Shopify Collective விற்பனைச் சேனலில் விலைப்பட்டியல்களை அமைத்தல் மற்றும் நிர்வகித்தல்
விலைப்பட்டியல்களில் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் ஸ்டோர்களில் விற்பனை செய்ய இறக்குமதி செய்யக்கூடிய தயாரிப்புகள் உள்ளன. விலைப்பட்டியலில் நீங்கள் ஒதுக்கும் தயாரிப்புகளுக்குச் சில்லறை விற்பனையாளர் மார்ஜின் இருக்கலாம், இது சில்லறை விற்பனையாளர் உங்களுக்குச் செலுத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட செலவு விலையைத் தீர்மானிக்கிறது.
உங்கள் சில்லறை விற்பனையாளர் இணைப்புகளுடன் பகிரக்கூடிய தனிப்பட்ட விலைப்பட்டியல்களை நீங்கள் வைத்திருக்கலாம். மேலும், தகுதியான சில்லறை விற்பனையாளர் எவரும் அந்த விலைப்பட்டியலில் உள்ள அனைத்துத் தயாரிப்புகளையும் உடனடியாக இறக்குமதி செய்யக்கூடிய பொது விலைப்பட்டியல்களையும் உருவாக்கலாம்.
விலைப்பட்டியலை உருவாக்குவதற்கு முன், நீங்கள் சில்லறை விற்பனையாளர்களுடன் பகிர விரும்பும் தயாரிப்புகள் உங்கள் ஸ்டோரின் முதன்மைச் சந்தையில் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
இந்தப் பக்கத்தில்
விலைப்பட்டியல் விவரங்கள்
நீங்கள் விலைப்பட்டியலை உருவாக்கும்போது, விலைப்பட்டியலில் தயாரிப்புகளைச் சேர்க்கலாம், உங்கள் தயாரிப்புகளுக்குச் சில்லறை விற்பனையாளர் மார்ஜினை அமைக்கலாம், விலைப்பட்டியல் நிலை செயலில் உள்ளதா அல்லது வரைவாக உள்ளதா என்பதை நிர்வகிக்கலாம் மற்றும் தனிப்பட்ட விலைப்பட்டியல்களாக இருந்தால் குறிப்பிட்ட சில்லறை விற்பனையாளர்களுக்கான அணுகலை ஒதுக்கலாம்.
உங்கள் தனிப்பட்ட விலைப்பட்டியல்களில் சில்லறை விற்பனையாளர்களை ஒதுக்குவதன் மூலமும் பொது விலைப்பட்டியல்களை உருவாக்குவதன் மூலமும், உங்கள் தயாரிப்பு விவரங்களையும் சரக்கு இருப்பையும் பகிர்கிறீர்கள்.
தயாரிப்புத் தகவலை இறக்குமதி செய்தல் மற்றும் ஒத்திசைத்தல்
பின்வரும் தயாரிப்புத் தகவல் உங்கள் சில்லறை விற்பனையாளரின் ஸ்டோரில் இறக்குமதி செய்யப்படுகிறது:
- விலை
- சரக்கு இருப்பு
- தயாரிப்புத் தலைப்பு
- தயாரிப்புப் படங்கள்
- தயாரிப்பு விளக்கம்
- மாறுபாடுகள்
- விற்பனையாளர் (தயாரிப்புச் சப்ளையர்)
- தயாரிப்பு வகை
- தயாரிப்புப் பிரிவு
- செலவு விலை
- SKU (ஸ்டாக் கீப்பிங் யூனிட்)
- பார்கோடு
- நாடு (மூலப் பிராந்தியம்)
- HS (ஹார்மோனைஸ்டு சிஸ்டம்) குறியீடு
- ஒப்பீட்டு விலை
பின்வரும் தயாரிப்புத் தகவல் உங்கள் சில்லறை விற்பனையாளரின் ஸ்டோரில் இறக்குமதி செய்யப்படுவதில்லை:
- சேகரிப்புகள்
- டேக்குகள்
- தள்ளுபடிக் குறியீடுகள்
- பிரத்தியேக மெட்டாஃபீல்டுகள்
உங்கள் தயாரிப்புத் தகவல் சில்லறை விற்பனையாளரின் ஸ்டோருக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிறகு, Shopify Collective செலவு விலையையும் சரக்கு இருப்பையும் தொடர்ந்து ஒத்திசைக்கிறது. எப்போதுமே உங்கள் ஸ்டோரில் இருந்து ஒத்திசைக்கப்பட்டுப் புதுப்பிக்கப்படும் செலவு விலையைத் தவிர்த்து, சில்லறை விற்பனையாளர் தங்கள் ஸ்டோரில் உள்ள பெரும்பாலான தயாரிப்பு விவரங்களைச் சரிசெய்யலாம். ஒரு வாடிக்கையாளர் சில்லறை விற்பனையாளரின் ஸ்டோர் மூலம் உங்கள் தயாரிப்பை வாங்கிய பிறகு, உங்கள் ஸ்டோரில் உள்ள சரக்கு இருப்பு தானாகவே புதுப்பிக்கப்படும்.
