Shopify Collective விற்பனைச் சேனலைப் பயன்படுத்துவதற்கான தேவைகள் மற்றும் பரிசீலனைகள்
Shopify Collective விற்பனைச் சேனலைப் பயன்படுத்தத் தொடங்கும் முன், பின்வரும் தேவைகள் மற்றும் பரிசீலனைகளைச் சரிபார்க்கவும். நீங்கள் Collective சமூக வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்ளுதல் என்பதையும் பார்க்க வேண்டும்.
இந்தப் பக்கத்தில்
- Shopify Collective விற்பனைச் சேனலைப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
- Shopify Collective விற்பனைச் சேனலிலுள்ள தகுதி நிலைகள்
- Shopify Collective விற்பனைச் சேனலைப் பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
- Shopify Collective விற்பனைச் சேனலுடன் இணங்காத செயலிகள் மற்றும் அம்சங்கள்
- Shopify Collective விற்பனைச் சேனலுடன் இணங்கும் செயலிகள் மற்றும் அம்சங்கள்
Shopify Collective விற்பனைச் சேனலைப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
உங்கள் Shopify நிர்வாகியில் Shopify Collective விற்பனைச் சேனலைப் பயன்படுத்த, உங்கள் ஸ்டோர் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- செயலில் உள்ள Shopify திட்டம்: உங்கள் ஸ்டோர் செயலில் உள்ள திட்டத்தில் இருக்க வேண்டும்.
- கடை இருப்பிடம் மற்றும் ஸ்டோர் நாணயம்: உங்கள் வணிகம் ஆதரிக்கப்படும் நாட்டில் அமைந்திருக்க வேண்டும், மேலும் ஆதரிக்கப்படும் நாணயத்தைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் ஸ்டோரின் நாணயம், உங்கள் ஸ்டோர் அமைந்துள்ள நாட்டின் உள்நாட்டு நாணயமாக இருக்க வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக, நீங்கள் ஐக்கிய இராச்சியத்தில் ஒரு ஸ்டோரைக் கொண்டிருக்கலாம், ஆனால் அந்த ஸ்டோரின் நாணயம் USD ஆக அமைக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் அழைக்கும் ஒரு சில்லறை விற்பனையாளருடன் இணைக்க, சில்லறை விற்பனையாளரின் ஸ்டோர் இருக்கும் அதே நாட்டிலும் அவர் பயன்படுத்தும் அதே நாணயத்திலும் உங்கள் ஸ்டோர் இருக்க வேண்டும்.
- Shopify Payments-ஐச் செயல்படுத்துதல்: உங்கள் ஸ்டோருக்கான Shopify Payments கணக்கு அமைவு செயல்முறையை நீங்கள் நிறைவுசெய்ய வேண்டும், மேலும் உங்கள் Shopify Payments கணக்கில் பேஅவுட்கள் செயலில் இருக்க வேண்டும். Shopify Payments பேஅவுட் நேரம் மற்றும் Shopify Payments-க்கான தகுதி குறித்து மேலும் அறிக.
- Shopify Payments பேஅவுட் நாணயம்: Shopify Payments-க்கான உங்கள் பேஅவுட் கணக்கின் நாணயம், உங்கள் ஸ்டோரின் நாணயத்துடன் பொருந்த வேண்டும்.
