தீம்களை மொழிபெயர்த்தல்

உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து பல மொழிகளை நீங்கள் செயல்படுத்தலாம், இதனால் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் உள்ளடக்கத்தை அவர்களின் தாய்மொழியில் பார்க்கலாம்.

பல மொழிகளில் விற்பனை செய்வதற்கு இணக்கமான தீம்களுக்கு, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கும் வகையில், நீங்கள் இயல்புநிலை தீமின் மொழியை மாற்றலாம், மற்றும் பிற மொழிகளைச் சேர்க்கலாம். உங்கள் தீமில் நீங்கள் விரும்பும் மொழி இல்லை எனில் அல்லது இயல்புநிலை மொழிபெயர்ப்புகளைத் திருத்த விரும்பினால், மொழிபெயர்ப்புகளை நீங்களே உருவாக்கிக்கொள்ளலாம்.

மொழிபெயர்ப்பு வரம்புகள்

உங்கள் தீமில் உள்ள ஒவ்வொரு லோகேல் ஃபைலும் 3,400 மொழிபெயர்ப்புகள் வரை சேமிக்கலாம். மொழிபெயர்ப்பு என்பது பட்டன் லேபிள் அல்லது பிரிவுத் தலைப்பு போன்ற ஒரு மொழிபெயர்க்கக்கூடிய புலமாகும்.

லோகேல் ஃபைல்கள் ஒரு மொழிக்கான மொழிபெயர்ப்புகளைக் கொண்டிருக்கும், எடுத்துக்காட்டாக ஜெர்மன் மொழிக்கு locales/de.json என்பது இருக்கும். ஒவ்வொரு லோகேல் ஃபைலுக்கும் அதற்கே உரித்தான வரம்பு உள்ளது. இந்த வரம்பு உங்கள் அனைத்து மொழிகளுக்குமான ஒட்டுமொத்த கூட்டுத்தொகை அல்ல.

உங்கள் தீம் உள்ளடக்கத்தை மாற்றும்போது உங்களுக்காகச் சேமிக்கப்படும் மொழிபெயர்ப்புகள் உட்பட, லோகேல் ஃபைல் சேமிக்கும் அனைத்திற்கும் இந்த வரம்பு பொருந்தும். நீங்களே சில மொழிபெயர்ப்புகளை மட்டுமே சேர்த்திருந்தாலும் கூட, ஒரு மொழிக்கான வரம்பை அது எட்டக்கூடும்.

உங்கள் தீமிற்கான மொழிபெயர்ப்பை உருவாக்குதல்

உங்கள் தீமின் மொழியை மாற்ற, உங்கள் ஸ்டோரை மொழிபெயர்த்து உள்ளூர்மயமாக்கலாம். Shopify இன் Translate & Adapt செயலியை நிறுவுவதன் மூலமோ, CSV ஏற்றுமதி/இறக்குமதியைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்துவதன் மூலமோ உங்கள் சொந்த மொழிபெயர்ப்புகளைச் சேர்க்கலாம்.

மொழிபெயர்க்கக்கூடிய உள்ளடக்கத்தின் வகைகள்

நீங்கள் மொழிபெயர்க்க விரும்பக்கூடிய மூன்று அடிப்படை வகையான உள்ளடக்கங்கள் உள்ளன:

உரைப்புலங்களில் மொழிபெயர்ப்புகளை உள்ளிடுவதன் மூலம் ஒவ்வொரு உரையையும் நீங்கள் மொழிபெயர்க்கலாம்.

உங்கள் தீமில் உள்ள ஒவ்வொரு புலத்தையும் நீங்கள் மொழிபெயர்க்க வேண்டியதில்லை. உங்கள் மாற்றங்கள் தானாகவே சேமிக்கப்படும், மேலும் நீங்கள் எந்த நேரத்திலும் அதை நிறுத்திக்கொள்ளலாம். மாற்றங்களைச் செய்ய விரும்பினால், ஏற்கனவே உள்ள எந்தவொரு மொழிபெயர்ப்பையும் நீங்கள் அணுகலாம்.

மொழிபெயர்க்காமல் ஒரு புலத்தை அப்படியே விட்டுவிட்டால், தீமிற்கான இயல்புநிலை மொழி பயன்படுத்தப்படும்.