உங்கள் இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளின் சில்லறை விலையை அதிகரிக்கவோ குறைக்கவோ சில்லறை விற்பனையாளர்கள் தேர்வுசெய்யலாம். சில்லறை விலையில் சில்லறை விற்பனையாளர் செய்யும் மாற்றங்களால் உங்கள் செலவு விலை பாதிக்கப்படாது.
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள ஆர்டர் விவரங்கள் பக்கத்தில் ஆர்டர்க் குறிப்பாகச் சேர்க்கப்பட்டுள்ள, தயாரிப்பின் சில்லறை விலையைப் பார்ப்பதன் மூலம் சில்லறை விற்பனையாளர்கள் உங்கள் தயாரிப்புகளை எவ்வளவு விலைக்கு விற்கிறார்கள் என்பதைக் கண்டறியலாம். தயாரிப்பின் சில்லறை விலையில் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால், விலை நிர்ணயம் குறித்துப் பேச சில்லறை விற்பனையாளரைத் தொடர்புகொள்ளலாம் அல்லது சில்லறை விற்பனையாளரிடமிருந்து இணைப்பைத் துண்டிக்க நீங்கள் தேர்வுசெய்யலாம். விலை நிர்ணயம் குறித்துப் பேச சில்லறை விற்பனையாளரும் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்ளக்கூடும்.
பிற இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புத் தகவல் தானாகவே ஒத்திசைக்கப்படுவதில்லை. தயாரிப்புத் தகவலின் தானியங்கி ஒத்திசைவு மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மாற்றக்கூடிய விவரங்கள் குறித்த பின்வரும் விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.
| தயாரிப்பு விவரம் | ஒத்திசைவு விவரம் |
|---|---|
| செலவு விலை | அடக்க விலை எப்போதும் ஒத்திசைக்கப்படும், இதைச் சில்லறை விற்பனையாளரால் மாற்ற முடியாது. |
| சில்லறை விலை | இயல்புநிலையாகச் சில்லறை விலை ஒத்திசைவு முடக்கப்பட்டிருக்கும், ஆனால் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் அமைப்புகளில் ஒத்திசைவைச் செயல்படுத்தலாம். |
| ஒப்பீட்டு விலை | இயல்புநிலையாக ஒப்பீட்டு விலை ஒத்திசைவு முடக்கப்பட்டிருக்கும், ஆனால் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் அமைப்புகளில் ஒத்திசைவைச் செயல்படுத்தலாம். |
| சரக்கு இருப்பு | தயாரிப்புச் சரக்கு இருப்பு எப்போதும் சில்லறை விற்பனையாளரின் ஸ்டோர்களில் ஒத்திசைக்கப்படும். |
| பிற தயாரிப்புத் தகவல் | தானாகவே ஒத்திசைக்கப்படாது. |
சில்லறை விற்பனையாளரின் ஸ்டோருடன் தயாரிப்புப் படங்கள் அல்லது மாறுபாடுகள் போன்ற பிற தயாரிப்புத் தகவல்களை நீங்கள் ஒத்திசைக்க விரும்பினால், விலைப்பட்டியலில் இருந்து தயாரிப்பை அகற்றிவிட்டு, அதை விலைப்பட்டியலில் மீண்டும் சேர்க்கலாம்.
சராசரியான தயாரிப்பு ஒத்திசைவு நேரம் 30 வினாடிகளுக்கும் குறைவானதாகும், ஆனால் இதற்கு 5 நிமிடங்கள் வரை ஆகலாம். இதனால் மிக அதிக அளவிலான ஆர்டர் நிகழ்வுகளின்போது அதிக விற்பனை நேரிடலாம்.
கையிருப்பில் இல்லாத தயாரிப்புகள்
சில்லறை விற்பனையாளரிடம் நீங்கள் பகிரும் தயாரிப்பு கையிருப்பில் இல்லை என்றால், கையிருப்பில் இல்லாதபோதும் தொடர்ந்து விற்பனை செய் விருப்பத்தை நீங்கள் இயக்கியிருந்தால், சில்லறை விற்பனையாளர் உங்கள் தயாரிப்பைத் தொடர்ந்து விற்பனை செய்யலாம்.
கையிருப்பில் இல்லாத தயாரிப்புகள் குறித்து உங்கள் சில்லறை விற்பனையாளருக்கு நீங்களே அறிவித்து, எதிர்பார்க்கப்படும் ஷிப்பிங் தேதியைப் பகிரலாம். சில்லறை விற்பனையாளரால் தங்கள் ஸ்டோரில் கையிருப்பில் இல்லாதபோதும் தொடர்ந்து விற்பனை செய் விருப்பத்தை முடக்க முடியாது.
சில்லறை விற்பனையாளர் லாப வரம்பு
நீங்கள் விலைப்பட்டியலை உருவாக்கும்போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்துத் தயாரிப்புகளுக்கும் பொருந்தும் வகையில் சில்லறை விற்பனையாளர் லாப வரம்பைச் சேர்க்கலாம். தயாரிப்பின் சில்லறை விலையிலிருந்து சில்லறை விற்பனையாளர் லாப வரம்பைக் கழித்து வரும் தொகையானது, அவர்கள் உருவாக்கும் ஒவ்வொரு விற்பனைக்கும் அவர்கள் உங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையாகத் தீர்மானிக்கப்படும்.
உங்கள் தயாரிப்புகளை இறக்குமதி செய்யச் சில்லறை விற்பனையாளர்களை ஊக்கப்படுத்தவும், விற்பனைக்கான தயாரிப்புகளை விளம்பரப்படுத்த அவர்களுக்குப் போதுமான லாப வரம்பை வழங்கவும், 20% முதல் 50% வரை லாப வரம்பை வழங்குவதைப் பரிசீலிக்கவும்.
பொது விலைப்பட்டியல்களுக்கு சப்ளையர்கள் குறைந்தபட்சமாக 5% லாப வரம்பை அமைக்க வேண்டும் என Shopify Collective கோருகிறது.
சில்லறை விற்பனையாளர் தாங்கள் செய்யும் ஒவ்வொரு விற்பனைக்கும் உங்களுக்குச் செலுத்தும் தொகை அடக்க விலை எனப்படும். உங்கள் Collective: சப்ளையர் விற்பனைச் சேனலில் உள்ள விலைப்பட்டியல்களின் தயாரிப்புகள் பிரிவில், இந்தத் தொகை அடக்க விலை நெடுவரிசையில் காட்டப்படும். வெவ்வேறு விலைகளுடனான மாறுபாடுகளைக் கொண்டுள்ள தயாரிப்புகளுக்கு அடக்க விலையானது ஒரு விலை வரம்பாக இருக்கலாம். விலைப்பட்டியலில் சில்லறை விற்பனையாளர் லாப வரம்பை மாற்றினால், அடக்க விலை தானாகவே புதுப்பிக்கப்படும்.
