Roblox விற்பனைச் சேனலை அமைத்தல்
உங்கள் Shopify நிர்வாகியில் Roblox விற்பனைச் சேனலை நிறுவி அமைக்கலாம், உங்கள் Roblox கணக்கை இணைக்கலாம், உங்களின் Shopify தயாரிப்புகளை Roblox-உடன் ஒத்திசையலாம் மற்றும் உங்கள் தயாரிப்புகள் கிடைக்கும்தன்மையை நிர்வகிக்கலாம். Roblox விற்பனைச் சேனலை அமைப்பதன் மூலம், Roblox-இல் ஈடுபாட்டுடன் உள்ள பிளேயர்களின் சமூகத்திற்கு ஃபிசிக்கல் வியாபாரப் பொருட்களை நீங்கள் விற்கலாம்.
Roblox-இல் விற்பனை செய்ய, உங்கள் Shopify தயாரிப்புகளை வர்த்தகத் தயாரிப்புகளாக மாற்ற Roblox Creator Hub-ஐப் பயன்படுத்துகிறீர்கள்.
இந்தப் பக்கத்தில்
- Roblox விற்பனைச் சேனலை நிறுவுதல்
- Roblox விற்பனைச் சேனலை அமைத்தல்
- Roblox-இல் உங்கள் வர்த்தகத் தயாரிப்புகளை உருவாக்குதல்
- Shopify-இல் உங்கள் Roblox கேட்லாக்கை நிர்வகித்தல்
- Roblox-ஐப் பயன்படுத்தும் கேமர்களுக்கான செக்அவுட் அனுபவம்
- Shopify-இலிருந்து உங்கள் Roblox கணக்கைத் துண்டித்தல்
- Shopify மூலம் Roblox-இல் விற்பனை செய்வதற்கான ஆதரவைப் பெறுதல்
Roblox விற்பனைச் சேனலை நிறுவவும்
- Shopify App Store-இல் உள்ள Roblox செயலிப் பக்கத்திற்குச் செல்லவும்.
- உங்கள் Shopify கணக்கில் நீங்கள் ஏற்கனவே உள்நுழைந்திருந்தால் நிறுவு என்பதைச் சொடுக்கவும் அல்லது உங்கள் Shopify கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி நிறுவுவதற்கு உள்நுழையவும் என்பதைச் சொடுக்கவும்.
- செயலியை நிறுவு பக்கத்தில், நிறுவு என்பதைச் சொடுக்கவும்.
Roblox விற்பனைச் சேனலை அமைக்கவும்
உங்கள் Shopify நிர்வாகியில் Roblox விற்பனைச் சேனலை நிறுவிய பிறகு, உங்கள் Roblox கணக்கை Shopify உடன் இணைக்க வேண்டும். அதன்பின் உங்கள் தயாரிப்புகளை Shopify-இலிருந்து உங்கள் Roblox Creator Hub-க்கு ஒத்திசைக்கலாம், அத்துடன் உங்கள் Shopify தயாரிப்பு அட்டவணையை உங்களுக்குச் சொந்தமான எந்தவொரு Roblox குழுக்களுடனும் பகிரலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Roblox என்பதற்குச் செல்லவும்.
உங்கள் Roblox கணக்கை அமை பக்கத்தில், உங்கள் Roblox கணக்கை இணைக்க, இணை என்பதைச் சொடுக்கி, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- நீங்கள் ஏற்கனவே உங்கள் Roblox கணக்கில் உள்நுழைந்திருந்தால், தொடர்க என்பதைச் சொடுக்கவும்.
- வேறு Roblox கணக்கைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், கணக்கை மாற்று என்பதைச் சொடுக்கி, உங்களுக்குத் தேவையான Roblox கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் ஏற்கனவே உங்கள் Roblox கணக்கில் உள்நுழையவில்லை எனில், உங்கள் Roblox கணக்கு விவரங்களை உள்ளிட்டு உள்நுழையவும்.
