தொடர்புடைய தயாரிப்புகளின் பிரிவைச் சேர்த்தல்
உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் ஒரு பிரிவைச் சேர்க்கலாம், இது தானாகவே உருவாக்கப்படும் அல்லது Shopify Search & Discovery செயலியைப் பயன்படுத்தி உங்களால் கைமுறையாக அமைக்கப்பட்ட தொடர்புடைய தயாரிப்புகளின் பட்டியலைக் காண்பிக்கும். செயலியின் மூலம் தொடர்புடைய தயாரிப்புகளைத் தனிப்பயனாக்குவது எப்படி என மேலும் அறிக.
வாடிக்கையாளர்களுக்குத் தொடர்புடைய தயாரிப்புகளைக் காண்பிப்பது அவர்கள் புதிய தயாரிப்புகளைக் கண்டறிவதை எளிதாக்குகிறது, மேலும் இது ஆன்லைன் ஸ்டோர் விற்பனையை அதிகரிக்கவும் உதவலாம்.
தொடர்புடைய தயாரிப்புகள் பிரிவின் தலைப்பு மற்றும் தளவமைப்பு ஆகியவை உங்கள் தீம் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்தப் பக்கத்தில்
தொடர்புடைய தயாரிப்புகளைப் புரிந்துகொள்ளுதல்
பொதுவாகச் சேர்த்து வாங்கப்படும் தயாரிப்புகள், ஒரே மாதிரியான தயாரிப்பு விளக்கத்தைக் கொண்டுள்ள தயாரிப்புகள் அல்லது தொடர்புடைய சேகரிப்புகளில் உள்ள தயாரிப்புகளின் அடிப்படையில் தொடர்புடைய தயாரிப்புகள் அமைகின்றன. மேலும் பல ஆர்டர் மற்றும் தயாரிப்புத் தகவல்கள் கிடைக்கும்போது தொடர்புடைய தயாரிப்புகள் காலப்போக்கில் மிகவும் துல்லியமாக மாறும்.
Shopify தீம் உருவாக்க ஆவணமாக்கலில் இருந்து தொடர்புடைய தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் தரவு குறித்து மேலும் அறிக.
தொடர்புடைய தயாரிப்புகளின் தோற்றத்தைத் தனிப்பயனாக்குதல்
தொடர்புடைய தயாரிப்புகள் என்பது உங்கள் தயாரிப்புப் பக்கத்தில் உள்ள ஒரு பிரிவு ஆகும். தலைப்பு, விலை, விற்பனையாளர் மற்றும் ஒரு சுருக்கமான விளக்கம் ஆகியவற்றைச் சேர்க்கும் வகையில் தொடர்புடைய தயாரிப்புகளின் தோற்றத்தை நீங்கள் தனிப்பயனாக்கலாம் அல்லது உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் இருந்து அதனை மறைக்கலாம். ஒரு நேரத்தில் ஒரு தயாரிப்புப் பக்கத்தில் தொடர்புடைய தயாரிப்புகளின் ஒரு பிரிவு மட்டுமே உங்களால் கொண்டிருக்க முடியும்.
வாடிக்கையாளர்களுக்குத் தொடர்புடைய தயாரிப்புகள் எவ்வாறு காண்பிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் தனிப்பயனாக்கலாம். பொதுவாகச் சேர்த்து வாங்கப்படும் தயாரிப்புகள், ஒரே மாதிரியான தயாரிப்பு விளக்கத்தைக் கொண்டுள்ள தயாரிப்புகள் அல்லது தொடர்புடைய சேகரிப்புகளில் உள்ள தயாரிப்புகளின் அடிப்படையில் தொடர்புடைய தயாரிப்புகள் தானாகவே உருவாக்கப்படுகின்றன. மேலும் பல ஆர்டர் மற்றும் தயாரிப்புத் தகவல்கள் கிடைக்கும்போது இவை காலப்போக்கில் மிகவும் துல்லியமாக மாறும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் பகுதிக்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
தீம் எடிட்டரில் வார்ப்புருவை ஏற்ற, தயாரிப்புகள் > இயல்புநிலைத் தயாரிப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- உங்கள் தயாரிப்புப் பக்கத்தில் தொடர்புடைய தயாரிப்புகளின் பிரிவு இருந்தால், தொடர்புடைய தயாரிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் தயாரிப்புப் பக்கத்தில் தொடர்புடைய தயாரிப்புகளின் பிரிவு இல்லை எனில், + பிரிவைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் தொடர்புடைய தயாரிப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
தீம்களை நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.
வார்ப்புருக்கள் என்பதைத் தட்டவும்.
தீம் எடிட்டரில் வார்ப்புருவை ஏற்ற, தயாரிப்புகள் > இயல்புநிலைத் தயாரிப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- உங்கள் தயாரிப்புப் பக்கத்தில் தொடர்புடைய தயாரிப்புகளின் பிரிவு இருந்தால், தொடர்புடைய தயாரிப்புகள் என்பதைத் தட்டவும்.
- உங்கள் தயாரிப்புப் பக்கத்தில் தொடர்புடைய தயாரிப்புகளின் பிரிவு இல்லை எனில், + பிரிவைச் சேர் என்பதைத் தட்டவும், பின்னர் தொடர்புடைய தயாரிப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
கண் குறியீட்டைக் கிளிக் செய்வதன் மூலம் தொடர்புடைய தயாரிப்புகளை முடக்கலாம். தொடர்புடைய தயாரிப்புகளை முடக்குவது, உங்கள் தயாரிப்புப் பட்டியலில் இருந்து அந்தப் பிரிவை மறைக்குமே தவிர அதனை நீக்காது.