வலைப்பதிவு இடுகைகளைச் சேர்த்தல் மற்றும் நிர்வகித்தல்
நீங்கள் உங்களுக்கெனச் சொந்தமாக வலைப்பதிவு இடுகைகளை எழுதலாம் மற்றும் உருவாக்கலாம் அல்லது வலைப்பதிவுத் தலைப்புகளையும் வலைப்பதிவு இடுகை உள்ளடக்கத்தையும் தானாகவே உருவாக்க Sidekick-ஐப் பயன்படுத்தலாம்.
உங்கள் வலைப்பதிவு இடுகையை உருவாக்கும்போது, அதை உடனடியாக வெளியிடலாம் அல்லது வலைப்பதிவு இடுகையைத் திட்டமிடலாம்.
இந்தப் பக்கத்தில்
உங்கள் வலைப்பதிவில் இடுகையைச் சேர்
ஒரு வலைப்பதிவு இடுகையை உருவாக்கும்போது, நீங்கள் படத்தைச் சேர்க்கலாம், இணைப்பைச் செருகலாம், அட்டவணையை உருவாக்கலாம் மற்றும் வீடியோ அல்லது பிற மீடியாவை உட்பொதிக்கலாம். உள்ளடக்கம் புலம் ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்துவதால், உங்கள் இடுகையின் உள்ளடக்கத்தை நீங்கள் விரும்பும் வகையில் வடிவமைக்கலாம்.
வலைப்பதிவு இடுகைகள் இயல்புநிலையாக மறைக்கப்பட்டிருக்கும், மேலும் அவற்றை நீங்கள் வெளியிடும் வரை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் காட்டப்படாது.
எந்த நேரத்திலும் உங்கள் வலைப்பதிவு இடுகையைத் திருத்தலாம், மறைக்கலாம் அல்லது நீக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.
வலைப்பதிவு இடுகையைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் வலைப்பதிவு இடுகைக்கான தலைப்பை உள்ளிடவும் (அதிகபட்சம் 255 எழுத்துகள்). வலைப்பதிவு இடுகையைச் சேமிக்க, தலைப்பு அவசியம்.
வலைப்பதிவு இடுகையின் உள்ளடக்கத்தை உள்ளிடவும்.
நிறுவனம் பிரிவில், உங்கள் வலைப்பதிவு இடுகைக்கான அமைப்புகளை உள்ளமைக்கவும்:
- எழுத்தாளர்: இடுகையை எழுதுபவரின் பெயரை, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து தேர்ந்தெடுக்கவும். கடையின் உரிமையாளர் அல்லது நிர்வாகி அணுகல் உள்ள ஒரு பணியாளரின் பெயரை மட்டுமே உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். POS-க்கு மட்டுமான பணியாளர்கள் மற்றும் கூட்டுப்பணியாளர்கள் இந்தப் பட்டியலில் தோன்றமாட்டார்கள்.
- வலைப்பதிவு: நீங்கள் இடுகையை வெளியிட விரும்பும் வலைப்பதிவின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். உங்களின் தற்போதைய வலைப்பதிவுகளில் ஒன்றில் வெளியிட விரும்பவில்லை எனில், கீழ்தோன்றும் மெனுவில் புதிய வலைப்பதிவை உருவாக்கிக் கொள்ளலாம். வலைப்பதிவுப் பெயர்கள் அதிகபட்சம் 255 எழுத்துகளைக் கொண்டிருக்கலாம்.
விருப்பத்தேர்வு: வலைப்பதிவின் லேண்டிங் பக்கத்தில் ஒரு படத்தைக் காட்டலாம். படம் பிரிவில், படத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் பதிவேற்றுவதற்கான படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: வலைப்பதிவின் லேண்டிங் பக்கத்தில் உங்களின் வலைப்பதிவு இடுகையிலிருந்து ஒரு சுருக்கத்தைச் சேர்க்கலாம்.
விருப்பத்தேர்வு: வகை அல்லது பொருளின்படி அவற்றை ஒழுங்கமைக்க, உங்கள் வலைப்பதிவு இடுகைகளுக்கு டேக்குகளைச் சேர்க்கலாம்.
