URL திசைதிருப்பல்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல்

ஒரு இணையப்பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு டிராஃபிக்கைத் திசைதிருப்ப URL திசைதிருப்பல்களைப் பயன்படுத்தலாம். உங்களின் Shopify ஸ்டோரில் உள்ள ஒரு URL ஐ மாற்றும்போது, வாடிக்கையாளர்கள் தாங்கள் தேடுவதைத் தொடர்ந்து கண்டறிய முடியும் என்பதை உறுதிசெய்ய URL திசைதிருப்பலை நீங்கள் உருவாக்கலாம்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு தயாரிப்பை நீக்கினால், ஒரு URL திசைதிருப்பலை அமைக்கலாம், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அந்தத் தயாரிப்பிற்கான URL ஐ உள்ளிடும்போது, உங்கள் ஸ்டோரில் உள்ள அதுபோன்ற வேறொரு தயாரிப்பிற்கு அவர்கள் திசைதிருப்பப்படுவார்கள்.

URL திசைதிருப்பல்களை உருவாக்கும்போது கவனிக்க வேண்டியவை

ஏதேனும் URL திசைதிருப்பல்களை உருவாக்குவதற்கு முன், பின்வரும் கவனிக்க வேண்டியவற்றைச் சரிபார்க்கவும்:

  • பின்வரும் முன்னொட்டுகளுடன் தொடங்கும் URLகளை உங்களால் திசைதிருப்ப முடியாது: /apps, /application, /cart, /carts, /orders, /services அல்லது /shop.
  • நிலையான Shopify பாதைகளைப் பயன்படுத்தும் URLகளை உங்களால் திசைதிருப்ப முடியாது: /products, /collections, /collections/all.
  • செயல்படாத URLகளில் இருந்து மட்டுமே உங்களால் திசைதிருப்ப முடியும். செயல்படாத URLகள் ஒரு பக்கத்திலோ அல்லது பக்கத் தலைப்பிலோ பக்கம் கிடைக்கவில்லை அல்லது 404 போன்ற பிழைச் செய்திகளைக் காட்டும். URL இன்னமும் செல்லுபடியாகும் ஒரு இணையப்பக்கத்தை ஏற்றினால், URL திசைதிருப்பல் வேலை செய்யாது.
  • உங்கள் ஸ்டோர் அதிகபட்சமாக 20,000,000 URL திசைதிருப்பல்களைக் கொண்ட Plus திட்டத்தில் இல்லாதபட்சத்தில், அதிகபட்சமாக 1,00,000 URL திசைதிருப்பல்களை உங்களால் உருவாக்க முடியும்.
  • வாடிக்கையாளர் கணக்கு மெனுக்களில் URL திசைதிருப்பல்கள் ஆதரிக்கப்படாது.

பொதுவான திசைதிருப்பல் நிகழ்வுகள்

இந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்வது, திசைதிருப்பல்களைச் சிறப்பான முறையில் அமைக்க உங்களுக்கு உதவும்.

கூடுதல் URL திசைதிருப்பல் வரம்புகள்

URL திசைதிருப்பல் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடிய இந்தக் கூடுதல் வரம்புகளைச் சரிபார்க்கவும்:

ஒதுக்கப்பட்ட URL பாதைகள்

சில URL பாதைகள் Shopify ஆல் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றை திசைதிருப்பல்களுக்குப் பயன்படுத்த முடியாது:

  • /collections/vendors, /collections/types, /collections/all
  • /apps/, /a/, /community/, /tools/
  • /shop அல்லது /services என்பதில் முடியும் MyShopify டொமைன் பாதைகள்

சேகரிப்புக் குறிச்சொல் வடிகட்டுதல்

சேகரிப்புக் குறிச்சொல் வடிகட்டுதலைப் பயன்படுத்தும் URLகளுக்கு (yourstore.com/collections/collection-name/tag-name போன்றவை) உங்களால் திசைதிருப்பல்களை உருவாக்க முடியாது. இந்தக் குறிச்சொல்லுடன் எந்தத் தயாரிப்புகளும் இல்லாவிட்டாலும், URL பாதை செல்லுபடியாகும் ஒன்றாகவே கருதப்படும். மேலும் அதை திசைதிருப்ப முடியாது.

