விரைவான செக்அவுட் பொத்தான்களின் இணக்கத்தன்மை

சில சந்தர்ப்பங்களில், உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு விரைவான செக்அவுட் பொத்தான்கள் பொருந்தாமல் போகலாம். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் விரைவான செக்அவுட் பொத்தான்களைச் சேர்ப்பதற்கு முன், பின்வரும் அம்சங்களுடன் அவற்றுக்குள்ள இணக்கத்தன்மையைக் கவனத்தில் கொள்ளுங்கள்:

செயலிகள்

விரைவான செக்அவுட் பொத்தான்கள் சில செயலிகளுடன் முரண்படலாம்.

பின்வரும் வகையான செயலிகள் எதையேனும் நீங்கள் பயன்படுத்தினால், விரைவான செக்அவுட் பொத்தான்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோருடன் இணங்காமல் போகலாம்:

  • நாணய மாற்றிகள்
  • கார்ட்டுடன் தொடர்புடைய செயலிகள்
  • வாடிக்கையாளர்களை வெளிப்புற செக்அவுட்டிற்கு அழைத்துச் செல்லும் செயலிகள்

கார்ட் பண்புக்கூறுகள்

விரைவான செக்அவுட் பொத்தான்கள் கார்ட் பண்புக்கூறுகளை ஆதரிக்காது. கார்ட் பண்புக்கூறுகள் என்பவை கார்ட் பக்கத்தில் உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் தகவல்களைச் சேகரிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய பிரத்தியேகப் படிவப் புலங்களாகும்.

கார்ட் பண்புக்கூறுகளின் எடுத்துக்காட்டுகளில் கார்ட் பக்கத்தில் சேர்க்கப்படும் பின்வருவன அடங்கும்:

  • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தேர்வுப்பெட்டிகள்
  • பரிசுப் பொதியிடல் விருப்பங்கள்
  • விநியோகத் தேதித் தேர்விகள்

நீங்கள் கார்ட் பண்புக்கூறுகளைப் பயன்படுத்தினால், விரைவான செக்அவுட் பொத்தான்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்குப் பொருத்தமானவை அல்ல.

தயாரிப்புகள்

ஒரு தயாரிப்பின் ஒற்றை மாறுபாடுகளை வாங்க மட்டுமே விரைவான செக்அவுட் பொத்தான்களைப் பயன்படுத்த முடியும். இருப்பினும், தயாரிப்புப் பக்கத்தில் நீங்கள் அளவுத் தேர்வியைக் காட்டினால், வாடிக்கையாளர்கள் அந்த மாறுபாட்டில் ஒன்றைவிட அதிகமானவற்றை வாங்கலாம். எடுத்துக்காட்டாக, இரண்டு சிவப்பு நிற டி-ஷர்ட்களை வாங்க வாடிக்கையாளர் விரைவான செக்அவுட் பொத்தானைப் பயன்படுத்தலாம், ஆனால் ஒரு சிவப்பு மற்றும் ஒரு நீல நிற டி-ஷர்ட்டை வாங்க முடியாது.

செயலிலுள்ள பெறுநர் புலங்கள் உள்ள கிஃப்ட் கார்டு தயாரிப்புகளில் விரைவான செக்அவுட் பொத்தான்கள் காட்டப்படாது. செக்அவுட்டிற்குச் செல்வதற்கு முன் பெறுநரின் தகவலைச் சேகரிக்க வேண்டியிருப்பதே இதற்குக் காரணமாகும்.

பேமெண்ட் அமைப்புகள்

உங்கள் பேமெண்ட் அமைப்புகளில் மூன்றாம் தரப்பு விரைவான செக்அவுட் முறையை நீங்கள் செயல்படுத்தவில்லை எனில், விரைவான செக்அவுட் பொத்தானின் பிராண்ட் செய்யப்படாத வடிவம் மட்டுமே காட்டப்படும்.

பொத்தான் உரை

பிராண்ட் செய்யப்படாத விரைவான செக்அவுட் பொத்தான் இப்போதே வாங்குங்கள் என்ற உரையைக் காட்டும். உங்கள் கார்ட்டில் சேர் பொத்தானும் இப்போதே வாங்குங்கள் என்றோ பிற பிரத்தியேக உரையையோ காட்டினால், இது வாடிக்கையாளர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.