உங்கள் Roblox கணக்கில் உள்நுழைந்த பிறகு, உறுதிசெய்து அணுகலை வழங்கு என்பதைச் சொடுக்கவும்.
விருப்பத்திற்குரியது: உங்கள் Roblox எக்ஸ்பீரியன்ஸ் ஒரு குழுவுக்குச் சொந்தமானதாக இருந்தால், மேலும் ஒத்திசைக்கப்பட்ட உங்கள் Shopify அட்டவணை உருப்படிகளை Roblox-இல் பயன்படுத்த அக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரையும் அனுமதிக்க விரும்பினால், பின்வருவனவற்றைச் செய்யவும்:
- குழு அனுமதிகள் பிரிவில், குழுக்களைச் சேர் என்பதைச் சொடுக்கவும்.
- Roblox உரையாடல் பெட்டியில், நீங்கள் அணுகலை வழங்க விரும்பும் குழுக்களைத் தேர்ந்தெடுக்கவும்.
Roblox-இல் விற்பனை செய்வதற்காக உங்கள் தயாரிப்புகளை ஒத்திசைக்க, அடுத்து என்பதைச் சொடுக்கவும்.
தயாரிப்புகளைச் சேர் என்பதைச் சொடுக்கவும்.
Roblox-க்கு நீங்கள் ஒத்திசைக்க விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சேர் என்பதைச் சொடுக்கவும்.
முடி என்பதைச் சொடுக்கவும்.
Roblox-இல் உங்கள் வணிகத் தயாரிப்புகளை உருவாக்குதல்
Shopify-இலிருந்து உங்கள் தயாரிப்புகளை Roblox-க்கு ஒத்திசைத்த பிறகு, Roblox-இல் விற்பனை செய்வதற்கு உங்கள் தயாரிப்புகளை அமைக்க வேண்டும். வணிகத் தயாரிப்புகளை உருவாக்குவது மற்றும் உங்கள் எக்ஸ்பீரியன்ஸில் கொள்முதல் பிராம்ட்டைச் செயல்படுத்துவது எப்படி என்பது குறித்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Shopify-இல் உங்கள் Roblox அட்டவணையை நிர்வகித்தல்
Shopify-இல் உள்ள Roblox விற்பனைச் சேனலில், உங்கள் Roblox அட்டவணையில் கூடுதல் தயாரிப்புகளைச் சேர்க்கலாம் அல்லது தயாரிப்புகளை அகற்றலாம்.
உங்கள் Roblox அட்டவணையில் கூடுதல் தயாரிப்புகளைச் சேர்க்கும் முன், அந்தத் தயாரிப்புகள் Roblox விற்பனைச் சேனலில் கிடைக்கின்றனவா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Roblox என்பதற்குச் செல்லவும்.
அட்டவணை என்பதைச் சொடுக்கவும்.
விருப்பத்திற்குரியது: உங்கள் Roblox அட்டவணையில் கூடுதல் தயாரிப்புகளைச் சேர்க்க:
- தயாரிப்புகளைச் சேர் என்பதைச் சொடுக்கவும்.
- Roblox-க்கு நீங்கள் ஒத்திசைக்க விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சேர் என்பதைச் சொடுக்கவும்.
விருப்பத்திற்குரியது: உங்கள் Roblox அட்டணையிலிருந்து தயாரிப்புகளை அகற்ற:
- உங்கள் Roblox அட்டவணையிலிருந்து நீங்கள் அகற்ற விரும்பும் தயாரிப்புகளைப் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
- அகற்று என்பதைச் சொடுக்கவும்.
- உரையாடல் பெட்டியில், அகற்று என்பதைச் சொடுக்கவும்.
Shopify-இல் உங்கள் Roblox தயாரிப்புகளில் மாற்றங்களைச் செய்தல்
Roblox-க்கு ஏற்கனவே ஒத்திசைக்கப்பட்ட ஒரு தயாரிப்புக்கான குறிப்பிட்ட தயாரிப்பு விவரங்களை உங்கள் Shopify நிர்வாகியில் புதுப்பித்தால், உங்கள் மாற்றங்கள் உடனடியாக Roblox-இல் காட்டப்படாது.
ஒரு தயாரிப்பின் தலைப்பை மாற்றினால், தயாரிப்பு விளக்கத்தைப் புதுப்பித்தால் அல்லது புதிய தயாரிப்புப் படங்களைச் சேர்த்தால், உங்கள் மாற்றங்கள் Roblox-ஆல் மதிப்பாய்வு செய்யப்படும் வரை காட்டப்படாது. முன்பு அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் தயாரிப்பு தொடர்ந்து விற்பனைக்குக் கிடைக்கும். இந்த மதிப்பாய்வுக்கு 5 வணிக நாட்கள் வரை ஆகலாம்.
Roblox-இல் உள்ள மெய்நிகர் பலனுடன் தொகுக்கப்பட்ட ஒரு Shopify தயாரிப்பு உங்களிடம் இருந்து, அதன் விலையை உங்கள் Shopify நிர்வாகியில் புதுப்பித்தால், அது டிஜிட்டல் தொகுப்புக் கட்டணங்களுக்காக மீண்டும் செயலாக்கப்படும் வரை Roblox-இல் உள்ள தொடர்புடைய வணிகத் தயாரிப்பு முடக்கப்படும், அதனை விற்கவும் முடியாது.
Roblox-ஐப் பயன்படுத்தும் கேமர்களுக்கான செக்அவுட் எக்ஸ்பீரியன்ஸ்
உங்கள் எக்ஸ்பீரியன்ஸிலிருந்து கேமர்கள் தயாரிப்புகளை வாங்கும்போது, Roblox பிளாட்ஃபார்மில் உள்ள Shopify செக்அவுட் மூலம் அவர்களின் பரிவர்த்தனையை நிறைவு செய்வார்கள்.
விருப்பத்தேர்வு காட்டப்படும்போது தயாரிப்பைப் பார்ப்பதற்கு ஒரு கேமர் பொத்தானைத் தட்டுகிறார், பின்னர் அவர்கள் வாங்கும் தயாரிப்பிற்கான அளவு அல்லது நிறம் போன்ற தொடர்புடைய ஏதேனும் விருப்பத்தேர்வுகளை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியும்.
கேமர் அதன் பிறகு Shopify செக்அவுட்டில் தமது கொள்முதலை நிறைவு செய்கிறார், அத்துடன் இணைக்கப்பட்ட ஏதேனும் அவதார் உருப்படி அல்லது டெவலப்பர் தயாரிப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.

Shopify-இலிருந்து உங்கள் Roblox கணக்கின் இணைப்பைத் துண்டிக்கவும்
எந்த நேரத்திலும் Shopify-இல் உள்ள Roblox விற்பனைச் சேனலிலிருந்து உங்கள் Roblox கணக்கின் இணைப்பைத் துண்டிக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Roblox என்பதற்குச் செல்லவும்.
கணக்கு என்பதைச் சொடுக்கவும்.
நீங்கள் இணைப்பைத் துண்டிக்க விரும்பும் Roblox கணக்கிற்கு இணைப்பைத் துண்டி என்பதைச் சொடுக்கவும்.
Shopify-ஐப் பயன்படுத்தி Roblox-இல் விற்பனை செய்வதற்கான ஆதரவைப் பெறுதல்
Shopify-இல் உள்ள உங்கள் Roblox விற்பனைச் சேனலிலிருந்து தயாரிப்புகளை ஒத்திசைப்பது மற்றும் நிர்வகிப்பது தொடர்பிலோ அல்லது உங்கள் Roblox Creator Hub-இல் வணிகத் தயாரிப்புகளை உருவாக்குவது மற்றும் நிர்வகிப்பது தொடர்பிலோ உதவி தேவைப்பட்டால், நீங்கள் Roblox-ஐத் தொடர்புகொள்ளலாம்.
Shopify இல் உள்ள உங்களின் Roblox விற்பனைச் சேனலில், > ஆதரவைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.