Shopify Collective மூலம் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை வரியை வசூலித்தல்
உங்கள் தயாரிப்புகளைச் சில்லறை விற்பனையாளர்கள் விற்கும்போது அவர்களிடம் இருந்து விற்பனை வரியை வசூலிக்க நீங்கள் தேர்வுசெய்யலாம். சில அதிகார வரம்புகளில், சில்லறை விற்பனையாளருக்கு ஒரு தயாரிப்பை நீங்கள் வழங்கும்போது நடைபெறும் B2B பரிவர்த்தனைக்கு VAT அல்லது உள்ளூர் விற்பனை வரியை வசூலிக்க வேண்டியிருக்கும். பின்னர் அந்த வரித் தொகையை சம்பந்தப்பட்ட வரி அதிகார அமைப்பிடம் செலுத்த வேண்டும்.
சில சில்லறை விற்பனையாளர்களிடம் மறுவிற்பனைச் சான்றிதழ் இருக்கலாம், அது உங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து அவர்களுக்கு விலக்களிக்கும். சில்லறை விற்பனையாளர் தங்களின் சான்றிதழின் நகலை உங்களுக்கு வழங்க வேண்டும்.
கனடா, ஐக்கிய இராச்சியம் (UK) அல்லது ஐரோப்பிய ஒன்றிய (EU) நாட்டில் உங்கள் ஸ்டோர் அமைந்திருந்தால், Shopify Collective விற்பனைச் சேனலைப் பயன்படுத்தும் முன்பு உங்கள் வரிப் பதிவு நிலையை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
இப்பக்கத்தில்
சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை வரியை வசூலித்தல்
தனிப்பட்ட அடிப்படையில் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை வரியை வசூலிக்க வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் வரி வசூலிக்கும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பெறும் ஆர்டர்களில், விதிக்கப்படும் வரித் தொகை தானாகவே காட்டப்படும்.
உங்கள் Shopify Collective விற்பனைச் சேனலின் சில்லறை விற்பனையாளர்கள் பிரிவில் உள்ள அட்டவணையானது, வரியை வசூலி என்ற நெடுவரிசையைக் காட்டும், ஒவ்வொரு சில்லறை விற்பனையாளரிடமிருந்தும் நீங்கள் வரியை வசூலிக்கிறீர்களா இல்லையா என்பதை இது குறிக்கும்.
உங்கள் இடம் மற்றும் Shopify-க்கு நீங்கள் சமர்ப்பித்துள்ள வரிப் பதிவு நிலை ஆகியவற்றைப் பொறுத்து, அனைத்துச் சில்லறை விற்பனையாளர்களுக்கும் இயல்பாக உங்களிடம் உள்ள வரி வசூலிப்பு அமைப்பு பற்றிய விவரங்களுக்குப் பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.
| சப்ளையர்/சில்லறை விற்பனையாளரின் நாடு | இயல்பான வரி வசூலிப்பு நிலை |
|---|---|
| அமெரிக்கா | ஆஃப் |
| கனடா | ஆன் |
| ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் |
|
| Shopify Collective-ஐப் பயன்படுத்தக்கூடிய மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து சப்ளையர்கள் வரியை வசூலிக்கக்கூடிய மற்ற அனைத்து நாடுகளும் |
|
உங்கள் சில்லறை விற்பனையாளரின் வரி வசூலிப்பு அமைப்பை மாற்றவும்
உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Collective: சப்ளையர் என்பதற்குச் செல்லவும்.
சில்லறை விற்பனையாளர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் வரி வசூலிப்பு அமைப்பை மாற்ற விரும்பும் சில்லறை விற்பனையாளரைக் கிளிக் செய்யவும்.
பேமெண்ட்டுகளும் வரிகளும் பிரிவில், வரியை வசூலி விருப்பத்தைச் செயல்படுத்தவும் அல்லது முடக்கவும்.
Shopify Collective பரிவர்த்தனைகளுக்கு வரி எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுதல்
விற்பனை வரி எங்கே செலுத்தப்பட வேண்டும் என்பதையும், வரித் தொகை எந்த விலையில் கணக்கிடப்படுகிறது என்பதையும் தீர்மானிக்க, பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.
