மேம்பட்ட வெளியீடு

பின்வரும் செயல்களைச் செய்வதற்கான கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் வலைப்பதிவை நிர்வகிப்பதை எளிதாக்கலாம்:

  • குறிப்பிட்ட ஸ்டைலில் ஒரு வலைப்பதிவுப் பக்கத்தை அல்லது தனிப்பட்ட வலைப்பதிவு இடுகையைக் காட்ட, பிரத்தியேக வார்ப்புருவை உருவாக்கவும்.
  • உங்கள் வலைப்பதிவு இடுகைகளுக்கு ஒரு வெளியீட்டுத் தேதியை அமைக்கவும்.
  • ஒரு மொத்தச் செயல் மூலம் ஒரே நேரத்தில் பல இடுகைகளை வெளியிடலாம் அல்லது வெளியீட்டை ரத்துசெய்யலாம்.
  • உங்கள் வலைப்பதிவில் குழுசேரவும் அறிவிப்புகளைப் பெறவும் வாடிக்கையாளர்களை அழைக்கவும்.

புதிய வலைப்பதிவு வார்ப்புருவை உருவாக்கவும்

ஒரு வலைப்பதிவுப் பக்கம் என்பது அந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து இடுகைகளுக்கான இணைப்புகளும் காட்டப்படும் இடமாகும்.

வலைப்பதிவுப் பக்கத்தில் அனைத்து இடுகைகளும் எவ்வாறு காட்டப்படும் என்பதற்கான தளவமைப்பைத் தனிப்பயனாக்க உங்களின் சொந்த வார்ப்புருவை உங்களால் உருவாக்க முடியும். எடுத்துக்காட்டாக, வலைப்பதிவு இடுகைகளின் சிறப்புப் படங்கள் காட்டப்பட வேண்டுமா என்பது, மற்றும் வார்ப்புருவில் பிரிவுகளைச் சேர்ப்பதன் மூலம் வலைப்பதிவுப் பக்கத்தில் வேறு ஏதேனும் உள்ளடக்கத்தை வைக்கிறீர்களா என்பது போன்றவையாக இது இருக்கலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, பின்னர் தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. முகப்புப் பக்கம் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, பின்னர் வலைப்பதிவுகள் > வார்ப்புருவை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் வலைப்பதிவுக்கு ஒரு வார்ப்புருவை உருவாக்கவும்:

    1. பெயர் புலத்தில், உங்கள் புதிய வலைப்பதிவு வார்ப்புருவுக்குத் தனித்துவமான பெயரை உள்ளிடவும்.
    2. அடிப்படையில் கீழ்தோன்றும் மெனுவில், உங்கள் புதிய வலைப்பதிவு வார்ப்புரு எதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த ஏற்கனவே உள்ள வலைப்பதிவு வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. வார்ப்புருவை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் புதிய வார்ப்புருவின் அமைப்புகள் மற்றும் பிரிவுகளில் நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களைச் செய்யுங்கள்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.

  3. அனைத்துத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.

  5. முகப்புப் பக்கம் கீழ்தோன்றும் மெனுவைத் தட்டி, வலைப்பதிவுகள் > வார்ப்புருவை உருவாக்கு என்பதைத் தட்டவும்.

  6. உங்கள் வலைப்பதிவுக்கு ஒரு வார்ப்புருவை உருவாக்கவும்:

    1. பெயர் புலத்தில், உங்கள் புதிய வலைப்பதிவு வார்ப்புருவுக்குத் தனித்துவமான பெயரை உள்ளிடவும்.
    2. அடிப்படையில் கீழ்தோன்றும் மெனுவில், உங்கள் புதிய வலைப்பதிவு வார்ப்புரு எதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த ஏற்கனவே உள்ள வலைப்பதிவு வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. வார்ப்புருவை உருவாக்கு என்பதைத் தட்டவும்.
  7. உங்கள் புதிய வார்ப்புருவின் அமைப்புகள் மற்றும் பிரிவுகளில் நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களைச் செய்யுங்கள்.

