வலைப்பதிவு இடுகைகளில் உள்ள கருத்துகளை நிர்வகித்தல்

வலைப்பதிவு இடுகைகளிலுள்ள கருத்துகள், உங்கள் வணிகம் மற்றும் தயாரிப்புகள் குறித்த உரையாடல்களுக்கான இடத்தை வழங்கக்கூடும். உங்கள் வலைப்பதிவு இடுகைகளில் வாடிக்கையாளர்கள் கருத்துத் தெரிவிக்க நீங்கள் அனுமதிக்கலாம், கருத்து தெரிவிப்பதை முடக்கலாம் அல்லது மதிப்பாய்வுக்கு உட்பட்டு கருத்துகளைச் சமர்ப்பிக்க அனுமதிக்கலாம்.

வலைப்பதிவில் கருத்துகளை அனுமதித்தல் அல்லது முடக்குதல்

நீங்கள் புதிய வலைப்பதிவை உருவாக்கும்போது, வலைப்பதிவிற்கான கருத்துகள் இயல்பாகவே முடக்கப்பட்டிருக்கும். கருத்து அமைப்புகள் பின்வரும் மூன்று விருப்பங்களைக் கொண்டுள்ளன:

  • கருத்துகள் முடக்கப்பட்டுள்ளன: உங்கள் வலைப்பதிவின் பார்வையாளர்கள் இடுகைகளில் கருத்துகளைப் பதிவிட முடியாது.
  • மதிப்பாய்வுக்கு உட்பட்டு, கருத்துகள் அனுமதிக்கப்படுகின்றன: உங்கள் வலைப்பதிவின் பார்வையாளர்கள் கருத்துகளைப் பதிவிடலாம், ஆனால் அவை உங்கள் வலைப்பதிவில் காட்டப்படுவதற்கு முன்பு நீங்கள் அந்தக் கருத்துகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
  • கருத்துகள் அனுமதிக்கப்படுவதுடன், தானாகவே வெளியிடப்படும்: உங்கள் வலைப்பதிவின் பார்வையாளர்கள் கருத்துகளைப் பதிவிடலாம், அத்துடன் உங்களின் மதிப்பாய்வு இல்லாமலேயே அவை உங்கள் வலைப்பதிவில் காட்டப்படும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வலைப்பதிவுகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் வலைப்பதிவின் பெயரைக் கிளிக் செய்யவும்.

  4. கருத்துகள் பிரிவில், நீங்கள் விரும்பும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, மெனு ஐகானைத் தட்டவும்.

  2. உள்ளடக்கம் மெனுவில், arrow down ஐகானைத் தட்டவும், பின்னர் வலைப்பதிவு இடுகைகள் என்பதைத் தட்டவும்.

  3. Horizontal menu அல்லது Vertical menu > வலைப்பதிவுகளை நிர்வகி என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் திருத்த விரும்பும் வலைப்பதிவின் பெயரைத் தட்டவும்.

  5. கருத்துகள் பிரிவில், நீங்கள் விரும்பும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்..

கருத்துகளை நிர்வகி

கருத்துகளைச் சமர்ப்பிக்க அனுமதிக்குமாறு நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் வலைப்பதிவிற்கான கருத்துகளை உங்களால் நிர்வகிக்க முடியும். கருத்துகள் பின்வரும் நிலைகளில் ஒன்றைக் கொண்டிருக்கலாம்:

  • தானாக அங்கீகரிக்கப்பட்ட கருத்துகள் அல்லது நீங்கள் மேனுவலாக அங்கீகரிக்கும் கருத்துகள் அங்கீகரிக்கப்பட்டது என்ற நிலையைக் கொண்டிருக்கும்.
  • மேனுவல் அங்கீகாரம் தேவைப்படும் கருத்துகள் அங்கீகரிக்கப்படவில்லை என்ற நிலையைக் கொண்டிருக்கும்.
  • தானாகவோ மேனுவலாகவோ ஸ்பேம் எனக் குறிக்கப்பட்ட கருத்துகள் ஸ்பேம் என்ற நிலையைக் கொண்டிருக்கும்.