விருப்பத்தேர்வு: உங்கள் வலைப்பதிவு இடுகைக்கு தனிப்பயன் வார்ப்புருவைச் செயல்படுத்த, பின்வரும் படிகளை நிறைவு செய்யவும்: 1. ஆன்லைன் ஸ்டோர் பிரிவில், தீம் வார்ப்புரு கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்யவும். 2. உங்கள் வலைப்பதிவு இடுகைக்குப் பயன்படுத்த விரும்பும் தீம் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் வலைப்பதிவு இடுகைக்கான தேடுபொறிப் பட்டியலைத் திருத்தலாம்.
காணக்கூடிய நிலை பிரிவில், உங்கள் வலைப்பதிவு இடுகையை எப்போது வெளியிட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்:
- உங்கள் வலைப்பதிவு இடுகையை உடனடியாக வெளியிட, காணக்கூடியது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஒரு குறிப்பிட்ட தேதிக்கு உங்கள் வலைப்பதிவு இடுகை காணக்கூடிய நிலையைத் திட்டமிட, நாள்காட்டி ஐகானைக் கிளிக் செய்து, தேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, பின்னர் வலைப்பதிவு இடுகைகள் என்பதைத் தட்டவும்.
வலைப்பதிவு இடுகையைச் சேர் என்பதைத் தட்டவும்.
உங்கள் வலைப்பதிவு இடுகைக்கான தலைப்பை உள்ளிடவும். இடுகையைச் சேமிக்க, உங்களுக்கு ஒரு தலைப்பு இருக்க வேண்டும்.
வலைப்பதிவு இடுகையின் உள்ளடக்கத்தை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: வலைப்பதிவின் லேண்டிங் பக்கத்தில் உங்களின் வலைப்பதிவு இடுகையிலிருந்து ஒரு சுருக்கத்தைச் சேர்க்கலாம்.
விருப்பத்தேர்வு: உங்கள் வலைப்பதிவு இடுகைக்கான தேடுபொறிப் பட்டியலைத் திருத்தலாம்.
காணக்கூடிய நிலை பிரிவில், உங்கள் வலைப்பதிவு இடுகையை எப்போது வெளியிட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்:
- உங்கள் வலைப்பதிவு இடுகையை உடனடியாக வெளியிட, காணக்கூடியது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஒரு குறிப்பிட்ட தேதிக்கு உங்கள் வலைப்பதிவு இடுகை காணக்கூடிய நிலையைத் திட்டமிட, நாள்காட்டி ஐகானைத் தட்டி, தேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்யவும்.
விருப்பத்தேர்வு: வலைப்பதிவின் லேண்டிங் பக்கத்தில் ஒரு படத்தைக் காட்டலாம். படம் பிரிவில், படத்தைச் சேர் என்பதைத் தட்டி, பின்னர் பதிவேற்றுவதற்கான படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
நிறுவனம் பிரிவில், உங்கள் வலைப்பதிவு இடுகைக்கான அமைப்புகளை உள்ளமைக்கவும்:
- எழுத்தாளர்: இடுகையை எழுதுபவரின் பெயரை, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து தேர்ந்தெடுக்கவும். கடையின் உரிமையாளர் அல்லது நிர்வாகி அணுகல் உள்ள ஒரு பணியாளரின் பெயரை மட்டுமே உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். POS-க்கு மட்டுமான பணியாளர்கள் மற்றும் கூட்டுப்பணியாளர்கள் இந்தப் பட்டியலில் தோன்றமாட்டார்கள்.
- வலைப்பதிவு: நீங்கள் இடுகையை வெளியிட விரும்பும் வலைப்பதிவின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். உங்களின் தற்போதைய வலைப்பதிவுகளில் ஒன்றில் வெளியிட விரும்பவில்லை எனில், கீழ்தோன்றும் மெனுவில் புதிய வலைப்பதிவை உருவாக்கிக் கொள்ளலாம். வலைப்பதிவுப் பெயர்கள் அதிகபட்சம் 255 எழுத்துகளைக் கொண்டிருக்கலாம்.
- விருப்பத்தேர்வு: வகை அல்லது பொருளின்படி அவற்றை ஒழுங்கமைக்க, உங்கள் வலைப்பதிவு இடுகைகளுக்கு டேக்குகளைச் சேர்க்கலாம்.
- விருப்பத்தேர்வு: உங்கள் வலைப்பதிவு இடுகைக்கு தனிப்பயன் வார்ப்புரு ஒன்றைச் செயல்படுத்த, பின்வரும் படிகளை நிறைவு செய்யவும்:
- ஆன்லைன் ஸ்டோர் பிரிவில், தீம் வார்ப்புரு கீழ்தோன்றும் மெனுவைத் தட்டவும்.
- உங்கள் வலைப்பதிவு இடுகைக்குப் பயன்படுத்த விரும்பும் தீம் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
வலைப்பதிவு இடுகையைத் திருத்து
உள்ளடக்கம், வெளியீட்டுத் தேதி, எழுத்தாளர் அல்லது வலைப்பதிவு இடுகையின் பிற விவரங்களை மாற்ற, உங்களின் தற்போதைய வலைப்பதிவு இடுகையைத் திருத்தலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் இடுகையின் தலைப்பைக் கிளிக் செய்யவும்.
உங்கள் வலைப்பதிவு இடுகையின் உள்ளடக்கம் மற்றும் அமைப்புகளில் மாற்றங்களைச் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, பின்னர் வலைப்பதிவு இடுகைகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் இடுகையின் தலைப்பைத் தட்டவும்.
உங்கள் வலைப்பதிவு இடுகையின் உள்ளடக்கம் மற்றும் அமைப்புகளில் மாற்றங்களைச் செய்யவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
வலைப்பதிவு இடுகையை மறை
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் மறைக்க விரும்பும் வலைப்பதிவு இடுகையைக் கிளிக் செய்யவும்.
காணக்கூடிய நிலை பிரிவில், மறைக்கப்பட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, பின்னர் வலைப்பதிவு இடுகைகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் மறைக்க விரும்பும் வலைப்பதிவு இடுகையைத் தட்டவும்.
காணக்கூடிய நிலை பிரிவில், மறைக்கப்பட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
வலைப்பதிவு இடுகையை நீக்கு
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் நீக்க விரும்பும் வலைப்பதிவு இடுகையைக் கிளிக் செய்யவும்.
வலைப்பதிவு இடுகையின் தகவல் பக்கத்திலிருந்து, வலைப்பதிவு இடுகையை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
உறுதிப்படுத்தல் உரையாடலில், நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, பின்னர் வலைப்பதிவு இடுகைகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் நீக்க விரும்பும் வலைப்பதிவு இடுகையைத் தட்டவும்.
வலைப்பதிவு இடுகையை நீக்கு என்பதைத் தட்டவும்.
உறுதிப்படுத்தல் உரையாடலில், நீக்கு என்பதைத் தட்டவும்.
உங்கள் வலைப்பதிவு இடுகையின் உள்ளடக்கத்தில் படங்களைச் சேர்த்து, இடுகையை மேலும் ஈர்க்கக்கூடியதாக மாற்றலாம். அவை தயாரிப்புப் படங்கள் போன்ற தற்போதைய படங்களாக இருக்கலாம் அல்லது புதிய படத்தையும் நீங்கள் பதிவேற்றலாம். சிறந்த முடிவுகளுக்கு, வலைப்பதிவு இடுகைப் படங்களுக்கு JPEG கோப்பு வகையைப் பயன்படுத்துவதைப் பரிசீலிக்கவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.
புதிய வலைப்பதிவு இடுகையை உருவாக்கவும் அல்லது தற்போதைய வலைப்பதிவு இடுகையைக் கிளிக் செய்யவும்.
உள்ளடக்கம் பகுதியில், பட ஐகானைக் கிளிக் செய்யவும்:

உங்கள் வலைப்பதிவு இடுகையில் படத்தைச் சேர்க்கவும்:
- தற்போதைய படத்தைச் சேர்க்க, பட்டியலிலிருந்து படத்தைத் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
- புதிய படத்தைப் பதிவேற்ற, படத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, படத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, பின்னர் வலைப்பதிவு இடுகைகள் என்பதைத் தட்டவும்.
புதிய வலைப்பதிவு இடுகையை உருவாக்கவும் அல்லது தற்போதைய வலைப்பதிவு இடுகையைத் தட்டவும்.
உள்ளடக்கம் பகுதியில், பட ஐகானைத் தட்டவும்:

உங்கள் வலைப்பதிவு இடுகையில் படத்தைச் சேர்க்கவும்:
- தற்போதைய படத்தைச் சேர்க்க, பட்டியலிலிருந்து படத்தைத் தேர்ந்தெடுத்து, முடிந்தது என்பதைத் தட்டவும்.