  8. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

வலைப்பதிவுக்கு ஒரு வார்ப்புருவைப் பயன்படுத்துதல்

நீங்கள் குறைந்தது ஒரு புதிய வலைப்பதிவு வார்ப்புருவை உருவாக்கிய பிறகு, ஒரு வலைப்பதிவுக்கு வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். காட்டப்படும் வார்ப்புரு விருப்பங்கள் உங்கள் தற்போதைய நேரலை தீமில் உள்ள வார்ப்புருக்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். நீங்கள் ஒரே வலைப்பதிவு வார்ப்புருவைப் பயன்படுத்தும் அனைத்து வலைப்பதிவுப் பக்கங்களும் ஒரே பாணியில் காட்டப்படும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வலைப்பதிவுகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் வலைப்பதிவைக் கிளிக் செய்யவும்.

  4. ஆன்லைன் ஸ்டோர் பிரிவில், தீம் வார்ப்புரு மெனுவைக் கிளிக் செய்து, நீங்கள் பயன்படுத்த விரும்பும் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. உள்ளடக்கம் மெனுவில், arrow down ஐகானைத் தட்டி, வலைப்பதிவு இடுகைகள் என்பதைத் தட்டவும்.

  3. Horizontal menu அல்லது Vertical menu > வலைப்பதிவுகளை நிர்வகி என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் திருத்த விரும்பும் வலைப்பதிவைத் தட்டவும்.

  5. ஆன்லைன் ஸ்டோர் பிரிவில், தீம் வார்ப்புரு மெனுவைத் தட்டி, நீங்கள் பயன்படுத்த விரும்பும் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

புதிய வலைப்பதிவு இடுகை வார்ப்புருவை உருவாக்குதல்

வலைப்பதிவு இடுகைப் பக்கத்தில் வலைப்பதிவு இடுகையின் உள்ளடக்கம் காட்டப்படும்.

தனிப்பட்ட வலைப்பதிவு இடுகைகள் அல்லது வலைப்பதிவு இடுகைக் குழுக்களின் தளவமைப்பைத் தனிப்பயனாக்க, உங்களுக்கெனச் சொந்தமாக வலைப்பதிவு இடுகை வார்ப்புருவை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, வலைப்பதிவு இடுகையின் ஆசிரியர் மற்றும் தேதி காட்டப்படுகிறதா என்பதையும், பிரிவுகளைச் சேர்ப்பதன் மூலம் வலைப்பதிவு இடுகை வார்ப்புருவில் ஏதேனும் பிற உள்ளடக்கங்களை வைக்கிறீர்களா என்பதையும் இதை வைத்துத் தீர்மானிக்கலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, பின்னர் தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. முகப்புப் பக்கம் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, வலைப்பதிவு இடுகைகள் > வார்ப்புருவை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் வலைப்பதிவு இடுகைக்கு ஒரு வார்ப்புருவை உருவாக்கவும்:

    1. பெயர் புலத்தில், உங்கள் புதிய வலைப்பதிவு இடுகைகளின் வார்ப்புருவிற்குத் தனித்துவமான பெயரை உள்ளிடவும்.
    2. இதன் அடிப்படையில் கீழ்தோன்றும் மெனுவில், உங்கள் புதிய வலைப்பதிவு இடுகைகளின் வார்ப்புருவை உருவாக்கப் பயன்படுத்த விரும்பும் தற்போதைய வலைப்பதிவு இடுகைகள் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. வார்ப்புருவை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் புதிய வார்ப்புருவின் அமைப்புகள் மற்றும் பிரிவுகளில் நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களைச் செய்யுங்கள்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.

  3. அனைத்துத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.

  5. முகப்புப் பக்கம் கீழ்தோன்றும் மெனுவைத் தட்டி, வலைப்பதிவு இடுகைகள் > வார்ப்புருவை உருவாக்கு என்பதைத் தட்டவும்.

