Shopify Search & Discovery மூலம் தயாரிப்புப் பரிந்துரைகளைத் தனிப்பயனாக்குங்கள்

சில தீம்களில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான பிரிவுகள், வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தயாரிப்புப் பக்கங்களிலுள்ள நிரப்புத் தயாரிப்புகள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளைக் காட்டும். இந்தப் பரிந்துரைகளை Shopify Search & Discovery செயலி மூலம் தனிப்பயனாக்கலாம்.

உங்கள் ஸ்டோரில் தயாரிப்புப் பரிந்துரைகள் காட்டப்பட, நிரப்புத் தயாரிப்புகளின் பிரிவு மற்றும் தயாரிப்புப் பரிந்துரைகளின் பிரிவு ஆகியவை அடங்கியுள்ள தீமை நீங்கள் பயன்படுத்தி, அந்தப் பிரிவை உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் சேர்க்க வேண்டும்.

தயாரிப்புப் பரிந்துரைக்கான தேவைகள்

பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே, பரிந்துரைக்கப்படும் ஒரு தயாரிப்பு தயாரிப்புப் பக்கத்தில் காட்டப்படும்:

  • அவை விற்றுத்தீர்ந்திருக்கக்கூடாது (தொடர்புடைய தயாரிப்புகளுக்கு, கையிருப்பில் இல்லாதபோது தொடர்ந்து விற்பனை செய் என்பது இயக்கத்தில் இருந்தால் அந்தத் தயாரிப்பு காட்டப்படலாம்; நிரப்புத் தயாரிப்புகளுக்கு, தயாரிப்பின் சரக்கு இருப்பு 0-க்கு மேல் இருக்க வேண்டும்).
  • அவை பட்டியலிடப்படாதது என்ற தயாரிப்பு நிலையைக் கொண்டிருக்கக்கூடாது.
  • அதன் விலை $0.00-ஐ விட அதிகமாக இருக்க வேண்டும்.
  • அது ஒரு கிஃப்ட் கார்டாக இருக்கக்கூடாது.
  • அது உங்கள் ஆன்லைன் ஸ்டோர் விற்பனைச் சேனலில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
  • அது தற்போது பார்வையாளரின் கார்ட்டில் இருக்கக்கூடாது.

தொடர்புடைய மற்றும் நிரப்புத் தயாரிப்புகள் ஆகிய இரண்டுக்குமே, தயாரிப்பு செயலில் உள்ளது என அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சரக்கு இருப்பு அளவு 0 ஆக இருந்து, ஆனால் கையிருப்பில் இல்லாதபோது தொடர்ந்து விற்பனை செய் என்பது இயக்கப்பட்டிருந்தால், அந்தத் தயாரிப்பு தொடர்புடைய தயாரிப்புகள் பட்டியலில் காட்டப்படலாம், ஆனால் நிரப்புத் தயாரிப்புகள் பட்டியலில் காட்டப்படாது. நிரப்புத் தயாரிப்புகள் காட்டப்படுவதற்கு, அதன் சரக்கு இருப்பு 0-க்கு மேல் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் தற்போது கிடைக்கக்கூடிய தயாரிப்புகளைக் கண்டறிந்து வாங்க இந்தத் தேவைகள் உதவுகின்றன.

நிரப்புத் தயாரிப்புகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தயாரிப்புடன் சேர்த்துப் பெரும்பாலும் வாங்கப்படும் தயாரிப்புகளே நிரப்புத் தயாரிப்புகளாகும். வாடிக்கையாளர்கள் புதிய தயாரிப்புகளைக் கண்டறிய உதவுவதற்கும் உங்கள் ஆன்லைன் ஸ்டோர் விற்பனையை அதிகரிப்பதற்கும், நிரப்புத் தயாரிப்புகளை நீங்கள் காட்டலாம்.

நிரப்புத் தயாரிப்புப் பரிந்துரைகளுக்கான சிறந்த நடைமுறைகள்

பொருத்தமான தயாரிப்புகளைப் பரிந்துரைப்பதன் மூலம் அதிக விற்பனை அல்லது பெரிய கார்ட் அளவுகளைப் பெற முடியும். நிரப்புத் தயாரிப்புப் பரிந்துரைகளைத் தேர்வுசெய்ய, பின்வரும் சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்தவும்:

  • வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நீங்கள் உறுதியாக நம்பும் தயாரிப்புப் பரிந்துரைகளைத் தேர்வுசெய்யவும்.
  • அசல் தயாரிப்புக்குச் சிறந்த ஆட்-ஆனாகக் கருதப்படும் தயாரிப்புகளைத் தேர்வுசெய்யவும்.
  • அசல் தயாரிப்பை விடக் குறைவான அல்லது அதற்கு இணையான செலவு கொண்ட தயாரிப்புகளைத் தேர்வுசெய்யவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தயாரிப்பை ஒத்திருக்கும் தயாரிப்புகளே, தொடர்புடைய தயாரிப்புகளாகும். வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பக்கூடிய பிற ஒத்த தயாரிப்புகளைக் கண்டறிய அவர்களுக்கு உதவ, பொருத்தமான மாற்றுத் தயாரிப்புகளை நீங்கள் காட்டலாம்.

தொடர்புடைய தயாரிப்புப் பரிந்துரைகளுக்கான சிறந்த நடைமுறைகள்

வாடிக்கையாளர் பொருத்தமான தயாரிப்புகளைக் கண்டறியும் வாய்ப்பை, நீங்கள் பரிந்துரைக்கும் தயாரிப்புகள் அதிகரிக்கலாம்; இதன்மூலம் விற்பனை அதிகரிக்கக் கூடும். உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான தயாரிப்புப் பரிந்துரை உத்தியை வடிவமைக்கும்போது, பின்வரும் சிறந்த நடைமுறைகளைக் கருத்தில் கொள்ளவும்:

  • வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நீங்கள் உறுதியாக நம்பும் தயாரிப்புப் பரிந்துரைகளைத் தேர்வுசெய்யவும்.
  • தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளுடன் தானாகவே உருவாக்கப்படும் தயாரிப்புப் பரிந்துரைகளையும் காட்ட அனுமதிக்கவும். ஏனெனில், உங்கள் தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் செயல்பாடுகளிலுள்ள மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில், தானாக உருவாக்கப்படும் பரிந்துரைகள் தங்களைச் சரிசெய்துகொள்ளும். உங்கள் தனிப்பயன் தயாரிப்புப் பரிந்துரைகள் விற்றுத்தீர்ந்தாலோ அல்லது வெளியிடப்படாமல் போனாலோ, பரிந்துரைகள் காட்டப்படுவதையும் இது உறுதிசெய்யும்.
  • உங்களுக்குத் தேவையான எண்ணிக்கையிலான தயாரிப்புப் பரிந்துரைகளை, உங்கள் தீம் அமைப்புகள் காட்டுகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

தானாக உருவாக்கப்படும் தயாரிப்புப் பரிந்துரைகள்

உங்கள் ஸ்டோரில் உள்ள ஒவ்வொரு தயாரிப்புக்கும் தொடர்புடைய தயாரிப்புப் பரிந்துரைகள் தானாகவே உருவாக்கப்படும். Search & Discovery செயலியில் ஒரு தயாரிப்புக்கான பரிந்துரைகளை நீங்கள் தனிப்பயனாக்கும்போது, உருவாக்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னோட்டத்தைப் பார்க்கலாம்.

பொதுவாக ஒன்றாக வாங்கப்படும் தயாரிப்புகள், ஒத்த தயாரிப்பு விளக்கம் கொண்ட தயாரிப்புகள் அல்லது தொடர்புடைய சேகரிப்புகளில் உள்ள தயாரிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தயாரிப்புப் பரிந்துரைகளைச் சரிசெய்வதற்கான உள்ளமைக்கப்பட்ட உத்திகளை Shopify கொண்டுள்ளது. ஒவ்வொரு உத்தியையும் பயன்படுத்த அதற்கென பிரத்யேகத் தேவைகள் உள்ளன:

  • கொள்முதல் வரலாறு: வாங்கும் நடத்தையை மதிப்பிடுவதற்கு, தயாரிப்பின் முந்தைய விற்பனை விவரங்கள் தேவை.
  • தயாரிப்பு விளக்கம்: ஆங்கில ஸ்டோர்ஃபிரண்டைக் கொண்ட வணிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
  • தொடர்புடைய சேகரிப்புகள்: கொள்முதல் வரலாறு மற்றும் தயாரிப்பு விளக்கங்களின் அடிப்படையிலான பரிந்துரைகள் கிடைக்காதபோது இது பயன்படுத்தப்படும்.

உருவாக்கப்பட்ட தயாரிப்புப் பரிந்துரைகளைத் திருத்த முடியாது, ஆனால் கைமுறையாக உங்கள் சொந்தப் பரிந்துரைகளைச் சேர்க்கலாம்.

ஒரு தயாரிப்புக்காக உருவாக்கப்பட்ட பரிந்துரைகள் அடிக்கடி மாறும். வாங்குபவர்களுக்கு மிகவும் பொருத்தமான புதிய தயாரிப்புகளை Shopify பரிந்துரைப்பதால், நீங்கள் தயாரிப்புப் பக்கத்தை மீண்டும் பார்வையிடும்போது வெவ்வேறு பரிந்துரைகள் காட்டப்படுவது வழக்கமே. இதனால்தான் Search & Discovery செயலியில் முன்னோட்டமாகக் காட்டப்படும் தயாரிப்புப் பரிந்துரைகள், ஸ்டோர்ஃபிரண்டில் இருப்பதை விடப் பெரும்பாலும் வேறுபட்டதாக இருக்கும்.

பரிந்துரைகளில் ஒருங்கிணைந்த பட்டியல்களைச் சரிசெய்தல்

Shopify Search and Discovery செயலியின் அமைப்புகள் பிரிவில், தானாக உருவாக்கப்படும் பரிந்துரைகளில் ஒருங்கிணைந்த பட்டியல்கள் எவ்வாறு காட்டப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். இயல்பாக, சைல்டு தயாரிப்புகள் மட்டுமே காட்டப்படும். இருப்பினும், பேரன்ட் தயாரிப்புகளை மட்டுமோ அல்லது பேரன்ட் மற்றும் சைல்டு தயாரிப்புகள் ஆகிய இரண்டையுமோ காட்டும்படி செயலி அமைப்புகளை நீங்கள் புதுப்பிக்கலாம்.

இந்த அமைப்பைப் பயன்படுத்த, உங்கள் ஸ்டோரில் ஒருங்கிணைந்த பட்டியல் தயாரிப்புகள் இருக்க வேண்டும் அல்லது Combined Listings செயலி நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Search & Discovery பகுதிக்குச் செல்லவும்.

  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தயாரிப்புகள் பிரிவில், ஒருங்கிணைந்த பட்டியல்களுக்கான தானாக உருவாக்கப்படும் தயாரிப்புப் பரிந்துரைகளுக்குப் பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:

    • ஒருங்கிணைந்த பட்டியல்களின் சைல்டு தயாரிப்புகளை மட்டுமே காட்ட, சைல்டு தயாரிப்புகளை மட்டும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஒருங்கிணைந்த பட்டியல்களின் பேரன்ட் தயாரிப்புகளை மட்டுமே காட்ட, பேரன்ட் தயாரிப்புகளை மட்டும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஒருங்கிணைந்த பட்டியல்களின் பேரன்ட் மற்றும் சைல்டு தயாரிப்புகள் இரண்டையும் காட்ட, இரண்டையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தயாரிப்புப் பரிந்துரைகளை உருவாக்கு

உங்கள் தயாரிப்புப் பக்கத்தில் காட்டப்படும் தயாரிப்புப் பரிந்துரைகளைத் தனிப்பயனாக்குங்கள்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Search & Discovery பகுதிக்குச் செல்லவும்.

  2. தயாரிப்புப் பரிந்துரைகள் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் பரிந்துரைகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் தயாரிப்புப் பரிந்துரைகளைத் தனிப்பயனாக்க விரும்பும் தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. 10 நிரப்புத் தயாரிப்புகள் வரை தேர்ந்தெடுக்கவும்.

  5. பரிந்துரைக்க 10 தொடர்புடைய தயாரிப்புகள் வரை தேர்ந்தெடுக்கவும். தனிப்பயன் பரிந்துரைகளை மட்டும் காட்ட அல்லது தனிப்பயன் பரிந்துரைகள் மற்றும் தானாக உருவாக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகிய இரண்டையும் காட்ட தயாரிப்பை அமைக்கவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு தயாரிப்புக்காகத் தானாக உருவாக்கப்படும் பரிந்துரைகளை மறைத்தல்

தனிப்பட்ட தயாரிப்புகளுக்குத் தானாக உருவாக்கப்படும் தயாரிப்புப் பரிந்துரைகளை மறைக்க நீங்கள் தேர்வுசெய்யலாம். இந்த அமைப்பை ஒவ்வொரு தயாரிப்புக்கும் தனித்தனியாக உள்ளமைக்க வேண்டும்.

மெட்டாஃபீல்டுகள் மூலம் தயாரிப்புப் பரிந்துரைகளை மொத்தமாகத் திருத்து

தயாரிப்புப் பரிந்துரைகளைத் திருத்த நீங்கள் மெட்டாஃபீல்டுகளைப் பயன்படுத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Search & Discovery பகுதிக்குச் செல்லவும்.

  2. பரிந்துரைகள் பக்கத்திலிருந்து பல தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. மொத்தத் திருத்தியைத் திறக்க, மொத்தமாகத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஒவ்வொரு தயாரிப்புக்குமான தயாரிப்புப் பரிந்துரைகளைத் தேர்வுசெய்து சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Shopify Flow போன்ற பிற செயலிகளிலிருந்தும் நீங்கள் மெட்டாஃபீல்டுகளைத் திருத்தலாம்.

பின்வரும் Shopify தரநிலை மெட்டாஃபீல்டுகளில் செய்யப்படும் திருத்தங்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் பார்வையாளர்களுக்குக் காட்டப்படும் தயாரிப்புப் பரிந்துரைகளை மாற்றும். மெட்டாஃபீல்டுகளில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் Search & Discovery செயலியுடன் ஒத்திசைக்கப்படும்.

நீங்கள் திருத்தினால், உங்கள் ஸ்டோரில் உள்ள தயாரிப்புப் பரிந்துரைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் Shopify தரநிலை மெட்டாஃபீல்டுகளின் பட்டியல்.
பெயர்விவரம்
தொடர்புடைய தயாரிப்புகள்

நீங்கள் மேனுவலாகத் தேர்ந்தெடுக்கும் தொடர்புடைய தயாரிப்புகளின் பரிந்துரைப் பட்டியல். இந்தப் பட்டியலில் Shopify-ஆல் உருவாக்கப்பட்ட பரிந்துரைகள் சேர்க்கப்படாது.

தொடர்புடைய தயாரிப்புகள் அமைப்புகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புப் பரிந்துரைகள் எப்படிக் காட்டப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்துகிறது. ஏற்கப்பட்ட மதிப்புகள்:

  • only manual: தேர்ந்தெடுக்கப்பட்ட பரிந்துரைகளை மட்டும் காட்டும்
  • ahead: தானாக உருவாக்கப்படும் தயாரிப்புப் பரிந்துரைகளுக்கு முன்னதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளைக் காட்டும்
நிரப்புத் தயாரிப்புகள்

நீங்கள் மேனுவலாகத் தேர்ந்தெடுக்கும் நிரப்புத் தயாரிப்புப் பரிந்துரைகளின் பட்டியல்.

நிரப்புத் தயாரிப்புகள்

தீம் எடிட்டரில் உள்ள உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் நீங்கள் நிரப்புத் தயாரிப்புகள் பிளாக்கைச் சேர்க்கலாம். உங்கள் வலைத்தளத்தின் தயாரிப்புப் பக்கங்களுக்காக நிரப்புத் தயாரிப்புகளைத் தேர்வுசெய்ய Shopify Search & Discovery செயலியை எப்படிப் பயன்படுத்துவது என அறிந்துகொள்ளுங்கள்.

வாடிக்கையாளர்களுக்கு நிரப்புத் தயாரிப்புகளைக் காட்டுவது, அவர்கள் புதிய தயாரிப்புகளைக் கண்டறிவதை எளிதாக்குகிறது, மேலும் ஆன்லைன் ஸ்டோர் விற்பனையை அதிகரிக்கவும் உதவலாம்.

நிரப்புத் தயாரிப்புகள் பிளாக்கின் தலைப்பு மற்றும் தளவமைப்பு ஆகியவை உங்கள் தீம் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.

நிரப்புத் தயாரிப்புகளின் தோற்றத்தைத் தனிப்பயனாக்குதல்

நிரப்புத் தயாரிப்புகள் என்பது உங்கள் தயாரிப்புப் பக்கங்களின் தயாரிப்புத் தகவல் பிரிவில் உள்ள ஒரு பிளாக் ஆகும், இது இணக்கமான தீம்களில் மட்டுமே கிடைக்கும். உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் இருந்து உங்களின் நிரப்புத் தயாரிப்புகள் பிளாக்கின் தோற்றத்தை நீங்கள் தனிப்பயனாக்கலாம். ஒரு தயாரிப்புப் பக்கத்தில் நீங்கள் ஒரேயொரு நிரப்புத் தயாரிப்புகள் பிளாக்கை மட்டுமே வைத்திருக்க முடியும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தயாரிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. இயல்புநிலைத் தயாரிப்பு அல்லது நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்பு வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. பின்வரும் படிகளில் ஒன்றைப் பின்பற்றவும்:

  • உங்கள் தயாரிப்புத் தகவல் பிரிவில் ஒரு நிரப்புத் தயாரிப்புகள் பிளாக் இருந்தால், நிரப்புத் தயாரிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் தயாரிப்புத் தகவல் பிரிவில் நிரப்புத் தயாரிப்புகள் பிளாக் இல்லை என்றால், + பிளாக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, நிரப்புத் தயாரிப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  1. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, கிடைமட்ட மெனு பொத்தானைத் தட்டவும்.
  2. விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
  3. தீம்களை நிர்வகி என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.
  5. வார்ப்புருக்கள் என்பதைத் தட்டவும்.
  6. தயாரிப்புகள் என்பதைத் தட்டவும்.
  7. இயல்புநிலைத் தயாரிப்பு அல்லது நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்பு வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. பின்வரும் படிகளில் ஒன்றைப் பின்பற்றவும்:
  • உங்கள் தயாரிப்புத் தகவல் பிரிவில் ஒரு நிரப்புத் தயாரிப்புகள் பிளாக் இருந்தால், நிரப்புத் தயாரிப்புகள் என்பதைத் தட்டவும்.
  • உங்கள் தயாரிப்புத் தகவல் பிரிவில் நிரப்புத் தயாரிப்புகள் பிளாக் இல்லை என்றால், + பிளாக்கைச் சேர் என்பதைத் தட்டி, நிரப்புத் தயாரிப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  1. சேமி என்பதைத் தட்டவும்.

கண் ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் நிரப்புத் தயாரிப்புகள் பிளாக்கை நீங்கள் மறைக்கலாம். உங்கள் தீமிலிருந்து பிளாக்கை முழுவதுமாக அகற்ற விரும்பினால், நீங்கள் பிளாக்கை நீக்கலாம்.

நிரப்புத் தயாரிப்புகள் பிளாக் அமைப்புகள்

உங்களின் நிரப்புத் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு எப்படிக் காட்டப்படுகின்றன என்பதை நீங்கள் தனிப்பயனாக்கலாம்.

அடிப்படைக் காட்சி அமைப்பு

Shopify-ல் நிரப்புத் தயாரிப்புகள் பிளாக் அமைப்புகளுக்கான அடிப்படைக் காட்சி அமைப்புகள்.
அமைப்புவிவரம்
தலைப்புபிளாக்கின் தலைப்பு.
சுருக்கக்கூடிய வரிசையாகக் காட்டுதேர்ந்தெடுக்கப்பட்டால், உள்ளடக்கம் ஒரு வரிசைத் தாவலின் கீழ் சுருக்கப்பட்டு காட்டப்படும். வாடிக்கையாளர் தலைப்பைக் கிளிக் செய்யும்போது, கூடுதல் உள்ளடக்கத்தைக் காட்ட தாவல் விரிவடையும்.
ஐகான்நிரப்புத் தயாரிப்புகள் சுருக்கக்கூடிய வரிசையாகக் காட்டப்படும்போது உங்கள் தலைப்புடன் இணைக்க ஒரு ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.

தயாரிப்புக் காட்சி உள்ளமைவு

நிரப்புத் தயாரிப்புகளின் தொகுதியில் தயாரிப்புகளைக் காட்டுவதற்கான உள்ளமைவு.
அமைப்புவிவரம்
காட்ட வேண்டிய அதிகபட்சத் தயாரிப்புகள்காட்ட வேண்டிய அதிகபட்ச நிரப்புத் தயாரிப்புகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்கவும். 1 முதல் 10 வரையிலான ஒரு மதிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒரு பக்கத்துக்கான தயாரிப்புகளின் எண்ணிக்கைஸ்லைடர் பக்கத்துக்கு நீங்கள் காட்ட விரும்பும் நிரப்புத் தயாரிப்புகளின் எண்ணிக்கை. 1 முதல் 4 வரையிலான ஒரு மதிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
பக்கமாக்கத்தின் ஸ்டைல்

படங்களுக்குக் கீழே காட்டப்படும் ஸ்லைடர் வழிசெலுத்தலின் ஸ்டைல்.

  • புள்ளிகள்
  • கவுண்டர் (இயல்புநிலை)
  • எண்கள்
பட விகிதம்

தயாரிப்புக் கார்டு படங்களின் தோற்ற விகிதத்தைத் தீர்மானிக்கிறது.

  • போர்ட்ரெய்ட்
  • சதுரம் (இயல்புநிலை)

கூடுதல் செயல்பாடுகள்

நிரப்புத் தயாரிப்புகளின் தொகுதியில் உள்ள கூடுதல் செயல்பாடுகளுக்கான அமைப்புகள்.
அமைப்புவிவரம்
விரைவாகச் சேர்ப்பதற்கான பொத்தானை இயக்கு

"விரைவாகச் சேர்" பொத்தான் மூலம், வாடிக்கையாளர்கள் தயாரிப்புக் கார்டில் இருந்தே கார்ட்டில் தயாரிப்பைச் சேர்க்கலாம். தயாரிப்புக்கு மாறுபாடுகள் இருந்தால், பொத்தானில் விருப்பங்களைத் தேர்ந்தெடு என இருக்கும் மற்றும் பாப்-அப்பில் தயாரிப்பு விவரங்களைக் காண்பிக்கும். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மாறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து கார்ட்டில் சேர்க்கலாம், இப்போதே வாங்குங்கள் விருப்பத்தின் மூலம் உடனடியாகச் செக்அவுட் செய்யலாம் அல்லது தயாரிப்பின் முழு விவரங்களைக் காண கிளிக் செய்யலாம். விரைவாகச் சேர்க்கும் விருப்பங்களில் காட்டப்படுவதற்கு, இப்போதே வாங்குங்கள் விருப்பம் தயாரிப்புப் பக்கத்திலிருந்து தனியாக அமைக்கப்பட வேண்டும். இப்போதே வாங்குங்கள் விருப்பம் அமைக்கப்படாதபோதும், வாடிக்கையாளர்கள் தங்கள் கார்ட்டில் தயாரிப்பைச் சேர்க்க முடியும்.