நிறத்தைத் தனிப்பயனாக்கும் அமைப்புகள்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் பிரிவுகள், பிளாக்குகள் மற்றும் பொது அமைப்புகளிலுள்ள கூறுகளின் நிறங்களை நிற உள்ளீட்டுப் புலங்கள் மூலம் நீங்கள் தனிப்பயனாக்கலாம். உங்கள் தீமில் கிடைக்கும் நிற உள்ளீட்டுப் புலங்களானது, உங்கள் தீம் மூலம் நிறங்கள் எப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து அமையும். பின்வரும் ஏதேனும் ஒரு நிற அமைப்பின் மூலமாக நிறங்கள் நிர்வகிக்கப்படுகின்றன: ​

  • Horizon 4.0.0 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள் போன்ற புதிய தீம்களில் வண்ணத் தட்டுகள் கிடைக்கின்றன. வண்ணத் தட்டு என்பது உங்கள் முழுத் தீமிற்கும் பொருந்தக்கூடிய பெயரிடப்பட்ட பிராண்ட் நிறங்களின் தொகுப்பாகும். வண்ணத் தட்டின் நிறத்தைத் தனிப்பயன் நிறம் கொண்டு மேலெழுத அல்லது ஒதுக்கப்பட்ட வண்ணத் தட்டின் நிறத்தை மாற்ற, பிரிவுகள் மற்றும் பிளாக்குகளில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு நிற உள்ளீட்டுப் புலம் இருக்கலாம்.
  • Horizon 4.0.0 பதிப்பிற்கு முன்பான அனைத்து இலவச Shopify தீம்கள் போன்று, பெரும்பாலான தீம்களில் வண்ணத் திட்டங்கள் கிடைக்கும். வண்ணத் திட்டம் என்பது பின்னணி, உரை மற்றும் பொத்தான் போன்ற பல்வேறு நிறங்களின் குழுவாகும். பின்பு, இதை நீங்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோர் முழுவதுமுள்ள பல்வேறு பிரிவுகளுக்குப் பயன்படுத்தலாம். உங்கள் தீம் அமைப்புகளில் பல வண்ணத் திட்டங்களை நீங்கள் உருவாக்கலாம்.

தீம் எடிட்டரிலுள்ள தீம் அமைப்புகள் பக்கத்தின் தனிப்பயன் CSS பிரிவில், CSS கொண்டு நிறங்களை நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது அதற்குப் பதிலாக தீம் குறியீட்டு எடிட்டரைப் பயன்படுத்தலாம். உங்கள் தீம் அமைப்புகள் அல்லது தீம் குறியீட்டு எடிட்டரில் CSS-ஐச் சேர்ப்பது குறித்து மேலும் அறிக.

தீம் எடிட்டரில் நிறங்களைத் தனிப்பயனாக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டியவை

தீம் எடிட்டரில் நிறங்களைத் தனிப்பயனாக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய பின்வருவனவற்றைச் சரிபார்க்கவும்:

  • உங்கள் தீமில் கிடைக்கும் நிற உள்ளீட்டுப் புலங்களின் வகையானது, உங்கள் தீமின் மூலத்தையும் பதிப்பையும் பொறுத்தது. தீம் பதிப்புகள் குறித்து மேலும் அறிக.
  • நீங்கள் தனிப்பயனாக்கக்கூடிய உங்கள் தளத்தின் கூறுகளானது, உங்கள் தீமில் கிடைக்கும் அமைப்புகளைப் பொறுத்தது.
  • வார்ப்புருக்களில் தனிப்பட்ட நிற உள்ளீட்டுப் புலங்கள் இல்லை. உங்கள் ஆன்லைன் ஸ்டோர் முழுவதிலும் உங்கள் ஸ்டோர் வடிவமைப்பு சீராக இருப்பதை இது உறுதிசெய்கிறது. வார்ப்புருவானது ஒரு ஸ்டோரின் முதன்மைப் பக்கமாக அல்லது முதன்மை உள்ளடக்கமாகக் கருதப்படுகிறது. உங்கள் ஸ்டோர் முழுவதும் வெவ்வேறு நிறங்களைக் கொண்டிருப்பது மோசமான பயனர் அனுபவத்திற்கு வழிவகுக்கலாம், மேலும் வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளை வாங்காமல் உங்கள் ஸ்டோரை விட்டு வெளியேறக் காரணமாகலாம்.

வண்ணத் திட்டங்கள்

வண்ணத் திட்டம் என்பது உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் வெவ்வேறு பகுதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய பின்னணிகள், உரை மற்றும் விளிம்புகள் போன்ற வெவ்வேறு கூறுகளுக்கான நிற உள்ளீட்டுப் புலங்களின் குழுவாகும். வண்ணத் திட்டமானது திட்டத்திலுள்ள தொடர்புடைய நிறங்களைப் பிரிவு அல்லது அமைப்பில் உள்ள பொருத்தமான கூறுகளுக்குத் தானாகவே பயன்படுத்தும்.

தீம் எடிட்டரில் உள்ள வண்ணத் திட்டத் தேர்வி

தீம் எடிட்டரின் தீம் அமைப்புகள் பிரிவில் உங்கள் வண்ணத் திட்டங்களை உருவாக்கி, அவற்றை நிர்வகிக்கவும், பின்னர் உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் இணக்கமான பகுதிகளில் திட்டத்தைப் பயன்படுத்த, வண்ணத் திட்டம் அமைப்பைப் பயன்படுத்தவும். உங்களால் 21 வண்ணத் திட்டங்கள் வரை வைத்திருக்க முடியும்.

உங்கள் தீம் எடிட்டரின் தீம் அமைப்புகள் பிரிவில் வண்ணத் திட்டங்களை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.

வண்ணத் திட்டளுக்கான எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டாக, தீம் எடிட்டரில் உள்ள தீம் அமைப்புகள் பக்கத்தின் Colors பிரிவில், பின்வரும் நிற உள்ளீட்டுப் புலங்களுடன் திட்டம் 2 என்ற பெயரில் ஒரு வண்ணத் திட்டத்தைச் சேர்க்கிறீர்கள்:

  • பின்னணி அமைப்பை இளஞ்சிவப்பு நிறத்திற்கு அமைக்கவும்.
  • இணைப்புகள் அமைப்பை அடர் சிவப்பு நிறத்திற்கு அமைக்கவும்.
  • உரை அமைப்பை கருப்பு நிறத்திற்கு அமைக்கவும்.
எடுத்துக்காட்டு வண்ணத் திட்ட அமைப்புகள்.

உங்கள் முகப்புப்பக்கத்திலுள்ள ரிச் டெக்ஸ்ட் பிரிவில், தோற்றம் பிரிவில், வண்ணத் திட்டம் உள்ளீட்டுப் புலத்தில் திட்டம் 2 என்பதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். ரிச் டெக்ஸ்ட் பிரிவின் பின்னணி இளஞ்சிவப்பு நிறத்திற்கும், உரை கருப்பு நிறத்திற்கும் மற்றும் இணைப்புகள் அடர் சிவப்பு நிறத்திற்கும் மாறும்.

ஆன்லைன் ஸ்டோரின் முகப்புப்பக்கத்தில் உள்ள ஒரு ரிச் டெக்ஸ்ட் பிரிவிற்குப் பயன்படுத்தப்பட்ட வண்ணத் திட்டம்.

வண்ணத் தட்டுகள்

உங்கள் தீம் வண்ணத் தட்டுகளைப் பயன்படுத்தினால், தீம் எடிட்டரிலுள்ள பல அமைப்புகளில் நிறங்களை விரைவாக மீண்டும் பயன்படுத்த ஒரு வண்ணத் தட்டை உருவாக்கி, உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள கூறுகளுக்கு வண்ணத் தட்டின் நிறங்களை ஒதுக்கலாம். வண்ணத் தட்டிலிருந்து நீங்கள் ஒரு நிறத்தை மாற்றும்போது, அந்த நிறத்தைப் பயன்படுத்தும் அனைத்து அமைப்புகளும் புதிய நிறத்திற்குத் தானாகவே மாறும். அதாவது, நீங்கள் ஒரு நிறத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பயன்படுத்த விரும்பும்போது, ஹெக்ஸாடெசிமல் குறியீடுகளை நினைவில் கொள்ள வேண்டியதில்லை.

தீம் எடிட்டரில் உள்ள வண்ணத் தட்டு

முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் முக்கிய நிறங்கள் போன்ற எந்த நிறங்களை வண்ணத் தட்டில் சேர்க்க வேண்டும் என்பதை உங்கள் தீமின் டெவெலப்பர் தேர்வுசெய்கிறார். வண்ணத் தட்டின் நிறத்தை நீங்கள் மாற்றும்போது, அதைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பிரிவுக்கும் பிளாக்கிற்கும் அந்தப் புதுப்பிப்பு பரவுகிறது. உங்கள் தீமை நீங்கள் தனிப்பயனாக்கினால் தவிர, தீம் டெவெலப்பரால் சேர்க்கப்படாத கூறுகளில் வண்ணத் தட்டின் நிறங்களை உங்களால் சேர்க்க முடியாது.

உங்கள் தீமின் கூறுகளுக்குத் தானாகவே ஒதுக்கப்படும் உங்கள் வண்ணத் தட்டின் நிறங்களுக்கு, அந்த நிறத்தை அகற்றவோ மீண்டும் ஒதுக்கவோ தீம் எடிட்டரில் தொடர்புடைய உள்ளீட்டுப் புலம் இல்லாமல் போகலாம். எடுத்துக்காட்டாக, அனைத்துப் பக்கப் பின்னணி நிறங்களுக்கும் உங்கள் வண்ணத் தட்டின் முதன்மை நிறம் ஒதுக்கப்பட்டிருக்கலாம். உங்கள் தீமின் ஹெடர் அல்லது அடிப்பகுதி போன்ற சில பிரிவுகளில், அந்தப் பிரிவின் பின்னணி நிறத்தை மேலெழுதப் பயன்படுத்தக்கூடிய பின்னணி நிற உள்ளீட்டுப் புலம் இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தப் பக்கப் பின்னணி நிறத்திற்கும் எந்த அமைப்பும் இருக்காது. மேலெழுதக்கூடிய அமைப்புகளுடன் அல்லது அவை இல்லாமல் உங்கள் தீமின் எந்தப் பகுதிகளில் வண்ணத் தட்டின் நிறம் தானாகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் தீர்மானிக்க, உங்கள் தீமின் வெவ்வேறு பக்கங்களுக்குச் செல்லவும்.

கிடைக்கக்கூடிய எந்தவொரு நிற உள்ளீட்டுப் புலங்களுக்கும் பிரத்யேக நிறத்தை ஒதுக்குவதன் மூலமும் நீங்கள் வண்ணத் தட்டின் நிறங்களை மேலெழுதலாம். இந்த மேலெழுதுதல்கள் மூலம், உங்கள் ஒட்டுமொத்தப் பிராண்ட் நிறங்களை மாற்றாமல் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனிப்பயனாக்க முடியும்.

நிறத் தேர்வியில் உங்கள் தீமின் வண்ணத் தட்டிற்குப் புதிய நிறங்களை நீங்கள் சேர்க்கலாம் மற்றும் தீம் எடிட்டரின் தீம் அமைப்புகள் பக்கத்திலுள்ள நிறங்கள் பிரிவிலிருந்து நிறங்களை நிர்வகிக்கலாம். உங்கள் தீம் அமைப்புகளில் வண்ணத் தட்டுகளை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.

ஒரு பிரிவு அல்லது பிளாக்கில் உள்ள நிறத்தை மேலெழுதுதல்

சில பிரிவுகள் மற்றும் பிளாக்குகளில் நிற உள்ளீட்டுப் புலங்கள் உள்ளன, அவற்றைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட கூறின் நிறத்தை நீங்கள் மாற்றலாம். உங்கள் வண்ணத் தட்டிலிருக்கும் வேறொரு நிறத்திற்கு அல்லது ஒரு பிரத்யேக நிறத்திற்கு நீங்கள் நிறத்தை மாற்றலாம். நீங்கள் ஒரு நிறத்தை மேலெழுத அமைக்கும்போது, அந்தப் பிரிவு அல்லது பிளாக்கிற்கான வண்ணத் தட்டின் நிறத்தை விட மேலெழுதப்பட்ட நிறம் முன்னுரிமை பெறும். எடுத்துக்காட்டாக, உங்கள் தீமின் அடிப்பகுதி பிரிவிலுள்ள பின்னணி நிறம் அமைப்பிற்கு உங்கள் வண்ணத் தட்டிலிருக்கும் ஒரு நிறத்தை நீங்கள் ஒதுக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோருக்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தீமிற்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தீம் எடிட்டரில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் பிரிவு அல்லது பிளாக்கைக் கிளிக் செய்யவும்.

