உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டுதல்
ஒற்றைத் தயாரிப்புகளுக்கான கார்ட்டில் சேர் (Add to cart) பொத்தானுக்கு மாற்றாக விரைவான செக்அவுட் பொத்தான்கள் விளங்குகின்றன. விரைவான செக்அவுட் பொத்தான்கள் மூலம், வாடிக்கையாளர்கள் கார்ட்டைத் தவிர்த்துவிட்டு நேரடியாக செக்அவுட்டிற்குச் செல்லலாம். வாடிக்கையாளர்கள் Shopify மூலமாகவோ தங்களுக்குப் பரிச்சயமான பிற விரைவான செக்அவுட் முறைகள் மூலமாகவோ செக்அவுட் செய்யத் தேர்வுசெய்யலாம். இது பேமெண்ட் செயல்முறையைத் துரிதப்படுத்த உதவுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு வசதியான முறையைப் பயன்படுத்திச் செக்அவுட் செய்யவும் அனுமதிக்கிறது.

இந்தப் பக்கத்தில்
- மேலோட்டம்
- இணக்கத்தன்மை
- விரைவான செக்அவுட் பொத்தான்களைப் பயன்படுத்த உங்கள் தீமைப் புதுப்பிக்கவும்
- தயாரிப்புப் பக்கங்களில் விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டுதல்
- சிறப்புத் தயாரிப்புப் பிரிவில் விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டுதல்
- தயாரிப்புப் பக்கங்களில் விரைவான செக்அவுட் பொத்தான்களை மறைத்தல்
- சிறப்புத் தயாரிப்புப் பிரிவில் விரைவான செக்அவுட் பொத்தான்களை மறைத்தல்
- சில தயாரிப்புகளுக்கு மட்டும் விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டி மற்றவற்றுக்கு மறைத்தல்
மேலோட்டம்
உங்கள் தீம் மற்றும் வாடிக்கையாளரின் சாதனத்தைப் பொறுத்து, கார்ட்டில் சேர் (Add to cart) பொத்தானுக்குப் பக்கத்திலோ கீழோ விரைவான செக்அவுட் பொத்தான் காட்டப்படும். விரைவான செக்அவுட் பொத்தான்களில் இரண்டு வெவ்வேறு வகைகள் உள்ளன:
- பிராண்ட் அல்லாத பொத்தான்களில் இப்போதே வாங்குங்கள் (Buy it now) என்ற உரை காட்டப்படும். பிராண்ட் அல்லாத இப்போதே வாங்குங்கள் பொத்தானை வாடிக்கையாளர் கிளிக் செய்தால், கார்ட்டைத் தவிர்த்துவிட்டு நேரடியாகச் செக்அவுட்டிற்குச் செல்வார்.

- பிராண்டட் பொத்தான்களில் மூன்றாம் தரப்பு விரைவான செக்அவுட் முறைகளுக்கான லோகோ இடம்பெற்றிருக்கும். Apple Pay போன்ற மூன்றாம் தரப்பு விரைவான செக்அவுட் முறைக்கான பிராண்டட் பொத்தானை வாடிக்கையாளர் கிளிக் செய்தால், அவர் முன்பே நிரப்பப்பட்ட தகவல்களுடன் அந்த முறைக்கான செக்அவுட்டிற்குச் செல்வார். இதைப் பற்றி மேலும் அறிக: விரைவான செக்அவுட்கள். பின்வரும் மூன்றாம் தரப்பு விரைவான செக்அவுட் முறைகள் கிடைக்கின்றன:
ஒவ்வொரு கட்டண முறையும் பிராண்டட் பொத்தானாகக் காட்டப்படுவதற்கு முன்பு, அதற்கான குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் விரைவான செக்அவுட் பொத்தான் வகையானது பின்வரும் காரணிகளைப் பொறுத்தது:
- உங்கள் கட்டண அமைப்புகள்
- Shop Promise செயலில் உள்ளதா என்பது, இது மற்ற செக்அவுட்களை விட Shop Pay க்கு முன்னுரிமை அளிக்கும்
- வாடிக்கையாளரின் உலாவி
- வாடிக்கையாளரின் சாதனம்
- வாடிக்கையாளரின் தனிப்பட்ட கட்டண வரலாறு
