உங்கள் தீமில் பிரத்தியேக CSS-ஐச் சேர்த்தல்
கேஸ்கேடிங் ஸ்டைல் ஷீட் (CSS) உங்கள் தீமில் உள்ள கூறுகள் காட்டப்படும் விதத்தை மாற்றுகிறது, அத்துடன் ஒரே நேரத்தில் பல பக்கங்களின் தோற்றத்தையும் இதனால் கட்டுப்படுத்த முடியும். பிரத்தியேக CSS அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம், தீமில் உள்ளமைக்கப்பட்ட அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு உங்கள் தீமைத் தனிப்பயனாக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் தீமின் நிற அமைப்புகளில் கிரேடியண்ட்களை அமைக்க CSS-ஐப் பயன்படுத்தலாம். உங்களின் முழுத் தீமுக்கோ அல்லது உங்கள் தீமிற்குள் உள்ள ஒரு வார்ப்புருவின் குறிப்பிட்ட பிரிவுக்கோ பிரத்தியேக CSS-ஐச் சேர்க்கலாம். செக்அவுட் பக்கத்தில் பிரத்தியேக CSS ஆதரிக்கப்படுவதில்லை.
உங்கள் CSS-ஐத் தனிப்பயனாக்குவதற்கு CSS மற்றும் HTML குறித்து ஓரளவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் தீமைத் தனிப்பயனாக்குவதற்கு முன், எந்த அளவிலான ஆதரவு கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொண்டிருப்பதை உறுதிசெய்யவும்.
இந்தப் பக்கத்தில்
பிரத்தியேக CSS-ஐப் பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
உங்கள் தீமில் பிரத்தியேக CSS-ஐச் சேர்ப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைக் கவனிக்கவும்:
- பிரத்தியேக CSS-இல் பின்வரும் CSS செலக்டர்கள் மற்றும் பண்புகளுக்கு ஆதரவில்லை:
@import,@charsetமற்றும்@namespaceஆகிய அட்-ரூல்களைப் பயன்படுத்த முடியாது- பிரிவு-நிலை CSS-க்கு,
@media,@container,@layerமற்றும்@supportsஆகிய அட்-ரூல்களுக்கு மட்டுமே அனுமதியுள்ளது - பிரிவு-நிலை CSS-க்கு,
shopify-sectionவகுப்பைக் கொண்டு தீம் மூலம் ரெண்டர் செய்யப்பட்ட உறைதல் (wrapping) Shopify பிரிவு எலிமெண்ட்டின் ID-ஐயோ வகுப்புகளையோ நீங்கள் இலக்காகக் கொள்ள முடியாது - பிரத்தியேக CSS-இல்
contentபண்பு கிடைக்காது
- பெற்றோர் பிரிவு எலிமெண்ட்டை உள்ளடக்கிய குறிச்சொல்லுடன் பிரத்தியேக CSS விதி அறிவிக்கப்பட்டால், அது ஒரு டெசென்டென்ட் (descendent) குறிச்சொல்லாகக் கருதப்படும், மேலும் ஸ்டைலிங் விதி அந்தப் பிரிவில் பயன்படுத்தப்படும். இயல்பாக, பெற்றோர் பிரிவு
<div>குறிச்சொல்லில் இணைக்கப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்க, ஆனால் தீம் டெவலப்பர்கள் இதை பிரிவு ஸ்கீமாவில் உள்ள அனுமதிக்கப்பட்ட எந்தவொரு மதிப்புக்கும் அமைக்கலாம். - தற்போது பிரத்தியேக CSS-இல் URLகளைப் பயன்படுத்தும்போது https://cdn.shopify.com டொமைனுக்கு மட்டுமே அனுமதியுள்ளது.
- பிரத்தியேக எழுத்துருக்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. இருப்பினும், பிரத்தியேக எழுத்துருக்கள் உரை தோன்றுவதற்கு முன் உலாவிகளால் பதிவிறக்கப்படும் ஒரு தனி ரிசோர்ஸ் ஆகும், இது ஸ்டோரின் ஒட்டுமொத்த செயல்திறனைப் பாதிக்கலாம். பிரத்தியேக எழுத்துருக்களால் உங்கள் ஸ்டோர்ஃபிரண்ட் எதிர்மறையாகப் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வது உங்கள் பொறுப்பாகும். உங்கள் தீமில் பிரத்தியேக எழுத்துருக்களைப் பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
- தீம் முழுவதையும் பாதிக்கும் CSS விதிகள் 1500 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட பிரிவை பாதிக்கும் CSS விதிகள் 500 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும்.
- நீங்கள் பயன்படுத்தும் CSS செலக்டர்கள் அல்லது வகுப்புகளைப் பொறுத்து, உங்கள் தீமைப் புதுப்பிப்பதன் காரணமாக உங்கள் பிரத்தியேக CSS செயல்படாமல் போகலாம்.
மேம்பட்ட தீம் தனிப்பயனாக்கங்களை Shopify ஆதரிக்காது. உங்கள் பிரத்தியேக CSS-இல் இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்பான பிழையை நீங்கள் சந்தித்து, பிழை எதனால் ஏற்படுகிறது என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை எனில், கிடைக்கக்கூடிய பிற ஆதரவு ரிசோர்ஸ்களின் பட்டியலைப் பார்க்கவும்.
பிரத்தியேக CSS-ஐச் சேர்
செக்அவுட் பக்கத்தைத் தவிர்த்து, உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள அனைத்துப் பக்கங்களையும் பாதிக்கும் வகையில் உங்கள் தீம் முழுவதற்கும் பிரத்தியேக CSS-ஐச் சேர்க்கலாம். உதாரணமாக, உங்கள் ஸ்டோர் முழுவதும் பொத்தான்கள் காட்டப்படும் விதத்தை நீங்கள் மாற்றலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
தீம் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரத்தியேக CSS என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் குறியீட்டைச் சேர்க்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் தீமின் ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கும் பிரத்தியேக CSS-ஐச் சேர்க்கலாம். உங்கள் தீமின் ஒரு பிரிவில் பிரத்தியேக CSS-ஐச் சேர்த்தால், அந்த CSS அப்பிரிவுக்கு மட்டுமே பொருந்தும். உதாரணமாக, நீங்கள் ஒரு தனிப் பிரிவுக்கு பிரத்தியேக எழுத்துரு அளவு அல்லது பின்புல நிறத்தைப் பயன்படுத்தலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் CSS-ஐச் சேர்க்க விரும்பும் பிரிவைக் கிளிக் செய்யவும்.
பிரிவு பண்புகள் பேனலின் கீழே, பிரத்தியேக CSS என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் குறியீட்டைச் சேர்க்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

CSS-க்கான கூடுதல் ரிசோர்ஸ்கள்
உங்கள் CSS-ஐத் தனிப்பயனாக்குவதற்கு CSS மற்றும் HTML குறித்து ஓரளவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் தீமைத் தனிப்பயனாக்குவதற்கு முன், எந்த அளவிலான ஆதரவு கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொண்டிருப்பதை உறுதிசெய்யவும்.
CSS பற்றி மேலும் அறிந்துகொள்ள நீங்கள் விரும்பினால், பின்வரும் சில ரிசோர்ஸ்களைப் பார்க்கலாம்: