உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான வலைப்பதிவுகளை நிர்வகிக்கவும்

உங்கள் வணிகம் அல்லது தயாரிப்புகள் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்த உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் வலைப்பதிவுகளைச் சேர்த்து, அவற்றில் இடுகையிடலாம். வாடிக்கையாளர்களுடன் உறவை உருவாக்கவும், உங்கள் நிபுணத்துவத்தை நிலைநிறுத்தவும், ஸ்டோரைப் பார்வையிடுபவர்களை ஈர்க்கவும் வலைப்பதிவு எழுதுவது உதவும். பின்வரும் வழிகளில், உங்கள் தளத்தின் டிராஃபிக்கை வலைப்பதிவு இடுகைகள் அதிகரிக்கும்:

  • உங்கள் ஸ்டோரின் தேடுபொறி உகப்பாக்கத்தை (SEO) மேம்படுத்தும்.
  • பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றும் கதைகளைப் பகிர உங்களை அனுமதிக்கும்.
  • வாடிக்கையாளர் ஈடுபாட்டை அதிகரிக்கும்.

வலைப்பதிவைச் சேர்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் News என்ற இயல்புநிலை வலைப்பதிவு உள்ளது. இந்த வலைப்பதிவின் விவரங்கள் எதையும் உங்களால் திருத்தவும் கூடுதல் வலைப்பதிவுகளை உருவாக்கவும் முடியும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வலைப்பதிவுகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வலைப்பதிவைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் வலைப்பதிவுக்குத் தலைப்பைக் கொடுங்கள் (255 எழுத்துகள் வரை), பிறகு கருத்துகளை எவ்வாறு நிர்வகிக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. விருப்பத்திற்குரியது: வலைப்பதிவுகளுக்கான தனிப்பயன் வார்ப்புருவை நீங்கள் உருவாக்கியிருந்தால், அந்த வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கலாம். வார்ப்புரு கீழ்தோன்றும் மெனுவில், வலைப்பதிவுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும். வலைப்பதிவில் உள்ள அனைத்து இடுகைகளும் அந்த வார்ப்புருவைப் பயன்படுத்தும்.

  6. விருப்பத்திற்குரியது: தேடுபொறிப் பட்டியல் விவரங்களைத் திருத்தவும்.

  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. உள்ளடக்கம் மெனுவில், arrow down ஐகானைத் தட்டிவிட்டு, பிறகு வலைப்பதிவு இடுகைகள் என்பதைத் தட்டவும்.

  3. Horizontal menu அல்லது Vertical menu > வலைப்பதிவுகளை நிர்வகி என்பதைத் தட்டவும்.

  4. வலைப்பதிவைச் சேர் என்பதைத் தட்டவும்.

  5. உங்கள் வலைப்பதிவுக்குத் தலைப்பைக் கொடுங்கள் (255 எழுத்துகள் வரை), பிறகு கருத்துகளை எவ்வாறு நிர்வகிக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. விருப்பத்திற்குரியது: வலைப்பதிவுகளுக்கான தனிப்பயன் வார்ப்புருவை நீங்கள் உருவாக்கியிருந்தால், அந்த வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கலாம். வார்ப்புரு கீழ்தோன்றும் மெனுவில், வலைப்பதிவுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும். வலைப்பதிவில் உள்ள அனைத்து இடுகைகளும் அந்த வார்ப்புருவைப் பயன்படுத்தும்.

  7. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

உங்கள் வலைப்பதிவை உருவாக்கிய பிறகு, உங்கள் முக்கிய வழிசெலுத்தல் மெனுவில் அதைச் சேர்க்கலாம்.

வலைப்பதிவு விவரங்களைத் திருத்து

உங்கள் தற்போதைய வலைப்பதிவுகளுக்கான கருத்து நிர்வாகம், வார்ப்புருக்கள் மற்றும் தேடுபொறிப் பட்டியலை உங்களால் திருத்த முடியும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வலைப்பதிவுகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் வலைப்பதிவின் பெயரைக் கிளிக் செய்யவும்.