உதாரணமாக, ஒரு தயாரிப்பின் சில்லறை விலை $100 USD ஆக இருந்து, அந்தத் தயாரிப்பு உள்ள விலைப்பட்டியலுக்கான சில்லறை விற்பனையாளர் லாப வரம்பு 30% ஆக இருந்தால், சில்லறை விற்பனையாளர் ஒவ்வொரு விற்பனைக்கும் $30 USD-ஐ வைத்துக்கொண்டு உங்களுக்கு $70 USD-ஐச் செலுத்துவார். சில்லறை விற்பனையாளர் உங்கள் தயாரிப்பை இறக்குமதி செய்யும்போது, $70 USD என்ற அடக்க விலை அவர்களின் Collective செயலியில் காட்டப்படும். விலைப்பட்டியலுக்கான சில்லறை விற்பனையாளர் லாப வரம்பை 20% ஆக மாற்றினால், சில்லறை விற்பனையாளர் ஒவ்வொரு விற்பனைக்கும் $20 USD-ஐ வைத்துக்கொண்டு உங்களுக்கு $80 USD-ஐச் செலுத்துவார்.
சில்லறை விற்பனையாளர் ஒரு தயாரிப்பின் ஒப்பீட்டு விலை அல்லது அடக்க விலையை மாற்ற விரும்பினால், அவர்கள் தயாரிப்பு விலை நிர்ணயம் குறித்துப் பேச உங்களை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும். விலைப்பட்டியலின் சில்லறை விற்பனையாளர் லாப வரம்பை நீங்கள் மாற்றிய பிறகு அடக்க விலை புதுப்பிக்கப்பட்டால், அது தானாகவே மீண்டும் கணக்கிடப்பட்டுச் சில்லறை விற்பனையாளரின் ஸ்டோரில் புதுப்பிக்கப்படும். உங்கள் ஸ்டோரில் ஒரு தயாரிப்பின் ஒப்பீட்டு விலையை நீங்கள் புதுப்பித்தால், அது தங்கள் அமைப்புகளில் ஒப்பீட்டு விலை ஒத்திசைவை இயக்கியுள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கான ஸ்டோரில் மட்டுமே புதுப்பிக்கப்படும்.
விற்பனை விலைகள்
சில்லறை விற்பனையாளர் ஸ்டோர்களில் தயாரிப்புகளை விற்பனைக்கு வைக்க, நீங்கள் ஒப்பீட்டு விலையைப் பயன்படுத்தலாம். தயாரிப்பு விலையை விடக் குறைவான ஒப்பீட்டு விலையை நீங்கள் அமைக்கும்போது, தங்கள் அமைப்புகளில் ஒப்பீட்டு விலை ஒத்திசைவை இயக்கியுள்ள எந்தவொரு சில்லறை விற்பனையாளரின் ஸ்டோரிலும் இது ஒத்திசைக்கப்படும். சில்லறை விற்பனையாளரின் ஸ்டோர்ஃபிரண்டில் விற்பனை விலைகள் காட்டப்படுமா அல்லது எங்கு காட்டப்படும் என்பது அவர்களின் தீமைப் பொறுத்தது.
தள்ளுபடி வழங்குதல்
சில்லறை விற்பனையாளர்கள் தாங்கள் Collective மூலம் இறக்குமதி செய்யும் தயாரிப்புகளுக்கு, 20% வரவேற்புச் சலுகை போன்ற தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்தலாம். இது ஒரு உருப்படிக்கு நீங்கள் பெறும் அடக்க விலைத் தொகையைப் பாதிக்காது, மாறாக இது சில்லறை விற்பனையாளரின் மொத்த லாபத்தையும், வாடிக்கையாளர் செலுத்தும் தொகையையும் பாதிக்கும்.
சில்லறை விற்பனையாளரின் தள்ளுபடிகளில் உங்கள் தயாரிப்புகள் சேர்க்கப்படக்கூடாது என நீங்கள் விரும்பினால், உங்கள் Collective சில்லறை விற்பனையாளர்களிடம் இதைத் தெரிவிப்பது நல்லது.
விலைப்பட்டியல் சில்லறை விற்பனையாளர் அணுகல்
Shopify Collective இல் ஒரு சில்லறை விற்பனையாளரை அழைத்து அவரிடம் இணைப்பை ஏற்படுத்திய பிறகு, அவர்களுக்குக் குறிப்பிட்ட பிரத்தியேக விலைப்பட்டியல்களுக்கான அணுகலை நீங்கள் ஒதுக்கலாம். ஒரு பிரத்தியேக விலைப்பட்டியலை பல சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒதுக்கலாம். குறிப்பிட்ட சில்லறை விற்பனையாளர்களுக்கான பிரத்தியேக விலைப்பட்டியல்களின் அணுகலையும் நீங்கள் அகற்றலாம்.
பொது விலைப்பட்டியல்கள்
நீங்கள் பொது விலைப்பட்டியலை உருவாக்கும்போது, தகுதியான சில்லறை விற்பனையாளர்கள் தங்களின் Collective செயலியில் தேடும்போது அல்லது உலாவும்போது, பட்டியலின் தயாரிப்புகள் உடனடி இறக்குமதி (Instant import) லேபிளுடன் அவர்களுக்குக் காட்டப்படும். தகுதியான சில்லறை விற்பனையாளர்கள் உங்களுடன் பிரத்தியேக இணைப்பைக் கோர வேண்டிய அவசியமின்றி, தங்கள் ஸ்டோரில் விற்பனை செய்வதற்கு இந்தத் தயாரிப்புகளை உடனடியாக இறக்குமதி செய்யலாம்.
பொது விலைப்பட்டியல்களை உருவாக்குவதற்கான பின்வரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:
- உங்கள் பொது விலைப்பட்டியலில் இருந்து உடனடி இறக்குமதித் தயாரிப்புகளைச் சில்லறை விற்பனையாளர் இறக்குமதி செய்யும்போது, அவர்கள் தானாகவே உங்களுடன் இணைக்கப்படுவார்கள், மேலும் அவர்கள் தொடர்புடைய விலைப்பட்டியலில் சில்லறை விற்பனையாளராக ஒதுக்கப்படுவார்கள்.
- சில்லறை விற்பனையாளர் ஒரு உடனடி இறக்குமதித் தயாரிப்பை இறக்குமதி செய்யும்போது, சில்லறை விற்பனையாளரின் இயல்புநிலைக் கொள்கைகளில் நீங்கள் தானாகவே ஒரு இணைப்பாகச் சேர்க்கப்படுவீர்கள். சில்லறை விற்பனையாளரின் தயாரிப்புக் கொள்கையில் அவரின் தயாரிப்பு இறக்குமதி முறை தானியங்கு (Automatic) என அமைக்கப்பட்டிருந்தால், உங்கள் பொது விலைப்பட்டியலில் உள்ள அனைத்துத் தயாரிப்புகளும் சில்லறை விற்பனையாளரின் ஸ்டோருக்குத் தானாகவே இறக்குமதி செய்யப்படும்.
- பொது விலைப்பட்டியலில் உள்ள ஒரு உடனடி இறக்குமதித் தயாரிப்பானது, பிரத்தியேக அணுகல் கொண்ட விலைப்பட்டியலின் ஒரு பகுதியாகவும் இருந்து, அதை அதே சில்லறை விற்பனையாளரிடம் நீங்கள் தனியாகப் பகிர்ந்திருந்தால், அந்த இரண்டு விலைப்பட்டியல்களிலுள்ள அதிகபட்ச லாப வரம்பு சில்லறை விற்பனையாளரின் விற்பனைக்குப் பொருந்தும்:
- உங்கள் பொது விலைப்பட்டியலில் ஒரு தயாரிப்பு 10% லாப வரம்பையும், நீங்கள் பிரத்தியேகமாகப் பகிர்ந்த விலைப்பட்டியலில் 20% லாப வரம்பையும் கொண்டிருந்தால், சில்லறை விற்பனையாளருக்கு 20% லாப வரம்பு பொருந்தும்.
