்டணங்கள் நீங்கலாக), தள்ளுபடியை 0% என அமைக்கவும் அல்லது நிதியின் ஒரு சதவீதத்தைப் பெறுவதற்கு வேறு சதவீதத் தள்ளுபடியைச் சேர்க்கவும்.

உங்களுக்குச் சொந்தமில்லாத சில்லறை விற்பனை ஸ்டோரில் பேமெண்ட்கள் செயல்படும் அதே வழியில், உடனடியாக நிதிகள் சேகரிக்கப்படும், மேலும் ஆர்டர் அனுப்பப்படும் வரை அவை நிறுத்திவைக்கப்படும். உங்களின் சப்ளையர் ஸ்டோருக்குப் பேமெண்ட் செலுத்த உங்களின் சில்லறை விற்பனை ஸ்டோரிலிருந்து எந்தவொரு நிதியும் கழிக்கப்படாத வகையிலும் ஷிப்மென்ட் செய்யப்படும் வரை பேமெண்ட் நிறுத்திவைக்கப்படாத வகையிலும், உங்களுக்குச் சொந்தமான ஸ்டோர்களுக்கு இடையேயான தானியங்கிப் பேமெண்ட்களை நீங்கள் முடக்கலாம்.

சில்லறை விற்பனையாளருடனான தானியங்கிப் பேமெண்ட்களை முடக்குதல்

Collective: Supplier விற்பனைச் சேனலிலிருந்து நீங்கள் நேரடியாக ஒரு சில்லறை விற்பனையாளருடனான தானியங்கிப் பேமெண்ட்களை முடக்கலாம். மேலும் சில்லறை விற்பனையாளருக்கு மின்னஞ்சல் மூலம் இதுகுறித்துத் தெரிவிக்கப்படும். அதன் பிறகு, ஒவ்வொரு சில்லறை விற்பனையாளரும் உங்களுக்குப் பேமெண்ட் செய்ய எந்த மேனுவல் பேமெண்ட் முறையைப் பயன்படுத்த வேண்டும், அதற்கான நிபந்தனைகள் என்ன என்பதை ஒப்புக் கொள்வது உங்களின் பொறுப்பாகும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Collective: Supplier பகுதிக்குச் செல்லவும்.

  2. சில்லறை விற்பனையாளர்கள் என்பதைக் கிளிக் செய்து, பின் இணைக்கப்பட்டது என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. ஒவ்வொரு சில்லறை விற்பனையாளருடனான தானியங்கிப் பேமெண்ட்கள் இயக்கத்தில் உள்ளனவா அல்லது முடக்கத்தில் உள்ளனவா என்பதை தானியங்கிப் பேமெண்ட்கள் நெடுவரிசையில் பார்க்கவும்.

  4. ஒரு சில்லறை விற்பனையாளருடனான தானியங்கிப் பேமெண்ட்களை முடக்க, சம்பந்தப்பட்ட சில்லறை விற்பனையாளரைக் கிளிக் செய்து, அதன்பின் தானியங்கிப் பேமெண்ட்கள் பிரிவில் உள்ள கீழ்விரிப் பட்டியலைக் கிளிக் செய்து முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

சில்லறை விற்பனையாளருடனான தானியங்கிப் பேமெண்ட்களை இயக்குதல்

சில்லறை விற்பனையாளர்களால் மட்டுமே தானியங்கிப் பேமெண்ட்களை இயக்க முடியும். இதைக் கோருவதற்கு அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.

ஆர்டர் பேமெண்ட் நிலை

Shopify Collective தயாரிப்புகளைக் கொண்ட ஒரு ஆர்டரானது சில்லறை விற்பனையாளரின் ஸ்டோரில் செய்யப்பட்ட பிறகு, உங்களுடைய Shopify நிர்வாகியிலும் ஒரு ஆர்டர் உருவாக்கப்படும். பணப் பரிமாற்றம் மற்றும் தானியங்கிப் பேமெண்ட்கள் உங்களிடம் இயக்கத்தில் உள்ளதா என்பதைப் பொறுத்து உங்கள் ஆர்டருக்கான பேமெண்ட் நிலை மாறுபடலாம்.

Shopify Collective-இல் தானியங்கிப் பேமெண்ட்கள் முடக்கப்பட்டிருந்தால், உங்கள் ஆர்டர் பேமெண்ட் நிலை எப்போதும் பேமெண்ட் நிலுவையில் உள்ளது என்றே காட்டப்படும்.

Shopify Collective-இல் தானியங்கிப் பேமெண்ட்கள் இயக்கத்தில் இருந்தால், உங்கள் ஆர்டர் பேமெண்ட் நிலை பேமெண்ட் நிலுவையில் உள்ளது அல்லது பேமெண்ட் செலுத்தப்பட்டது என்று காட்டப்படும். இந்த நிலைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளப் பின்வரும் அட்டவணையைச் சரிபார்க்கவும்:

Shopify Collective ஆர்டர் பேமெண்ட் நிலைகள்
நிலைவிளக்கம்
பேமெண்ட் நிலுவையில் உள்ளதுசில்லறை விற்பனையாளரின் Shopify Payments இருப்பில் இருந்து பணம் இன்னும் கழிக்கப்படவில்லை.
பேமெண்ட் செலுத்தப்பட்டதுசில்லறை விற்பனையாளரின் Shopify Payments இருப்பில் இருந்து பணம் கழிக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் ஆர்டரை நிறைவேற்றிய பிறகு அது உங்களின் Shopify Payments இருப்பில் வரவு வைக்கப்படும்.