  6. உங்கள் வலைப்பதிவு இடுகைக்கு ஒரு வார்ப்புருவை உருவாக்கவும்:

    1. பெயர் புலத்தில், உங்கள் புதிய வலைப்பதிவு இடுகைகளின் வார்ப்புருவிற்குத் தனித்துவமான பெயரை உள்ளிடவும்.
    2. இதன் அடிப்படையில் கீழ்தோன்றும் மெனுவில், உங்கள் புதிய வலைப்பதிவு இடுகைகளின் வார்ப்புருவை உருவாக்கப் பயன்படுத்த விரும்பும் தற்போதைய வலைப்பதிவு இடுகைகள் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. வார்ப்புருவை உருவாக்கு என்பதைத் தட்டவும்.
  7. உங்கள் புதிய வார்ப்புருவின் அமைப்புகள் மற்றும் பிரிவுகளில் நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களைச் செய்யுங்கள்.

  8. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

வலைப்பதிவு இடுகைக்கு வார்ப்புருவைப் பயன்படுத்துதல்

நீங்கள் குறைந்தது ஒரு புதிய வலைப்பதிவு இடுகை வார்ப்புருவை உருவாக்கிய பிறகு, தனிப்பட்ட இடுகைகளுக்கு வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். காட்டப்படும் வார்ப்புரு விருப்பங்கள் உங்கள் தற்போதைய நேரலை தீமில் உள்ள வார்ப்புருக்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். நீங்கள் ஒரே வலைப்பதிவு இடுகைகள் வார்ப்புருவைப் பயன்படுத்தும் அனைத்து வலைப்பதிவு இடுகைகளும் ஒரே பாணியில் காட்டப்படும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் வலைப்பதிவு இடுகையைக் கிளிக் செய்யவும்.

  3. ஆன்லைன் ஸ்டோர் பிரிவில், தீம் வார்ப்புரு மெனுவைக் கிளிக் செய்து, நீங்கள் பயன்படுத்த விரும்பும் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. உள்ளடக்கம் மெனுவில், arrow down ஐகானைத் தட்டி, வலைப்பதிவு இடுகைகள் என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் வலைப்பதிவு இடுகையைத் தட்டவும்.

  4. ஆன்லைன் ஸ்டோர் பிரிவில், தீம் வார்ப்புரு மெனுவைத் தட்டி, நீங்கள் பயன்படுத்த விரும்பும் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

வலைப்பதிவு இடுகைக்கான குறிப்பிட்ட வெளியீட்டுத் தேதியை அமைத்தல்

வலைப்பதிவு இடுகைக்கான குறிப்பிட்ட வெளியீட்டுத் தேதியை நீங்கள் அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, புதிய தயாரிப்பின் அறிமுகத்தின்போது இடுகையை வெளியிடுமாறு நீங்கள் அமைக்கலாம். இடுகையைப் பழைய தேதியிட்டும் வெளியிடலாம். எதிர்கால வெளியீட்டைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. குறிப்பிட்ட தேதியில் நீங்கள் காட்ட விரும்பும் இடுகையைக் கிளிக் செய்யவும்.

  3. காணக்கூடிய நிலை பிரிவில், காலண்டர் ஐகானைக் கிளிக் செய்து தேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்யவும்.

வலைப்பதிவு இடுகையின் காணக்கூடிய நிலையை மொத்தமாக மாற்றுதல்

உங்கள் Shopify நிர்வாகியின் உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் பிரிவிலிருந்து உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள பல பக்கங்களுக்கான காணக்கூடிய நிலை அமைப்பை ஒரே நேரத்தில் புதுப்பிக்கலாம்.

