Shopify Search & Discovery மூலம் தேடலை மாற்றியமைத்தல்
ஆன்லைன் ஸ்டோர் தேடல் மற்றும் முன்கணிப்புத் தேடலை மாற்றியமைக்க நீங்கள் Search & Discovery செயலியைப் பயன்படுத்தலாம். உங்கள் ஆன்லைன் ஸ்டோர் தேடல் முடிவுகளில் பின்வரும் தனிப்பயனாக்கங்களை நீங்கள் செய்யலாம்:
- தேடல் முடிவுகளில் கிடைக்கும் முடிவு வகைகளைச் சரிசெய்யலாம்.
- உங்கள் தயாரிப்புகளைத் தேடல் முடிவுகளில் காட்ட, அவற்றுக்குக் குறிப்பிட்ட தேடல் சொற்களை ஒதுக்கலாம்.
- தேடல் முடிவுகளில் ஒருங்கிணைந்த பட்டியல் தயாரிப்புகள் காட்டப்படும் விதத்தைச் சரிசெய்யலாம்.
இந்தப் பக்கத்தில்
தேடல் முடிவுகளைத் தனிப்பயனாக்கும்போது கருத்தில்கொள்ள வேண்டியவை
Search & Discovery செயலியின் மூலம் உங்கள் ஆன்லைன் ஸ்டோர் தேடல் முடிவுகளைத் தனிப்பயனாக்கும்போது கருத்தில்கொள்ள வேண்டிய பின்வரும் அம்சங்களை மதிப்பாய்வு செய்யவும்:
- தேடல் வினவலில் தேடல் தொடரியல் இடம்பெற்றிருக்கும்போது தயாரிப்பு பூஸ்ட்கள் பயன்படுத்தப்படாது.
சொற்பொருள் புரிதல்
சொற்பொருள் தேடல் என்பது AI-ஆல் இயக்கப்படும் ஆன்லைன் ஸ்டோர் தேடல் நடத்தைகளில் ஒன்றாகும். இது தேடல் முடிவுகளை மேம்படுத்தவும் விரிவாக்கவும் தொடர்புடைய சொற்கள், கருத்துகள், பிரிவுகள் மற்றும் பிற சூழல்களைப் பயன்படுத்துகிறது.
ஆன்லைன் ஸ்டோர் தேடலின் சொற்பொருள் புரிதலானது தொடர்புடைய வார்த்தைகள் மற்றும் பிரிவுகளையும், கருத்துகளுக்கு இடையிலான உறவுகளையும் சரிபார்க்கும்.
தேடல் முடிவுகளை மேம்படுத்த, தலைப்பு, விளக்கம், தயாரிப்பு வகை, தயாரிப்புப் பிரிவு, டேக்குகள் போன்ற உங்கள் தயாரிப்புத் தகவலைச் சொற்பொருள் புரிதல் பயன்படுத்துகிறது. தயாரிப்புப் படங்கள் பயன்படுத்தப்படாது.
எடுத்துக்காட்டாக, பல்வேறு ஸ்டைல்கள் மற்றும் பலவிதமான நிகழ்வுகளுக்கான ஷூக்களை விற்கும் ஆன்லைன் ஸ்டோரை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். வாடிக்கையாளர் ஒருவர் கிறிஸ்துமஸ் பார்ட்டி ஷூக்கள் எனத் தேடுகிறார். உங்கள் தயாரிப்புகளில் எங்கும் கிறிஸ்துமஸ் அல்லது பார்ட்டி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் தயாரிப்புகள் எதுவும் உங்களிடம் இல்லை, ஆனால் சிவப்பு உட்பட பல நிறங்களில் பம்ப்ஸ்களை விற்கிறீர்கள்.
கிறிஸ்துமஸ், பார்ட்டி அல்லது ஷூக்கள் ஆகிய வார்த்தைகளைக் கொண்டுள்ள தேடல் முடிவுகளை மட்டுமே காட்டுவதற்குப் பதிலாக, தொடர்புடைய வார்த்தைகளை இணைப்பதன் மூலம் தொடர்புடைய தயாரிப்புகளையும் சேர்க்கும் வகையில் உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தேடல் முடிவுகள் விரிவடையும். எடுத்துக்காட்டாக, கிறிஸ்துமஸ் என்பது பச்சை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களுடன் தொடர்புடையது, அத்துடன் பார்ட்டி ஷூக்கள் என்பதைப் பார்ட்டிகளுக்கான பொதுவான ஷூ ஸ்டைல்களான பம்ப்ஸ்கள் போன்றவற்றுடன் தொடர்புபடுத்தலாம்.
இதன் விளைவாக, வாடிக்கையாளரின் தேடல் முடிவுகளில் சிவப்பு பம்ப்ஸ்கள் காண்பிக்கப்படும்.
ஆன்லைன் ஸ்டோர் தேடலில் சொற்பொருள் புரிதல் சேர்க்கப்பட்டுள்ளது. Search & Discovery செயலியில் நீங்கள் அதை இயக்க வேண்டியதில்லை. முன்கணிப்புத் தேடலில் உள்ள தயாரிப்புப் பரிந்துரைகளுக்கும் சொற்பொருள் புரிதல் பொருந்தும்.
தேடல் முடிவு வகைகளைச் சரிசெய்தல்
உங்கள் ஸ்டோரின் தேடல் செயல்பாடுகள் தயாரிப்புகள், பக்கங்கள், வலைப்பதிவு இடுகைகள் போன்ற வெவ்வேறு வகையான முடிவுகளை வழங்கக்கூடும். தேடல் முடிவுகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை பொருத்தமானதாக வைத்திருக்க, உங்கள் ஆன்லைன் ஸ்டோர் தேடல் மற்றும் முன்கணிப்புத் தேடல் ஆகியன எந்த வகையான முடிவுகளை வழங்க வேண்டும் என்பதை நீங்கள் குறிப்பிடலாம். உங்கள் Shopify Search & Discovery செயலியின் அமைப்புகள் பிரிவில் பின்வரும் அமைப்புகளைச் சரிசெய்துகொள்ளலாம், ஆனால் இந்த அமைப்புகளை உங்கள் வெளியிடப்பட்ட தீம் மேலெழுதக்கூடும்.
தேடல் முடிவுகள்: தயாரிப்பு, பக்கம், வலைப்பதிவு இடுகை ஆகிய முடிவு வகைகளில் எவற்றைத் தேடல் முடிவுகள் பக்கம் கோர வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். புதிய ஸ்டோர்கள் இயல்புநிலையாகத் தயாரிப்பு முடிவுகளை மட்டுமே கோரும்.
முன்கணிப்புத் தேடல் முடிவுகள்: தயாரிப்பு, பக்கம், வலைப்பதிவு இடுகை, சேகரிப்பு, வினவல் ஆகிய முடிவு வகைகளில் எவற்றை முன்கணிப்புத் தேடல் கோர வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். புதிய ஸ்டோர்கள் இயல்புநிலையாக வினவல், தயாரிப்பு, சேகரிப்பு முடிவுகளைக் கோரும்.
ஏற்கெனவே இருக்கும் ஸ்டோர்கள் தற்போதைய முடிவு வகைகளை அப்படியே வைத்திருக்கும். உங்கள் ஸ்டோர் கோரும் முடிவு வகைகளைச் சரிபார்க்க அல்லது மாற்ற, Search & Discovery செயலியில் உள்ள அமைப்புகள் பகுதிக்குச் செல்லவும்.
கையிருப்பில் இல்லாத தயாரிப்புகள்: தேடல் முடிவுகள் பக்கம் மற்றும் முன்கணிப்புத் தேடல் ஆகிய இரண்டிற்கும் கிடைக்காத தயாரிப்புகளுக்கான முடிவுகளை எப்படிப் பார்ப்பது என்பதைத் தேர்வுசெய்யவும். கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளைக் காட்டலாம், மறைக்கலாம் அல்லது கிடைக்கும் முடிவுகளில் கடைசியாக வைக்கலாம். இந்த அமைப்பானது, தேடல் மற்றும் முன்கணிப்புத் தேடல் இரண்டின் செயல்பாட்டையும் சரிசெய்யும். இயல்பாகவே, கிடைக்காத தயாரிப்புகள் மற்ற அனைத்துப் பொருத்தமான முடிவுகளுக்கும் பிறகு காட்டப்படும்.
தேவைகள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோர் தீம் ஆன்லைன் ஸ்டோர் தேடல் அல்லது முன்கணிப்புத் தேடல் எண்ட்பாயிண்ட்களுக்கான கோரிக்கைகளில் type வினவல் அளவுருவைக் குறிப்பிடாதபோது, தேடல் முடிவு வகை அமைப்புகள் பொருந்தும். உங்கள் தீம் type வினவல் அளவுருவை அனுப்பினால், முடிவு வகை அமைப்பானது மேலெழுதப்படும். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் தேடல் அமைப்புகளின் மாற்றங்கள் காட்டப்படவில்லை எனில், உங்கள் தீமின் டெவெலப்பரைத் தொடர்புகொள்ளவும்.
ஒருங்கிணைந்த பட்டியல்களைச் சரிசெய்தல்
உங்கள் Shopify Search & Discovery செயலியின் அமைப்புகள் பிரிவில், உங்கள் தேடல் முடிவுகளிலும் முன்கணிப்புத் தேடலிலும் ஒருங்கிணைந்த பட்டியல் தயாரிப்புகள் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். இயல்புநிலையாக, சேய் (child) தயாரிப்புகள் மட்டுமே காட்டப்படும். இருப்பினும், மூலத் (parent) தயாரிப்புகளை மட்டுமே காட்டுமாறு அல்லது மூல மற்றும் சேய் தயாரிப்புகள் இரண்டையுமே காட்டுமாறு நீங்கள் செயலியின் அமைப்புகளைப் புதுப்பிக்கலாம்.
இந்த அமைப்பை அணுக, உங்கள் ஸ்டோரில் ஒருங்கிணைந்த பட்டியல் தயாரிப்புகள் இருக்க வேண்டும் அல்லது Combined Listings செயலி நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Search & Discovery என்பதற்குச் செல்லவும்.
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புகள் பிரிவில், ஒருங்கிணைந்த பட்டியல்களின் தேடல் முடிவுகளுக்குப் பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
- ஒருங்கிணைந்த பட்டியல்களின் சைல்டு தயாரிப்புகளை மட்டும் காட்ட, சைல்டு தயாரிப்புகளை மட்டும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒருங்கிணைந்த பட்டியல்களின் பேரன்ட் தயாரிப்புகளை மட்டும் காட்ட, பேரன்ட் தயாரிப்புகளை மட்டும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒருங்கிணைந்த பட்டியல்களின் பேரன்ட் மற்றும் சைல்டு தயாரிப்புகள் இரண்டையும் காட்ட, இரண்டையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்பு பூஸ்ட்களைத் தனிப்பயனாக்குதல்
உங்கள் தயாரிப்புகளைத் தேடல் முடிவுகளில் காட்டுவதற்கு உதவ, அவற்றிற்குக் குறிப்பிட்ட தேடல் வார்த்தைகளை நீங்கள் ஒதுக்கலாம். ஒரு தயாரிப்புக்கு நீங்கள் ஒதுக்கியுள்ள தேடல் வார்த்தைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் ஒருவர் உங்கள் ஸ்டோரில் தேடும்போது, உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தேடல் முடிவுகளில் அந்தத் தயாரிப்பானது உயர் தரவரிசையைப் பெறும். எடுத்துக்காட்டாக, நீங்கள் காஃபி விற்கிறீர்கள் எனவும், புதிய டீகேஃப் (decaf) காஃபி மாறுபாட்டை வெளியிட்டுள்ளீர்கள் எனவும் வைத்துக்கொள்வோம். உங்கள் ஸ்டோரில் அதன் தெரிவுநிலையை அதிகரிக்க உதவ, உங்கள் புதிய தயாரிப்பிற்கு "decaf coffee" என்ற தேடல் வார்த்தையை நீங்கள் ஒதுக்கலாம், இதன் மூலம் வாடிக்கையாளர் உங்கள் ஸ்டோரின் தேடலில் அந்தத் தேடல் வார்த்தையைப் பயன்படுத்தும்போது இந்தத் தயாரிப்பு எப்போதும் காட்டப்படும்.
தேவைகள்
தயாரிப்பு விற்பனைக்குக் கிடைத்தால் மட்டுமே, தேடல் முடிவுகளில் அதற்கான நிலை பூஸ்ட் செய்யப்படும். வாடிக்கையாளர்கள் தற்போதிருக்கும் தயாரிப்புகளைக் கண்டறிந்து வாங்க ஏதுவாக, விற்றுத் தீர்ந்த தயாரிப்புகள் தேடல் முடிவுகளின் இறுதியில் பட்டியலிடப்படும்.
தேடலில் ஒருங்கிணைந்த பட்டியல்களைக் காட்டுவதற்கான உங்கள் ஸ்டோரின் அமைப்பைப் பொருத்து, தயாரிப்பு பூஸ்ட்கள் மேலெழுதப்படலாம்.
தயாரிப்பு பூஸ்ட்களுக்கான சிறந்த நடைமுறைகள்
மிகவும் பொருத்தமான தேடல் முடிவுகளை வழங்கும் வகையில் ஆன்லைன் ஸ்டோர் தேடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் தயாரிப்புகள், சேகரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் செயல்பாடு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் முடிவுகள் சரிசெய்யப்படுகின்றன. நீங்கள் ஒரு தயாரிப்பைப் பூஸ்ட் செய்யும்போது, தொடர்புடைய வினவல்களுக்காக வழக்கமாக வழங்கப்படும் தேடல் முடிவுகளுக்கு மேலே அது பட்டியலிடப்படும். பயனுள்ள வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்குவதை உறுதிசெய்ய, தயாரிப்பு பூஸ்ட்களுக்கான பின்வரும் சிறந்த நடைமுறைகளை நீங்கள் பயன்படுத்தலாம்:
- குறிப்பிட்ட தேடல் வார்த்தைகளுக்கு, ஒரு தயாரிப்பு அல்லது சிறிய அளவிலான தயாரிப்புகளைப் பூஸ்ட் செய்யவும். அதிக அளவிலான தயாரிப்புகளைப் பூஸ்ட் செய்வது, தேடல் முடிவுகளில் பிற தொடர்புடைய தயாரிப்புகள் கீழே காண்பிக்கப்படக் காரணமாகலாம்.
- தேடல் வார்த்தைகளின் பொதுவான எழுத்துப்பிழைகள் அல்லது தேடல் வார்த்தைகளின் ஒருமை மற்றும் பன்மை வடிவம் ஆகிய இரண்டையும் பூஸ்ட் செய்ய வேண்டியதில்லை. தேடல் முடிவுகளை உருவாக்கும்போது இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கான உத்திகள் Shopify-இல் உள்ளமைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் ஸ்டோரில் உள்ள ஆன்லைன் ஸ்டோர் தேடல் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து மேலும் அறிக.
தயாரிப்பு பூஸ்ட்டை உருவாக்கு
தேடல் சொற்கள் பல வார்த்தைகளைக் கொண்டிருக்கலாம். ஒரு தயாரிப்பு பூஸ்ட்டில் அதிகபட்சம் 10 தேடல் சொற்களைச் சேர்க்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Search & Discovery என்பதற்குச் செல்லவும்.
தேடல் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் தயாரிப்பு பூஸ்ட்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்பு பூஸ்ட்டை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல் முடிவுகளில் நீங்கள் விளம்பரப்படுத்த விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் சேர்க்க விரும்பும் ஒவ்வொரு தேடல் சொல்லுக்கும், அச்சொல்லை உள்ளிட்டுவிட்டு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மெட்டாஃபீல்டுகளுடன் தயாரிப்பு பூஸ்ட்களைத் திருத்துதல்
தயாரிப்பு பூஸ்ட்களைத் திருத்த நீங்கள் மெட்டாஃபீல்டுகளைப் பயன்படுத்தலாம். தயாரிப்பு பூஸ்ட்களுக்கான மாற்றங்கள் அதே நாளில் தேடல் முடிவுகளைச் சென்றடைகின்றன.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Search & Discovery என்பதற்குச் செல்லவும்.
தயாரிப்பு பூஸ்ட்கள் பக்கத்திலிருந்து பல தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
மொத்தத் திருத்தியைத் திறக்க, மொத்தமாகத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒவ்வொரு தயாரிப்புக்கும் தயாரிப்பு பூஸ்ட்களைத் தேர்வுசெய்துவிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
Shopify Flow போன்ற பிற செயலிகளிலிருந்தும் மெட்டாஃபீல்டுகளைத் திருத்தலாம்.
“Search product boosts” மெட்டாஃபீல்டில் நீங்கள் செய்யும் மாற்றங்கள், Search & Discovery செயலியில் உள்ள தயாரிப்பு பூஸ்ட்களுடன் ஒத்திசைக்கப்படும்.
ஒருங்கிணைந்த பட்டியல்களைச் சரிசெய்தல்
உங்கள் Shopify Search & Discovery செயலியின் அமைப்புகள் பிரிவில், உங்கள் தேடல் முடிவுகளிலும் முன்கணிப்புத் தேடலிலும் ஒருங்கிணைந்த பட்டியல் தயாரிப்புகள் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். இயல்புநிலையாக, சேய் (child) தயாரிப்புகள் மட்டுமே காட்டப்படும். இருப்பினும், மூலத் (parent) தயாரிப்புகளை மட்டுமே காட்டுமாறு அல்லது மூல மற்றும் சேய் தயாரிப்புகள் இரண்டையுமே காட்டுமாறு நீங்கள் செயலியின் அமைப்புகளைப் புதுப்பிக்கலாம்.
இந்த அமைப்பை அணுக, உங்கள் ஸ்டோரில் ஒருங்கிணைந்த பட்டியல் தயாரிப்புகள் இருக்க வேண்டும் அல்லது Combined Listings செயலி நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Search & Discovery என்பதற்குச் செல்லவும்.
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புகள் பிரிவில், ஒருங்கிணைந்த பட்டியல்களின் தேடல் முடிவுகளுக்குப் பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
- ஒருங்கிணைந்த பட்டியல்களின் சைல்டு தயாரிப்புகளை மட்டும் காட்ட, சைல்டு தயாரிப்புகளை மட்டும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒருங்கிணைந்த பட்டியல்களின் பேரன்ட் தயாரிப்புகளை மட்டும் காட்ட, பேரன்ட் தயாரிப்புகளை மட்டும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒருங்கிணைந்த பட்டியல்களின் பேரன்ட் மற்றும் சைல்டு தயாரிப்புகள் இரண்டையும் காட்ட, இரண்டையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.