ஒரு Shopify Collective ஆர்டரானது பேமெண்ட் செலுத்தப்பட்டது எனக் குறிக்கப்படும்போது, நீங்கள் ஆர்டரை நிறைவேற்றும் வரை நிதிகள் உங்களின் Shopify Payments இருப்புக்கு இடமாற்றப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். நிதிகள் உங்களுக்கு இடமாற்றப்பட்ட பிறகு, ஆர்டரானது பேமெண்ட் செலுத்தப்பட்டது என்றே தொடர்ந்து குறிக்கப்பட்டிருக்கும். சில்லறை விற்பனையாளரிடம் இருந்து பணம் கழிக்கப்படுவதை உறுதிசெய்ய, பேமெண்ட் நிலுவையில் உள்ளது என்ற நிலையில் இருக்கும் ஆர்டர்களை நிறைவேற்ற வேண்டாம்.

உங்கள் Shopify Collective பேமெண்ட்களைப் பார்த்தல்

உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள பரிவர்த்தனைகள் பக்கத்தில் உங்கள் Shopify Collective பேமெண்ட்களை நீங்கள் பார்க்கலாம். நிறைவேற்றப்பட்ட ஆர்டர்களுக்கு மட்டுமே பேமெண்ட்கள் காட்டப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > பேஅவுட்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. பரிவர்த்தனைகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. கூடுதல் வடிப்பான்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. வகை என்பதைக் கிளிக் செய்து, Shopify Collective என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் Shopify Collective பேமெண்ட்டுகள் குறித்த பின்வரும் தகவலை நீங்கள் பார்க்கலாம்:

  • பேமெண்ட் தேதி
  • ஆர்டர் எண்
  • உங்களுக்குப் பணம் செலுத்திய சில்லறை விற்பனையாளர்
  • பேமெண்ட் நிலை
  • தயாரிப்பு மற்றும் ஷிப்பிங்கிற்காகச் சப்ளையருக்கு மாற்றப்பட்ட தொகை

Shopify Collective விற்பனைச் சேனலின் பேமெண்ட்டுகள் பக்கத்தில், தயாரிப்புச் செலவு மற்றும் ஷிப்பிங் கட்டண விவரப் பிரிப்புடன் அனைத்து Shopify Collective பேமெண்ட்டுகளையும் நீங்கள் பார்க்கலாம்:

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Collective: Supplier பகுதிக்குச் செல்லவும்.

  2. பேமெண்ட்டுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. ஆர்டர் பேமெண்ட்டுகள் பிரிவில், Shopify Collective பேமெண்ட்டுகளைப் பார்க்கலாம்.

நிறைவேற்றப்படாத Shopify Collective ஆர்டர்களைப் பார்த்தல்

உங்களது நிறைவேற்றப்படாத Shopify Collective ஆர்டர்களைப் பார்க்க பல வழிகள் உள்ளன. உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள பரிவர்த்தனைகள் பக்கத்திலிருந்து, மஞ்சள் நிறப் பதாகையில் உள்ள 'நிறைவேற்றப்படாத ஆர்டர்களைப் பார்' பட்டனைக் கிளிக் செய்யவும் அல்லது உங்கள் Collective: Supplier விற்பனைச் சேனலில் உள்ள பேமெண்ட்டுகள் பக்கத்தில் பதாகையைக் கிளிக் செய்யவும்.

ஆர்டர்கள் பக்கத்திலிருந்து நிறைவேற்றப்படாத அனைத்து Shopify Collective ஆர்டர்களையும் நீங்கள் வடிகட்டிப் பார்க்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. கீழ்க்காணும் searchfilter ஐகானைக் கிளிக் செய்யவும்.

  3. வடிப்பானைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, சேனல் > Shopify Collective என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. வடிப்பானைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, பேமெண்ட் நிலை > செலுத்தப்பட்டது மற்றும் பகுதியளவு செலுத்தப்பட்டது ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. வடிப்பானைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, நிறைவேற்ற நிலை > நிறைவேற்றப்படாதது மற்றும் பகுதியளவு நிறைவேற்றப்பட்டது ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

போதிய நிதி இல்லை

சில்லறை விற்பனையாளர்களுக்குப் பணத்தைத் திரும்பப்பெற, வெற்றிகரமாக முடிக்கும் வரை Shopify Collective தொடர்ந்து நிதியை வசூலிக்க முயற்சிக்கும். ஆனால் சில சமயங்களில் உங்கள் Shopify Payments கணக்கில் போதிய நிதி இல்லாமல் இருக்கலாம். வாடிக்கையாளர்கள் PayPal போன்ற மாற்றுப் பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்தி உங்களுக்குப் பணம் செலுத்தும்போதும் உங்களின் பேஅவுட்டுகள் அடிக்கடி நடக்கும்போதும் அல்லது ஒரு பேஅவுட்டிற்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான பணம் திரும்பப்பெறுதல்கள் உங்களிடம் இருக்கும்போதும் போதிய நிதி இல்லாத நிலை ஏற்படலாம்.

எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க, இந்த விருப்பங்களைக் கருத்தில் கொள்ளவும்:

  • செக்அவுட்டில் உங்கள் ஒரே பேமெண்ட் முறையாக Shopify Payments-ஐப் பயன்படுத்தவும்.
  • Shopify Collective கழிக்கவும் உங்கள் சில்லறை விற்பனையாளர்களுக்குப் பணம் செலுத்தவும் உங்களிடம் போதுமான Shopify Payments இருப்பு இருப்பதை உறுதிசெய்ய, உங்கள் பேஅவுட் அட்டவணையை வாராந்திரம் அல்லது மாதாந்திரம் என அமைக்கவும்.
  • பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் மற்றும் கட்டணத் திருப்பல்களைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியவும்