தீம் கட்டமைப்புப் பதிப்புகள் மற்றும் மூலங்கள்
உங்கள் தீம் கட்டமைப்புப் பதிப்பு மற்றும் உங்கள் தீம் டெவலப்பரின் மூலம் ஆகியவை உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு எந்தெந்த அம்சங்கள் மற்றும் தனிப்பயனாக்கங்கள் கிடைக்கும் என்பதையும், அத்துடன் உங்கள் தீமிற்கான ஆதரவை எங்கே கண்டறிவது என்பதையும் தீர்மானிக்கின்றன.
தீம் எடிட்டரில் உங்கள் தீமின் டெவலப்பர் மற்றும் பதிப்பைக் கண்டறியலாம்.
இந்தப் பக்கத்தில்
தீம் மூலங்கள்
உங்கள் ஸ்டோரில் நீங்கள் சேர்க்கக்கூடிய அனைத்து தீம்களும் Shopify-ஆல் அல்லது மூன்றாம் தரப்பு டெவலப்பரால் உருவாக்கப்பட்டவையாகும். பின்வரும் மூலங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து தீம்கள் கிடைக்கலாம்:
- Shopify Theme Store-இல் Shopify வழங்கும் இலவச தீம்கள் மற்றும் மூன்றாம் தரப்பு தீம் டெவலப்பர்கள் வழங்கும் கட்டண தீம்கள் ஆகிய இரண்டுமே உள்ளன.
- Shopify-உடன் இணக்கமான தீம்கள் Theme Store-க்கு வெளியேயும் கிடைக்கக்கூடும். இதில் தனிப்பயனாக உருவாக்கப்பட்ட தீம்கள் மற்றும் ஆதரிக்கப்படாத மூன்றாம் தரப்புத் தளங்களின் தீம்களும் அடங்கும். Shopify Theme Store தவிர வேறு எந்தத் தளத்திலிருந்தும் தீமை நிறுவ வேண்டாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. Theme Store-க்கு வெளியே கிடைக்கும் தீம்கள் அவற்றின் தரம் அல்லது முக்கிய Shopify அம்சங்களுடனான இணக்கத்தன்மை குறித்துச் சரிபார்க்கப்படாதவை, அத்துடன் அவை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் எதிர்பாராதச் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
தீம் கட்டமைப்புப் பதிப்பு
உங்கள் தீமிற்கு எந்தெந்த அம்சங்கள் கிடைக்கும் என்பதைத் தீம் கட்டமைப்புப் பதிப்பு தீர்மானிக்கிறது. உங்கள் தீமிலுள்ள கோப்புகளின் தீம் கட்டமைப்பையே தீம் ஆர்கிடெக்சர் விவரிக்கிறது. Shopify உருவாக்கிய அனைத்து தீம்கள், மற்றும் Shopify Theme Store-இலிருந்து பெறப்பட்ட அனைத்து மூன்றாம் தரப்புக் கட்டண தீம்கள் ஆகியவை பின்வரும் கட்டமைப்பு வகைகளில் ஒன்றைக் கொண்டிருக்கும்:
- விண்டேஜ் தீம்கள் என்பவை அசலான தீம் கட்டமைப்பைப் பயன்படுத்தும் தீம்கள் ஆகும். விண்டேஜ் தீம்கள் பிரிவுகள் உள்ளவை அல்லது பிரிவுகள் இல்லாதவை என இருவகைப்படும். விண்டேஜ் தீம்கள் Theme Store-இல் கிடைக்காது. Shopify-இன் இலவச விண்டேஜ் தீம்கள் பாதுகாப்புத் திருத்தங்களைத் தாண்டி வேறெந்தப் புதுப்பிப்புகளையும் பெறாது.
- Online Store 2.0 தீம்கள் என்பவை எல்லாப் பக்கங்களிலுமுள்ள பிரிவுகள், அத்துடன் இயங்குநிலை மூலங்களை ஆதரிக்கும் தீம்களாகும்.
- Horizon தீம்களின் குடும்பம் உட்பட, தீம் பிளாக்குகளை ஆதரிக்கும் தீம்களே சமீபத்திய தீம் கட்டமைப்புப் பதிப்பாகும். இந்தத் தீம்கள் Online Store 2.0 தீம்களில் கிடைக்கும் அனைத்து அம்சங்களையும், அத்துடன் தீம் பிளாக்குகளுடனான மேம்பட்ட தனிப்பயனாக்க அம்சங்களையும் ஆதரிக்கின்றன.
ஒரு தீமின் கட்டமைப்புப் பதிப்பு என்பது உங்கள் வரைவுத் தீம்களிலுள்ள ஒவ்வொரு தீமிற்கும் பிரத்தியேகமானதாகும். உங்களின் வரைவுத் தீம்களில் ஒரே நேரத்தில் வெவ்வேறு கட்டமைப்புப் பதிப்புகளைக் கொண்ட தீம்கள் இருக்கக்கூடும்.