- உங்கள் பொது விலைப்பட்டியலில் ஒரு தயாரிப்பு 30% லாப வரம்பையும், நீங்கள் பிரத்தியேகமாகப் பகிர்ந்த விலைப்பட்டியலில் 10% லாப வரம்பையும் கொண்டிருந்தால், சில்லறை விற்பனையாளருக்கு 30% லாப வரம்பு பொருந்தும்.
- ஒரு சில்லறை விற்பனையாளர் பொது விலைப்பட்டியலில் இருந்து தயாரிப்புகளை உடனடியாக இறக்குமதி செய்வதன் மூலம் உங்களுடன் இணைந்த பிறகு, அவர்களுடனான இணைப்பைத் துண்டிக்க நீங்கள் முடிவு செய்தால், பொது விலைப்பட்டியலின் தயாரிப்பு உடனடி இறக்குமதி மூலம் அந்தச் சில்லறை விற்பனையாளரால் தானாகவே மீண்டும் இணைய முடியாது. இருப்பினும், அந்தச் சில்லறை விற்பனையாளர் மீண்டும் இணைவதற்கு உங்களை அழைக்க முடியும்.
விலைப்பட்டியல் நிலை
உங்கள் விலைப்பட்டியல் பின்வரும் நிலைகளில் ஒன்றைக் கொண்டிருக்கலாம்:
- செயலில் (Active) என்ற நிலை, விலைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தயாரிப்புகள் விலைப்பட்டியலில் இருந்து இறக்குமதி செய்வதற்குக் கிடைக்கின்றன என்பதைக் குறிக்கிறது.
- வரைவு (Draft) என்ற நிலை, விலைப்பட்டியல் கிடைக்கவில்லை என்பதையும், விலைப்பட்டியலில் உள்ள தயாரிப்புகளைச் சில்லறை விற்பனையாளர்கள் இறக்குமதி செய்யவோ விற்கவோ முடியாது என்பதையும் குறிக்கிறது.
செயலில் என்ற நிலையை நீங்கள் தேர்ந்தெடுத்தால், விலைப்பட்டியலுக்கான அணுகலை நீங்கள் ஒதுக்கியுள்ள சில்லறை விற்பனையாளர்களுக்குக் கிடைக்கும் தயாரிப்புகள் குறித்த மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்படும். சில்லறை விற்பனையாளர்கள் உங்கள் தயாரிப்புகளைத் தங்கள் ஸ்டோர்களில் உடனடியாக இறக்குமதி செய்து விற்பனையைத் தொடங்கலாம்.
விலைப்பட்டியலை உருவாக்குதல்
தகுதியான சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் உங்கள் தயாரிப்புகளை உடனடியாக இறக்குமதி செய்யும்படி பொது அணுகல் (Public access) விலைப்பட்டியல்களை நீங்கள் உருவாக்கலாம், மேலும் உங்களுடன் இணைந்துள்ள சில்லறை விற்பனையாளர்கள் தயாரிப்புகளைத் தங்கள் ஸ்டோர்களில் இறக்குமதி செய்யும் வகையில், அவர்களிடம் பகிர்வதற்குப் பிரத்தியேக அணுகல் (Private access) விலைப்பட்டியல்களையும் நீங்கள் உருவாக்கலாம். விலைப்பட்டியலைச் சேமித்த பிறகு அதற்கான அணுகல் அமைப்பை உங்களால் மாற்ற முடியாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Collective: சப்ளையர் என்பதற்குச் செல்லவும்.
விலைப்பட்டியல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
விலைப்பட்டியலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் விலைப்பட்டியலுக்குத் தலைப்பைச் சேர்க்கவும்.
நிலை கீழ்தோன்றும் மெனுவில், செயலில் உள்ளது அல்லது வரைவு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அனுமதிகள் பிரிவில், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- பொது விலைப்பட்டியலை உருவாக்க, பொது அணுகல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- தனிப்பட்ட விலைப்பட்டியலை உருவாக்க, தனிப்பட்ட அணுகல் என்பதைத் தேர்ந்தெடுத்து, சில்லறை விற்பனையாளர்களைத் தேடு புலத்தில் உங்கள் தனிப்பட்ட விலைப்பட்டியலுக்கு ஒதுக்க விரும்பும் சில்லறை விற்பனையாளர்களைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்கவும்.
