எங்களைப் பற்றி பக்கம்

உங்கள் வணிகத்தின் கதையைக் கூறவும், வாடிக்கையாளர்களை உங்கள் பிராண்டோடு இணைக்கவும் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் "எங்களைப் பற்றி" பக்கத்தைச் சேர்க்கலாம். உங்கள் "எங்களைப் பற்றி" பக்கத்திற்கான தலைப்பு அல்லது உள்ளடக்கத்தை எழுத உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உள்ளடக்கத்தைத் தானாகவே உருவாக்க Sidekick-ஐப் பயன்படுத்தலாம்.

உங்கள் 'எங்களைப் பற்றி' பக்கத்தின் இலக்குகளைத் தீர்மானியுங்கள்

"எங்களைப் பற்றி" பக்கத்தை எழுதும்போது, பின்வரும் இலக்குகளைக் கருத்தில் கொள்ளுங்கள்:

  • ஊக்கமளிக்கும் வகையில் எழுதுங்கள் - வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் பக்கத்தைப் படித்த பிறகு அவர்கள் எப்படி உணர வேண்டும் என்பதைச் சிந்தியுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் தயாரிப்புகளைப் பற்றி மேலும் அறிய, வாடிக்கையாளர்களை உங்கள் அஞ்சல் பட்டியலில் சேரத் தூண்டலாம்.
  • நம்பகத்தன்மையாக இருங்கள் - உங்கள் வணிகத்தின் கதையைச் சொல்ல தனித்துவமான, நேர்மையான அணுகுமுறையைப் பயன்படுத்தவும். உங்கள் வணிகத்தை வழிநடத்தும் மதிப்புகள், அதன் வளர்ச்சி மற்றும் சவால்கள் குறித்த கதை, உங்கள் வணிகத்தின் இலக்குகள் போன்றவற்றைப் பற்றி எழுதுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, ஒரு தயாரிப்பின் தேவையை அறிந்துகொள்ள உங்கள் சொந்த அனுபவம் எவ்வாறு உதவியது என்ற கதையைச் சொல்லலாம். உண்மையாக எழுதுவதில் சிரமம் இருந்தால், உங்கள் பேச்சைப் பதிவுசெய்து அதை முதல் வரைவாக நகலெடுத்து எழுத முயலவும்.
  • ஈர்க்கும் வகையில் இருங்கள் - உரைக்கு இடையே படங்களையோ வீடியோக்களையோ பயன்படுத்தி, உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் வணிகத்துடன் தங்களை இணைத்து உணர உதவுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் குழுவின் புகைப்படங்கள் அல்லது பழைய வாடிக்கையாளர்களின் வீடியோ சான்றுகளைச் சேர்க்கலாம்.

உங்கள் 'எங்களைப் பற்றி' பக்கத்தில் சேர்க்க வேண்டிய தகவல்கள்

உங்கள் "எங்களைப் பற்றி" பக்கத்தை எழுதும்போது, வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் உங்கள் வணிகம், தயாரிப்புகள் அல்லது வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களைச் சேர்க்க வேண்டும். உங்கள் "எங்களைப் பற்றி" பக்கத்தில் பின்வரும் எடுத்துக்காட்டுகள் பொருத்தமாக இருக்குமா எனப் பரிசீலிக்கவும்:

  • நீங்கள் எதை விற்கிறீர்கள் - உங்கள் தயாரிப்புகளைத் தனித்துவமாக்கும் விஷயங்கள்
  • அதை ஏன் விற்கிறீர்கள் - உங்கள் நிறுவனத்தின் நோக்கம் அல்லது மதிப்புகள்
  • நீங்கள் யார் - உங்கள் நிறுவனம், உங்கள் நிறுவனர் அல்லது தயாரிப்பாளர்கள்
  • யாருக்கு விற்கிறீர்கள் - வாடிக்கையாளர் சேவை அல்லது வாடிக்கையாளர் திருப்திக்கான உங்களின் அணுகுமுறை
  • உங்கள் வணிகத்தை வேறுபடுத்திக் காட்டுவது எது - குறிப்பிட்ட நிபுணத்துவம், வாடிக்கையாளர் சான்றுகள் அல்லது கூடுதல் சேவைகள்

பக்கத்தின் இலக்குக்குப் பொருந்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட கோரிக்கையை வாடிக்கையாளர்களிடம் முன்வைக்க மறக்காதீர்கள் (இது 'செயலுக்கான அழைப்பு' என அழைக்கப்படும்). எடுத்துக்காட்டாக, உங்கள் "எங்களைப் பற்றி" பக்கத்தில் செய்திமடல் பதிவுப் படிவம் அல்லது சமூக ஊடகப் பின்தொடரல் பொத்தான்களைச் சேர்க்கலாம்.