HTML கோப்பு நீட்டிப்புகள்

.html என்று முடிவடையும் URLகளை .html இல்லாமல் அதே URLக்குத் திசைதிருப்ப முடியாது. எளிமையான URLகளுக்காக தளம் தானாகவே HTML வடிவமைப்பைக் கையாளுவதால், இவற்றை ஒரே URL ஆக Shopify கருதுகிறது.

வினவல் சரங்கள் மற்றும் சிறப்பு எழுத்துகள்

வினவல் சரங்களைக் கொண்ட URLகள் (/brands/dell.html?_bc_fsnf=1&interface=interface_type போன்றவை) URL திசைதிருப்பல்களுடன் எதிர்பார்த்தபடி செயல்படாமல் போகலாம்.

சர்வதேசச் சந்தைகள் மற்றும் துணைக் கோப்புறைகள்

URL திசைதிருப்பல்கள் அனைத்துச் சந்தைத் துணைக் கோப்புறைகளுக்கும் தானாகவே பொருந்தாது. குறிப்பிட்ட வட்டாரங்களை (yourstore.com/en-ca/old-page என்பதை yourstore.com/en-fr/new-page என்பதற்கு) நீங்கள் திசைதிருப்ப வேண்டும் என்றால், ஒவ்வொரு துணைக் கோப்புறைக்கும் தனிப்பட்ட திசைதிருப்பல்களை உருவாக்க வேண்டும்.

301 திசைதிருப்பல் தேக்ககம்

301 திசைதிருப்பல்களை உலாவிகளும் தேடுபொறிகளும் தேக்ககப்படுத்தும். வாடிக்கையாளர்கள் அதை அணுகிய பிறகு, நீங்கள் ஒரு திசைதிருப்பலை அகற்றினால், அந்தத் தேக்ககத்தின் காலாவதி முடியும் வரை அவர்களின் உலாவிகளில் அந்தத் திசைதிருப்பல் தொடர்ந்து செயல்படக்கூடும்.

URL திசைதிருப்பலை உருவாக்குதல்

உங்களால் ஒரு URL திசைதிருப்பலை உருவாக்க முடியும். திசைதிருப்பலை உருவாக்கும்போது, புதிய URLஆனது /collection/shirts போன்ற சார்பு URL ஆகவோ http://www.example.com/collection/shirts போன்ற முழுமையான URL ஆகவோ இருக்கலாம். உங்களின் முதன்மை டொமைனுக்குள் டிராஃபிக்கைத் திசைதிருப்ப சார்பு URLஐப் பயன்படுத்தவும். உங்களின் முதன்மை டொமைனுக்கு வெளியே திசைதிருப்ப முழுமையான URLஐப் பயன்படுத்தவும். URL திசைதிருப்பல்கள் உடனடியாக வேலை செய்யத் தொடங்கும்.

உங்கள் இங்கிருந்து திசைதிருப்பு (Redirect from) மற்றும் இதற்குத் திசைதிருப்பு (Redirect to) புலங்களில் உங்களால் Liquid ஐச் சேர்க்கவும் முடியும். உங்கள் பாதைகளில் Liquidஐப் பயன்படுத்தும்போது முழுமையான புலச் சரிபார்ப்பைச் செய்ய முடியாது.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > மெனுக்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. URL திசைதிருப்பல்களைக் காண்க என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. URL திசைதிருப்பலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. இங்கிருந்து திசைதிருப்பு (Redirect from) என்பதில், நீங்கள் பார்வையாளர்களைத் திசைதிருப்ப விரும்பும் பழைய URLஐ உள்ளிடவும்.

  5. இதற்குத் திசைதிருப்பு (Redirect to) என்பதில், பார்வையாளர்களை நீங்கள் திசைதிருப்ப விரும்பும் புதிய URLஐ உள்ளிடவும். உங்கள் ஸ்டோரின் முகப்புப் பக்கத்திற்குத் திசைதிருப்ப, / என்பதை உள்ளிடவும்.

