குறிப்பிட்ட சந்தைகளுக்காகத் தீம்களை மாற்றியமைத்தல்
குறைந்தபட்சம் ஒரு சந்தையையாவது நீங்கள் உருவாக்கியிருந்தால், உங்களின் வெவ்வேறு சந்தைகளுக்காக உங்கள் தீமை மாற்றியமைக்கலாம். குறிப்பிட்ட சந்தைகளுக்காக உங்கள் தீமை மாற்றியமைப்பது, அந்தச் சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை உருவாக்க உதவுகிறது. உதாரணத்திற்கு, நீங்கள் பின்வரும் தனிப்பயனாக்கங்களைச் செய்யலாம்:
- வெவ்வேறு சந்தைகளுக்காக உங்கள் முகப்புப் பக்கத்தில் வெவ்வேறு தொகுப்புகளை முன்னிலைப்படுத்தலாம்
- குறிப்பிட்ட சந்தைக்காகத் தயாரிப்புப் பக்கங்களில் விற்பனையை விளம்பரப்படுத்தலாம்
- குறிப்பிட்ட சந்தைகளுக்குப் பொருத்தமான தகவல்களை உங்கள் ஸ்டோரில் சேர்க்கலாம்
இந்தப் பக்கத்தில்
சந்தைகளுக்காகத் தீம்களைத் தனிப்பயனாக்குதல்
ஒரு தீமைத் தனிப்பயனாக்கும்போது, உங்கள் ஸ்டோரின் இயல்புநிலையைத் திருத்த வேண்டுமா அல்லது குறிப்பிட்ட ஒரு சந்தையைத் திருத்த வேண்டுமா என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

குறிப்பிட்ட சந்தைகளுக்கான எந்தத் தனிப்பயனாக்கங்களும் இன்றி, உங்கள் தீமின் நிலையான தோற்றமாக ஸ்டோரின் இயல்புநிலை இருக்கும். உங்கள் தீமின் இயல்புநிலைத் தளவமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை மற்ற சந்தைகளுக்குப் பெறலாம் அல்லது மேலெழுதலாம். ஸ்டோரின் இயல்புநிலையில் செய்யப்படும் மாற்றங்கள் மேலெழுதப்படாவிட்டால், அவை அனைத்துச் சந்தைகளுக்கும் பொருந்தும்.
சந்தைகளுக்கான கீழ்தோன்றும் மெனுவிலிருந்து எந்தச் சந்தையைத் திருத்த வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் ஏற்கனவே உங்கள் தீமைத் தனிப்பயனாக்கியுள்ள சந்தைகள் முதலில் காட்டப்படும். அதைத் தொடர்ந்து, மேலும் தனிப்பயனாக்கக்கூடிய சந்தைகள் பிரிவில் நீங்கள் இதுவரை தனிப்பயனாக்காத சந்தைகள் காட்டப்படும்.
ஸ்டோரின் இயல்புநிலையில் நீங்கள் தீம் அமைப்பைத் தனிப்பயனாக்கும்போது, குறிப்பிட்ட சந்தையில் அந்த அமைப்பு ஏற்கனவே தனிப்பயனாக்கப்பட்டிருந்தாலன்றி, அந்த மாற்றம் உங்கள் அனைத்துச் சந்தைகளுக்கும் பொருந்தும். பின்வரும் வரிசையில் உங்கள் தீம் அமைப்புகளுக்கு மாற்றங்கள் பயன்படுத்தப்படும்:
- ஸ்டோரின் இயல்புநிலை: ஸ்டோரின் இயல்புநிலைத் தீம் அமைப்பைத் தனிப்பயனாக்குவது, சந்தை அல்லது துணைச் சந்தைக்காக அந்த அமைப்பு ஏற்கனவே தனிப்பயனாக்கப்பட்டிருந்தாலன்றி, உங்களின் அனைத்துச் சந்தைகள் மற்றும் துணைச் சந்தைகளுக்கான உங்கள் தீமைப் பாதிக்கும்.
- சந்தை: ஒரு சந்தைக்கான தீம் அமைப்பைத் தனிப்பயனாக்குவது, துணைச் சந்தைக்காக அந்த அமைப்பு ஏற்கனவே தனிப்பயனாக்கப்பட்டிருந்தாலன்றி, சந்தைக்கும் அந்தச் சந்தையின் அனைத்துத் துணைச் சந்தைகளுக்கும் உங்கள் தீமைப் பாதிக்கும்.
- துணைச் சந்தை: துணைச் சந்தைக்கான தீம் அமைப்பைத் தனிப்பயனாக்குவது, அந்தத் துணைச் சந்தையை மட்டுமே பாதிக்கும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமிற்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
சந்தைகள் மெனுவைத் திறக்க, ஸ்டோரின் இயல்புநிலை என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் சந்தையைத் தேர்ந்தெடுக்கவும்.
அந்தச் சந்தைக்கான பிரிவுகள் அல்லது பிளாக்குகளில் உங்களுக்கு விருப்பமான தனிப்பயனாக்கங்களைச் செய்யவும் அல்லது புதிய பிரிவுகள் அல்லது பிளாக்குகளைச் சேர்க்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
சந்தைக்கான தீம் தனிப்பயனாக்கங்களை மீட்டமைத்தல்
ஒரு குறிப்பிட்ட சந்தைக்காக உங்கள் தீமில் நீங்கள் செய்யும் எந்தவொரு தனிப்பயனாக்கத்தையும் ஸ்டோரின் இயல்புநிலைக்கு மீட்டமைக்கலாம்.
| மீட்டமைப்பின் வகை | விளக்கம் | படிகள் |
|---|---|---|
| தனிப்பட்ட அமைப்பு | ஒரு சந்தையில் உள்ள மேலெழுதப்பட்ட அமைப்பை மீட்டமைக்கும்போது, மூலச் சந்தையிலிருந்து மரபுரிமையாகப் பெற்ற அமைப்புகளுக்கே அந்த அமைப்புத் திரும்பும். | தீம் எடிட்டரில், அமைப்பின் தலைப்புக்கு அடுத்துள்ள மீட்டமைப் பொத்தானைக் கிளிக் செய்யவும். |
| பிரிவு அல்லது பிளாக் | ஒரு சந்தையில் முழுப் பிரிவையோ பிளாக்கையோ மீட்டமைக்கும்போது, பிளாக்குகளின் வரிசை உட்பட அந்தப் பிரிவுக்கு அல்லது பிளாக்குக்குரிய அனைத்து அமைப்புகளும் மூலச் சந்தையிலிருந்து மரபுரிமையாகப் பெற்ற அமைப்புகளுக்கே திரும்பும். | தீம் எடிட்டரில், பிரிவு அல்லது பிளாக்கின் தலைப்புக்கு அடுத்துள்ள |
| வார்ப்புரு அல்லது பிரிவுக் குழு | ஒரு சந்தையில் முழு வார்ப்புருவையோ பிரிவுக் குழுவையோ மீட்டமைக்கும்போது, பிரிவுகள் மற்றும் பிளாக்குகளின் வரிசை உட்பட அந்த வார்ப்புரு அல்லது பிரிவுக் குழுவுக்குரிய அனைத்து அமைப்புகளும் மூலச் சந்தையிலிருந்து மரபுரிமையாகப் பெற்ற அமைப்புகளுக்கே திரும்பும். | தீம் எடிட்டரில், வார்ப்புரு அல்லது பிரிவுக் குழுவின் தலைப்புக்கு அடுத்துள்ள மீட்டமைப் பொத்தானைக் கிளிக் செய்யவும். |
| சந்தைக்கான அனைத்துத் தீம் தனிப்பயனாக்கங்களும் | ஒரு சந்தைக்கான உங்களின் அனைத்துத் தனிப்பயனாக்கங்களையும் நீக்கும்போது, பிரிவுகள் மற்றும் பிளாக்குகளின் வரிசை உட்பட அதிலுள்ள அனைத்து அமைப்புகளும் மூலச் சந்தையிலிருந்து மரபுரிமையாகப் பெற்ற அமைப்புகளுக்கே திரும்பும். | உங்கள் சந்தைகள் பக்கத்தில், நீங்கள் மீட்டமைக்க விரும்பும் சந்தையைக் கிளிக் செய்யவும். தனிப்பயனாக்கப்பட்டது பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதற்கு அடுத்துள்ள நீக்கு ஐகானைக் கிளிக் செய்யவும். |
தீம் மரபுரிமையை மாற்றுதல்
உப சந்தைக்காக உங்கள் தீமைத் தனிப்பயனாக்கும்போது, அந்தத் தனிப்பயனாக்கங்கள் எந்தச் சந்தையிலிருந்து மரபுரிமையாகப் பெறப்பட வேண்டும் என்பதை நீங்கள் மாற்றலாம். இது மரபுரிமை மூலத்தை மாற்றுதல் எனக் குறிப்பிடப்படுகிறது. ஒரு தீமுக்கான மரபுரிமை மூலத்தை மாற்றும்போது, பின்வரும் விருப்பத்தேர்வுகள் கிடைக்கும்:
- ஸ்டோரின் இயல்புநிலை (
@default) - ஏற்கனவே தீம் தனிப்பயனாக்கப்பட்டுள்ள ஏதேனும் மூலச் சந்தை
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து,
என்பதைக் கிளிக் செய்து, பின்னர் குறியீட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
markets.jsonகோப்பைத் திறக்கவும்.சந்தை மரபுரிமையைக் கட்டுப்படுத்தும் குறியீட்டின் பிரிவைக் கண்டறியவும்.
எந்தச் சந்தைக்கான மரபுரிமை மூலத்தை நீங்கள் திருத்த விரும்புகிறீர்களோ அதைக் கண்டறிந்து, அது எந்தச் சந்தையின் மதிப்பிலிருந்து மரபுரிமையாகப் பெற வேண்டுமோ அந்த சந்தை மதிப்பைக் கொண்டு
"parent":மதிப்பை மாற்றவும்.சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் கனடா சந்தைக்குத் தீம் தனிப்பயனாக்கங்களைச் செய்கிறீர்கள். அந்த மாற்றங்கள் தற்போது உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை.

வட அமெரிக்கா சந்தைக்காக உங்கள் தீமைத் தனிப்பயனாக்க நீங்கள் முடிவுசெய்தால், இயல்புநிலையாக கனடா சந்தையானது வட அமெரிக்கா சந்தையிலிருந்து மரபுரிமையாகப் பெறப்படும் வகையில் புதுப்பிக்கப்படும். மேலும், வட அமெரிக்கா சந்தைக்காக நீங்கள் செய்யும் எந்தவொரு தீம் தனிப்பயனாக்கங்களும் கனடா சந்தைக்கும் தானாகவே பயன்படுத்தப்படும்.

நீங்கள் விரும்பினால், கனடாவிற்கான உங்கள் தனிப்பயனாக்கங்களை ஸ்டோரின் இயல்புநிலையிலிருந்து மரபுரிமையாகப் பெறுவதற்கு மாற்றியமைக்கலாம்.