வலைப்பதிவு இடுகை கருத்துகளுக்குப் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் மேற்கொள்ளலாம்:

  • அங்கீகரிக்கப்படவில்லை என்ற நிலையில் உள்ள கருத்துகளை அங்கீகரிக்கவும்.
  • கருத்துகளை ஸ்பேம் எனக் குறிக்கவும்
  • ஸ்பேம் என்ற நிலையில் உள்ள கருத்துகளின் குறியீட்டை அகற்றவும்
  • கருத்துகளை நீக்கவும்

கருத்துகளின் இயல்புநிலை நிலை, கருத்துகளைத் தானாகவே வெளியிடுமாறு நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்களா அல்லது மதிப்பாய்வு தேவையா என்பதைப் பொறுத்தது. 'அங்கீகரிக்கப்பட்டது' என்ற நிலையில் உள்ள கருத்துகளை 'அங்கீகரிக்கப்படவில்லை' எனக் குறிக்க முடியாது, ஆனால் உங்கள் வலைப்பதிவு இடுகையிலிருந்து அகற்றுவதற்கு அந்தக் கருத்தை உங்களால் நீக்க முடியும்.

கருத்துகளின் நிலை உங்கள் Shopify நிர்வாகியின் உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் பிரிவில் உள்ள கருத்துகளை நிர்வகி பக்கத்தில் காட்டப்படும். வலைப்பதிவு இடுகை விவரங்கள் பக்கத்தின் கருத்துகள் பிரிவில் குறிப்பிட்ட வலைப்பதிவு இடுகைக்கான கருத்துகளையும் உங்களால் மதிப்பாய்வு செய்து நிர்வகிக்க முடியும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. கருத்துகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. குறைந்தபட்சம் ஒரு கருத்தைத் தேர்ந்தெடுத்து, பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளவும்:

  • 'அங்கீகரிக்கப்படவில்லை' என்ற நிலையில் உள்ள ஒரு கருத்தை அங்கீகரித்து வெளியிட, அங்கீகரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • கருத்தை ஸ்பேம் எனக் குறிக்க, ஸ்பேம் எனக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • 'ஸ்பேம்' என்ற நிலையில் உள்ள கருத்தின் குறியீட்டை அகற்ற, ஸ்பேம் குறியீட்டை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  • கருத்தை நீக்க, … > கருத்துகளை நீக்கு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும். நீக்கப்பட்ட கருத்துகளை மீட்டெடுக்க முடியாது.

கருத்துகளை அங்கீகரிக்கவும் அல்லது நீக்கவும்

மதிப்பாய்வு நிலுவையில் இருக்கும் கருத்துகளைச் சமர்ப்பிக்க நீங்கள் அனுமதிக்குமாறு தேர்வுசெய்தால், அவை உங்கள் வலைப்பதிவில் வெளியிடப்படுவதற்கு முன்பு அனைத்துக் கருத்துகளையும் நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். மொத்தச் செயல் மூலம் பல கருத்துகளை நீங்கள் அங்கீகரிக்கலாம் அல்லது நீக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. கருத்துகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. 'அங்கீகரிக்கப்படவில்லை' என்ற நிலையில் உள்ள குறைந்தபட்சம் ஒரு கருத்தைத் தேர்ந்தெடுத்து, பின்வரும் செயல்களில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

  • கருத்தை அங்கீகரித்து வெளியிட, அங்கீகரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • கருத்தை ஸ்பேம் எனக் குறிக்க, ஸ்பேம் எனக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • கருத்தை நீக்க, … > கருத்துகளை நீக்கு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும். நீக்கப்பட்ட கருத்துகளை மீட்டெடுக்க முடியாது.

ஸ்பேம் கருத்துகளை அகற்றவும்

ஸ்பேம் இருப்பதற்கான அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என அனைத்து வலைப்பதிவுக் கருத்துகளையும் Shopify சரிபார்த்து அவற்றைக் கொடியிடுகிறது. கொடியிடப்பட்ட கருத்துகள் உங்கள் வலைப்பதிவில் காட்டப்படாது, ஆனால் அவை உங்கள் Shopify நிர்வாகியில் காட்டப்படும். டெஸ்க்டாப்பில் மட்டுமே கருத்துகளை உங்களால் மேனுவலாக ஸ்பேம் எனக் குறிக்க முடியும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. கருத்துகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. 'ஸ்பேம்' என்ற நிலையில் உள்ள குறைந்தபட்சம் ஒரு கருத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. ஸ்பேம் எனக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. விருப்பத்திற்குரியது: கருத்தை நீக்க, … > கருத்துகளை நீக்கு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும். நீக்கப்பட்ட கருத்துகளை மீட்டெடுக்க முடியாது.