உங்கள் கிஃப்ட் கார்டு தயாரிப்புகளில் பெறுநர் புலங்களைச் சேர்க்கவும்
உங்கள் கிஃப்ட் கார்டு தயாரிப்புகளுக்கு பின்வரும் பெறுநர் புலங்களை நீங்கள் செயல்படுத்தலாம்:
- பெறுநரின் மின்னஞ்சல்
- பெறுநரின் பெயர் (விருப்பத்தேர்வு)
- செய்தி (விருப்பத்தேர்வு)
- அனுப்ப வேண்டிய தேதி (விருப்பத்தேர்வு)
கிஃப்ட் கார்டு தயாரிப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குத் தாங்கள் தேர்ந்தெடுத்த பெறுநருக்குத் தனிப்பயன் செய்தியுடன் கிஃப்ட் கார்டை அனுப்பும் விருப்பம் உள்ளது. உங்கள் வாடிக்கையாளர் கிஃப்ட் கார்டை வாங்கியவுடனே அனுப்பலாம் அல்லது குறிப்பிட்ட தேதியில் அனுப்பும் வகையில் திட்டமிடலாம். திட்டமிடப்பட்ட கிஃப்ட் கார்டுகள் கார்டை வாங்கிய வாடிக்கையாளரின் நேர மண்டலத்தில் தோராயமாக அதிகாலை 4:00 மணி முதல் 10:00 மணி வரை அனுப்பப்படும்.
தனிப்பயன் செய்தியையும் கிஃப்ட் கார்டு குறியீட்டையும் கொண்ட பிரத்தியேகமாக்கப்பட்ட மின்னஞ்சலைப் பெறுநர் பெறுவார். உங்கள் வாடிக்கையாளர் கிஃப்ட் கார்டு குறியீட்டைக் கொண்ட அறிவிப்பைப் பெறுவார், மேலும் கிஃப்ட் கார்டு பெறுநருக்கு அனுப்பப்பட்டதை அந்த அறிவிப்பு உறுதிப்படுத்தும்.
இந்தப் பக்கத்தில்
கிஃப்ட் கார்டு பெறுநரின் தகவல் படிவத்தைச் செயல்படுத்தவும்
சில தீம்களில் கிஃப்ட் கார்டு பெறுநரின் தகவல் படிவம் கிடைக்காமல் போகலாம். கிஃப்ட் கார்டு பெறுநரின் தகவல் படிவத்தைச் செயல்படுத்துவதற்கான விருப்பம் உங்கள் தீமில் உள்ளதா என்பதை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.
கிஃப்ட் கார்டு பெறுநரின் தகவல் படிவத்தைச் செயல்படுத்துவதற்கான விருப்பம் காட்டப்படவில்லை எனில், உங்கள் தீம் கிஃப்ட் கார்டு பெறுநர் அம்சத்தை ஆதரிக்கவில்லை என்று பொருள். உங்கள் தீமை எவ்வாறு புதுப்பிப்பது என்பதை நீங்கள் கண்டறியலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
தீம் எடிட்டரில், முகப்புப் பக்கம் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, தயாரிப்புகள் > இயல்புநிலைத் தயாரிப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
பக்கவாட்டுப் பட்டியில் உள்ள முன்னோட்டம் பிரிவில், மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்பைத் தேர்ந்தெடு பிரிவில், உங்களின் கிஃப்ட் கார்டு தயாரிப்பைக் கண்டறிந்து, அந்தக் கிஃப்ட் கார்டு தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
தயாரிப்புத் தகவல் பிரிவில், வாங்கும் பொத்தான்கள் பிளாக்கைக் கிளிக் செய்யவும்.
கிஃப்ட் கார்டு தயாரிப்புகளுக்கான பெறுநர் தகவல் படிவத்தைக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் கிஃப்ட் கார்டு அறிவிப்புகளில் கிஃப்ட் கார்டு பெறுநரின் தகவல் புலங்கள் இருப்பதை நீங்களும் உறுதிசெய்ய வேண்டும்.
கிஃப்ட் கார்டு அறிவிப்பு வார்ப்புருக்கள்
உங்கள் ஸ்டோரிலிருந்து ஒரு கிஃப்ட் கார்டு வாங்கப்படும்போது இரண்டு வெவ்வேறு அறிவிப்புகள் அனுப்பப்படலாம்.
வாடிக்கையாளர் ஒரு கிஃப்ட் கார்டை வாங்கும் போது அதில் ஒரு பெறுநரைச் சேர்த்தால், பெறுநராவர் கிஃப்ட் கார்டு குறியீடும் தனிப்பயன் செய்தியும் (ஏதேனும் இருப்பின்) அடங்கிய புதிய கிஃப்ட் கார்டு மின்னஞ்சலைப் பெறுவார். கிஃப்ட் கார்டை வாங்கிய வாடிக்கையாளர், கிஃப்ட் கார்டு அனுப்பப்பட்டதை உறுதிப்படுத்தும் கிஃப்ட் கார்டு ரசீது மின்னஞ்சலைப் பெறுவார். இரண்டு மின்னஞ்சல்களும் எதிர்பார்க்கப்படுபவை ஆகும். நீங்கள் பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்ட் மூலமாகக் கிஃப்ட் கார்டுகளை விற்று, அதனை வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க விரும்பவில்லை எனில், டெவலப்பரைத் தொடர்புகொள்ளவும் அல்லது Shopify Storefront API டெவலப்பர் ஆவணங்களைப் பார்க்கவும்.