தலைப்பு முக்கியச் சொற்களின் மூலம் வலைப்பதிவு இடுகைகளைத் தேட தேடல் மற்றும் வடிகட்டி விருப்பங்களைப் பயன்படுத்தலாம் அல்லது காணக்கூடிய நிலைமையின் அடிப்படையில் வலைப்பதிவு இடுகைகளைக் காட்ட காணக்கூடிய நிலை வடிகட்டியைப் பயன்படுத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் வெளியிட விரும்பும் வலைப்பதிவு இடுகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. வலைப்பதிவு இடுகைகளின் காணக்கூடிய நிலையை மாற்ற பின்வரும் விருப்பங்களில் ஒன்றைப் பயன்படுத்தவும்:

  • தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வலைப்பதிவு இடுகைகளையும் காட்ட, காணக்கூடியதாக அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வலைப்பதிவு இடுகைகளையும் மறைக்க, மறைக்கப்பட்டதாக அமை என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் வலைப்பதிவில் குழுசேர வாடிக்கையாளர்களை அழைத்தல்

நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் Shopify தானாகவே ஒரு RSS ஊட்டத்தை உருவாக்குகிறது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குழுசேரலாம், நீங்கள் ஒரு புதிய இடுகையை வெளியிடும் போது அறிவிப்புகளைப் பெறலாம். RSS ஊட்டத்திற்கான URL என்பது வலைப்பதிவுப் பக்கத்தின் URL-உடன் .atom இணைக்கப்பட்டதாகும், எடுத்துக்காட்டாக, https://store.myshopify.com/blogs/blogname.atom. உங்கள் வலைப்பதிவில் குழுசேர விரும்பும் வாடிக்கையாளர்கள் RSS ஊட்டத்திற்கான URL-ஐ ஊட்ட ரீடரில் ஒட்டலாம்.

உங்கள் வலைப்பதிவில் குழுசேர வாடிக்கையாளர்களை அழைக்க, வலைப்பதிவு இடுகையில் RSS ஊட்டத்திற்கான URL-ஐச் சேர்க்கலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வலைப்பதிவிற்கான ஊட்டப் பெயரை நீங்கள் எங்கு சேர்க்க விரும்புகிறீர்களோ, அந்த வலைப்பதிவு இடுகையின் பெயரைக் கிளிக் செய்யவும் அல்லது புதிய வலைப்பதிவு இடுகையை உருவாக்கவும்.

  3. உள்ளடக்கம் புலத்தில், ஊட்டப் பெயருடன் சில உரையை உள்ளிடவும், எடுத்துக்காட்டாக https://store.myshopify.com/blogs/blogname.atom என்பதைப் பயன்படுத்தி இந்த வலைப்பதிவின் RSS ஊட்டத்திற்குக் குழுசேரவும்.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. உள்ளடக்கம் மெனுவில், arrow down ஐகானைத் தட்டி, வலைப்பதிவு இடுகைகள் என்பதைத் தட்டவும்.

  3. வலைப்பதிவிற்கான ஊட்டப் பெயரை நீங்கள் எங்கு சேர்க்க விரும்புகிறீர்களோ, அந்த வலைப்பதிவு இடுகையைத் தட்டவும் அல்லது புதிய வலைப்பதிவு இடுகையை உருவாக்கவும்.

  4. உள்ளடக்கம் புலத்தில், ஊட்டப் பெயருடன் சில உரையை உள்ளிடவும், எடுத்துக்காட்டாக https://store.myshopify.com/blogs/blogname.atom என்பதைப் பயன்படுத்தி இந்த வலைப்பதிவின் RSS ஊட்டத்திற்குக் குழுசேரவும்.

  5. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

FeedBurner மூலம் உங்கள் வலைப்பதிவு ஊட்டத்திற்குக் குழுசேர வாடிக்கையாளர்களை அனுமதித்தல்

FeedBurner என்பது குழுசேரும் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் வலைப்பதிவு உள்ளடக்கத்தை வழங்கும் மூன்றாம் தரப்புச் சேவையாகும்.

முன்பு உங்கள் வலைப்பதிவை FeedBurner உடன் ஒருங்கிணைத்திருந்தால், உங்களின் தற்போதைய வலைப்பதிவும் அதன் இடுகைகளும் FeedBurner உடன் தொடர்ந்து இணைக்கப்பட்டிருக்கும்.

ஏற்கனவே FeedBurner-உடன் ஒருங்கிணைக்கப்படாத புதிய அல்லது தற்போதைய வலைப்பதிவுகளால் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியாது.