தீம்களைப் பதிவிறக்குதல்
பின்வரும் காரணங்களுக்காக உங்கள் கணினியில் நீங்கள் ஒரு தீமைப் பதிவிறக்க வேண்டியிருக்கலாம்:
- தீமில் மாற்றங்களைச் செய்ய உங்கள் கணினியில் உள்ள எடிட்டரைப் பயன்படுத்துவதற்கு.
- உங்கள் தீமுக்கான காப்புநகலை உருவாக்குவதற்கு.
- நீங்கள் 20 தீம்கள் எனும் வரம்பை அடைந்துவிட்டால், பின்னர் பயன்படுத்துவதற்காகத் தீமைச் சேமிப்பதற்கு.
தீம் பதிவிறக்கங்களில் உங்கள் ஸ்டோரின் தயாரிப்புகள், சேகரிப்புகள், மெனுக்கள், பக்கங்கள், வலைப்பதிவு இடுகைகள், படங்கள் அல்லது உள்ளடக்கம் > கோப்புகள் பிரிவில் உள்ள பிற கோப்புகள் சேர்க்கப்படாது. இந்த ஆதாரங்களுடன் வேறு ஸ்டோருக்குத் தீமைப் பதிவேற்ற விரும்பினால், பிற ஸ்டோரில் உள்ள உள்ளடக்கத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் அல்லது நகலெடுக்க வேண்டும். ஸ்டோரை நகலெடுப்பது குறித்து மேலும் அறிக.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் பதிவிறக்க விரும்பும் தீமிற்கு, செயல்கள் மெனுவைத் திறக்க
என்பதைக் கிளிக் செய்து, பின்னர் தீம் கோப்பைப் பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
எல்லாத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் பதிவிறக்க விரும்பும் தீமிற்கு, செயல்கள் மெனுவைத் திறக்க
என்பதைத் தட்டி, பின்னர் தீம் கோப்பைப் பதிவிறக்கு என்பதைத் தட்டவும்.
உங்கள் பணியாளர்கள் உள்நுழைவுடன் தொடர்புடைய மின்னஞ்சலுக்குத் தீம் ஆனது .zip கோப்பாக அனுப்பப்படும்.
ஒரு தீமைப் பதிவிறக்கிய பிறகு, உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து அதை நீக்குவது பாதுகாப்பானது. எதிர்காலத்தில் மீண்டும் அதே தீமைச் சேர்க்க விரும்பினால், நீங்கள் அதைப் பதிவேற்றலாம்.