  6. திசைதிருப்பலைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

URL திசைதிருப்பல்களில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்

URL திசைதிருப்பல்கள் உடனடியாக வேலை செய்யத் தொடங்கும். உங்களின் திசைதிருப்பல் உடனடியாகச் செயல்படவில்லை எனில், பின்வரும் சிக்கல் தீர்க்கும் படிகளை நீங்கள் முயற்சி செய்யலாம்:

  • இங்கிருந்து திசைதிருப்பு (Redirect from) மற்றும் இதற்குத் திசைதிருப்பு (Redirect to) URLகள் இரண்டிலும் ஏதேனும் தட்டச்சுப் பிழைகள் உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
  • இங்கிருந்து திசைதிருப்பு (Redirect from) URLஇல் செயல்படும் பக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
  • இங்கிருந்து திசைதிருப்பு (Redirect from) URLஆனது நிலையான பாதையாக இல்லை அல்லது உங்களால் திசைதிருப்ப முடியாத முன்னொட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
  • உங்கள் உலாவியின் தேக்ககத்தை (கேச்) அழித்துவிட்டு, திசைதிருப்பலை மீண்டும் சோதிக்கவும் அல்லது வேறொரு சாதனத்தில் முயலவும்.

கூடுதல் திசைதிருப்பல் சிக்கல்தீர்த்தல்

தீம் எடிட்டரில் 404 பக்கம் முகப்புப் பக்கத்திற்குத் திசைதிருப்பப்படுகிறது

உங்கள் 404 பக்கத்தைத் தீம் எடிட்டரில் பார்க்கும்போது, அது முகப்புப் பக்கத்திற்குத் திசைதிருப்பப்பட்டால், /404 என்பதில் இருந்து / (உங்கள் முகப்புப் பக்கம்) என்பதற்கு நீங்கள் திசைதிருப்பலை அமைத்துள்ளீர்களா என்று சரிபார்க்கவும். இந்த வகையான திசைதிருப்பலானது 404 பக்கத்தைக் காண்பிக்கும் தீம் எடிட்டரின் திறனில் குறிக்கிடும். சிக்கலைத் தீர்க்க இந்தத் திசைதிருப்பலை அகற்றவும்.

திசைதிருப்பல் வரம்பு மீறப்பட்டதற்கான API பிழைகள்

Admin APIஐப் பயன்படுத்தும்போது "Redirect Limit Exceeded" பிழைகளை நீங்கள் சந்தித்தால், இந்தப் பிழை உங்கள் ஸ்டோரின் URL திசைதிருப்பல் வரம்புடன் (1,00,000 திசைதிருப்பல்கள்) தொடர்புடையது அல்ல. அதற்குப் பதிலாக, API கோரிக்கை ஒன்று அதிகப்படியான சேவையகத் திசைதிருப்பல்களை ஏற்படுத்துகிறது என்பதை இது குறிக்கிறது. இந்தப் பிழையை நீங்கள் சந்தித்தால், Shopify சமூகத்தை அணுகப் பரிசீலிக்கவும் அல்லது சிக்கலை ஏற்படுத்தக்கூடிய மூன்றாம் தரப்புச் செயலிகளின் டெவலப்பரைத் தொடர்புகொள்ளவும்.

URL திசைதிருப்பல்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர் தெரிவுநிலை

மறைக்கப்பட்ட உள்ளடக்கத்திலிருந்து செயல்படும் உள்ளடக்கத்திற்கு வாடிக்கையாளர்களைத் தற்காலிகமாகத் திசைதிருப்ப, உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தெரிவுநிலை அமைப்புகளுடன் URL திசைதிருப்பல்களைப் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக, கோடைக் காலத்தில் நீங்கள் தற்காலிகமாக மறைக்க விரும்பும் /collections/fall சேகரிப்பு உங்களிடம் இருந்தால், வாடிக்கையாளர்களை /collections/summer என்பதற்குத் திசைதிருப்ப, உங்களால் பின்வருவனவற்றைச் செய்ய முடியும்:

