உங்கள் தீமில் இலவச ஸ்டாக் புகைப்படங்களைச் சேர்த்தல்
Burst என்பது Shopify-ஆல் இயக்கப்படும் ஸ்டாக் புகைப்படத் தளமாகும், இது அதிக ரெசலூஷன் கொண்ட படங்களை இலவசமாக வழங்குகிறது. தீம் எடிட்டரிலிருந்து Burst-இல் உள்ள ஆயிரக்கணக்கான புகைப்படங்களை ஆராய்ந்து அவற்றை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் சேர்க்கலாம். உங்கள் பிசினஸுக்கு ஏற்ற படங்களைக் கண்டறிய பல வகைகளிலிருந்து நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் முகப்புப் பக்க ஸ்லைடுஷோ, வலைப்பதிவு அல்லது தயாரிப்புப் பக்கங்கள் போன்ற உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் பல்வேறு பகுதிகளில் உயர் தரப் புகைப்படங்களைச் சேர்க்கலாம்.
Burst-இல் உள்ள படங்கள் ராயல்டி இல்லாத உரிமத்தின் கீழ் கிடைக்கின்றன, எனவே நீங்கள் புகைப்படங்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருத்தலாம். படைப்பாளருக்கான உரிமையை (attribution) வழங்குவது ஊக்குவிக்கப்படுகிறது, ஆனால் கட்டாயமில்லை.
இந்தப் பக்கத்தில்
உங்கள் தீமில் ஸ்டாக் புகைப்படங்களைச் சேர்க்கவும்
தீம் எடிட்டருக்குச் செல்லவும்.
தீம் எடிட்டர் கருவிப்பட்டியிலிருந்து, நீங்கள் படத்தைச் சேர்க்க விரும்பும் பிரிவைக் கிளிக் செய்யவும். படத் தேர்வியை உள்ளடக்கிய ஒரு பிரிவைத் தேர்வுசெய்யவும்:

இலவசப் படங்களை ஆராய் என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல் பட்டியைப் பயன்படுத்தியோ அல்லது பட வகையைக் கிளிக் செய்தோ படங்களை உலாவிப் பார்க்கவும்.
உங்கள் தீமில் படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்க ஒரு படத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் பயன்படுத்த விரும்பும் படத்தைக் கண்டறிந்ததும், தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
பக்கப்பட்டி மெனுவில் கிடைக்கும் விருப்பங்களைப் பயன்படுத்தி, படத்தின் தோற்றம் அல்லது அனிமேஷன்களில் தேவையான திருத்தங்களைச் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.