புதிய கிஃப்ட் கார்டு
ஒருவர் கிஃப்ட் கார்டைப் பெறும் போது அதற்கான பெறுநராக அவர் இருக்கும் பட்சத்தில் அவர் பெறும் அறிவிப்பு இதுவே. பின்வரும் சூழ்நிலைகளில் புதிய கிஃப்ட் கார்டு அறிவிப்பு அனுப்பப்படும்:
- உங்கள் Shopify நிர்வாகியில் கிஃப்ட் கார்டை உருவாக்கி, அதை நேரடியாக ஒரு வாடிக்கையாளருக்கு வழங்குவீர்கள்.
- கிஃப்ட் கார்டு பெறுநரின் தகவல் படிவத்தைப் பூர்த்தி செய்யாமல் வாடிக்கையாளர் தமக்காகவே கிஃப்ட் கார்டை வாங்குகிறார்.
- ஒருவர் ஒரு கிஃப்ட் கார்டைப் பரிசாகப் பெறுகிறார்.
கிஃப்ட் கார்டு ரசீது
உங்கள் வாடிக்கையாளர் கிஃப்ட் கார்டைக் கொள்முதல் செய்து, கிஃப்ட் கார்டு பெறுநர் தகவல் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது அவர்களுக்கு இந்த அறிவிப்பு கிடைக்கும். தாங்கள் தேர்ந்தெடுத்த பெறுநருக்கு கிஃப்ட் கார்டு அனுப்பப்பட்டுவிட்டது என்பதை கிஃப்ட் கார்டு ரசீது அறிவிப்பானது, உங்கள் வாடிக்கையாளருக்கு உறுதிப்படுத்துகிறது.
உங்கள் அறிவிப்பு வார்ப்புருக்களில் கிஃப்ட் கார்டு பெறுநர் தகவல் புலங்கள் உள்ளனவா எனச் சரிபார்க்கவும்
நீங்கள் உங்கள் கிஃப்ட் கார்டு அறிவிப்பு வார்ப்புருக்களை மாற்றியமைத்தாலோ புதிய மொழிகளைச் சேர்த்திருந்தாலோ, உங்கள் வார்ப்புருக்களில் கிஃப்ட் கார்டு பெறுநர் தகவல் புலங்கள் சேர்க்கப்படாமல் இருக்கலாம்.
நீங்கள் உங்கள் மாற்றங்களை மீளமைத்து, கிஃப்ட் கார்டு பெறுநர் தகவல் புலங்களைக் கொண்ட இயல்புநிலை வார்ப்புருக்களுக்குச் செல்லலாம் அல்லது உங்கள் வார்ப்புருக்களில் அந்தப் புலங்களை நீங்களே கைமுறையாகச் சேர்க்கலாம்.
உங்கள் அறிவிப்புகளில் நீங்கள் ஆதரிக்கும் ஒவ்வொரு மொழிக்கும் இதைச் செய்ய வேண்டும்.
உங்கள் அறிவிப்புகளில் செய்த மாற்றங்களை மீளமைக்கவும்
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
பரிசு கார்டுகள் பிரிவில், புதிய கிஃப்ட் கார்டு அல்லது கிஃப்ட் கார்டு ரசீது என்பதைக் கிளிக் செய்யவும்.
குறியீட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
இயல்புநிலைக்கு மீளமை என்பதைக் கிளிக் செய்யவும்.
உரையாடல் பெட்டியில், மாற்றங்களை மீளமை என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
பரிசு கார்டுகள் பிரிவில், புதிய கிஃப்ட் கார்டு அல்லது கிஃப்ட் கார்டு ரசீது என்பதைத் தட்டவும்.
குறியீட்டைத் திருத்து ஐகானைத் தட்டவும்.
இயல்புநிலைக்கு மீளமை என்பதைத் தட்டவும்.
உரையாடல் பெட்டியில், மாற்றங்களை மீளமை என்பதைத் தட்டவும்.
உங்கள் அறிவிப்புகளில் புதிய புலங்களைச் சேர்க்கவும்
உங்கள் கிஃப்ட் கார்டு அறிவிப்பு வார்ப்புருக்களில் செய்துள்ள ஏதேனும் மாற்றங்களை வைத்திருக்க விரும்பினால், கிஃப்ட் கார்டு பெறுநர் தகவல் புலங்களை உங்கள் வார்ப்புருக்களில் நீங்களே கைமுறையாகச் சேர்க்கலாம்.
பெறுநர் தகவல் புலங்கள் கிஃப்ட் கார்டு பெறுநர் Liquid குறிப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
பரிசு கார்டுகள் பிரிவில், புதிய கிஃப்ட் கார்டு அல்லது கிஃப்ட் கார்டு ரசீது என்பதைக் கிளிக் செய்யவும்.
குறியீட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
கிஃப்ட் கார்டு பெறுநர் தகவல் புலங்களை உங்கள் அறிவிப்பில் சேர்க்கவும். அறிவிப்பு வார்ப்புருக்களை எவ்வாறு திருத்துவது என்பது குறித்த ஆவணத்தைப் பார்க்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
பரிசு கார்டுகள் பிரிவில், புதிய கிஃப்ட் கார்டு அல்லது கிஃப்ட் கார்டு ரசீது என்பதைத் தட்டவும்.
குறியீட்டைத் திருத்து ஐகானைத் தட்டவும்.
கிஃப்ட் கார்டு பெறுநர் தகவல் புலங்களை உங்கள் அறிவிப்பில் சேர்க்கவும். அறிவிப்பு வார்ப்புருக்களை எவ்வாறு திருத்துவது என்பது குறித்த ஆவணத்தைப் பார்க்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.