- வரிகளை வசூலித்தல் மற்றும் சரிபார்க்கப்பட்ட வரிப் பதிவு: கனடா, யுனைடெட் கிங்டம் அல்லது ஐரோப்பிய யூனியன் (EU) நாட்டைத் தளமாகக் கொண்ட பிசினஸ்கள், Shopify Tax, அடிப்படை வரிஅல்லது ஒரு மூன்றாம் தரப்பு வரிச் செயலி ஆகியவற்றைப் பயன்படுத்திச் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து வரிகளை வசூலிக்க வேண்டும். நீங்கள் Shopify Collective-க்குத் தகுதிபெற முடியாத அமைவு: கைமுறை வரி அமைவு. கனடா, யுனைடெட் கிங்டம் அல்லது EU-வில் உள்ள பிசினஸ்கள் தங்கள் வரிப் பதிவு நிலையை உறுதிப்படுத்தவும் வேண்டும்:
- உங்கள் பிசினஸ் கனடாவைத் தளமாகக் கொண்டிருந்தால், உங்கள் GST/HST எண்ணையும் பில்லிங் முகவரியையும் நீங்கள் சரிபார்க்க அல்லது சேர்க்க வேண்டும்.
- உங்கள் பிசினஸ் யுனைடெட் கிங்டம் அல்லது EU-வில் அமைந்திருந்தால், உங்களின் VAT எண்ணையும் பில்லிங் முகவரியையும் நீங்கள் சரிபார்க்க அல்லது சேர்க்க வேண்டும். UK மற்றும் EU-வில் VAT-க்குக் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டிய பிசினஸ்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
- Shopify கொள்கைகள் மற்றும் ஸ்டோர் தேவைகளுடனான இணக்கம்: உங்கள் ஸ்டோர் Collective-இன் சேவை விதிமுறைகள், மற்றும் Shopify-இன் சேவை விதிமுறைகள் மற்றும் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை ஆகியவற்றுடன் இணங்கியிருக்க வேண்டும். Collective-இன் நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் மோசடி தொடர்பான தேவைகளையும் உங்கள் ஸ்டோர் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய, நீங்கள் ID சரிபார்ப்பை நிறைவுசெய்ய வேண்டியிருக்கலாம்.
- Network Intelligence: உங்கள் ஸ்டோரில் Shopify Network Intelligence செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
Shopify Collective-இன் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த, நீங்கள் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். உங்கள் ஸ்டோர் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை எனில், சில்லறை விற்பனையாளர்களுடன் இணைந்து விற்பனையைத் தொடங்க, தேவைகளைச் சரிபார்க்கவும் என உங்கள் விற்பனைச் சேனலில் ஒரு பேனர் காட்டப்படும். Collective-இலிருந்து விற்பனை செய்வதற்கான தேவைகள் மற்றும் தகுதிபெற நீங்கள் எதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்பதன் பட்டியலைப் பார்க்க, தேவைகளைச் சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும். குறிப்பிட்ட சில அம்சங்கள் கிடைக்கவில்லை என்பதையும், தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னரே குறிப்பிட்ட சில செயல்களை நீங்கள் மேற்கொள்ள முடியும் என்பதையும் விற்பனைச் சேனலின் பிற பகுதிகளில் பேனர்கள் காட்டும்.
Shopify Collective விற்பனைச் சேனலைப் பயன்படுத்துவதற்கு ஆதரிக்கப்படும் நாடுகள் மற்றும் நாணயங்கள்
Shopify Collective விற்பனைச் சேனலைப் பயன்படுத்த, ஆதரிக்கப்படும் பின்வரும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஏதேனும் ஒன்றில் உங்கள் ஸ்டோர் அமைந்திருக்க வேண்டும்.
| ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | பெல்ஜியம் |
| பல்கேரியா | கனடா | குரோஷியா |
| சைப்ரஸ் | செக்கியா | டென்மார்க் |
| எஸ்டோனியா | பின்லாந்து | ஜெர்மனி |
| ஜிப்ரால்டர் | கிரீஸ் | ஹாங்காங் |
| ஹங்கேரி | அயர்லாந்து | இத்தாலி |
| ஜப்பான் | லாட்வியா | லிச்சென்ஸ்டீன் |
| லிதுவேனியா | லக்சம்பர்க் | மால்டா |
| மெக்சிகோ | நெதர்லாந்து | நியூசிலாந்து |
| நார்வே | போலந்து | போர்ச்சுகல் |
| ருமேனியா | சிங்கப்பூர் | ஸ்லோவேனியா |
| ஸ்பெயின் | ஸ்வீடன் | சுவிட்சர்லாந்து |
| யுனைடெட் கிங்டம் | அமெரிக்கா |
Shopify Collective விற்பனைச் சேனலைப் பயன்படுத்த, உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை நாணயமாக ஆதரிக்கப்படும் பின்வரும் நாணயங்களில் ஒன்றை நீங்கள் அமைத்திருக்க வேண்டும்.
