வலைப்பதிவு இடுகைகளைத் தானாக உருவாக்குதல்

வலைப்பதிவு இடுகைகளை எழுத, நீங்கள் Sidekick-ஐப் பயன்படுத்தலாம். ஒரு பிராம்ட்டில் நீங்கள் வழங்கும் விவரங்களை எடுத்துக்கொண்டு Sidekick ஒரு வலைப்பதிவு இடுகையை உருவாக்குகிறது. Shopify ஆதரிக்கும் அனைத்து மொழிகளிலும் வலைப்பதிவு இடுகை உருவாக்கம் கிடைக்கிறது. சிறந்த முடிவுகளைப் பெற, எந்த மொழியில் வெளியீடு அமைய வேண்டுமோ அதே மொழியில் உங்கள் பிராம்ட்டை எழுதவும்.

உங்கள் வலைப்பதிவு இடுகைகளுக்குத் தானாகவே உரையை உருவாக்குவதற்கு முன், AI-ஆல் இயக்கப்படும் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

வலைப்பதிவு இடுகையை வரைவாக்குதல்

நீங்கள் வலைப்பதிவு இடுகையை உருவாக்கும்போது, தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்க Sidekick-ஐப் பயன்படுத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வலைப்பதிவு இடுகையைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • வலைப்பதிவுத் தலைப்பை உருவாக்க, தலைப்பு புலத்தில், Generate text ஐகானைக் கிளிக் செய்து, இடுகை எதைப் பற்றியது என்ற விளக்கத்தை உள்ளிட்டு, அதைச் சமர்ப்பிக்கவும்.
    • வலைப்பதிவு உள்ளடக்கத்தை உருவாக்க, உள்ளடக்கம் பிரிவின் ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், Generate text ஐகானைக் கிளிக் செய்து, உங்களுக்கு வேண்டிய உள்ளடக்கத்தை விவரிக்கும் பிராம்ட்டை உள்ளிட்டு, அதைச் சமர்ப்பிக்கவும். நீங்கள் எவ்வளவு விவரங்களைச் சேர்க்கிறீர்களோ, அந்த அளவிற்குப் பொருத்தமான பரிந்துரைகள் கிடைக்கும். நீங்கள் விரும்பிய தொனி, நடை அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகளை நேரடியாக உங்கள் பிராம்ட்டில் சேர்க்கலாம்.
  4. விருப்பத்தேர்வு: உங்கள் பிராண்டிற்குப் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைத் திருத்தி வடிவமைக்கவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் வலைப்பதிவு உள்ளடக்கத்தை உருவாக்கிய பிறகு, உங்கள் வலைப்பதிவு இடுகையை உருவாக்குதலை முடிக்க, உங்கள் வலைப்பதிவில் இடுகையைச் சேர்த்தல் என்பதைப் பார்த்து, உங்கள் வலைப்பதிவில் அதை வெளியிடவும்.

நீங்கள் பெறும் உள்ளடக்கப் பரிந்துரைகளை மேம்படுத்துதல்

உங்கள் வலைப்பதிவு இடுகைகளுக்கான உள்ளடக்கப் பரிந்துரைகளை உருவாக்கும்போது, நீங்கள் உருவாக்க விரும்பும் வலைப்பதிவு இடுகையின் வகையைக் கருத்தில் கொள்ளவும். உருவாக்கப்பட்ட பரிந்துரைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி, உங்கள் வலைப்பதிவு இடுகையின் இலக்குகள், நீங்கள் பகிர விரும்பும் தகவலின் வகை மற்றும் குறிப்பிட்ட முக்கியச் சொற்கள் போன்ற கூடுதல் விவரங்களை உங்கள் பிராம்ட்டில் வழங்குவதாகும்.

உரை உருவாக்க முடிவுகளை மேம்படுத்த, உங்கள் வலைப்பதிவு இடுகைகளில் பின்வரும் வகையான தகவல்களைச் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளவும்:

  • தயாரிப்பு முக்கியச் சொற்கள்: ஒரு குறிப்பிட்ட தயாரிப்பைப் பற்றி எழுதுகிறீர்கள் எனில், தயாரிப்பின் பெயர் மற்றும் வகையைச் சேர்க்க முயலவும். தயாரிப்பின் பெயர் குழப்பமாக இருந்தால், teacups அல்லது candles போன்ற தயாரிப்பு அல்லது வகையை விவரிக்கும் முக்கியச் சொற்களை வழங்கவும். தயாரிப்பைத் தனித்துவமாக்குவது அல்லது ஒருவர் அதை ஏன் வாங்க விரும்பலாம் என்பதை முன்னிலைப்படுத்தும் விவரிப்பான்களைச் சேர்க்கவும். முக்கியச் சொல் பிராம்ட்கள் எளிமையாகவோ அல்லது சிக்கலானதாகவோ இருக்கலாம், மேலும் நீங்கள் உங்கள் பிராம்ட்டை ஒரு வாக்கியமாகவோ அல்லது முக்கியச் சொற்களாகவோ பயன்படுத்தலாம். நீங்கள் எமோஜிகளையும் சேர்க்கலாம்.
  • முக்கியமான பிராண்ட் முக்கியச் சொற்கள் அல்லது கலைச்சொற்கள்: நீங்கள் வழங்கும் தகவலுக்கான உள்ளடக்க முடிவுகள் வெவ்வேறு சொற்றொடர்களைக் கொண்டிருக்கும் அதே வேளையில், பிராண்ட் பெயர்கள் அல்லது தனித்துவமான விளக்கச் சொற்கள் போன்ற சிறப்புச் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் பெரும்பாலும் தக்கவைக்கப்படுகின்றன. உங்கள் பிராண்டின் அடையாள வாசக பிராம்ட்டில் உங்கள் பிராண்ட் பெயரைச் சேர்த்தால், அது வழக்கமாக முடிவுகளில் சேர்க்கப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் மின்ட் லிப் பாமை mint-astic என முக்கியச் சொற்களில் விவரித்தால், உருவாக்கப்படும் பரிந்துரைகளில் அந்த வார்த்தை பெரும்பாலும் சேர்க்கப்படும்.
  • பிற வலைப்பதிவு விவரங்கள்: நீங்கள் உருவாக்கும் உள்ளடக்கத்தின் வகைக்குப் பொருத்தமான எந்தவொரு கூடுதல் விவரங்களும் வழங்கப்பட வேண்டும்.