ஷிப்பிங் பிரிவில், விலைப்பட்டியலுக்கான உங்கள் ஷிப்பிங் கட்டணங்களை அமைக்கவும்.
விலை நிர்ணயம் பிரிவில், சில்லறை விற்பனையாளர்களுக்கான அடக்க விலையைத் தீர்மானிக்க உங்கள் தயாரிப்பின் சில்லறை விலைகளிலிருந்து கழிக்கப்படும் சதவீதமான சில்லறை விற்பனையாளர் வரம்பை உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புகளைச் சேர் உரையாடல் பெட்டியில், விலைப்பட்டியலில் நீங்கள் சேர்க்க விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விலைப்பட்டியலில் தயாரிப்புகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்
உங்கள் தற்போதைய விலைப்பட்டியல்களில் இருந்து Collective: சப்ளையர் விற்பனைச் சேனலில் வெளியிடப்பட்ட தயாரிப்புகளை நீங்கள் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். நீங்கள் செயலில் உள்ள விலைப்பட்டியலிலிருந்து தயாரிப்புகளை அகற்றினால், அந்தத் தயாரிப்புகளை இறக்குமதி செய்த அனைத்துச் சில்லறை விற்பனையாளர்களுக்கும் சரக்கு இருப்பு 0 ஆக அமைக்கப்படும். இதனால் சில்லறை விற்பனையாளரின் ஸ்டோர்ஃபிரண்டில் தயாரிப்புகள் விற்பனைக்குக் கிடைக்காது. செயலில் உள்ள விலைப்பட்டியலிலிருந்து ஒரு தயாரிப்பை நீங்கள் அகற்றிய பிறகு, தயாரிப்புகளை நீக்க அல்லது சில்லறை விற்பனையாளரின் ஸ்டோர்ஃபிரண்டிலிருந்து அவற்றை அகற்ற, தயாரிப்புகளை வரைவு நிலைக்கு மாற்றுமாறு அவருக்கு அறிவிக்கப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Collective: சப்ளையர் என்பதற்குச் செல்லவும்.
விலைப்பட்டியல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புகளைச் சேர்க்க அல்லது அகற்ற விரும்பும் விலைப்பட்டியலைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புகள் பிரிவில், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- விலைப்பட்டியலில் தயாரிப்புகளைச் சேர்க்க, தயாரிப்புகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் சேர்க்க விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- விலைப்பட்டியலிலிருந்து தயாரிப்புகளை அகற்ற, நீங்கள் அகற்ற விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு தயாரிப்புகளை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விலைப்பட்டியல்களுக்கான அணுகலை நிர்வகித்தல்
உங்கள் தனிப்பட்ட விலைப்பட்டியல்களில் புதிய சில்லறை விற்பனையாளர்களைச் சேர்க்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள சில்லறை விற்பனையாளர்களை அகற்றலாம். பொது விலைப்பட்டியலுக்கான சில்லறை விற்பனையாளரின் அணுகலையும் நீங்கள் அகற்றலாம்.
விலைப்பட்டியலுக்கான சில்லறை விற்பனையாளரின் அணுகலை நீங்கள் அகற்றினால், அவர்கள் இறக்குமதி செய்த அனைத்துத் தயாரிப்புகளுக்கும் சரக்கு இருப்பு 0 ஆக அமைக்கப்படும். இந்தத் தயாரிப்புகள் உடனடியாக சில்லறை விற்பனையாளரின் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்காமல் போகும். உங்கள் தயாரிப்புகளை இனி விற்க முடியாது என்று சில்லறை விற்பனையாளருக்கு அறிவிக்கப்படும், ஆனால் அதற்கான குறிப்பிட்ட காரணம் அவர்களுக்கு வழங்கப்படாது. குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கான சில்லறை விற்பனையாளரின் அணுகலை அகற்றுவதற்கு முன் அவர்களைத் தொடர்புகொள்வதைப் பரிசீலிக்கவும்.