  4. கிடைக்கக்கூடிய நிற உள்ளீட்டுப் புல அமைப்பைக் கிளிக் செய்யவும்.

  5. வண்ணத் தட்டிலுள்ள ஸ்வாட்சுகளிலிருந்து ஒரு நிறத்தைத் தேர்வுசெய்யவும் அல்லது தனிப்பயன் ஹெக்ஸ் நிறக் குறியீட்டை உள்ளிடவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

நிற உள்ளீட்டுப் புல வகைகள்

தீம் எடிட்டரிலுள்ள பின்வரும் வகையான உள்ளீட்டுப் புலங்கள் ஒரு நிற மதிப்பை ஏற்றுக்கொள்ளும்:

  • நிறத் தேர்வி அல்லது உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள இயங்குநிலை நிற ஆதாரத்தைப் பயன்படுத்தி, ஒரு முழுமையான நிறத்தை ஒதுக்க நிறம் உள்ளீட்டுப் புலத்தைப் பயன்படுத்தவும்.
  • குறிப்பிட்ட ஆப்ஜெக்ட்டிற்கு வண்ணத் திட்டத்தை ஒதுக்க, பிரிவுகளிலும் பொதுவான தீம் அமைப்புகளிலும் உள்ள வண்ணத் திட்டம் உள்ளீட்டுப் புலத்தைப் பயன்படுத்தவும்.
  • கிரேடியண்ட் தேர்வியைக் கொண்டு ஒரு கிரேடியண்டை ஒதுக்க பின்னணி கிரேடியண்ட் உள்ளீட்டுப் புலத்தைப் பயன்படுத்தவும்.

உங்கள் தீமில் கிடைக்கும் நிற உள்ளீட்டுப் புலங்கள் உங்கள் தீமின் பதிப்பு, அமைப்பு மற்றும் டெவலப்பரைப் பொறுத்து மாறுபடும்.

நிறத் தேர்வி மூலம் ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும்

ஒரு தனிப்பட்ட நிறத்தை ஒதுக்க நீங்கள் நிறத் தேர்வியைப் பயன்படுத்தலாம். நிறத் தேர்வியில் பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம்:

  • தேர்வியின் மாதிரிக்காட்சியில் கிடைக்கும் நிறங்களின் சாயலை மாற்ற நிற ஸ்லைடரைப் பயன்படுத்தவும்.
  • #0000FF போன்ற ஒரு குறிப்பிட்ட நிறத்திற்கான குறியீட்டை (எ.கா. நிலையான, தூய நீல நிறம்) உள்ளிட ஹெக்ஸாடெசிமல் புலத்தைப் பயன்படுத்தவும்.
  • red, black அல்லது blue போன்ற நிறப் பெயர்களைப் பயன்படுத்தவும்.
  • RGB நிறக் குறியீடுகளைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் திரையில் எங்கிருந்தும் கர்சரைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட நிறத்தைத் தேர்ந்தெடுக்க, Eye Dropper என்பதைப் பயன்படுத்தவும்.
  • தேர்வியின் மாதிரிக்காட்சியில் கிடைக்கும் நிறங்களின் எண்ணிக்கையை 40 ஆகக் குறைக்க, Grid Icon என்பதைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் தீம் நிறத் தட்டுகளைப் பயன்படுத்தினால், நிறத் தட்டு பிரிவிலிருந்து ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தீம் எடிட்டரில் உள்ள அமர்வின்போது முன்பு நீங்கள் ஏதேனும் நிறங்களை மேனுவலாகத் தேர்ந்தெடுத்திருந்தால், சமீபத்தில் பயன்படுத்தியவை நிற ஸ்வாட்சுகளிலிருந்தும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

நிற ஆதாரத்தை இணைக்கவும்

நிற உள்ளீட்டுப் புலம், நிறத் தேர்விக்குப் பதிலாக நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு இயங்குநிலை ஆதாரத்தை ஏற்கும். உங்களது Shopify நிர்வாகியிலுள்ள பின்வரும் ஆதாரங்களில் ஒன்றிலிருந்து இயங்குநிலை மூலத்தை நீங்கள் இணைக்கலாம்:

  • அமைப்புகள் > பொதுவானவை > பிராண்ட் பக்கத்தின் நிறங்கள் பிரிவில் உங்கள் பிராண்ட் நிறங்களை இணைக்கவும்.
  • அமைப்புகள் > மெட்டாஃபீல்டுகள் மற்றும் மெட்டாஆப்ஜெக்ட்டுகள் பக்கத்தில், நிறம் வகை மெட்டா ஆப்ஜெக்ட் வரையறைகளுடன் ஒரு மெட்டாஆப்ஜெக்ட்டை இணைக்கவும்.

உங்கள் Shopify நிர்வாகியில் பிராண்ட் நிறங்களைச் சேர்ப்பது பற்றியும் தீம் எடிட்டரில் மெட்டாஆப்ஜெக்ட்டுகளை இணைப்பது மற்றும் காண்பிப்பது பற்றியும் மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோருக்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தீமிற்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்திற்குரியது: முகப்புப் பக்கத்தைத் தவிர வேறு ஒரு வார்ப்புருவைத் தனிப்பயனாக்க, மெனு பட்டியில் உள்ள வார்ப்புரு மெனுவிலிருந்து நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. நீங்கள் நிறத்தைச் சேர்க்க விரும்பும் நிற உள்ளீட்டுப் புலத்தைக் கிளிக் செய்யவும்.

  5. உள்ளீட்டுப் புலத்திற்கு அடுத்துள்ள Connect dynamic source பொத்தானைக் கிளிக் செய்யவும்.

  6. மெட்டாஆப்ஜெக்ட்டுகள் அல்லது பிராண்ட் ஆதாரத்திலிருந்து ஒரு மெட்டாஆப்ஜெக்ட்டை அல்லது மெட்டாஆப்ஜெக்ட் குறிப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

கிரேடியண்ட்கள்

உங்கள் தீமில் பின்னணி கிரேடியண்ட் உள்ளீட்டுப் புலம் இருந்தால், உங்கள் தீமின் சில பகுதிகளில் உள்ள பின்னணி ஆப்ஜெக்ட்டிற்கு ஒரு கிரேடியண்டைச் சேர்க்கலாம். கிரேடியண்டைப் பயன்படுத்த முடியவில்லை எனில், அதற்குப் பதிலாக பின்னணி நிற அமைப்பு பயன்படுத்தப்படும்.

தீம் எடிட்டரில் கிரேடியண்ட் தேர்வி

நிறங்கள், கிரேடியண்ட் ஸ்டைல், கோணம், நிலை மற்றும் கிரேடியண்டின் ஒளிபுகா நிலை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க கிரேடியண்ட் தேர்வி உங்களை அனுமதிக்கிறது. கிரேடியண்ட் தேர்வியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பங்கள் தீம் எடிட்டரில் நிகழ்நேரத்தில் மாதிரிக்காட்சியாகக் காண்பிக்கப்படும்.

மதிப்பாய்வுச் சரிபார்ப்பியைக் கொண்டுள்ள தீம் குறியீடு எடிட்டரில் CSS குறியீட்டைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு கிரேடியண்ட் பின்னணியையும் உருவாக்கலாம். உங்கள் தீம் அமைப்புகள் அல்லது தீம் குறியீடு எடிட்டரில் CSS சேர்ப்பது பற்றி மேலும் அறிக.

கிரேடியண்ட்களை அமைத்தல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோருக்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தீமிற்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. settings ஐகானைக் கிளிக் செய்து, நிறங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. திட்டங்கள் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் ஏற்கனவே உள்ள திட்டத்தைக் கிளிக் செய்யவும்.