- புதிய படத்தைப் பதிவேற்ற, படத்தைச் சேர் என்பதைத் தட்டி, படத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் முடிந்தது என்பதைத் தட்டவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
வலைப்பதிவு இடுகையிலிருந்து ஒரு சுருக்கத்தைக் காட்டு
வலைப்பதிவின் லேண்டிங் பக்கத்தில் ஒரு வலைப்பதிவு இடுகையிலிருந்து சுருக்கங்களைக் காட்டலாம். உங்கள் தீமைப் பொறுத்து, உங்கள் சுருக்கத்தில் படங்கள், உரை வடிவமைப்பு மற்றும் இணைப்புகளைச் சேர்க்கலாம். நீங்கள் வலைப்பதிவின் சுருக்கத்தைச் சேர்க்கவில்லை எனில், படங்கள், வடிவமைப்பு அல்லது இணைப்புகள் எதுவும் இல்லாமல், அதற்குப் பதிலாக உங்கள் வலைப்பதிவு இடுகை உள்ளடக்கத்தின் ஒரு பகுதி காட்டப்படும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் சுருக்கத்தைச் சேர்க்க விரும்பும் வலைப்பதிவு இடுகையைக் கிளிக் செய்யவும்.
சுருக்கம் பிரிவில், சுருக்கத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
சுருக்கம் ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், உங்கள் வலைப்பதிவின் லேண்டிங் பக்கத்தில் சுருக்கமாகக் காட்ட விரும்பும் உள்ளடக்கத்தைச் சேர்க்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, பின்னர் வலைப்பதிவு இடுகைகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் சுருக்கத்தைச் சேர்க்க விரும்பும் வலைப்பதிவு இடுகையைத் தட்டவும்.
சுருக்கம் பிரிவில், சுருக்கத்தைச் சேர் என்பதைத் தட்டவும்.
சுருக்கம் ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், உங்கள் வலைப்பதிவின் லேண்டிங் பக்கத்தில் சுருக்கமாகக் காட்ட விரும்பும் உள்ளடக்கத்தைச் சேர்க்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
வலைப்பதிவு இடுகைக்கு டேகுகளைச் சேர்த்தல்
உங்கள் வலைப்பதிவு இடுகைகளை வகைகளாக அல்லது பொருளின்படி ஒழுங்கமைக்க டேகுகளைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, கோடைகாலம் என்ற வகையை உருவாக்க, கோடைகாலம் தொடர்பான அனைத்து இடுகைகளுக்கும் ஒரு டேகைச் சேர்க்கலாம். வாடிக்கையாளர்கள் அதே வகை சார்ந்த பிற வலைப்பதிவு இடுகைகளைக் கண்டறிய, டேக் பெயர்களைக் கிளிக் செய்யலாம் அல்லது தட்டலாம். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஒரு வாடிக்கையாளர் ஒரு டேகைத் தேடும்போது, அதனுடன் பொருந்துகின்ற வலைப்பதிவு இடுகைகள் தேடல் முடிவுகளில் காட்டப்படும். டேகுகள் 255 எழுத்துகள் வரை கொண்டிருக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் வலைப்பதிவு இடுகையின் பெயரைக் கிளிக் செய்யவும்.
டேகுகள் பிரிவில், நீங்கள் பின்வரும் செயல்களைச் செய்யலாம்:
- புதிய டேகை உருவாக்க, உரைப்புலத்தைக் கிளிக் செய்து, ஒரு டேக்கின் பெயரை உள்ளிட்டு, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- முன்பு பயன்படுத்திய டேகைச் சேர்க்க, உரைப்புலத்தைக் கிளிக் செய்து, அடிக்கடி பயன்படுத்தப்படும் டேகுகள் கீழ்தோன்றுமிலிருந்து ஒரு டேகைத் தேர்ந்தெடுக்கவும்.
- அனைத்து டேகுகளையும் பார்த்து, ஏற்கனவே உள்ள ஒரு டேகைச் சேர்க்க, அனைத்து டேகுகளையும் காண்க என்பதைக் கிளிக் செய்து, ஒரு டேகைத் தேர்ந்தெடுத்து, மாற்றங்களைப் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, பின்னர் வலைப்பதிவு இடுகைகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் வலைப்பதிவு இடுகையின் பெயரைத் தட்டவும்.