Collective-இல் சப்ளையர் மற்றும் சில்லறை விற்பனையாளர் இடையேயான பரிவர்த்தனைகளுக்கான இயல்பான வரி அமைப்புகளை இந்த அட்டவணை குறிப்பிடுகிறது, இருப்பினும் குறிப்பிட்ட விற்பனைப் பரிவர்த்தனைகளுக்கு இந்தச் சூழல்கள் பொருத்தமானவை தானா என்பதை வரி வல்லுநரிடம் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
ஜிப்ரால்டர் அல்லது ஹாங்காங்கில் அமைந்துள்ள சப்ளையர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு இடையே வரி வசூலிக்கப்படுவதில்லை.
| சப்ளையர்/சில்லறை விற்பனையாளரின் நாடு | வாடிக்கையாளரின் நாடு | வரி கணக்கிடப்படும் விலை | வரி செலுத்த வேண்டிய இடம் |
|---|---|---|---|
| அமெரிக்கா (கலிபோர்னியா மற்றும் மாசசூசெட்ஸ் மட்டும்) | அமெரிக்கா | சில்லறை விலை | வாடிக்கையாளரின் ஷிப்பிங் முகவரியின் நாடு, மாநிலம் அல்லது மாகாணம் |
| அமெரிக்கா (மற்ற அனைத்து மாநிலங்களும்) | அமெரிக்கா | செலவு விலை | வாடிக்கையாளரின் ஷிப்பிங் முகவரியின் நாடு, மாநிலம் அல்லது மாகாணம் |
| அமெரிக்கா (கலிபோர்னியா மற்றும் மாசசூசெட்ஸ் மட்டும்) | உலகின் பிற நாடுகள் | சில்லறை விலை | சில்லறை விற்பனையாளரின் முகவரியின் நாடு, மாநிலம் அல்லது மாகாணம் |
| அமெரிக்கா (மற்ற அனைத்து மாநிலங்களும்) | உலகின் பிற நாடுகள் | செலவு விலை | சில்லறை விற்பனையாளரின் முகவரியின் நாடு, மாநிலம் அல்லது மாகாணம் |
| Collective-ஐப் பயன்படுத்தக்கூடிய மற்ற அனைத்து நாடுகளும் (ஜிப்ரால்டர் மற்றும் ஹாங்காங் நீங்கலாக) | கிடைக்கப்பெறும் ஏதேனும் ஷிப்பிங் இடம் | செலவு விலை | சில்லறை விற்பனையாளரின் முகவரியின் நாடு, மாநிலம் அல்லது மாகாணம் |
Shopify Collective பரிவர்த்தனைகளுக்கான வரி மற்றும் லாபச் சூழல்களின் உதாரணம்
இரு தரப்பினரும் தயாரிப்பு விலைகளில் வரியைச் சேர்த்தோ அல்லது நீக்கியோ அமைத்துள்ள நிலையில், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு லாபம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பின்வரும் பரிவர்த்தனைச் சூழல்கள் விளக்குகின்றன. அமைப்புகள் > வரிகளும் சுங்க வரிகளும் > உலகளாவிய அமைப்புகள் > தயாரிப்பு விலை மற்றும் ஷிப்பிங் கட்டணத்தில் விற்பனை வரியைச் சேர் என்பதற்குச் சென்று உங்கள் Shopify நிர்வாகியில் இதை உள்ளமைக்கலாம். விற்கப்படும் தயாரிப்புக்கு 30% சில்லறை விற்பனையாளர் லாப வரம்பு பயன்படுத்தப்படுவதை அடிப்படையாகக் கொண்டே பரிவர்த்தனை உதாரணங்கள் அமைந்துள்ளன.
சூழல் 1: சப்ளையர் மற்றும் சில்லறை விற்பனையாளர் இருவரும் தயாரிப்பு விலைகளில் விற்பனை வரியை நீக்கிய உள்நாட்டு விற்பனை
- US சப்ளையர் > US சில்லறை விற்பனையாளர் > US வாடிக்கையாளர்
- சில்லறை விற்பனையாளர் மற்றும் சப்ளையர் இருவருமே தயாரிப்பு விலைகளில் வரியை நீக்கியுள்ளனர்.
- எனவே, இவற்றில் வரி சேர்க்கப்படும்:
- சில்லறை விற்பனையாளரின் செக்அவுட்டில் வாடிக்கையாளருக்குக் காட்டப்படும் தயாரிப்பு விலை.