  1. fall சேகரிப்பின் ஆன்லைன் ஸ்டோர் தெரிவுநிலையை (Online store visibility), மறைக்கப்பட்டது (Hidden) என மாற்றவும்.
  2. /collections/fall என்பதில் இருந்து /collections/summer என்பதற்கு URL திசைதிருப்பலை உருவாக்கவும்.

fall சேகரிப்பு மறைக்கப்படும்போது, /collections/fall URLஆனது 404 பக்கமாக மாறும். இது திசைதிருப்பல் வேலை செய்ய அனுமதிக்கிறது. /collections/fall என்பதற்குப் செல்லும் வாடிக்கையாளர்கள், தானாகவே /collections/summer என்பதற்குத் திசைதிருப்பப்படுவார்கள்.

முக்கியம்: சேகரிப்பின் ஆன்லைன் ஸ்டோர் பார்வைநிலையை மீண்டும் பார்க்கக்கூடியதாக மாற்றினால், URL திசைதிருப்பல் தானாகவே நீக்கப்படும்; ஏனெனில் 404 பிழைகளை வழங்கும் URL-களில் மட்டுமே திசைதிருப்பல்கள் செயல்படும். சேகரிப்பை மீண்டும் மறைத்தால், திசைதிருப்பலை நீங்கள் மீண்டும் உருவாக்க வேண்டும்.

இந்தச் செயல்பாடு தயாரிப்புகளுக்கும் பொருந்தும். தயாரிப்புகளை வரைவு நிலைக்கு அமைக்கலாம் அல்லது அவற்றை 404 பிழைகளை வழங்கச் செய்து URL திசைதிருப்பல்களுக்குத் தகுதியானவையாக மாற்ற, அனைத்து விற்பனைச் சேனல்களிலிருந்தும் அவற்றை அகற்றலாம்.

திசைதிருப்பல்கள் மற்றும் துணைக்கோப்புறைகள்

URL திசைதிருப்பலை உருவாக்குவது, சர்வதேச விற்பனைக் கருவிகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள அனைத்து மொழி அல்லது சந்தைத் துணைக்கோப்புறைகளுக்கும் பொருந்தும்.

உதாரணமாக, உங்கள் முதன்மைச் சந்தை example.com இல் உள்ள அமெரிக்காவாகும். example.com/en-ca எனும் துணைக்கோப்புறையில் கனடாவிற்கான சந்தையும் உங்களிடம் உள்ளது. உங்கள் ஸ்டோரில் blue நிற டி-ஷர்ட்டை விற்பனை செய்வதை நிறுத்த முடிவெடுத்து, அந்தத் தயாரிப்பை நீக்குகிறீர்கள்; பிறகு /products/blue-t-shirt என்பதிலிருந்து /collections/t-shirts என்பதற்கு ஓர் URL திசைதிருப்பலை உருவாக்குகிறீர்கள்.

URL திசைதிருப்பலை உருவாக்கிய பிறகு, /products/blue-t-shirt என்பதைப் பார்வையிட முயலும் அமெரிக்க வாடிக்கையாளர்கள் தானாகவே example.com/collections/t-shirts என்பதற்கும், example.com/en-ca/products/blue-t-shirt என்பதைப் பார்வையிட முயலும் கனடா வாடிக்கையாளர்கள் தானாகவே example.com/en-ca/collections/t-shirts என்பதற்கும் திசைதிருப்பப்படுவார்கள்.

ஒவ்வொரு சந்தைக்கும் ஒரு வெவ்வேறு இலக்கிற்கு மக்களைத் திசைதிருப்ப விரும்பினால், ஒவ்வொரு துணைக்கோப்புறைக்கும் நீங்கள் தனித்தனி திசைதிருப்பல்களை இன்னமும் உருவாக்கிக்கொள்ளலாம்.

