உங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து 'Shopify மூலம் இயக்கப்படுகிறது' என்பதை அகற்றுதல்
உங்கள் ஸ்டோரில் "Shopify மூலம் இயக்கப்படுகிறது" என்ற செய்தி காட்டப்படுவதை நீங்கள் விரும்பவில்லை எனில், அதை அகற்றலாம். செய்தியை அகற்றுவதன் மூலம், தெளிவான அடிப்பகுதியையும் மேலும் தனிப்பயனாக்கப்பட்ட பிராண்டு அனுபவத்தையும் உருவாக்க முடியும்.
இயல்புநிலை தீம் உள்ளடக்கத்தைத் திருத்துதல்
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, அதன் பிறகு
> இயல்புநிலை தீம் உள்ளடக்கத்தைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
உருப்படிகளை வடிகட்டு தேடல் பெட்டியில், powered என உள்ளிடவும். இது Powered by Shopify மற்றும் Powered by Shopify HTML ஆகிய இரு பெட்டிகளையும் காட்டும்.
Powered by Shopify பெட்டியில், ஒற்றை இடைவெளியை (space) உள்ளிடவும். உங்கள் ஸ்டோர் தனிப்பட்ட பயன்முறையில் இருந்தால், உங்கள் ஸ்டோரின் விரைவில் திறக்கப்படும் பக்கத்தில் காட்டப்படும் Powered by Shopify HTML பெட்டிக்கும் இந்தப் படியைப் பின்பற்றலாம்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
எல்லாத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, அதன் பிறகு
> இயல்புநிலை தீம் உள்ளடக்கத்தைத் திருத்து என்பதைத் தட்டவும்.
உருப்படிகளை வடிகட்டு தேடல் பெட்டியில், powered என உள்ளிடவும். இது Powered by Shopify மற்றும் Powered by Shopify HTML ஆகிய இரு பெட்டிகளையும் காட்டும்.
Powered by Shopify பெட்டியில், ஒற்றை இடைவெளியை உள்ளிடவும். பெட்டியில் மங்கலாகத் தெரியும் இடநிரப்பி உரை மறைந்துவிடும். உங்கள் ஸ்டோர் தனிப்பட்ட பயன்முறையில் இருந்தால், உங்கள் ஸ்டோரின் விரைவில் திறக்கப்படும் பக்கத்தில் காட்டப்படும் Powered by Shopify HTML பெட்டிக்கும் இந்தப் படியைப் பின்பற்றலாம்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
தீம் குறியீட்டைத் திருத்து
இயல்புநிலை தீம் உள்ளடக்கத்தைப் புதுப்பித்த பின்னரும், அடிப்பகுதியில் "Shopify மூலம் இயக்கப்படுகிறது" என்ற செய்தி காட்டப்பட்டால், நீங்கள் தீம் குறியீட்டை மாற்ற வேண்டியிருக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, அதன் பிறகு
> குறியீட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரிவுகள் கோப்பகத்தில்,
footer.liquidகோப்பைக் கிளிக் செய்யவும்.PC-இல்
ctrl+Fஅல்லது Mac-இல்command+Fஎன்பதைப் பயன்படுத்தி பின்வரும் Liquid டேக்கைக் கண்டறிந்து, அதை நீக்கவும்:
{{ powered_by_link }}- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
எல்லாத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, அதன் பிறகு
> குறியீட்டைத் திருத்து என்பதைத் தட்டவும்.
பின்வரும் Liquid டேக்கைக் கண்டறிந்து, அதை நீக்கவும்:
{{ powered_by_link }}- சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
நீங்கள் Shopify வழங்கும் இலவசத் தீமைப் பயன்படுத்தினால், Shopify வடிவமைப்புத் கொள்கையின் வரம்பிற்குள், இந்த குறிப்பிட்ட தனிப்பயனாக்கத்திற்கு Shopify ஆதரவு உதவக்கூடும்.