Roblox

Roblox icon
Shopify App Store-இலிருந்து Roblox விற்பனைச் சேனலை நிறுவவும்.

Roblox என்பது ஒரு தத்ரூபமான கேமிங் மற்றும் உள்ளடக்க உருவாக்கத் தளமாகும். உங்கள் Roblox அனுபவத்திற்குள் உங்களின் பிராண்டின் வியாபாரப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை நேரடியாக விற்க, Shopify App Store-இலிருந்து Roblox விற்பனைச் சேனலை நீங்கள் நிறுவலாம்.

Roblox-இல் நீங்கள் விற்க விரும்பும் ஃபிசிக்கல் தயாரிப்புகளை உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து தேர்ந்தெடுத்து நிர்வகிக்கலாம். உங்கள் Roblox Creator Hub-இல், உங்களின் வர்த்தகத் தயாரிப்புகளை நீங்கள் உருவாக்கலாம், பிறகு உங்கள் கேமர்களுக்கு Roblox அவதார் உருப்படி அல்லது அனுபவத்தில் உங்களுக்குப் பிடித்த பலன் போன்ற கூடுதல் விர்ச்சுவல் பலன்களை விருப்பத்தின் பேரில் வழங்கலாம்.

எடுத்துக்காட்டாக, ஒரு Roblox டெவலப்பர் தங்களின் கேரக்டர் ஒன்றின் மென்மையான விளையாட்டுப் பொருள் (plushie) பதிப்பை விற்க விரும்பலாம், அத்துடன் அதே கேரக்டர் தொடர்பான டிஜிட்டல் உருப்படியையும் கேமர்களுக்கு வழங்கலாம்.

Roblox விற்பனைச் சேனலானது, அதிக விற்பனையை இயக்கவும், உங்கள் கேமர்கள் விளையாடும்போது உங்களின் வியாபாரப் பொருட்களை வாங்குவதன் மூலம், உங்களுடைய கேம் அல்லது டிஜிட்டல் அனுபவத்திற்கான தங்களின் ஆதரவைக் காட்ட அவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் உங்களுக்கு உதவும். உங்கள் Shopify ஸ்டோரில் ஏதேனும் மூன்றாம் தரப்பு ஃபிசிக்கல் தயாரிப்புகளை நீங்கள் விற்றால், அந்தத் தயாரிப்புகளையும் Roblox-இல் விற்கலாம். Roblox-இல் வாங்கும் செயல்கள் Shopify-இன் செக்அவுட் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

எந்தவொரு Shopify திட்டத்திலும் உள்ள அனைத்து Shopify வணிகர்களும் Roblox விற்பனைச் சேனலை இலவசமாகப் பயன்படுத்தலாம். தயாரிப்பு வாங்குதலுடன் ஒரு விர்ச்சுவல் பலனை நீங்கள் சேர்த்தால், Roblox மூலம் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். Roblox-இல் டிஜிட்டல் பலனைச் சேர்த்தல் குறித்து மேலும் அறிக.

இந்தப் பிரிவில்