உங்கள் URL திசைதிருப்பல்களை நிர்வகித்தல்

பின்வரும் வழிகளில் உங்கள் URL திசைதிருப்பல் பட்டியலை நிர்வகிக்கலாம்:

URL திசைதிருப்பல்களைத் தேதியின்படி வடிகட்டுதல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > மெனுக்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. URL திசைதிருப்பல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. சேர்க்கப்பட்ட தேதி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, நீங்கள் வடிகட்ட விரும்பும் தேதிக் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

URL திசைதிருப்பல் வடிப்பானைச் சேமித்தல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > மெனுக்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. URL திசைதிருப்பல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தேடல் பெட்டியைப் பயன்படுத்தியோ URL திசைதிருப்பல்களைத் தேதியின்படி வடிகட்டியோ ஒரு வடிப்பானை உருவாக்கவும்.

  4. வடிப்பான்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. உங்கள் வடிப்பானுக்கு ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. வடிப்பான்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும். வடிப்பான்கள் பட்டியலின் மேற்புறத்தில் ஒரு புதிய தாவலாகச் சேமிக்கப்படும்.

URL திசைதிருப்பல் வடிப்பானை நீக்குதல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > மெனுக்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. URL திசைதிருப்பல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் நீக்க விரும்பும் வடிப்பானைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. சேமிக்கப்பட்டது என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. தாவலை அகற்று என்பதைக் கிளிக் செய்து, பின்னர் அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

URL திசைதிருப்பல் வடிப்பானின் பெயரைத் திருத்துதல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > மெனுக்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. URL திசைதிருப்பல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் வடிப்பானைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. சேமிக்கப்பட்டது என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. தாவல் பெயரைத் திருத்தி, வடிப்பான்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

URL திசைதிருப்பல்களைத் தனித்தனியாகத் திருத்துதல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > மெனுக்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. URL திசைதிருப்பல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் URL திசைதிருப்பலைக் கிளிக் செய்யவும்.

  4. மாற்றங்களை உள்ளிடவும்.

  5. திசைதிருப்பலைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரே நேரத்தில் பல URL திசைதிருப்பல்களைத் திருத்துதல்

நீங்கள் URL திசைதிருப்பல்களை மொத்தமாகத் திருத்தலாம். ஒரே நேரத்தில் பல URL திசைதிருப்பல்களைத் திருத்துவது குறித்து மேலும் அறிய, மொத்தச் செயல்களைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > மெனுக்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. URL திசைதிருப்பல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் URL திசைதிருப்பல்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. திசைதிருப்பலைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. மாற்றங்களை உள்ளிடவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் URL திசைதிருப்பல்களை ஏற்றுமதி செய்தல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > மெனுக்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. URL திசைதிருப்பல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நீங்கள் எந்தத் திசைதிருப்பல்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. எந்த வகையான CSV கோப்பை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. URL திசைதிருப்பல்களை ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் URL திசைதிருப்பல்களை இறக்குமதி செய்தல்

உங்களின் தற்போதைய URL திசைதிருப்பலை நீங்கள் Shopify-க்கு இறக்குமதி செய்யலாம். வார்ப்புருவாகப் பயன்படுத்த, மாதிரி URL திசைதிருப்பல் CSV கோப்பைப் பதிவிறக்கிப் பார்க்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > மெனுக்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. URL திசைதிருப்பல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. கோப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்து ஒரு CSV கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. கோப்பைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. இறக்குமதியை மதிப்பாய்வு செய்யவும்.

  7. திசைதிருப்பல்களை இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  8. மூடு என்பதைக் கிளிக் செய்யவும்.

URL திசைதிருப்பல்களை நீக்குதல்

நீங்கள் URL திசைதிருப்பல்களை நீக்கலாம். ஒரே நேரத்தில் பல URL திசைதிருப்பல்களை நீக்குவது குறித்து மேலும் அறிய, மொத்தச் செயல்களைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > மெனுக்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. URL திசைதிருப்பல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் நீக்க விரும்பும் URL திசைதிருப்பல்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. தேர்ந்தெடுக்கப்பட்ட திசைதிருப்பல்களை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. உங்கள் முடிவை உறுதிசெய்ய நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.