தனிப்பட்ட விலைப்பட்டியலுக்கான அணுகலை நிர்வகித்தல்
உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Collective: சப்ளையர் என்பதற்குச் செல்லவும்.
விலைப்பட்டியல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் எந்த விலைப்பட்டியலுக்கான சில்லறை விற்பனையாளர் அணுகலை நிர்வகிக்க விரும்புகிறீர்களோ, அதைக் கிளிக் செய்யவும்.
அனுமதிகள் பிரிவில், சில்லறை விற்பனையாளர்களைத் தேடு புலத்தைக் கிளிக் செய்து, பிறகு நீங்கள் சேர்க்க அல்லது அகற்ற விரும்பும் சில்லறை விற்பனையாளர்களைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது தேர்வை நீக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பொது விலைப்பட்டியலுக்கான அணுகலை அகற்றுதல்
உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Collective: சப்ளையர் என்பதற்குச் செல்லவும்.
சில்லறை விற்பனையாளர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் எந்தச் சில்லறை விற்பனையாளரின் விலைப்பட்டியல் அணுகலை அகற்ற விரும்புகிறீர்களோ, அவரைக் கிளிக் செய்யவும்.
விலைப்பட்டியல்கள் பிரிவில், எந்த விலைப்பட்டியல்களுக்கான அணுகலை நீங்கள் அகற்ற விரும்புகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
அணுகலை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
உரையாடல் பெட்டியில், அணுகலை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
விலைப்பட்டியலை முடக்குதல்
நீங்கள் விலைப்பட்டியலைத் தற்காலிகமாகப் பயன்படுத்துவதை நிறுத்த விரும்பினால், அதன் நிலையை வரைவு என அமைப்பதன் மூலம் அதை முடக்கலாம். உங்கள் விலைப்பட்டியல் நீக்கப்படாது, ஆனால் அது ஒதுக்கப்பட்ட அனைத்துச் சில்லறை விற்பனையாளர்களுக்கும் கிடைக்காமல் செய்யப்படும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த விலைப்பட்டியலுக்குத் திரும்பி, இதைச் செயலில் உள்ளது என்ற நிலைக்கு அமைக்கலாம்.
பொது விலைப்பட்டியலை நீங்கள் முடக்கும்போது, பொது விலைப்பட்டியலில் உள்ள எந்தத் தயாரிப்புகளையும் விற்க முடியாது. இருப்பினும், நீங்கள் ஒரு சில்லறை விற்பனையாளருடன் பகிர்ந்த தனிப்பட்ட விலைப்பட்டியலிலும் சில தயாரிப்புகள் இருந்து, அந்தத் தயாரிப்புகளை அவர்கள் கொண்டிருந்தால், சில்லறை விற்பனையாளர் அந்தத் தயாரிப்புகளுக்கான அணுகலைத் தக்கவைத்துக்கொள்வார், அத்துடன் தொடர்ந்து அவற்றை விற்கவும் முடியும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Collective: சப்ளையர் என்பதற்குச் செல்லவும்.
விலைப்பட்டியல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் முடக்க விரும்பும் விலைப்பட்டியலைக் கிளிக் செய்யவும்.
நிலை கீழ்தோன்றும் மெனுவில், வரைவு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விலைப்பட்டியலை நீக்குதல்
விலைப்பட்டியலை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த விரும்பவில்லை எனில், அதை நிரந்தரமாக நீக்கலாம். செயலில் உள்ள விலைப்பட்டியலை நீக்குவதற்கு முன், முதலில் விலைப்பட்டியலை நீங்கள் முடக்க வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Collective: சப்ளையர் என்பதற்குச் செல்லவும்.
விலைப்பட்டியல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் நீக்க விரும்பும் விலைப்பட்டியலைக் கிளிக் செய்யவும்.
விலைப்பட்டியலை நீக்கு என்பதைக் கிளிக் செய்து, அதன்பின் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.