- சப்ளையருக்குச் சில்லறை விற்பனையாளர் செலுத்தும் தயாரிப்பின் செலவு விலை.
- இந்த உதாரணம், B2B மற்றும் DTC வரிகளுக்கு 10% வீதம் பயன்படுத்தப்படுவதை அடிப்படையாகக் கொண்டது.
| விலை விவரம் | கணக்கீடு | தொகை (USD) |
|---|---|---|
| சப்ளையரின் தயாரிப்புச் சில்லறை விலை (வரி நீங்கலாக) | பொருந்தாது | $100 |
| சில்லறை விற்பனையாளருக்கான தயாரிப்புச் செலவு (வரி நீங்கலாக) | (100%-லாப வரம்பு%) x சில்லறை விலை | (100% - 30%) x $100 = $70 |
| செக்அவுட்டில் வாடிக்கையாளருக்குக் காட்டப்படும் தயாரிப்பு விலை | பொருந்தாது | $100 |
| செக்அவுட்டில் சேர்க்கப்பட்ட DTC வரி | சில்லறை விலை x DTC வரி வீதம் | $100 x 10% = $10 |
| செக்அவுட்டில் வாடிக்கையாளரின் பேமெண்ட் | சில்லறை விலை + DTC வரி | $100 + $10 = $110 |
| சப்ளையர்/சில்லறை விற்பனையாளர் பரிவர்த்தனைக்கான B2B வரி | சில்லறை விற்பனையாளருக்கான தயாரிப்புச் செலவு x B2B வரி வீதம் | $70 x 10% = $7 |
| சப்ளையருக்குச் சில்லறை விற்பனையாளர் அளிக்கும் பேமெண்ட் | சில்லறை விற்பனையாளருக்கான தயாரிப்புச் செலவு + B2B வரி | $70 + $7 = $77 |
| சில்லறை விற்பனையாளர் வருவாய் | வாடிக்கையாளர் பேமெண்ட் - சப்ளையருக்குச் சில்லறை விற்பனையாளர் அளிக்கும் பேமெண்ட் | $110 - $77 = $33 |
| சில்லறை விற்பனையாளரின் நிகர லாபம் (30%) | சில்லறை விற்பனையாளர் வருவாய் - DTC வரி + B2B வரி கிரெடிட் | $33 - $10 + $7 = $30 |
| சப்ளையர் நிகர லாபம் (70%) | சப்ளையருக்குச் சில்லறை விற்பனையாளர் அளிக்கும் பேமெண்ட் - B2B வரி | $77 - $7 = $70 |
காட்சி 2: சப்ளையர் மற்றும் சில்லறை விற்பனையாளர் என இருவருமே தயாரிப்பு விலைகளில் விற்பனை வரியைச் சேர்த்துள்ள உள்நாட்டு விற்பனை
- UK சப்ளையர் > UK சில்லறை விற்பனையாளர் > UK வாடிக்கையாளர்
- சில்லறை விற்பனையாளர் மற்றும் சப்ளையர் ஆகிய இருவருமே தயாரிப்பு விலைகளில் வரியைச் சேர்த்துள்ளனர்.
- எனவே, வரி இவற்றில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது:
- சில்லறை விற்பனையாளரின் செக்அவுட்டில் வாடிக்கையாளர் செலுத்தும் தொகை.
- தயாரிப்புக்காகச் சப்ளையருக்குச் சில்லறை விற்பனையாளர் செலுத்தும் தொகை.
- இந்த எடுத்துக்காட்டு B2B மற்றும் DTC வரிகள் ஆகிய இரண்டிற்கும் 20% வீதம் பயன்படுத்தப்படுவதன் அடிப்படையிலானது.
