முன்கணிப்புத் தேடல்
நீங்கள் தட்டச்சு செய்யும்போதே முன்கணிப்புத் தேடல் பரிந்துரைக்கப்பட்ட முடிவுகளைக் காட்டுகிறது. தேடல் முடிவுகள் பக்கத்திற்குத் திருப்பிவிடப்படாமலேயே உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் தேடலைச் செம்மைப்படுத்த இது உதவுகிறது. பரிந்துரைக்கப்படும் தேடல் சொற்கள் மற்றும் தயாரிப்புகளைப் பார்ப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரை விரைவாக ஆராயலாம்.
இலவச முதல்-தரப்பு Shopify Search & Discovery செயலி மூலம் முன்கணிப்புத் தேடலின் நடத்தையை நீங்கள் தனிப்பயனாக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
முன்கணிப்புத் தேடலுக்கான கவனத்தில் கொள்ள வேண்டியவை
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் முன்கணிப்புத் தேடலைப் பயன்படுத்துவதற்கு, கவனத்தில் கொள்ள வேண்டிய பின்வரும் அம்சங்களை மதிப்பாய்வு செய்யவும்.
முடிவு வரம்புகள்
முன்கணிப்புத் தேடல், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான குறிப்பிட்ட அளவிலான முடிவுகளை வழங்குகிறது.
இயல்புநிலையாக, கோரப்பட்ட முடிவு வகைகளில் ஒட்டுமொத்தமாக 10 முடிவுகள் வரை முன்கணிப்புத் தேடல் வழங்கும். இந்த வரம்பு காரணமாக, பொதுவாக உங்கள் ஸ்டோரின் பிரத்தியேகத் தேடல் முடிவுகள் பக்கத்தில் கூடுதல் முடிவுகள் கிடைக்கும்.
தீம் பொருத்தம்
முன்கணிப்புத் தேடல் உங்கள் ஸ்டோரில் காட்டப்பட, அது உங்களின் வெளியிடப்பட்ட தீமின் ஓர் அம்சமாக இருக்க வேண்டும். பொருந்தக்கூடிய தீம்களில் முன்கணிப்புத் தேடல் கிடைக்கும், மேலும் Predictive Search API-ஐப் பயன்படுத்தி இதைப் பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்டுகளிலும் சேர்க்கலாம்.
மொழிப் பொருத்தம்
எந்தெந்த முன்கணிப்புத் தேடல் நடத்தைகள் ஆதரிக்கப்படுகின்றன என்பதை உங்கள் ஸ்டோரின் மொழிகள் பாதிக்கின்றன:
- உங்கள் ஸ்டோரின் முதன்மை மொழியிலும் உங்கள் ஸ்டோரின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளிலும் தயாரிப்புப் பரிந்துரைகள் கிடைக்கும்.
- உங்கள் ஸ்டோரின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகள் உட்பட, ஆன்லைன் ஸ்டோர் தேடல் ஆதரிக்கும் மொழிகள் அனைத்திலும் வினவல் பரிந்துரைகள் கிடைக்கும்.
- முன்கணிப்புத் தேடல் அனைத்து மொழிகளிலும் கிடைக்கவில்லை. ஆதரிக்கப்படும் மொழிகளின் முழுமையான பட்டியலுக்கு டெவலப்பர் ஆவணங்களைப் பார்க்கவும்.
தேடல் நடத்தை
புதிய ஸ்டோர்கள் இயல்புநிலையாக வினவல், தயாரிப்பு, சேகரிப்பு முடிவுகளைக் கோரும். ஏற்கெனவே இருக்கும் ஸ்டோர்கள் தற்போதைய முடிவு வகைகளை அப்படியே வைத்திருக்கும். இலவச Shopify Search & Discovery செயலியில் கோரப்பட்ட முடிவு வகைகளை நீங்கள் மாற்றலாம். தேடல் முடிவு வகைகளைச் சரிசெய்தல் குறித்து மேலும் அறிக.
வினவல் முடிவுகள் என்பவை உங்கள் தயாரிப்பு அட்டவணையில் உள்ள சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் முந்தைய தேடல்களின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் தேடல் சொற்களாகும். வினவல் முடிவொன்றைத் தேர்வுசெய்யும்போது, அந்தத் தேடல் சொல்லுக்கான தேடல் முடிவுகள் அடங்கிய பக்கம் கிடைக்கும்.
வாடிக்கையாளரின் தேடல் சொற்கள் மற்றும் முதன்மையாகப் பரிந்துரைக்கப்படும் தேடல் சொல் ஆகிய இரண்டின் அடிப்படையிலும் தயாரிப்புப் பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. ஒரு வாடிக்கையாளர் ஸ்டாக் கீப்பிங் யூனிட் (SKU) அல்லது பார்கோடை உள்ளிடும்போது, சரியாக அவர்கள் உள்ளிட்ட குறியீட்டின் அடிப்படையில் தயாரிப்புப் பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. SKU மற்றும் பார்கோடு தேடல்கள் குறித்து மேலும் அறிக.
வாடிக்கையாளரின் தேடலில் தேடல் தொடரியல் பயன்படுத்தப்படும்போது, முன்கணிப்புத் தேடலானது வினவல் முடிவுகளை வழங்காது.
தேடக்கூடிய பண்புகள்
தயாரிப்புப் பரிந்துரைகள் எப்போதுமே பின்வரும் அனைத்துத் தயாரிப்புப் பண்புகளிலும் தேடுகின்றன:
- தலைப்பு
- விளக்கம்
- தயாரிப்பு வகை
- டேக்குகள்
- விற்பனையாளர்
- வேரியண்ட் தலைப்பு
- மாறுபாடு SKU
- மாறுபாடு பார்கோடு
தேடக்கூடிய மொழிபெயர்ப்புகள்
Shopify வழங்கும் Translate & Adapt போன்ற செயலிகளைக் கொண்டு உங்கள் ஸ்டோர் உள்ளடக்கத்தை மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்ப்புகள் மற்றும் தேடக்கூடிய பண்புகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, Predictive Search API தொடர்பான டெவலப்பர் ஆவணங்களைப் பார்க்கவும்.