உங்கள் ஸ்டோரில் 'எங்களைத் தொடர்புகொள்க' பக்கத்தைச் சேர்க்கவும்

வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகள், கொள்கைகள் அல்லது அவர்களது ஆர்டர்கள் தொடர்பான கேள்விகளுடன் உங்களைத் தொடர்புகொள்ள உதவ, உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் தொடர்புகொள்வதற்கான பக்கத்தைச் சேர்க்கலாம். அனைத்து Shopify தீம்களிலும் நீங்கள் உருவாக்கும் பக்கங்களில் பயன்படுத்துவதற்கான உள்ளமைக்கப்பட்ட தொடர்புப் படிவம் உள்ளது.

தொடர்புகொள்வதற்கான பக்கத்தை உருவாக்குங்கள்

page.contact வார்ப்புருவுடன் ஒரு புதிய பக்கத்தை உருவாக்குவதன் மூலம் தொடர்புப் படிவத்தைச் சேர்க்கிறீர்கள். பதிலளிப்பதற்கான காலவரிசைகள் அல்லது உங்கள் பிராண்ட் பற்றிய தகவல்கள் போன்ற தகவல்களைத் தொடர்புப் படிவத்திற்கு மேலே காட்ட விரும்பினால், உரை, படங்கள் அல்லது வீடியோக்களைச் சேர்க்க ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்தவும்.

உள்ளடக்கம் பெட்டியில் பின்வரும் தகவலையும் நீங்கள் சேர்க்க விரும்பலாம்:

  • "உங்களை விரைவில் தொடர்புகொள்வோம்" என்பது போன்ற ஒரு சிறிய செய்தி
  • உங்களிடம் சில்லறை விற்பனை இருப்பிடம் இருந்தால், உங்கள் நேரடி ஸ்டோர்ஃபிரண்டின் படத்துடன் உங்கள் ஸ்டோரின் முகவரி
  • வாடிக்கையாளர்கள் உங்களை ஃபோன் மூலம் தொடர்புகொள்ள நீங்கள் விரும்பினால், உங்கள் ஃபோன் எண்

வேறு எந்த உள்ளடக்கத்தையும் சேர்க்காமல் தொடர்புகொள்வதற்கான பக்கத்தை உருவாக்கினால், வாடிக்கையாளர்களுக்குத் தொடர்புப் படிவம் மட்டுமே காண்பிக்கப்படும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் > பக்கங்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. பக்கத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தலைப்பு பெட்டியில், உங்கள் தொடர்புப் பக்கத்திற்கு எங்களைத் தொடர்புகொள்க அல்லது தொடர்புகொள்ள போன்ற ஒரு தலைப்பை உள்ளிடவும்.

  4. உள்ளடக்கம் பெட்டியில், தொடர்புப் படிவத்திற்கு மேலே நீங்கள் காட்ட விரும்பும் உரை, படங்கள் அல்லது வீடியோக்களைச் சேர்க்க ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்தவும். இந்தப் பிரிவை நீங்கள் காலியாகவும் விடலாம்.

  5. ஆன்லைன் ஸ்டோர் பிரிவில், தீம் வார்ப்புரு கீழ்தோன்றும் மெனுவிலிருந்து contact என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.

  3. பக்கங்கள் என்பதைத் தட்டவும்.

  4. பக்கத்தைச் சேர் என்பதைத் தட்டவும்.

  5. தலைப்பு பெட்டியில், உங்கள் தொடர்புப் பக்கத்திற்கு எங்களைத் தொடர்புகொள்க அல்லது தொடர்புகொள்ள போன்ற ஒரு தலைப்பை உள்ளிடவும்.

  6. உள்ளடக்கம் பெட்டியில், தொடர்புப் படிவத்திற்கு மேலே நீங்கள் காட்ட விரும்பும் உரை, படங்கள் அல்லது வீடியோக்களைச் சேர்க்க ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்தவும். இந்தப் பிரிவை நீங்கள் காலியாகவும் விடலாம்.

  7. ஆன்லைன் ஸ்டோர் பிரிவில், தீம் வார்ப்புரு கீழ்தோன்றும் மெனுவிலிருந்து contact என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  8. சேமி என்பதைத் தட்டவும்.

தொடர்புகொள்வதற்கான பக்கத்தை உருவாக்கிய பிறகு, அதை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் காட்ட, அப்பக்கத்தை உங்கள் மெனுவில் சேர்க்க வேண்டும்.