உங்கள் Shopify ஆன்லைன் ஸ்டோரில் 'எங்களைப் பற்றி' பக்கத்தைச் சேர்க்கவும்

நீங்கள் தயாரானதும், உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் "எங்களைப் பற்றி" பக்கத்தைச் சேர்க்கலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் > பக்கங்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. பக்கத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பக்கத்திற்கான தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை உள்ளிடவும். பக்கத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது விவரமாகவும் தெளிவாகவும் இருப்பதை உறுதிசெய்யவும். உலாவித் தாவலிலோ தலைப்புப் பட்டியிலோ, தேடுபொறி முடிவுகளிலோ உங்கள் பக்கத் தலைப்பு காட்டப்படும்.

  4. பார்வைநிலை பிரிவில், பக்கத்தை வெளியிட வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  • பக்கத்தை உருவாக்க, புலப்படும் என்பதைத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலேயே வைக்கவும். இயல்புநிலையாக, நீங்கள் சேமி என்பதைக் கிளிக் செய்ததும் புதிய பக்கம் புலப்படும்.
  • ஆன்லைன் ஸ்டோரில் இருந்து பக்கத்தை மறைக்க, மறைக்கப்பட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • விருப்பத்தேர்வு: மறைக்கப்பட்ட பக்கத்திற்கான ஒரு குறிப்பிட்ட வெளியீட்டுத் தேதியை அமைக்க, காலண்டர் ஐகானைக் கிளிக் செய்து உங்கள் பக்கம் எப்போது வெளியிடப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தலாம்.
  1. உள்ளடக்கம் பிரிவில், உங்கள் பக்களுக்கான உள்ளடக்கத்தைச் சேர்க்கவும்.
  2. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, மெனு ஐகானைத் தட்டவும்.

  2. விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.

  3. பக்கங்கள் என்பதைத் தட்டவும்.

  4. பக்கத்தைச் சேர் என்பதைத் தட்டவும்.

  5. பக்கத்திற்கான தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை உள்ளிடவும். பக்கத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது விவரமாகவும் தெளிவாகவும் இருப்பதை உறுதிசெய்யவும். உலாவித் தாவலிலோ தலைப்புப் பட்டியிலோ, தேடுபொறி முடிவுகளிலோ உங்கள் பக்கத் தலைப்பு காட்டப்படும்.

  6. பார்வைநிலை பிரிவில், பக்கத்தை வெளியிட வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  • பக்கத்தை உருவாக்க, புலப்படும் என்பதைத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலேயே வைக்கவும். இயல்புநிலையாக, நீங்கள் சேமி என்பதைக் கிளிக் செய்ததும் புதிய பக்கம் புலப்படும்.
  • ஆன்லைன் ஸ்டோரில் இருந்து பக்கத்தை மறைக்க, மறைக்கப்பட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • விருப்பத்தேர்வு: மறைக்கப்பட்ட பக்கத்திற்கான ஒரு குறிப்பிட்ட வெளியீட்டுத் தேதியை அமைக்க, காலண்டர் ஐகானைக் கிளிக் செய்து உங்கள் பக்கம் எப்போது வெளியிடப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தலாம்.
  1. உள்ளடக்கம் பிரிவில், உங்கள் பக்களுக்கான உள்ளடக்கத்தைச் சேர்க்கவும்.
  2. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

உங்கள் "எங்களைப் பற்றி" பக்கத்தை உருவாக்கிய பிறகு, உங்கள் ஸ்டோர் மெனுவில் அதைக் காட்ட உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மெனுக்களில் அதற்கான இணைப்பைச் சேர்க்க வேண்டும்.