செய்திமடல் பதிவைச் சேர்க்கவும்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் செய்திமடல் பதிவைச் சேர்ப்பதன் மூலம், நீங்கள் மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர் மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரிக்கலாம். மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் குறித்து Shopify வலைப்பதிவில் மேலும் அறிந்துகொள்ளலாம்.

விளம்பர மின்னஞ்சல்களை அனுப்ப, நீங்கள் Shopify செயலியைப் பயன்படுத்தலாம். மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் சேவையுடன் உங்கள் Shopify வாடிக்கையாளர் தரவை ஒத்திசைப்பதன் மூலம், மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் செயலிகள் பொதுவாகச் செயல்படுகின்றன. மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் தொடர்பான செயலிகளை நீங்கள் Shopify App Store-இல் தேடலாம். நீங்கள் ஒரு செயலியைத் தேர்ந்தெடுத்த பிறகு, செய்திமடல் பதிவு மூலமாக நீங்கள் சேகரிக்கும் மின்னஞ்சல் முகவரிகளுக்குச் செய்திமடல்களை எப்படி அனுப்புவது என்பது குறித்துச் செயலியின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் செய்திமடல் பதிவுப் பகுதியைச் சேர்க்கவும்

அனைத்து Shopify Online Store 2.0 தீம்கள் மற்றும் Horizon குடும்பத் தீம்களில் உங்கள் ஸ்டோரின் எந்தப் பக்கத்திலும் சேர்க்கக்கூடிய செய்திமடல் பதிவுப் பகுதியோ அடிப்பகுதியில் செய்திமடல் படிவத்தைச் சேர்க்கும் விருப்பமோ இருக்கும். ஒரு செய்திமடல் பகுதியில் இயல்பாக மூன்று பிளாக்குகள் இருக்கும்: ஹெடர், பத்தி மற்றும் மின்னஞ்சல் படிவம்.

உங்கள் தீமில் செய்திமடல் பதிவுப் படிவம் இல்லை எனில், அதைச் சேர்க்க மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் செயலியைப் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர் மின்னஞ்சல்களைச் சேகரிக்கும் பிற வழிகள் குறித்து மேலும் அறிக.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. கீழ்தோன்றும் மெனுவில், நீங்கள் செய்திமடல் பதிவுப் படிவத்தைச் சேர்க்க விரும்பும் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. + பகுதியைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, செய்திமடல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. முன்னோட்டத்தைக் காட்ட, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து நிற அமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. விருப்பத்திற்குரியது: உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் முழு அகலத்திற்கும் பின்புல நிறத்தைக் காட்ட முழு அகலம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. உங்கள் விருப்பங்களை அணுகி மாற்றங்களைச் செய்ய, ஹெடர், பத்தி அல்லது மின்னஞ்சல் படிவ பிளாக்குகள் மீது கிளிக் செய்யவும்.

  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில், Menu ஐகானைத் தட்டவும்.

  2. விற்பனைச் சேனல்கள் பகுதியில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.

  3. அனைத்துத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.

  5. திருத்து என்பதைத் தட்டவும்.

  6. கீழ்தோன்றும் மெனுவில், நீங்கள் செய்திமடல் பதிவுப் படிவத்தைச் சேர்க்க விரும்பும் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. + பகுதியைச் சேர் என்பதைத் தட்டி, செய்திமடல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  8. முன்னோட்டத்தைக் காட்ட, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து நிற அமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

  9. விருப்பத்திற்குரியது: உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் முழு அகலத்திற்கும் பின்புல நிறத்தைக் காட்ட முழு அகலம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  10. உங்கள் விருப்பங்களை அணுகி மாற்றங்களைச் செய்ய, ஹெடர், பத்தி அல்லது மின்னஞ்சல் படிவ பிளாக்குகள் மீது தட்டவும்.

  11. சேமி என்பதைத் தட்டவும்.

Shopify செயலியைப் பயன்படுத்தி மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை அமைக்கவும்

நீங்கள் மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை அமைக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரிக்க, உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் செய்திமடல் பதிவுப் பகுதியைச் சேர்க்கவும்.

  2. Shopify App Store இலிருந்து மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் செயலியை நிறுவவும்.

  3. செய்திமடல் பதிவுப் பகுதியில் தங்கள் மின்னஞ்சல்களைச் சேர்க்கும் வாடிக்கையாளர் பட்டியலுடன் ஒத்திசைக்க, மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் செயலியின் வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் தீமில் மின்னஞ்சல் பதிவுப் படிவம் இல்லை எனில், அதை உங்கள் ஸ்டோரில் சேர்க்கக்கூடிய ஒரு மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் செயலியைப் பயன்படுத்தவும்.

  4. உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் செய்திமடல்களை உருவாக்கவும் அனுப்பவும் மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் செயலியைப் பயன்படுத்தவும்.