  4. பின்வரும் விவரங்களில் எதையாவது திருத்தவும்:

  1. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

வலைப்பதிவிற்கான தேடுபொறிப் பட்டியலைத் திருத்து

வலைப்பதிவின் தேடுபொறி முடிவுகளில் காண்பிக்கப்படும் உரையை உங்களால் திருத்த முடியும். விளக்கமான தலைப்புகளும் விளக்கங்களும், புதிய வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரைக் கண்டறியவும் இணைப்பைக் கிளிக் செய்ய அவர்களைத் தூண்டவும் உதவும். தேடுபொறி உகப்பாக்கம் குறித்து மேலும் அறிக.

வலைப்பதிவின் தேடுபொறிப் பட்டியலில் மாற்றங்களைச் செய்யும்போது, அது தேடுபொறி முடிவுகளில் எப்படிக் காண்பிக்கப்படும் என்பதை நீங்கள் முன்கூட்டியே பார்க்கலாம்.

தலைப்புக்கு 70 எழுத்துகளுக்கு மேலும் விளக்கத்திற்கு 160 எழுத்துகளுக்கு மேலும் உள்ளிட்டால், தேடுபொறி முடிவுகளில் உங்கள் உரை துண்டிக்கப்படலாம்.

உங்கள் வலைப்பதிவிற்கான இணைய முகவரியில் மாற்றங்களைச் செய்ய முடியும். ஆனால், பெரும்பாலான சமயங்களில் அதற்கான தேவை இருக்காது. நீங்கள் மாற்றங்களைச் செய்திருந்தால், URL திசைதிருப்பலை உருவாக்குவதற்கான முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பம் உங்களுக்கு இருக்கும். மேலும், பழைய இணைய முகவரி புதிய இணைய முகவரிக்குத் திசைதிருப்பப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வலைப்பதிவுகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் தேடுபொறிப் பட்டியலைத் திருத்த விரும்பும் வலைப்பதிவின் பெயரைக் கிளிக் செய்யவும்.

  4. தேடுபொறிப் பட்டியல் முன்னோட்டம் பிரிவில், பென்சில் ஐகானைக் கிளிக் செய்யவும்.

  5. பின்வரும் புலங்களில் எதையாவது உள்ளிடவும் அல்லது திருத்தவும்:

  • பக்கத்தின் தலைப்பு புலத்தில், விளக்கமான தலைப்பை உள்ளிடவும். தேடுபொறி முடிவுகளில் தலைப்பானது இணைப்பாகக் காண்பிக்கப்படும்.
  • மெட்டா விளக்கம் புலத்தில், விளக்கத்தை உள்ளிடவும். புதிய வாடிக்கையாளர்கள் உங்கள் பக்கத்தைக் கண்டறிய உதவும் வகையில், தொடர்புடைய முக்கியச் சொற்களையும் உங்கள் ஸ்டோரின் பெயரையும் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளவும்.
  • URL ஹேண்டில் புலத்தில், இணைய முகவரியின் ஒரு பகுதியை நீங்கள் மாற்றலாம். அதில் இடைவெளிகள் இருக்கக்கூடாது. தனித்தனி வார்த்தைகளுக்கு இடையே இடைவெளிகளுக்குப் பதிலாகக் கோடுகளை (-) நீங்கள் உள்ளிடலாம்.
  1. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் முக்கிய வழிசெலுத்தல் மெனுவிலோ வேறு மெனுவிற்குள்ளோ வலைப்பதிவுகளை நீங்கள் சேர்க்கலாம்.

உங்களிடம் ஏற்கனவே ஒரு வெளிப்புறத் தளத்தில் வலைப்பதிவு இருந்தால், WordPress, Tumblr மற்றும் Blogger போன்ற மூன்றாம் தரப்பு பிளாட்ஃபார்மில் ஹோஸ்ட் செய்யப்பட்ட வலைப்பதிவிற்கான இணைப்பை உங்கள் ஆன்லைன் ஸ்டோர் வழிசெலுத்தலில் சேர்க்கலாம்.