உங்கள் தொடர்புகொள்வதற்கான பக்கத்தைத் தனிப்பயனாக்குங்கள்

தொடர்புகொள்வதற்கான பக்கம் என்பது தீம் எடிட்டரில் நீங்கள் தனிப்பயனாக்கக்கூடிய ஒரு வார்ப்புரு ஆகும். சிறப்புத் தொகுப்புகள், வலைப்பதிவு இடுகைகள் அல்லது படங்கள் போன்ற கூடுதல் தகவல்களைச் சேர்க்க, உங்கள் தொடர்புகொள்வதற்கான பக்க வார்ப்புருவில் பிரிவுகளைச் சேர்க்கலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தொடர்புகொள்வதற்கான பக்க வார்ப்புருவை ஏற்ற, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து பக்கங்கள் > தொடர்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. + பிரிவைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் தொடர்புகொள்வதற்கான பக்கத்தில் செருகுவதற்கு ஒரு பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

  • நீங்கள் சேர்த்த பிரிவிற்கான அமைப்புகளும் விருப்பங்களும் உங்கள் பக்கப்பட்டியில் திறக்கப்படும்.
  • உங்கள் புதிய பிரிவைத் திருத்திய பிறகு, வார்ப்புருவுக்குத் திரும்பப் பின்செல்லும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் தொடர்புகொள்வதற்கான பக்க வார்ப்புருவில் கூடுதல் பிரிவுகளைச் சேர்க்க, மேலே உள்ள படிகளை மீண்டும் செய்யவும்.
  1. உங்கள் தொடர்புப் பக்கத்திற்குள் பிரிவுகளை மேலேயோ கீழேயோ நகர்த்த, ⋮⋮ ஐகானைக் கிளிக் செய்து இழுக்கவும்.
  2. உங்கள் பக்கத்தின் தளவமைப்பில் நீங்கள் திருப்தியடைந்ததும், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.

  3. அனைத்து தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.

  5. திருத்து என்பதைத் தட்டவும்.

  6. தொடர்புகொள்வதற்கான பக்க வார்ப்புருவை ஏற்ற, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து பக்கங்கள் > தொடர்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. + பிரிவைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் தொடர்புகொள்வதற்கான பக்கத்தில் செருகுவதற்கு ஒரு பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

  • நீங்கள் சேர்த்த பிரிவிற்கான அமைப்புகளும் விருப்பங்களும் உங்கள் பக்கப்பட்டியில் திறக்கப்படும்.
  • உங்கள் புதிய பிரிவைத் திருத்திய பிறகு, வார்ப்புருவுக்குத் திரும்பப் பின்செல்லும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் தொடர்புகொள்வதற்கான பக்க வார்ப்புருவில் கூடுதல் பிரிவுகளைச் சேர்க்க, மேலே உள்ள படிகளை மீண்டும் செய்யவும்.
  1. உங்கள் தொடர்புப் பக்கத்திற்குள் பிரிவுகளை மேலேயோ கீழேயோ நகர்த்த, ⋮⋮ ஐகானைக் கிளிக் செய்து இழுக்கவும்.
  2. உங்கள் பக்கத்தின் தளவமைப்பில் நீங்கள் திருப்தியடைந்ததும், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புப் படிவச் சமர்ப்பிப்புகளைக் காண்க

உங்கள் தொடர்புப் படிவம் அனைத்துச் சமர்ப்பிப்புகளையும் உங்கள் ஸ்டோரின் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள அறிவிப்புகள் அமைப்புகள் பக்கத்தில் உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியை மாற்றலாம். உங்களிடம் மூன்றாம் தரப்பு டொமைன் இருந்தால், உங்கள் டொமைனை அங்கீகரிக்கவும் வேண்டியிருக்கலாம்.

உங்கள் தொடர்புப் படிவத்திற்கு உங்கள் ஸ்டோரின் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த விரும்பவில்லை எனில், உங்கள் தொடர்புப் பக்கத்தில் உட்பொதிக்கக்கூடிய தனிப்பயன் தொடர்புப் படிவத்தை உருவாக்க Wufoo அல்லது Jotform போன்ற இலவச ஆன்லைன் சேவையைப் பயன்படுத்தலாம்.

ஸ்பேம் வடிகட்டல்

உங்கள் தொடர்புப் படிவத்தின் contact[body] புலத்தில் உள்ள உள்ளடக்கம் Shopify இன் ஸ்பேம் வடிப்பான்களால் பகுப்பாய்வு செய்யப்படும். சமர்ப்பிப்பானது ஸ்பேம் எனக் கொடியிடப்பட்டால், அதன் பொருளில் [SPAM] என்ற முன்னொட்டுடன் மின்னஞ்சல் அனுப்பப்படும். பொருளில் [SPAM] என்பதைக் கொண்டுள்ள மின்னஞ்சல்களைத் தனியே ஒதுக்கிவைக்க நீங்கள் மின்னஞ்சல் வடிப்பானை உருவாக்கலாம்.

தவறுதலாக ஸ்பேம் எனக் கொடியிடப்படும் உண்மையான செய்திகளை நீங்கள் தவறவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, ஸ்பேம் எனக் கொடியிடப்பட்டவை உட்பட அனைத்துத் தொடர்புப் படிவச் சமர்ப்பிப்புகளையும் பெறுவீர்கள்.