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் விரைவான செக்அவுட் பொத்தான்களைச் சேர்க்கும்போது, அந்தப் பொத்தான்களைக் காட்டலாம் அல்லது மறைக்கலாம், ஆனால் பிராண்டட் பொத்தான்களைக் காட்ட வேண்டுமா அல்லது பிராண்ட் அல்லாத பொத்தான்களைக் காட்ட வேண்டுமா என்பதை உங்களால் தனிப்பயனாக்க முடியாது. உங்கள் கட்டண அமைப்புகளில் நீங்கள் செயல்படுத்தியுள்ள கட்டண முறைகளைப் பொறுத்தே பிராண்டட் பொத்தான்கள் காட்டப்படும். நீங்கள் எந்த மூன்றாம் தரப்பு விரைவான செக்அவுட் முறையையும் செயல்படுத்தவில்லை எனில், பிராண்ட் அல்லாத பொத்தான் மட்டுமே காட்டப்படும். பிராண்ட் அல்லாத விரைவான செக்அவுட் பொத்தான்களின் நிறம் மற்றும் எழுத்துருக்களை உங்களால் தனிப்பயனாக்க முடியும், ஆனால் பொத்தான்களின் பிராண்டட் பதிப்புகளைத் தனிப்பயனாக்க முடியாது.
உங்கள் ஸ்டோரில் கிஃப்ட் கார்டுகள் அல்லது தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர்கள் செக்அவுட்டில் அந்தப் குறியீடுகளைத் தொடர்ந்து உள்ளிட முடியும்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் விரைவான செக்அவுட் பொத்தான்களைச் சேர்த்த பிறகு, நீங்கள் செயல்படுத்தியுள்ள கட்டண முறைகளுக்கான விரைவான செக்அவுட் பொத்தான்களைச் சோதிக்கலாம்.
இணக்கத்தன்மை
உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு விரைவான செக்அவுட் பொத்தான்கள் சில நேரங்களில் பொருந்தாமல் போகலாம். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் விரைவான செக்அவுட் பொத்தான்களைச் சேர்ப்பதற்கு முன்பு, பின்வரும் அம்சங்களுடனான அவற்றின் இணக்கத்தன்மையைக் கவனத்தில் கொள்ளவும்:
செயலிகள்
விரைவான செக்அவுட் பொத்தான்கள் சில குறிப்பிட்ட செயலிகளுடன் முரண்படக்கூடும்.
நீங்கள் பின்வரும் வகையான செயலிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தினால், விரைவான செக்அவுட் பொத்தான்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு இணக்கமாக இருக்காது:
- நாணய மாற்றிகள்
- கார்ட்டுடன் தொடர்புடைய செயலிகள்
- வாடிக்கையாளர்களை வெளிப்புறச் செக்அவுட்டிற்கு அழைத்துச் செல்லும் செயலிகள்
கார்ட் பண்புக்கூறுகள்
விரைவான செக்அவுட் பொத்தான்கள் கார்ட் பண்புக்கூறுகளை ஆதரிக்காது. கார்ட் பண்புக்கூறுகள் என்பவை கார்ட் பக்கத்தில் உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தும் தனிப்பயன் படிவப் புலங்களாகும்.
கார்ட் பக்கத்தில் சேர்க்கப்படும் பின்வரும் அம்சங்கள் கார்ட் பண்புக்கூறுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும்:
- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கான தேர்வுப்பெட்டிகள்
- பரிசுப் பொதியிடல் விருப்பங்கள்
- விநியோகத் தேதித் தேர்விகள்
நீங்கள் கார்ட் பண்புக்கூறுகளைச் சார்ந்திருந்தால், உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு விரைவான செக்அவுட் பொத்தான்கள் பொருந்தாது.
தயாரிப்புகள், கட்டண அமைப்புகள் மற்றும் பொத்தான் உரை
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் விரைவான செக்அவுட் பொத்தான்களைச் சேர்ப்பதற்கு முன்பு, பின்வரும் விவரங்களைக் கவனத்தில் கொள்ளவும்:
- ஒரு தயாரிப்பின் ஒரு மாறுபாட்டை வாங்குவதற்கு மட்டுமே விரைவான செக்அவுட் பொத்தான்களைப் பயன்படுத்த முடியும். இருப்பினும், தயாரிப்புப் பக்கத்தில் நீங்கள் அளவுத் தேர்வியைக் காட்டினால், வாடிக்கையாளர்கள் அந்தத் தயாரிப்பில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை வாங்கலாம். எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் ஒருவர் விரைவான செக்அவுட் பொத்தானைப் பயன்படுத்தி அக்வா நிறத்தில் மூன்று பேக்கிங் கப்களை வாங்கலாம், ஆனால் அக்வாவில் ஒன்றையும் purple நிறத்தில் ஒன்றையும் வாங்க முடியாது. உங்களின் ஆன்லைன் ஸ்டோர் ஒரே வகையான தயாரிப்புக்கு பல ஆர்டர்களைப் பெற்றாலொழிய, விரைவான செக்அவுட் பொத்தான்களால் உங்களின் விற்பனைக்கு அதிகப் பலன் இருக்காது.
- உங்களின் கட்டண அமைப்புகளில் மூன்றாம் தரப்பு விரைவான செக்அவுட் முறை செயலில் இல்லை என்றால், விரைவான செக்அவுட் பொத்தானின் பிராண்ட் செய்யப்படாத பதிப்பு மட்டுமே காட்டப்படும்.
- விரைவான செக்அவுட் பொத்தானின் பிராண்ட் செய்யப்படாத பதிப்பில் இப்போதே வாங்குங்கள் என்ற உரை இருக்கும். உங்களின் கார்ட்டில் சேர் பொத்தான் இப்போதே வாங்குங்கள் என்பதையோ பிற பிரத்தியேக உரையையோ காட்டினால், இது வாடிக்கையாளர்களைக் குழப்பக்கூடும்.
விரைவான செக்அவுட் பொத்தான்களைப் பயன்படுத்த உங்களின் தீமைப் புதுப்பிக்கவும்
Shopify Theme Store இல் உள்ள தீம்களின் அனைத்துத் தற்போதைய பதிப்புகளிலும் விரைவான செக்அவுட் பொத்தான்கள் கிடைக்கின்றன. நீங்கள் தீமின் பழைய பதிப்பைப் பயன்படுத்தினால், விரைவான செக்அவுட் பொத்தான்களைப் பயன்படுத்த உங்கள் தீமைப் புதுப்பிக்கலாம். உங்கள் தீமைப் புதுப்பிக்க விரும்பவில்லை எனில், உங்கள் தீம் குறியீட்டைத் திருத்தலாம்.
தயாரிப்புப் பக்கங்களில் விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டுங்கள்
விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்ட, தீம் எடிட்டரில் உங்கள் தீம் அமைப்புகளை நீங்கள் மாற்றியமைக்கலாம்.
உங்களின் தீம் பதிப்பைப் பொறுத்து, பொத்தான்களுக்குப் பதிலாக டைனமிக் செக்அவுட் பட்டன்கள் என்று பெயரிடப்பட்டிருக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமுக்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
முகப்புப் பக்கம் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புகள் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் நீங்கள் திருத்த விரும்பும் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
தயாரிப்புத் தகவல் பிரிவில், வாங்கும் பொத்தான்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: உங்களின் விரைவான செக்அவுட் பொத்தான்களைச் சோதிக்கவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
தீம்களை நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.
வார்ப்புருக்கள் என்பதைத் தட்டவும்.
தயாரிப்புப் பக்கங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
தயாரிப்புப் பக்கங்கள் அல்லது தயாரிப்பு பிரிவைத் தட்டவும்.
விரைவான செக்அவுட் பொத்தானைக் காட்டு என்பதைத் தேர்வுசெய்யவும்.
சேமி என்பதைத் தட்டவும்.