நீங்கள் எளிய உரையை நேரடியாக மொழிபெயர்க்கலாம், ஆனால் HTML அல்லது Liquid உள்ள உரைத் தொகுதிகளை மொழிபெயர்க்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

எளிய உரையை மொழிபெயர்த்தல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள பெரும்பாலான உரைக்கு, நீங்கள் HTML அல்லது Liquid ஐப் பயன்படுத்தத் தேவையில்லை. எளிய உரைத் தொகுதியின் மொழிபெயர்ப்பை உள்ளிடும்போது, அந்த உரையை மற்ற மொழியின் இணையான உரையைக் கொண்டு மாற்றினால் மட்டும் போதும்.

HTML உள்ள உரைத் தொகுதிகள்

ஒரு உரைத் தொகுதியில் HTML இருந்தால், வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களைச் சுற்றி கோண அடைப்புக்கறிகளின் ஜோடிகளை ( < > ) நீங்கள் காண்பீர்கள்.

நீங்கள் மொழிபெயர்க்கும் தொகுதியில் HTML எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். பெரும்பாலான உள்ளடக்கத்தை ஆங்கிலத்திலேயே விட வேண்டியிருந்தாலும், கோண அடைப்புக்குறிகளுக்கு வெளியே நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் சில ஆங்கில வார்த்தைகள் இருக்கலாம்.

HTML உள்ள உரைத் தொகுதிகள் பொதுவாகப் பின்வரும் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன:

HTML இணைப்பின் பெயர்களை மொழிபெயர்த்தல்

HTML இணைப்பானது <a href= எனத் தொடங்கி  என முடியும் குறிச்சொற்களால் சூழப்பட்டிருக்கும்.

நீங்கள் இணைப்பின் மற்ற கூறுகளை விடுத்து அதன் பெயரை மட்டுமே மொழிபெயர்க்க வேண்டும். இணைப்பின் பெயரை மட்டுமே உங்கள் வாடிக்கையாளர்கள் பார்ப்பார்கள்.

Continue browsing here.

இந்த எடுத்துக்காட்டில், Continue, browsing மற்றும் here போன்ற வார்த்தைகளுக்குப் பொருத்தமான மொழிபெயர்ப்பை மாற்றுவீர்கள்.

இணைப்பில் உள்ள சேருமிட முகவரியை (இலக்கு எனவும் அழைக்கப்படும்) ஒருபோதும் மொழிபெயர்க்க வேண்டாம். இணைப்பைக் கிளிக் செய்யும்போது வாடிக்கையாளர் செல்லும் இடமே சேருமிட முகவரியாகும். இது எப்போதும் மேற்கோள் குறிகளில் காட்டப்பட்டு, குறிப்பிட்ட இணைய முகவரியைச் சுட்டிக்காட்டும். எடுத்துக்காட்டு இணைப்பில், சேருமிட முகவரி /collections/all ஆகும்.

HTML மூலம் வடிவமைக்கப்பட்ட உரையை மொழிபெயர்த்தல்

வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களுக்கு அழுத்தம் அல்லது கூடுதல் வடிவமைப்பைக் கொடுக்க, அல்லது சின்னங்களைக் காட்ட சில நேரங்களில் HTML பயன்படுத்தப்படுகிறது. HTML மூலம் வடிவமைக்கப்படும் வார்த்தைகளை மட்டுமே நீங்கள் மொழிபெயர்க்க வேண்டும், குறியீடுகள் அல்லது குறிச்சொற்களை அல்ல. எதை மொழிபெயர்க்க வேண்டும் மற்றும் எதை மாற்றாமல் விட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள, எடுத்துக்காட்டுகளைப் பார்க்கவும்.

HTML வடிவமைப்பு எடுத்துக்காட்டுகள்

பின்வரும் எடுத்துக்காட்டில், தடித்த எழுத்துருவில் உரையைக் காட்ட  குறிச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன:

On Sale

இந்த நிலையில், On Sale என்ற வார்த்தைகளை மட்டுமே மொழிபெயர்ப்பீர்கள்.

பின்வரும் எடுத்துக்காட்டில், இடது மற்றும் வலது அம்புக்குறிச் சின்னங்களை உருவாக்க, HTML குறியீடுகள் ← மற்றும் → ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன:

← Previous Product
Next Product →

இங்கு Previous Product மற்றும் Next Product என்ற சொற்றொடர்களை மட்டுமே மொழிபெயர்ப்பீர்கள்.

