உங்கள் ஆன்லைன் ஸ்டோர் விருப்பத்தேர்வுகளை அமைத்தல்

விருப்பத்தேர்வுகள் பக்கத்தில், உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தலைப்பு மற்றும் மெட்டா விளக்கத்தைத் திருத்தலாம், தடமறிவதற்கான குறியீடுகளைச் சேர்க்கலாம் மற்றும் தனிப்பட்ட பயன்முறையைச் செயல்படுத்தலாம்.

ஸ்டோர் அணுகல் அமைப்புகளை நிர்வகித்தல்

விருப்பத்தேர்வுகள் பக்கத்தின் ஸ்டோர் அணுகல் பிரிவிலிருந்து பார்வையாளர்கள் மற்றும் தேடுபொறிகள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அணுக முடியுமா என்பதைக் கட்டுப்படுத்தலாம்.

பார்வையாளர்கள் மற்றும் தேடுபொறிகள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அணுகுவதைக் கட்டுப்படுத்த, தனிப்பட்ட பயன்முறை அமைப்பைச் செயல்படுத்தவும். தனிப்பட்ட பயன்முறை செயலில் இருக்கும்போது, கடவுச்சொல் விருப்பத்தேர்வு மற்றும் பிரத்தியேகச் செய்தியைக் கொண்ட ஒரு லேண்டிங் பக்கம் உங்கள் பார்வையாளர்களுக்குக் காட்டப்படும். தனிப்பட்ட பயன்முறை செயலில் இருக்கும்போது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை மட்டும் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அணுக அனுமதிக்க, தனிப்பட்ட பயன்முறையைத் தவிர்ப்பதற்கான கடவுச்சொல்லை அவர்களுக்கு வழங்கவும். உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அணுக அவர்கள் லேண்டிங் பக்கத்தில் அதை உள்ளிடலாம்.

நீங்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் அணுகலை B2B வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தவும் முடியும்.

தனிப்பட்ட பயன்முறையைச் செயல்படுத்துவது குறித்து மேலும் அறிக.

உங்கள் முகப்புப் பக்கத்திற்கான தலைப்பு மற்றும் மெட்டா விளக்கத்தைத் திருத்துதல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோர் முகப்புப் பக்கத்திற்கான பக்கத் தலைப்பு மற்றும் மெட்டா விளக்கத்தை அமைக்கலாம். இவை தேடுபொறி முடிவுகளில் காண்பிக்கப்படும். உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான தேடுபொறித் தரவரிசையை மேம்படுத்த விளக்க உரை மற்றும் முக்கியச் சொற்களைப் பயன்படுத்தவும். தேடுபொறி உகப்பாக்கம் குறித்து மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் > விருப்பத்தேர்வுகள் என்பதற்குச் செல்லவும்.

  2. சமூகப் பகிர்வுப் படம் மற்றும் SEO பிரிவில், உங்கள் ஸ்டோருக்கான தலைப்பு மற்றும் மெட்டா விளக்கத்தை உள்ளிடவும்.

  3. விருப்பத்தேர்வு: உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் சமூக ஊடகப் படத்தைச் சேர்க்க, படத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் சர்வதேசப் பார்வையாளர்களுக்கான தானியங்கு திசைதிருப்பலை அமைத்தல்

நீங்கள் தானியங்கு திசைதிருப்பலைச் செயல்படுத்தும்போது, உங்கள் வாடிக்கையாளர்களின் இருப்பிட விருப்பத்தேர்வுகளுடன் பொருந்தும் ஆன்லைன் ஸ்டோர்ஃபிரண்ட் தானாகவே காட்டப்படும். வாடிக்கையாளரின் உலாவி மொழியைக் கண்டறிந்து, அந்த மொழி கிடைக்கும்போது அதற்கேற்ப ஸ்டோர்ஃபிரண்டை தானாகவே மாற்றும் மொழித் திசைதிருப்பலையும் நீங்கள் செயல்படுத்தலாம்.

சர்வதேச வாடிக்கையாளர்களுக்கான தானியங்கு ஸ்டோர்ஃபிரண்ட் திசைதிருப்பலை அமைப்பது குறித்து மேலும் அறிக.

தானியங்கு hreflang குறிச்சொற்களை நிர்வகித்தல்

வாடிக்கையாளர்களுக்கு உங்கள் ஸ்டோரின் எந்த மொழி மற்றும் பிராந்தியப் பதிப்பைக் காட்ட வேண்டும் என்பதை Hreflang குறிச்சொற்கள் தேடுபொறிகளுக்குத் தெரிவிக்கும். தானியங்கு hreflang குறிச்சொற்கள் இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும், மேலும் இவை உங்கள் சந்தை மற்றும் மொழி உள்ளமைவின் அடிப்படையில் உருவாக்கப்படும். உங்கள் தீம் அல்லது செயலி ஏற்கனவே hreflang குறிச்சொற்களைச் சேர்த்தால், நகல்களைத் தவிர்க்க விருப்பத்தேர்வுகள் பக்கத்திலிருந்து தானியங்கு hreflang குறிச்சொற்களை முடக்கலாம்.

தானியங்கு hreflang குறிச்சொற்கள் குறித்து மேலும் அறிக.

hCaptcha மூலம் உங்கள் ஆன்லைன் ஸ்டோரைப் பாதுகாத்தல்

பாட்களிடமிருந்து வரும் ஸ்பேமைத் தடுக்க, உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு வரும் பார்வையாளர்களின் நடத்தை பகுப்பாய்வு செய்ய hCaptcha உதவுகிறது. hCaptcha கேப்ட்சா சவால்களை நீக்கி உண்மையான பயனர்களுக்கான தடைகளையும் குறைக்கிறது, மேலும் இது அனைத்து Shopify ஸ்டோர்களிலும் இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் பின்வரும் இடங்களில் hCaptcha காண்பிக்கப்படலாம்:

தீம்களில் hCaptcha-ஐத் திருத்துவது குறித்து மேலும் அறிய, Shopify.dev என்பதற்குச் செல்லவும்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் hCaptcha-ஐச் செயல்படுத்துதல் அல்லது முடக்குதல்

அனைத்து Shopify ஸ்டோர்களிலும் hCaptcha இயல்பாகவே செயல்படுத்தப்பட்டிருக்கும். hCaptcha பற்றிய தகவல் அனைத்துப் பார்வையாளர்களுக்கும் கிடைக்கும். பார்வையாளர் மனிதரா அல்லது பாட் ஆ என்பதைக் கண்டறிய, பார்வையாளரின் நடத்தை hCaptcha தொடர்ந்து கண்காணிக்கும்.

பார்வையாளர் ஒரு பாட் ஆ என்பதை hCaptcha-ஆல் கண்டறிய முடியாவிட்டால், அது பிழையைக் காண்பிக்கும் அல்லது ஊடாடும் சவாலைத் தீர்ப்பதற்கான பக்கத்திற்குப் பயனரைத் திசைதிருப்பும்.

CAPTCHA-ஐச் சேர்க்கும் பிரத்தியேகக் குறியீடு அல்லது மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் hCaptcha இணக்கமாக இருக்காது. நீங்கள் CAPTCHA-ஐச் சேர்க்கும் பிரத்தியேகக் குறியீடு அல்லது மூன்றாம் தரப்புச் செயலியை வைத்திருந்து hCaptcha-ஐயும் செயல்படுத்தியிருந்தால், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு hCaptcha-இல் சிக்கல்கள் ஏற்படலாம். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு hCaptcha வேலை செய்வதை உறுதிசெய்ய, பிரத்தியேகக் குறியீட்டை அகற்றி மூன்றாம் தரப்புச் செயலிகளில் CAPTCHA-ஐ முடக்கவும்.

பயனர் படிவத்துடன் ஊடாடும்போது, hCaptcha செயல்படுத்தப்பட்ட எந்தவொரு படிவத்திலும் hCaptcha லோகோ காண்பிக்கப்படும்:

hCaptcha லோகோ

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் > விருப்பத்தேர்வுகள் என்பதற்குச் செல்லவும்.

  2. ஸ்பேம் பாதுகாப்பு பிரிவில், குறிப்பிட்ட இடத்திற்கான hCaptcha-ஐச் செயல்படுத்த நீங்கள் பெட்டியைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது முடக்கத் தேர்வை நீக்கலாம்:

தொடர்பு மற்றும் கருத்துப் படிவங்களில் hCaptcha

பாட்களிடமிருந்து வரும் ஸ்பேமைக் குறைக்க, தொடர்புப் படிவங்கள் மற்றும் வலைப்பதிவுக் கருத்துகளில் hCaptcha-ஐப் பயன்படுத்தவும். அனைத்து Shopify ஸ்டோர்களிலும் hCaptcha இயல்பாகவே செயல்படுத்தப்பட்டிருக்கும்.

இது செயல்படும்போது, அனைத்துப் படிவச் சமர்ப்பிப்புகளும் கண்ணுக்குத் தெரியாத (ஊடாடலற்ற) சவாலைச் செய்யும். சந்தேகத்திற்குரியதாக மதிப்பிடப்படும் சவால்கள் /challenge பக்கத்திற்குத் திசைதிருப்பப்பட்டு, ஊடாடும் புதிரைத் தீர்க்குமாறு அல்லது "I'm a human" தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யுமாறு கேட்கும்.

நிர்வாகியில் hCaptcha முடக்கப்பட்டிருந்தாலும், பல கருத்துகளைத் தெரிவிக்கும் அல்லது சந்தேகத்திற்குரியதாக hCaptcha கருதும் மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து கருத்துகளை உள்ளிடும் வாடிக்கையாளர்கள் மேலே விவரிக்கப்பட்ட ஊடாடும் சவால் ஓட்டத்தை நிறைவுசெய்வதற்கான பக்கத்திற்குத் திசைதிருப்பப்படுவார்கள்.

வாடிக்கையாளர் உள்நுழைவு, கணக்கு மற்றும் பதிவுப் படிவங்களில் hCaptcha

உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு வரும் தேவையற்ற டிராஃபிக்கைக் குறைக்க, பழைய வாடிக்கையாளர் கணக்கு உள்நுழைவுப் பக்கங்கள், கணக்கை உருவாக்கும் பக்கங்கள் மற்றும் கடவுச்சொல் மீட்புப் படிவங்களில் hCaptcha-ஐப் பயன்படுத்தவும். அனைத்து Shopify ஸ்டோர்களிலும் hCaptcha இயல்பாகவே செயல்படுத்தப்பட்டிருக்கும்.

hCaptcha செயல்படுத்தப்படும்போது, சந்தேகத்திற்குரிய டிராஃபிக் பின்வரும் ஒன்று அல்லது இரண்டு தடங்கல்களையும் சந்திக்க நேரிடலாம்:

  • படிவத்தைச் சமர்ப்பித்த உடனேயே ஒரு இன்டராக்டிவ் சவால் தோன்றும்
  • மனிதரால் இது செய்யப்படவில்லை என்பது உறுதியானால், "CAPTCHA failed" என்ற பிழைச் செய்தி தோன்றும்

வாடிக்கையாளர் உள்நுழைவு, கணக்கு மற்றும் பதிவுசெய்தல் படிவங்களிலுள்ள hCaptcha-க்கான புதுப்பிப்பு

வாடிக்கையாளர் உள்நுழைவுப் படிவம், வாடிக்கையாளர் கணக்குப் படிவம் அல்லது வாடிக்கையாளர் பதிவுசெய்தல் படிவத்தைப் புதுப்பிப்பதற்கான விழிப்பூட்டல் உங்கள் Shopify நிர்வாகியில் காட்டப்பட்டால், 7 மார்ச் 2025-க்குள் hCaptcha-விற்கும் இந்தப்படிவங்களுக்குமான இணைப்பைப் புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் தடங்கலின்றி வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரில் உள்நுழையவும் அவர்களின் கணக்குகளை அணுகவும் செக்அவுட் செய்யவும் முடியும்.

hCaptcha மற்றும் உங்கள் ஸ்டோரிலுள்ள வாடிக்கையாளர் படிவங்களுக்கிடையிலான இணைப்பைப் புதுப்பிக்க, பின்வரும் செயல்களில் ஒன்றை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்:

  • ஒருமுறை பயன்படுத்தும் 6 இலக்கச் சரிபார்ப்புக் குறியீட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் கடவுச்சொல் இன்றி உள்நுழைய வாடிக்கையாளர் கணக்குகளுக்கு மேம்படுத்தவும். விரைவான உள்நுழைவு மற்றும் செக்அவுட் அனுபவத்திற்கு உதவுவதோடு, வாடிக்கையாளர் கணக்குகளைச் சரிபார்க்கும் செயல்முறைக்கு hCaptcha தேவையில்லை. வாடிக்கையாளர் கணக்குகள் குறித்து மேலும் அறிக.
  • தொடர்ந்து பழைய வாடிக்கையாளர் கணக்குகளைப் பயன்படுத்த, மேம்படுத்தப்பட்ட hCaptcha-வை உங்கள் ஸ்டோரில் உள்ளமைக்கத் தீமைப் புதுப்பிக்கவும். மேலும் தகவலுக்கு, Shopify-இன் CAPTCHA டெவலப்பர் ஆவணங்களைப் பார்க்கவும்.
  • தொடர்ந்து பழைய வாடிக்கையாளர் கணக்குகளைப் பயன்படுத்த விரும்பினால், அத்துடன் உங்கள் ஸ்டோரில் hCaptcha காட்டப்படுவதைத் தவிர்க்க விரும்பினால் hCaptcha-வை முடக்கவும்.

நம்பகமான டொமைன்கள்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள இணைப்பு, அதிக அபாயம் உள்ளதாக Shopify கருதும் இணையதளத்திற்கு இட்டுச் சென்றால், உங்கள் ஸ்டோரிலிருந்து வெளியேறும் முன் வாடிக்கையாளர்களுக்கு உறுதிப்படுத்தல் செய்தி காட்டப்படும். விருப்பத்தேர்வுகள் பக்கத்தின் நம்பகமான டொமைன்கள் பிரிவில், உங்களுக்குத் தெரிந்த நம்பகமான இணையதளங்களின் டொமைன்களைச் சேர்க்கலாம். இதனால், அவற்றுக்கான இணைப்புகளைத் திறக்கும்போது வாடிக்கையாளர்களிடம் வழக்கமாக உறுதிப்படுத்தல் கேட்கப்படாது.

நம்பகமான டொமைன்கள் பற்றி மேலும் அறிக.