விருப்பத்திற்குரியது: உங்களின் விரைவான செக்அவுட் பொத்தான்களைச் சோதிக்கவும்.
சிறப்பம்சப்படுத்தப்பட்ட தயாரிப்புப் பிரிவில் விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டுங்கள்
பெரும்பாலான தீம்களில், சிறப்பம்சப்படுத்தப்பட்ட தயாரிப்புப் பிரிவில் விரைவான செக்அவுட் பொத்தான்களைச் சேர்ப்பதற்கான ஒரு அமைப்பு உள்ளது.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமுக்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஏற்கனவே உள்ள சிறப்பம்சப்படுத்தப்பட்ட தயாரிப்புப் பிரிவைக் கிளிக் செய்யவும் அல்லது புதிய சிறப்பம்சப்படுத்தப்பட்ட தயாரிப்புப் பிரிவைச் சேர்க்க பிரிவைச் சேர் > சிறப்பம்சப்படுத்தப்பட்ட தயாரிப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
சிறப்பம்சப்படுத்தப்பட்ட தயாரிப்பு பிரிவில், வாங்கும் பொத்தான்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: உங்களின் விரைவான செக்அவுட் பொத்தான்களைச் சோதிக்கவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
அனைத்துத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.
திருத்து என்பதைத் தட்டவும்.
ஏற்கனவே உள்ள சிறப்பம்சப்படுத்தப்பட்ட தயாரிப்புப் பிரிவைத் தட்டவும் அல்லது புதிய சிறப்பம்சப்படுத்தப்பட்ட தயாரிப்புப் பிரிவைச் சேர்க்க பிரிவைச் சேர் என்பதைத் தட்டவும்.
உங்களின் தயாரிப்பு விவரங்களை உள்ளிட்டு, விரைவான செக்அவுட் பொத்தானைக் காட்டு என்பதைத் தேர்வுசெய்யவும்.
சேமி என்பதைத் தட்டவும்.
விருப்பத்திற்குரியது: உங்களின் விரைவான செக்அவுட் பொத்தான்களைச் சோதிக்கவும்.
தயாரிப்புப் பக்கங்களில் விரைவான செக்அவுட் பொத்தான்களை மறைக்கவும்
உங்களின் தயாரிப்புப் பக்கங்களில் உள்ள அனைத்து விரைவான செக்அவுட் பொத்தான்களையும் நீங்கள் மறைக்கலாம், ஆனால் குறிப்பிட்ட விரைவான செக்அவுட் பொத்தான்களை உங்களால் மறைக்க முடியாது.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமுக்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
முகப்புப் பக்கம் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புகள் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் நீங்கள் திருத்த விரும்பும் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
தயாரிப்புத் தகவல் பிரிவில், வாங்கும் பொத்தான்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டு என்பதன் தேர்வை நீக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
தீம்களை நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.
வார்ப்புருக்கள் என்பதைத் தட்டவும்.
தயாரிப்புப் பக்கங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
தயாரிப்புப் பக்கங்கள் அல்லது தயாரிப்பு பிரிவைத் தட்டவும்.
விரைவான செக்அவுட் பொத்தானைக் காட்டு என்பதன் தேர்வை நீக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
சிறப்பம்சப்படுத்தப்பட்ட தயாரிப்புப் பிரிவில் விரைவான செக்அவுட் பொத்தான்களை மறைக்கவும்
உங்களின் சிறப்பம்சப்படுத்தப்பட்ட தயாரிப்புப் பிரிவுகளில் உள்ள அனைத்து விரைவான செக்அவுட் பொத்தான்களையும் நீங்கள் மறைக்கலாம், ஆனால் குறிப்பிட்ட விரைவான செக்அவுட் பொத்தான்களை உங்களால் மறைக்க முடியாது.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமுக்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
சிறப்பம்சப்படுத்தப்பட்ட தயாரிப்புப் பிரிவைக் கிளிக் செய்யவும்.
விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டு என்பதன் தேர்வை நீக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
அனைத்துத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.
திருத்து என்பதைத் தட்டவும்.
