Google தயாரிப்பு வகைகளை வழங்குதல்
தயாரிப்பு வகைத் தகவலை வழங்குவது, Instagram மற்றும் Facebook-இல் உங்கள் ஸ்டோரின் தயாரிப்புகளை உலாவுவதற்கும் தேடுவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும். இது உங்கள் ஸ்டோரின் கண்டறியும் திறனை அதிகரிப்பதுடன், உங்களின் விளம்பரச் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும்.
தயாரிப்பு வகை என்பது நீங்கள் விற்கும் உருப்படியின் வகையை விவரிக்கும் பெயரிடல் மரபாகும். உங்கள் Shopify நிர்வாகியில், மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தி உங்கள் ஒவ்வொரு தயாரிப்புக்கும் சரியான Google தயாரிப்பு வகையைச் சேர்க்கலாம். Google தயாரிப்பு வகையும் உங்களின் மற்ற தயாரிப்புத் தரவும், உங்கள் Meta Commerce Manager-இல் உள்ள தயாரிப்பு அட்டவணையுடன் ஒத்திசைக்கப்படும்.
உங்கள் வாடிக்கையாளர்கள் Facebook மற்றும் Instagram-இல் நேரடியாகச் செக்அவுட் செய்தால், தயாரிப்பு வகைகள் தேவைப்படும். வாடிக்கையாளர் எவ்வளவு வரியைச் செலுத்த வேண்டும் அல்லது தயாரிப்பு பிரத்தியேகத் திருப்பியளிப்புக் கொள்கைக்குத் தகுதியானதா என்பதைத் தீர்மானிக்க, தயாரிப்பு வகைகள் உதவுகின்றன.
உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் Shopify ஸ்டோரில் செக்அவுட் செய்தால், தயாரிப்பு வகைகள் கட்டாயமில்லை என்றாலும் பரிந்துரைக்கப்படுகின்றன.
இந்தப் பக்கத்தில்
Google தயாரிப்பு வகைகளை எப்படிப் பயன்படுத்துவது
உங்கள் தயாரிப்புகள் முதல்முறையாக Facebook உடன் ஒத்திசைக்கப்படும்போது, தொடங்குவதற்கு உங்களுக்கு உதவ Google தயாரிப்பு வகைகள் (GPC) தானாகவே நிரப்பப்படும். உங்களின் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் பொருத்தமான GPC-ஐ Shopify-ஆல் கண்டறிய முடியாமல் போகலாம், எனவே உங்கள் தயாரிப்புகளுக்குச் சரியான GPC ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சரிபார்த்து உறுதிசெய்ய வேண்டும். GPC விடுபட்டுள்ள தயாரிப்பு ஏதேனும் இருந்தால், Meta வழங்கும் Facebook மற்றும் Instagram-இல் மொத்தத் தயாரிப்புத் திருத்தியைப் பயன்படுத்தி அவற்றைச் சேர்க்கலாம்.
Google தயாரிப்பு வகைப் பட்டியலிலிருந்து உங்களால் முடிந்தவரை மிகவும் குறிப்பிட்ட வகையை நீங்கள் வழங்க வேண்டும். வரி நோக்கங்களுக்காக, Google தயாரிப்பு வகைகள் குறைந்தது இரண்டு நிலைகளை (எடுத்துக்காட்டாக, Apparel & Accessories > Clothing) கொண்டிருக்க வேண்டும்.
Google தயாரிப்பு வகைகளைத் திருத்து
உங்கள் தயாரிப்புகளுக்கு Google தயாரிப்பு வகை தானாகவே ஒதுக்கப்பட்டால், Meta வழங்கும் Facebook மற்றும் Instagram-இல் மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தி உங்கள் தயாரிப்புத் தகவலைத் திருத்தலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Facebook & Instagram என்பதற்குச் செல்லவும்.
கண்ணோட்டம் பக்கத்தில் உள்ள தயாரிப்பு நிலை பிரிவில், ஒத்திசைக்கப்பட்ட அனைத்துத் தயாரிப்புகளையும் காண்க என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
தயாரிப்புகளைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் தயாரிப்புகளுக்கான Google தயாரிப்பு வகை புலத்தைத் திருத்தவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
அடுத்த முறை உங்களின் Facebook அட்டவணையுடன் உங்கள் தயாரிப்புகள் ஒத்திசைக்கப்படும்போது, இந்த மதிப்புகளும் ஒத்திசைக்கப்படும். தயாரிப்பு மாற்றங்கள் சேமிக்கப்பட்டு 15 நிமிடங்களுக்குள் தயாரிப்பு விவரங்கள் ஒத்திசைக்கப்படும்.
Commerce Manager-இல் வரிக்கான தானியங்கி வகைகள்
செக்அவுட் வசதியுடன் Facebook அல்லது Instagram-இல் நீங்கள் நேரடியாக விற்கும் உருப்படிகளுக்கு, சரியான தயாரிப்பு வகையை நீங்கள் வழங்கவில்லை எனில், Meta தானாகவே ஒரு தயாரிப்பு வகையை ஒதுக்கும். ஒதுக்க வேண்டிய மிகவும் சாத்தியமான வகையைத் தீர்மானிக்க, உருப்படியின் படங்கள், தலைப்பு மற்றும் பிற தயாரிப்புத் தகவலைக் கருத்தில்கொள்ளும் தானியங்கி மென்பொருளை Meta பயன்படுத்துகிறது, பின் வரியைக் கணக்கிட இந்தத் தயாரிப்பு வகையை அதற்கான வரிக் குறியீட்டுடன் பொருத்திக் காட்டும்.
உங்கள் தயாரிப்பில் சரியான தயாரிப்பு வகை விடுபட்டிருந்தால், Meta தானாகவே ஒரு வகையை ஒதுக்கும். நீங்கள் வகையை வழங்கிய பிறகு, நீங்கள் தேர்ந்தெடுத்த வகையை Meta ஒருபோதும் மேலெழுதாது. Commerce Manager-இல் உள்ள தானியங்கி வகைகள் குறித்து மேலும் அறிக.
Meta வழங்கும் Facebook மற்றும் Instagram-இல் மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தி, தானியங்கி Google தயாரிப்பு வகை ஒதுக்கப்பட்ட தயாரிப்புகளை நீங்கள் திருத்தலாம். அடுத்த முறை உங்களின் Facebook அட்டவணையுடன் உங்கள் தயாரிப்புகள் ஒத்திசைக்கப்படும்போது, இந்த மதிப்புகளும் ஒத்திசைக்கப்படும். தயாரிப்பு மாற்றங்கள் சேமிக்கப்பட்டு 15 நிமிடங்களுக்குள் தயாரிப்பு விவரங்கள் ஒத்திசைக்கப்படும்.