டேகுகள் பிரிவில், நீங்கள் பின்வரும் செயல்களைச் செய்யலாம்:
- புதிய டேகை உருவாக்க, உரைப்புலத்தைத் தட்டி, ஒரு டேக்கின் பெயரை உள்ளிட்டு, சேர் என்பதைத் தட்டவும்.
- முன்பு பயன்படுத்திய டேகைச் சேர்க்க, உரைப்புலத்தைத் தட்டி, அடிக்கடி பயன்படுத்தப்படும் டேகுகள் கீழ்தோன்றுமிலிருந்து ஒரு டேகைத் தேர்ந்தெடுக்கவும்.
- அனைத்து டேகுகளையும் பார்த்து, ஏற்கனவே உள்ள ஒரு டேகைச் சேர்க்க, அனைத்து டேகுகளையும் காண்க என்பதைத் தட்டி, ஒரு டேகைத் தேர்ந்தெடுத்து, மாற்றங்களைப் பயன்படுத்து என்பதைத் தட்டவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
வலைப்பதிவு இடுகைக்கான தேடுபொறிப் பட்டியலைத் திருத்துதல்
ஒரு வலைப்பதிவு இடுகைக்கான தேடுபொறி முடிவுகளில் காட்டப்படும் உரையை நீங்கள் திருத்தலாம். விளக்கமான தலைப்புகள் மற்றும் விளக்கங்கள், புதிய வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரைக் கண்டறியவும், இணைப்பைக் கிளிக் செய்ய அவர்களைத் தூண்டவும் உதவும். தேடுபொறி உகப்பாக்கம் குறித்து மேலும் அறிக.
ஒரு வலைப்பதிவு இடுகையின் தேடுபொறிப் பட்டியலில் நீங்கள் மாற்றங்களைச் செய்யும்போது, அது எப்படித் தோன்றும் என்பதற்கான முன்னோட்டத்தை உங்களால் பார்க்க முடியும்.
தலைப்புக்கு 70 எழுத்துகளுக்கு மேலும் அல்லது விளக்கத்திற்கு 320 எழுத்துகளுக்கு மேலும் நீங்கள் உள்ளிட்டால், தேடுபொறி முடிவுகளில் உங்கள் உரை துண்டிக்கப்படலாம்.
உங்கள் வலைப்பதிவு இடுகைக்கான இணைய முகவரியில் உங்களால் மாற்றங்களைச் செய்ய முடியும், ஆனால் பெரும்பாலும் அதற்கு அவசியமிருக்காது. நீங்கள் மாற்றங்களைச் செய்தால், URL திசைதிருப்பலை உருவாக்கு என்பதற்கான முன்-தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பம் உங்களுக்கு இருக்கும், மேலும் பழைய இணைய முகவரி புதிய இணைய முகவரிக்குத் திசைதிருப்பப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > வலைப்பதிவு இடுகைகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் எந்த வலைப்பதிவு இடுகையின் தேடுபொறிப் பட்டியலைத் திருத்த விரும்புகிறீர்களோ, அதன் பெயரைக் கிளிக் செய்யவும்.
தேடுபொறிப் பட்டியல் முன்னோட்டம் பிரிவில், பென்சில் ஐகானைக் கிளிக் செய்யவும்.
பின்வரும் புலங்களில் ஏதேனும் ஒன்றை உள்ளிடவும் அல்லது திருத்தவும்:
- பக்கத் தலைப்பு புலத்தில், விளக்கமான தலைப்பை உள்ளிடவும். தேடுபொறி முடிவுகளில் தலைப்பு ஓர் இணைப்பாகக் காட்டப்படும்.
- மெட்டா விளக்கம் புலத்தில், ஒரு விளக்கத்தை உள்ளிடவும். புதிய வாடிக்கையாளர்கள் உங்கள் பக்கத்தைக் கண்டறிய உதவ, தொடர்புடைய முக்கியச் சொற்களையும் உங்கள் ஸ்டோரின் பெயரையும் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளவும்.
- URL ஹேண்டில் புலத்தில், இணைய முகவரியின் ஒரு பகுதியை உங்களால் மாற்ற முடியும். இதில் இடைவெளிகள் இருக்கக்கூடாது. இடைவெளிகளுக்குப் பதிலாக தனித்தனி வார்த்தைகளுக்கு இடையே சிறுகோடுகளை (-) உள்ளிடலாம்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.