| ஆஸ்திரேலிய டாலர் (AUD) | பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங் (GBP) | கனேடிய டாலர் (CAD) |
| செக் கோருனா (CZK) | டேனிஷ் குரோன் (DKK) | யூரோ (EUR) |
| ஹாங்காங் டாலர் (HKD) | ஹங்கேரிய ஃபோரின்ட் (HUF) | ஜப்பானிய யென் (JPY) |
| மெக்சிகன் பெசோ (MXN) | நியூசிலாந்து டாலர் (NZD) | நார்வேஜியன் குரோன் (NOK) |
| போலிஷ் ஸ்லாட்டி (PLN) | ருமேனிய லியூ (RON) | சிங்கப்பூர் டாலர் (SGD) |
| ஸ்வீடிஷ் குரோனா (SEK) | சுவிஸ் ஃப்ராங்க் (CHF) | அமெரிக்க டாலர் (USD) |
உங்கள் அடையாளச் சரிபார்ப்பைச் சமர்ப்பிக்கவும்
Shopify Collective-ஐப் பயன்படுத்தத் தகுதிபெற, நீங்கள் ID சரிபார்ப்பு ஆவணத்தைச் சமர்ப்பித்து, செல்ஃபி சரிபார்ப்பை நிறைவுசெய்ய வேண்டியிருக்கலாம். Shopify Payments-ஐ அமைக்கும்போது அல்லது Plus திட்டத்திற்கு மேம்படுத்தும்போது என உங்கள் Shopify நிர்வாகியின் வேறு ஏதேனும் ஒரு பகுதியில், உங்கள் ID ஆவணத்தை ஏற்கெனவே சமர்ப்பித்து செல்ஃபி சரிபார்ப்பை நீங்கள் நிறைவுசெய்திருந்தால், Collective விற்பனைச் சேனலில் ID சரிபார்ப்பை நீங்கள் நிறைவுசெய்ய வேண்டியதில்லை.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Collective: Supplier என்பதற்குச் செல்லவும்.
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
ID சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
தொடங்கு என்பதைக் கிளிக் செய்து, ஏற்றுக்கொண்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, உங்கள் ID சரிபார்ப்பைச் சமர்ப்பிக்கவும்:
- உங்கள் ID சரிபார்ப்பை மொபைல் சாதனத்தில் சமர்ப்பிக்க, மொபைல் சாதனத்தின் மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது பிற விருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்து, மின்னஞ்சல் இணைப்பு அல்லது உரை இணைப்பு விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்தவும்.
- லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள வெப்கேமைப் பயன்படுத்தி ID சரிபார்ப்பைச் சமர்ப்பிக்க, பிற விருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்து, இந்தச் சாதனத்தில் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் அடையாளச் சரிபார்ப்பு ஆவணத்தைச் சமர்ப்பித்து, செல்ஃபி சரிபார்ப்பை நிறைவுசெய்ய, அதற்கான படிகளைப் பின்பற்றவும்.
உங்கள் Collective விற்பனைச் சேனலில் சரிபார்ப்பு சமர்ப்பிக்கப்பட்டது என்ற மெசேஜ் காட்டப்படும்போது, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
- Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
- செயலிகள் பிரிவில், அனைத்துச் செயலிகளையும் காட்டு என்பதைத் தட்டி, Collective: Supplier என்பதைத் தட்டவும்.
- Collective: Supplier கீழ்தோன்றும் மெனுவைத் தட்டி, பின்னர் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
- ID சரிபார்ப்பு இணைப்பைத் தட்டவும்.
- தொடங்கு என்பதைத் தட்டி, ஏற்றுக்கொண்டு தொடரவும் என்பதைத் தட்டவும்.
- உங்கள் அடையாளச் சரிபார்ப்பு ஆவணத்தைச் சமர்ப்பித்து, செல்ஃபி சரிபார்ப்பை நிறைவுசெய்ய, அதற்கான படிகளைப் பின்பற்றவும்.
- சரிபார்ப்பு சமர்ப்பிக்கப்பட்டது என்ற மெசேஜ் காட்டப்படும்போது, முடிந்தது என்பதைத் தட்டவும்.
- முடிந்தது என்பதைத் தட்டவும்.
Shopify Collective விற்பனைச் சேனலில் தகுதிநிலைகள்
நீங்கள் முதல்முறையாக Shopify Collective விற்பனைச் சேனலை நிறுவும்போது, Shopify Collective ஐப் பயன்படுத்த உங்களுக்குத் தகுதியில்லை என்று மெசேஜ் காட்டப்பட்டால், உங்கள் ஸ்டோர் தகுதித் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வரை உங்களால் பிற வணிகர்களுடன் இணைய முடியாது.
நீங்கள் Shopify Collective இல் ஏற்கனவே சப்ளையராக இருந்து, வழக்கமான தகுதிச் சரிபார்ப்பில் உங்கள் ஸ்டோர் தகுதியற்றதாக மாறினால், புதிய சில்லறை விற்பனையாளர்களுடன் உங்களால் இணைய முடியாது அல்லது உங்களின் எந்தவொரு விலைப்பட்டியலையும் செயலில் உள்ள நிலைக்கு அமைக்க முடியாது. உங்கள் சில்லறை விற்பனையாளர்களுடனான ஏற்கனவே உள்ள ஏதேனும் ஆர்டர்கள் அல்லது பேமெண்ட்டுகளை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
உங்கள் ஸ்டோர் தகுதியற்றதாக இருந்தால், Shopify Collective விற்பனைச் சேனலில் பின்வரும் பணிகளை மட்டுமே நீங்கள் நிறைவுசெய்ய முடியும்:
- கண்ணோட்டப் பக்கம் - விற்பனைச் சேனலைப் பழக்கப்படுத்துதலுக்கான சரிபார்ப்புப் பட்டியலில் உள்ள பணிகளை நிறைவுசெய்யலாம்
- டிஸ்கவரிப் பக்கம் - சில்லறை விற்பனையாளர்களை உலாவலாம் மற்றும் பார்க்கலாம்
- சில்லறை விற்பனையாளர்கள் பக்கம் - ஏற்கனவே உள்ள இணைப்புகளைப் பார்க்கலாம்
- விலைப்பட்டியல்கள் பக்கம் - விலைப்பட்டியலை உருவாக்கலாம் மற்றும் விலைப்பட்டியலைத் திருத்தலாம்
- ஏற்கனவே உள்ள சில்லறை விற்பனையாளர் இணைப்புப் பக்கம் - விலைப்பட்டியலைச் சேர்க்கலாம், திருத்தலாம் மற்றும் சில்லறை விற்பனையாளரின் தொடர்பு விவரங்களைப் பார்க்கலாம்
தகுதியற்ற சில்லறை விற்பனையாளர்கள்
நீங்கள் இணைந்து பணிபுரியும் சில்லறை விற்பனையாளர் ஒருவருக்கு Shopify Collective ஐப் பயன்படுத்துவதற்கான தகுதி இல்லாமல் போகலாம். மீண்டும் தகுதிபெற அவர்கள் எடுக்க வேண்டிய படிகள் குறித்து சில்லறை விற்பனையாளருக்குத் தெரிவிக்கப்படும். இந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதற்கான பின்வரும் பட்டியலை மதிப்பாய்வு செய்யவும்:
- உங்கள் சில்லறை விற்பனையாளர்களில் ஒருவருக்குத் தற்போது Shopify Collective ஐப் பயன்படுத்துவதற்கான தகுதி இல்லை என்பதைத் தெரிவிக்கும் மின்னஞ்சல் உங்களுக்கு வரும்.