  5. பின்னணி கிரேடியண்ட் போன்ற கிரேடியண்ட் நிற ஸ்வாட்ச் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

  6. நீங்கள் முதல்முறையாக ஒரு கிரேடியண்டை அமைக்கும்போது, அதிலிருந்து நீங்கள் தேர்வுசெய்ய சில முன்னமைக்கப்பட்ட விருப்பங்கள் காண்பிக்கப்படும். விருப்பங்கள் பேனலைத் திறக்க, முன்னமைக்கப்பட்ட ஏதேனும் கிரேடியண்டைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. உங்கள் கிரேடியண்ட் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும்:

  • லீனியர் அல்லது ரேடியல் கிரேடியண்டிற்கு இடையில் தேர்வுசெய்யவும். நீங்கள் விரும்பும் கிரேடியண்ட் ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கப் பொத்தான்களைப் பயன்படுத்தவும்.
  • மேல் மற்றும் கீழ் அம்புக்குறிகளுடன் உங்கள் கிரேடியண்டின் கோணத்தை அமைக்கவும். கோணத்தின் சதவீதத்தை 5 ஆக அதிகரிக்க அல்லது குறைக்க, மேல் அல்லது கீழ் அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் கிரேடியண்டின் நிலையைத் தேர்ந்தெடுக்க, ஸ்லைடரைப் பயன்படுத்தவும் அல்லது புலத்தில் ஒரு எண் மதிப்பை உள்ளிடவும்.
  • ஒரு குறிப்பிட்ட நிற ஹெக்ஸ் குறியீட்டை உள்ளிடவும் அல்லது ஒரு சாயலைத் தேர்ந்தெடுக்க நிற ஸ்லைடரைப் பயன்படுத்தவும். சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறங்கள் கிரேடியண்ட் விருப்பங்கள் பேனலின் கீழே காண்பிக்கப்படும்.
  • கிரேடியண்டை ஒளிபுகாதவாறு செய்ய, வலதுபுறத்தில் உள்ள ஸ்லைடரைப் பயன்படுத்தி அதன் ஒளிபுகும் தன்மையைத் தேர்ந்தெடுக்கவும். ஹெக்ஸ் நிறக் குறியீட்டிற்கு அடுத்துள்ள புலத்திலும் நீங்கள் ஒரு சதவீதத்தை உள்ளிடலாம்.
  1. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

கிரேடியண்ட்களை அமைக்க CSSஐப் பயன்படுத்தவும்

பின்னணி நிறத்தை அமைக்க பெரும்பாலான CSS background பண்பு மதிப்புகளைப் பயன்படுத்தலாம். முழுமையான நிறங்கள் (எடுத்துக்காட்டாக, #000000, black, rgb(0,0,0), rgba(0,0,0,0), hsl(0, 0%, 0%) மற்றும் hsla(0, 0%, 0%, 1) ஆகியவை அனைத்துமே முழுமையான கருப்புப் பின்னணியை உருவாக்குகின்றன) அல்லது கிரேடியண்ட்களுக்கு (எடுத்துக்காட்டாக, linear-gradient(red, green), radial-gradient(red, green) அல்லது conic-gradient(red, green)) இந்தப் புலத்தை நீங்கள் பயன்படுத்தலாம். கிரேடியண்ட்களைத் திரும்பத் திரும்பவும் பயன்படுத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோருக்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தீமிற்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. settings ஐகானைக் கிளிக் செய்து, நிறங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. திட்டங்கள் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் ஏற்கனவே உள்ள திட்டத்தைக் கிளிக் செய்யவும்.

  5. நீங்கள் திருத்த விரும்பும் கிரேடியண்டைக் கிளிக் செய்யவும்.

  6. கிரேடியண்டிற்கு அடுத்துள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்து, பிறகு CSS என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. CSS குறியீடு புலத்தில், உங்கள் கிரேடியண்ட் குறியீட்டைத் தட்டச்சு செய்யவும் அல்லது ஒட்டவும். தீம் எடிட்டரின் மாதிரிக்காட்சியானது பொருத்தமான இடத்தில் உங்கள் கிரேடியண்டைக் காண்பிக்கும்.

  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தீம் எடிட்டரில் கிரேடியண்ட் CSS குறியீடு புலம்

கிரேடியண்டை அகற்றுதல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோருக்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தீமிற்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. settings ஐகானைக் கிளிக் செய்து, நிறங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. திட்டங்கள் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் ஏற்கனவே உள்ள திட்டத்தைக் கிளிக் செய்யவும்.

  5. நீங்கள் அகற்ற விரும்பும் கிரேடியண்டைக் கிளிக் செய்யவும்.

  6. கிரேடியண்டை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.