சிறப்பம்சப்படுத்தப்பட்ட தயாரிப்புப் பிரிவைத் தட்டவும்.
விரைவான செக்அவுட் பொத்தானைக் காட்டு என்பதன் தேர்வை நீக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
சில தயாரிப்புகளுக்கு மட்டும் விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டி மற்றவற்றுக்கு மறைக்கவும்
நீங்கள் சில தயாரிப்புகளுக்கு விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டவும் மற்றவற்றுக்குக் காட்டாமல் இருக்கவும் விரும்பினால், நீங்கள் ஒரு மாற்று வார்ப்புருவை உருவாக்கலாம். மாற்று வார்ப்புரு என்பது, அசலை பாதிக்காமல் நீங்கள் திருத்தக்கூடிய ஒரு நகல் தீம் குறியீட்டு வார்ப்புருவாகும். மாற்றுத் தயாரிப்பு வார்ப்புருவைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு வார்ப்புருவைப் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டலாம் மற்றும் மற்றொன்றைப் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு அவற்றை மறைக்கலாம்.
மாற்றுத் தயாரிப்பு வார்ப்புருவை உருவாக்க, புதிய வார்ப்புருவை உருவாக்கு என்பதைப் பார்க்கவும்.
நீங்கள் மாற்றுத் தயாரிப்பு வார்ப்புருவை உருவாக்கி அதை ஒரு தயாரிப்புக்கு ஒதுக்கிய பிறகு, அந்தத் தயாரிப்பிற்கான விரைவான செக்அவுட் பொத்தான்களைக் காட்டலாம் அல்லது மறைக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் எந்தத் தீமுக்காக மாற்று வார்ப்புருவை உருவாக்கினீர்களோ அதற்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் மாற்று வார்ப்புருவை ஒதுக்கியுள்ள தயாரிப்பின் தயாரிப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.
தயாரிப்புத் தகவல் பிரிவில், வாங்கும் பொத்தான்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
மாற்று வார்ப்புருவைப் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு விரைவான செக்அவுட் பொத்தானைக் காட்ட, விரைவான செக்அவுட் பொத்தானைக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மாற்று வார்ப்புருவைப் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு விரைவான செக்அவுட் பொத்தானை மறைக்க, விரைவான செக்அவுட் பொத்தானைக் காட்டு என்பதன் தேர்வை நீக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும். மாற்று வார்ப்புருவைப் பயன்படுத்தும் எந்தவொரு தயாரிப்புக்கும் இந்த மாற்றங்கள் பயன்படுத்தப்படும்.
விருப்பத்திற்குரியது: உங்களின் விரைவான செக்அவுட் பொத்தான்களைச் சோதிக்கவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
தீம்களை நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் எந்தத் தீமுக்காக மாற்று வார்ப்புருவை உருவாக்கினீர்களோ அதைக் கண்டறிந்து, பின்னர் தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.
தீம் எடிட்டரில், நீங்கள் மாற்று வார்ப்புருவை ஒதுக்கியுள்ள தயாரிப்பின் தயாரிப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.
தயாரிப்புப் பக்கங்கள் அல்லது தயாரிப்பு பிரிவைத் தட்டவும்.
மாற்று வார்ப்புருவைப் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு விரைவான செக்அவுட் பொத்தானைக் காட்ட, விரைவான செக்அவுட் பொத்தானைக் காட்டு என்பதைத் தேர்வுசெய்யவும். மாற்று வார்ப்புருவைப் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு விரைவான செக்அவுட் பொத்தானை மறைக்க, விரைவான செக்அவுட் பொத்தானைக் காட்டு என்பதன் தேர்வை நீக்கவும்.
சேமி என்பதைத் தட்டவும். மாற்று வார்ப்புருவைப் பயன்படுத்தும் எந்தவொரு தயாரிப்புக்கும் இந்த மாற்றங்கள் பயன்படுத்தப்படும்.
விருப்பத்திற்குரியது: உங்களின் விரைவான செக்அவுட் பொத்தான்களைச் சோதிக்கவும்.