- அவர்களுக்குத் தகுதியில்லாத நேரத்தில் சில்லறை விற்பனையாளரின் வாடிக்கையாளர்களிடமிருந்து புதிய ஆர்டர்கள் ஏதும் உங்களுக்கு வராது.
- தொடர்புடைய சில்லறை விற்பனையாளரின் நிறைவேற்றப்படாத ஆர்டர்கள் அல்லது நிலுவையில் உள்ள பேமெண்ட்டுகளை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
- சில்லறை விற்பனையாளர் மீண்டும் Shopify Collective ஐப் பயன்படுத்தத் தகுதிபெற்றால், உங்களுக்கு மற்றொரு மின்னஞ்சல் வரும். அத்துடன், சில்லறை விற்பனையாளரின் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் புதிய ஆர்டர்களை நீங்கள் தொடர்ந்து நிறைவேற்றலாம் மற்றும் பேமெண்ட்டுகளைச் செயலாக்கலாம்.
Shopify Collective விற்பனைச் சேனலைப் பயன்படுத்தும்போதான கவனிக்க வேண்டியவை
Shopify Collective விற்பனைச் சேனலைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன், கருத்தில் கொள்ள வேண்டிய பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:
- Shopify Collective விற்பனைச் சேனலுடன் Pause and Build திட்டத்தை நீங்கள் பயன்படுத்த முடியாது.
- Shopify Collective விற்பனைச் சேனல் டிஜிட்டல் தயாரிப்புகளையோ கிஃப்ட் கார்டு தயாரிப்புகளையோ ஆதரிக்காது.
- சர்வதேச ஆர்டர்களைக் கொண்ட ஷிப்பிங் லேபிள்களுக்கு, தொடர்புடைய சுங்க வரிகள், வரிகள் மற்றும் கட்டணங்கள் எதுவும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து Shopify Collective உள்ள சப்ளையர்களுக்கு அனுப்பப்படாது.
Shopify Collective விற்பனைச் சேனலுடன் இணங்காத செயலிகள் மற்றும் அம்சங்கள்
Shopify Collective விற்பனைச் சேனலைப் பின்வரும் அம்சங்கள் மற்றும் செயலிகளுடன் பயன்படுத்த முடியாது:
- Managed Markets
- ஸ்டோரில் பிக்அப்
- மெட்டாஃபீல்டுகள். உங்கள் ஸ்டோரில் இருந்து சில்லறை விற்பனையாளரின் ஸ்டோருக்கு மெட்டாஃபீல்டுகள் ஒத்திசைக்கப்படாது, ஆனால் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் ஸ்டோரில் மெட்டாஃபீல்டுகளைப் பயன்படுத்தலாம்.
- தயாரிப்புத் தொகுப்புகள். உங்கள் ஸ்டோரில் இருந்து சில்லறை விற்பனையாளரின் ஸ்டோருக்குத் தொகுப்புகள் ஒத்திசைக்கப்படாது, ஆனால் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் ஸ்டோரில் தொகுப்புகளைப் பயன்படுத்தலாம்.
- Subscriptions
- ஒருங்கிணைந்த பட்டியல்கள்
Shopify Collective விற்பனைச் சேனலுடன் இணக்கமான செயலிகள் மற்றும் அம்சங்கள்
Shopify Collective விற்பனைச் சேனல் Shopify Flow உட்பட பெரும்பாலான செயலிகள் மற்றும் அம்சங்களுடன் இணக்கமானது.