தீம்களை நகலெடுத்தல்

ஒரு தீமைத் தனிப்பயனாக்குவதற்கு முன் காப்புநகலை உருவாக்குவது சிறந்த யோசனையாகும், இதன்மூலம் தேவைப்பட்டால் மாற்றங்களை நிராகரித்துவிட்டு மீண்டும் தொடங்கலாம். உங்கள் ஸ்டோரில் தீமை நகலெடுத்து, அந்த நகலைத் தனிப்பயனாக்கலாம்.

நீங்கள் ஏற்கனவே 20 தீம்களை உங்களின் Shopify நிர்வாகியில் சேர்த்திருந்தால், இன்னொன்றை நகலெடுக்கும் முன் ஒன்றை நீக்க வேண்டும். தீமை நீக்குவது நிரந்தரமான செயலாகும். நீக்குவதற்கு முன் உங்கள் தீமைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

வேறு ஸ்டோரில் சேர்ப்பதற்கு நீங்கள் தீமை நகலெடுக்க விரும்பினால், தீமைப் பதிவிறக்க வேண்டும். தீம் பதிவிறக்கங்களில் உங்கள் ஸ்டோரின் தயாரிப்புகள், சேகரிப்புகள், மெனுக்கள், பக்கங்கள், வலைப்பதிவு இடுகைகள், படங்கள் அல்லது உள்ளடக்கம் > கோப்புகள் பிரிவில் உள்ள பிற கோப்புகள் சேர்க்கப்படாது. இந்த ஆதாரங்களுடன் வேறு ஸ்டோருக்குத் தீமைப் பதிவேற்ற விரும்பினால், பிற ஸ்டோரில் உள்ள உள்ளடக்கத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் அல்லது நகலெடுக்க வேண்டும். ஸ்டோரை நகலெடுப்பது குறித்து மேலும் அறிக.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் நகலெடுக்க விரும்பும் தீமிற்கு, செயல்கள் மெனுவைத் திறக்க கிடைமட்ட மெனு பொத்தானைக் கிளிக் செய்து, பின்னர் நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, மெனு ஐகானைத் தட்டவும்.

  2. விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.

  3. எல்லாத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் நகலெடுக்க விரும்பும் தீமிற்கு, செயல்கள் மெனுவைத் திறக்க கிடைமட்ட மெனு பொத்தானைத் தட்டி, பின்னர் நகலெடு என்பதைத் தட்டவும்.

தீம்கள் பக்கத்தில் நகலெடுக்கப்பட்ட தீம் காட்டப்படும். அதற்குக் நகல் (Copy of) + நீங்கள் நகலெடுத்த தீமின் பெயர் எனப் பெயரிடப்பட்டிருக்கும்.