Shopify Search & Discovery அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வு

Search & Discovery செயலிக்குள், உங்கள் டிஸ்கவரி தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், உங்கள் தனிப்பயனாக்க முயற்சிகளுக்கு எங்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க உதவும் சில அறிக்கைகளை நீங்கள் அணுகலாம்.

தேடல் செயல்திறன்

உங்கள் ஸ்டோரின் தேடல் செயல்திறனை மதிப்பிட உதவும் பின்வரும் அறிக்கைகளை Search & Discovery செயலியிலிருந்து அணுகலாம். ஆன்லைன் ஸ்டோரின் தேடல் முடிவுகள் பக்கத்தில் உள்ள செயல்பாட்டை இந்த அறிக்கைகள் காட்டுகின்றன. உங்கள் ஸ்டோரின் முன்கணிப்புத் தேடல் அம்சத்துடனான வாடிக்கையாளர் ஊடாடல் இதில் சேர்க்கப்படவில்லை.

Search & Discovery செயலியின் மூலம் மிகவும் தொடர்புடைய தயாரிப்புகளை மேம்படுத்துவதன் மூலம் தேடல்களின் செயல்திறனை மேம்படுத்த நீங்கள் முயலலாம்.

உங்கள் ஸ்டோரின் தேடல் செயல்திறனை மதிப்பிடுவதற்கு உள்ள அறிக்கைகள்
அறிக்கைஅறிக்கையை எவ்வாறு பயன்படுத்துவது
கிளிக் வீதம் தேடல் முடிவுகளைக் கிளிக் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுங்கள்.
கொள்முதல் வீதம் தேடல் முடிவின் வழியாகத் தாங்கள் கண்டறிந்த ஒரு தயாரிப்பை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுங்கள்.
தேடல் வினவல் அடிப்படையிலான தேடல்கள் வாடிக்கையாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் தேடல் சொற்கள் எவை என்பதை மதிப்பிடுங்கள்.
முடிவுகள் இல்லாத தேடல்கள் முடிவுகள் ஏதும் இல்லாத தேடல்கள் எவை என்பதை மதிப்பிடுங்கள்.
கிளிக்குகள் இல்லாத தேடல்கள் முடிவுகளைக் கொண்டிருந்தும் கிளிக்குகள் எதுவும் இல்லாத தேடல் சொற்களை மதிப்பிடுங்கள்.

காட்டப்படும் அளவீடுகள் அனைத்தும் கடந்த 30 நாட்களுக்கான தரவை உள்ளடக்கியுள்ளன. பிற தேதி வரம்புகளுக்கு, பகுப்பாய்வு > அறிக்கைகள் என்பதிலிருந்து முழுமையான தேடல் செயல்திறன் அறிக்கைகளை நீங்கள் அணுகலாம்.

பரிந்துரைச் செயல்திறன்

உங்கள் ஸ்டோரில் தயாரிப்புப் பரிந்துரைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மதிப்பிடுவதற்கு Search & Discovery செயலியிலிருந்து அணுகக்கூடிய அறிக்கைகளைப் பயன்படுத்தலாம்.

Search & Discovery செயலியின் மூலம் தயாரிப்புப் பரிந்துரைகளைத் தனிப்பயனாக்குவதன் மூலம் செயல்திறனை மேம்படுத்த நீங்கள் முயலலாம்.

தயாரிப்புப் பரிந்துரைச் செயல்திறனை மதிப்பிடுவதற்கு உள்ள அறிக்கைகள்
அறிக்கைஅறிக்கையை எவ்வாறு பயன்படுத்துவது
கிளிக் வீதம் தயாரிப்புப் பரிந்துரைகளைக் கிளிக் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுங்கள்.
கொள்முதல் வீதம் பரிந்துரைகளில் தங்களுக்குக் காட்டப்பட்ட ஒரு தயாரிப்பைக் கண்டறிந்து வாங்கிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுங்கள்.
குறைந்த ஈடுபாட்டைக் கொண்ட தயாரிப்புப் பரிந்துரைகள் உங்கள் ஸ்டோரின் அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளின் தயாரிப்புப் பரிந்துரைகளுடன் வாடிக்கையாளர் ஈடுபாட்டை மதிப்பிடுங்கள்.

காட்டப்படும் அளவீடுகள் அனைத்தும் கடந்த 30 நாட்களுக்கான தரவை உள்ளடக்கியுள்ளன. பிற தேதி வரம்புகளுக்கு, பகுப்பாய்வு > அறிக்கைகள் என்பதிலிருந்து முழுமையான பரிந்துரைச் செயல்திறன் அறிக்கைகளை நீங்கள் அணுகலாம்.