பின்வரும் எடுத்துக்காட்டில், collection-sidebar.liquid கோப்புப் பெயரைத் தடிமனாகக் காட்ட HTML  குறிச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Add a type to your products for this list to build itself. All lists are created
in collection-sidebar.liquid

இங்குள்ள கோப்புப் பெயர் ஒரு Liquid டெம்ப்ளேட் கோப்பாகும். கோப்பின் பெயருடன் பொருந்துவது அவசியம் என்றால் மட்டுமே நீங்கள் கோப்புப் பெயரை மொழிபெயர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் சொந்தமாகக் கோப்புகளை உருவாக்கியிருந்தால், HTML இல் கோப்புப் பெயரை மாற்ற வேண்டியிருக்கலாம்.

HTML குறிச்சொற்கள் அல்லது சின்னக் குறியீடுகளை ஒருபோதும் மொழிபெயர்க்க வேண்டாம். இவை உங்கள் உலாவியால் பயன்படுத்தப்படுகின்றன, வாடிக்கையாளர்களுக்கு இவை காட்டப்படாது.

Liquid உள்ள உரைத் தொகுதிகள்

Liquid குறிச்சொற்கள், ஆப்ஜெக்டுகள் அல்லது வடிப்பான்களை ஒருபோதும் மொழிபெயர்க்க வேண்டாம்.

பல்வேறு சூழல்களில் உங்கள் இணையதளத்தின் தோற்றத்தைக் கட்டுப்படுத்தும் டெம்ப்ளேட்டிங் மொழி Liquid ஆகும். Liquid உள்ளடக்கம் எப்போதும் பின்வரும் சின்னங்களின் தொகுப்புகளில் ஒன்றில் சுற்றப்பட்டிருக்கும்:

• {{ மற்றும் }}
• {% மற்றும் %}
• {%- மற்றும் -%}

எடுத்துக்காட்டு:

Posted on {{ date }}

இந்த எடுத்துக்காட்டில், Liquid ஐச் சுற்றியுள்ள உரையை மட்டுமே நீங்கள் மொழிபெயர்க்க வேண்டும், {{ date }} ஐ அல்ல.

எளிய உரை, HTML மற்றும் Liquid ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தும் உரைப் புலத்தின் எடுத்துக்காட்டு இங்கே:

{{ author }} on {{ date }}

இந்த எடுத்துக்காட்டு சிக்கலானதாகத் தோன்றினாலும், நீங்கள் மொழிபெயர்க்க வேண்டியது இந்த வார்த்தையை மட்டுமே on.

உங்கள் தீம் மொழிபெயர்ப்புகளில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்

மிக அதிகமான மொழிபெயர்ப்பு விசைகள் பிழைக்கான சிக்கலைத் தீர்த்தல்

ஒரு சேமிப்பு நடவடிக்கையானது ஒரு லோகேல் ஃபைலில் 3,400 க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளைச் சேமிக்கச் செய்யும் போது, Too many translation keys என்ற பிழை காட்டப்படும். மொழிபெயர்ப்பு சேமிக்கப்படாது. ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்பை நீங்கள் மாற்றும்போதும் இந்தப் பிழை காட்டப்படலாம்.

நீங்கள் இனி பயன்படுத்தாத மொழிபெயர்ப்புகள் உட்பட, அவற்றை நீக்கும் வரை மொழிபெயர்ப்புகள் லோகேல் ஃபைலிலேயே இருக்கும். ஏதேனும் மொழிபெயர்ப்புகளை அகற்றுவதற்கு முன், பழைய நகலுக்குத் திரும்ப வசதியாக உங்கள் தீமை நகலெடுக்கவும்.

புதிய மொழிபெயர்ப்புகளுக்கு இடமளிக்க, குறியீடு எடிட்டரில் உள்ள லோகேல் ஃபைலிலிருந்து உங்களுக்குத் தேவையில்லாத மொழிபெயர்ப்புகளை நீக்கவும்.

ஒரு மொழி எத்தனை மொழிபெயர்ப்புகளைச் சேமித்து வைத்துள்ளது என்பது உறுதியாகத் தெரியவில்லை எனில், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.