| விலை விவரம் | கணக்கீடு | தொகை (GBP) |
|---|---|---|
| சப்ளையரின் தயாரிப்புச் சில்லறை விலை (வரி உட்பட) | பொருந்தாது | £120 |
| சில்லறை விற்பனையாளருக்கான தயாரிப்புச் செலவு (வரி உட்பட) | (100%-லாப வரம்பு%) x சில்லறை விலை | (100% - 30%) x £120 = £84 |
| செக்அவுட்டில் வாடிக்கையாளரின் பேமெண்ட் | பொருந்தாது | £120 |
| செக்அவுட்டில் வாடிக்கையாளர் பேமெண்ட்டில் சேர்க்கப்பட்டுள்ள DTC வரி | சில்லறை விலை x [1 - 1÷(1 + DTC வரி வீதம்)] | £120 x (1-1/(1+20%)) = £20 |
| சப்ளையருக்குச் சில்லறை விற்பனையாளர் அளிக்கும் பேமெண்ட் | பொருந்தாது | £84 |
| சப்ளையருக்குச் சில்லறை விற்பனையாளர் அளித்த பேமெண்ட்டில் சேர்க்கப்பட்டுள்ள B2B வரி | சில்லறை விற்பனையாளருக்கான தயாரிப்புச் செலவு x [1 - 1÷(1 + B2B வரி வீதம்)] | £84 x (1-1/(1+20%)) = £14 |
| சில்லறை விற்பனையாளர் வருவாய் | வாடிக்கையாளர் பேமெண்ட் - சப்ளையருக்குச் சில்லறை விற்பனையாளர் அளிக்கும் பேமெண்ட் | £120 - £84 = £36 |
| சில்லறை விற்பனையாளரின் நிகர லாபம் (30%) | சில்லறை விற்பனையாளர் வருவாய் - DTC வரி + B2B வரி கிரெடிட் | £36 - £20 + £14 = £30 |
| சப்ளையர் நிகர லாபம் (70%) | சப்ளையருக்குச் சில்லறை விற்பனையாளர் அளிக்கும் பேமெண்ட் - B2B வரி | £84 - £14 = £70 |
உங்கள் வரிப் பதிவு நிலையச் சரிபார்த்தல்
கனடா, யுனைடெட் கிங்டம் அல்லது ஐரோப்பிய யூனியன் (EU) நாடு ஒன்றில் உங்கள் ஸ்டோர் அமைந்திருந்தால், Shopify Collective விற்பனைச் சேனலைப் பயன்படுத்த உங்கள் வரிப் பதிவு நிலையைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
வரிப் பதிவுச் சரிபார்ப்புக்குக் காட்டப்படும் வரி ID மற்றும் பில்லிங் முகவரி ஆகியவை உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள பின்வரும் இடங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்:
UK சப்ளையர்களுக்கு, நீங்கள் வழங்கும் VAT எண் நீங்கள் விற்பனை வரியை வசூலிக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்குக் காட்டப்படும்.
கனடாவில் உங்கள் வரிப் பதிவு நிலையச் சரிபார்க்கவும்
உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Collective: சப்ளையர் என்பதற்குச் செல்லவும்.
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
வரிப் பதிவு நிலை பிரிவில்:
- ஒருவேளை சரிபார்க்கப்படாத என்ற பேட்ஜ் இருந்தால், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- உங்கள் GST/HST எண் ஏற்கனவே நிரப்பப்பட்டிருந்தால்:
- விருப்பத்தேர்வு: நீங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்ட விவரங்களைத் திருத்த வேண்டுமெனில்,
ஐகானைக் கிளிக் செய்து உங்கள் மாற்றங்களைச் செய்யவும்.
- விருப்பத்தேர்வு: பில்லிங் முகவரி இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் பில்லிங் முகவரி சரியானது என்பதை உறுதிப்படுத்தவும்.
- எனது GST/HST எண் மற்றும் பில்லிங் முகவரி சரியானவை எனச் சரிபார்க்கிறேன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
- விருப்பத்தேர்வு: நீங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்ட விவரங்களைத் திருத்த வேண்டுமெனில்,
- உங்கள் GST/HST எண் ஏற்கனவே நிரப்பப்படாமல் இருந்தால்:
- தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
- GST/HST எண்ணைச் சேர் உரையாடல் பெட்டியில், உங்கள் GST/HST எண்ணை உள்ளிடவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- விருப்பத்தேர்வு: வரிப் பதிவு நிலை பிரிவில், பில்லிங் முகவரி இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் பில்லிங் முகவரி சரியானது என்பதை உறுதிப்படுத்தவும்.
- எனது GST/HST எண் மற்றும் பில்லிங் முகவரி சரியானவை எனச் சரிபார்க்கிறேன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் GST/HST எண் ஏற்கனவே நிரப்பப்பட்டிருந்தால்:
- தகுதியற்றது என்ற பேட்ஜ் காட்டப்பட்டு, அதோடு வரியை வசூலிக்க, நீங்கள் Shopify Tax அல்லது மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்ற மெசேஜ் காட்டப்பட்டால், தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு Shopify Tax, அடிப்படை வரி அல்லது மூன்றாம் தரப்பு வரிச் செயலி ஆகியவற்றில் ஒன்றைப் பயன்படுத்த உங்கள் ஸ்டோரை அமைப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.
- ஒருவேளை சரிபார்க்கப்படாத என்ற பேட்ஜ் இருந்தால், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
UK/EU-இல் உங்கள் வரிப் பதிவு நிலையச் சரிபார்க்கவும்
உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைச் சேனல்கள் > Collective: சப்ளையர் என்பதற்குச் செல்லவும்.
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
வரிப் பதிவு நிலை பிரிவில்:
- ஒருவேளை சரிபார்க்கப்படாத என்ற பேட்ஜ் இருந்தால், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- உங்கள் VAT எண் ஏற்கனவே நிரப்பப்பட்டிருந்தால்:
- விருப்பத்தேர்வு: நீங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்ட விவரங்களைத் திருத்த வேண்டுமெனில்,
ஐகானைக் கிளிக் செய்து உங்கள் மாற்றங்களைச் செய்யவும்.
- விருப்பத்தேர்வு: பில்லிங் முகவரி இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் பில்லிங் முகவரி சரியானது என்பதை உறுதிப்படுத்தவும்.
- எனது VAT எண் மற்றும் பில்லிங் முகவரி ஆகியவை சரியானவை எனச் சரிபார்க்கிறேன் என்ற தேர்வுப்பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்.
- சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
- விருப்பத்தேர்வு: நீங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்ட விவரங்களைத் திருத்த வேண்டுமெனில்,
- உங்கள் VAT எண் ஏற்கனவே நிரப்பப்படாமல் இருந்து, உங்கள் ஸ்டோரின் விற்பனை VAT பதிவு வரம்பிற்கு மேல் இருந்தால்:
- தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
- வரிப் பதிவு நிலையச் சரிபார் உரையாடல் பெட்டியில், என்னிடம் VAT எண் உள்ளது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் VAT எண்ணை உள்ளிடவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- விருப்பத்தேர்வு: வரிப் பதிவு நிலை பிரிவில், பில்லிங் முகவரி இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் பில்லிங் முகவரி சரியானது என்பதை உறுதிப்படுத்தவும்.
- எனது VAT எண் மற்றும் பில்லிங் முகவரி ஆகியவை சரியானவை எனச் சரிபார்க்கிறேன் என்ற தேர்வுப்பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்.
- சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் VAT எண் ஏற்கனவே நிரப்பப்படாமல் இருந்து, உங்கள் ஸ்டோரின் விற்பனை VAT பதிவு வரம்பிற்குக் கீழ் இருந்தால்:
- தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
- வரிப் பதிவு நிலையச் சரிபார் உரையாடல் பெட்டியில், நான் VAT பதிவு செய்யவோ வசூலிக்கவோ தேவையில்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- விருப்பத்தேர்வு: வரிப் பதிவு நிலை பிரிவில், பில்லிங் முகவரி இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் பில்லிங் முகவரி சரியானது என்பதை உறுதிப்படுத்தவும்.
- எனது வரிப் பதிவு நிலை மற்றும் பில்லிங் முகவரி ஆகியவை சரியானவை எனச் சரிபார்க்கிறேன் என்ற தேர்வுப்பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்.
- சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
- வரிப் பதிவு நிலை இவ்வாறு காட்டப்பட்டால், அதாவது நான் VAT பதிவு செய்யவோ வசூலிக்கவோ தேவையில்லை, மேலும் இந்தத் தகவல் சரியானது:
- விருப்பத்தேர்வு: பில்லிங் முகவரி இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் பில்லிங் முகவரி சரியானது என்பதை உறுதிப்படுத்தவும்.
- எனது வரிப் பதிவு நிலை மற்றும் பில்லிங் முகவரி ஆகியவை சரியானவை எனச் சரிபார்க்கிறேன் என்ற தேர்வுப்பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்.
- சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
- வரிப் பதிவு நிலை இவ்வாறு காட்டப்பட்டால், அதாவது நான் VAT பதிவு செய்யவோ வசூலிக்கவோ தேவையில்லை, மேலும் இந்தத் தகவல் தவறானது:
- வரிப் பதிவு நிலை புலத்தில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.