தீம் பதிப்பு எண்
எல்லாத் தீம்களுக்கும் ஒரு பதிப்பு எண் இருக்கும் (எ.கா., 1.0), இது உங்கள் Shopify நிர்வாகியில் தீமுடன் காண்பிக்கப்படும். Theme Store-இல் கிடைக்கும் அதே தீமின் சமீபத்திய பதிப்போடு ஒப்பிடும்போது உங்கள் தீம் எத்தனையாவது பதிப்பு என்பதை அதன் பதிப்பு எண் விவரிக்கிறது. தீம் பதிப்புகளின் வேறுபாடுகள் குறித்து அறிய, தீம் புதுப்பிப்பின் வெளியீட்டுக் குறிப்புகளைப் படிக்கவும்.

தீம் கட்டமைப்புப் பதிப்பின் அம்சங்கள்
உங்கள் தீமின் கட்டமைப்புப் பதிப்பு, உங்கள் தீமுக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்தச் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. குறிப்பிட்ட அம்சங்கள் கிடைப்பது நீங்கள் எந்தத் தீமைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
ஒவ்வொரு தீமிற்கும் கிடைக்கும் குறிப்பிட்ட அமைப்புகள் அந்தத் தீமையே பொறுத்திருக்கும். ஒரு குறிப்பிட்ட தீமிற்குக் கிடைக்கும் தனிப்பயனாக்க விருப்பங்களை ஆராய, தீம் எடிட்டரைப் பயன்படுத்தவும்.
உங்களின் தற்போதைய தீம் கட்டமைப்புப் பதிப்பில் இல்லாத ஒரு அம்சம் உங்களுக்குத் தேவைப்பட்டால், அந்த அம்சங்களை ஆதரிக்கிற புதிய தீமுக்கு Shopify Theme Store-இலிருந்து மாறலாம், அதன் பிறகு உங்கள் தற்போதைய தீமை மாற்றுவதற்கு முன்பு அதைப் தனிப்பயனாக்கிக்கொள்ளலாம். தீம்களைச் சேர்ப்பது மற்றும் மாற்றுவது குறித்து மேலும் அறிக.
| அம்சம் | விண்டேஜ் | OS 2.0 | தீம் பிளாக்குகள் |
|---|---|---|---|
| முகப்புப் பக்கத்திலுள்ள பிரிவுகள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் முகப்புப் பக்கத்திலுள்ள உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குங்கள். உங்களின் பக்கத் தளவமைப்பை உருவாக்க, பிரிவுகளைச் சேர்க்கவும், மறுசீரமைக்கவும் அல்லது அகற்றவும். | ✔ | ✔ | ✔ |
| எல்லாப் பக்கங்களிலுமுள்ள பிரிவுகள் உங்கள் ஆன்லைன் ஸ்டோர் பக்கங்களில் பெரும்பாலானவற்றின் உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குங்கள். பிரத்தியேகப் பக்கத் தளவமைப்புகளை உருவாக்க, பிரிவுகள் மற்றும் பிளாக்குகளைச் சேர்க்கவும், மறுசீரமைக்கவும் அல்லது அகற்றவும். எல்லாப் பக்கங்களிலும் பிரிவுகள் உள்ள தீம்கள் JSON வார்ப்புருக்கள் கொண்டு கட்டமைக்கப்பட்டவை. | ✘ | ✔ | ✔ |
| வார்ப்புருக்களை உருவாக்கு தீம் எடிட்டரிலிருந்து தீமிற்கான புதிய வார்ப்புருக்களை உருவாக்கவும். | ✘ | ✔ | ✔ |
| மேம்படுத்தப்பட்ட செயலி ஆதரவு குறியீடு எதையும் மாற்றாமல் செயலிகளை நிறுவலாம் அல்லது மாற்றலாம். செயலி பிளாக்குகள் மற்றும் செயலி உட்பொதிவுகளைப் பயன்படுத்தி உங்கள் தீமில் எங்கு வேண்டுமானாலும் செயலிச் செயல்பாட்டைச் சேர்க்கலாம். | ✘ | ✔ | ✔ |
| இயங்குநிலை மூலங்களைப் பயன்படுத்தும் மேம்பட்ட உள்ளடக்கம் உங்கள் தீமிலுள்ள அமைப்பை ஒரு இயங்குநிலை மூலத்துடன் இணைப்பதன் மூலம் அதில் இயங்குநிலை மற்றும் பிரத்தியேகமான தகவலைச் சேர்க்கலாம். ஒரு இயங்குநிலை மூலம் என்பது ரிசோர்ஸ் பண்புக்கூறாகவோ மெட்டாஃபீல்டு மதிப்பாகவோ இருக்கலாம். | ✘ | ✔ | ✔ |
| சேகரிப்பு வடிகட்டல் உங்கள் ஸ்டோரிலுள்ள சேகரிப்புகளைக் கிடைக்கும் தன்மை, விலை மற்றும் பலவற்றின் அடிப்படையில் வடிகட்ட வாடிக்கையாளர்களை அனுமதியுங்கள். | ✘ | ✔ | ✔ |
| முன்கணிப்புத் தேடல் நீங்கள் தட்டச்சு செய்யும்போதே பரிந்துரைக்கப்பட்ட முடிவுகளை முன்கணிப்புத் தேடல் காண்பிக்கும். | ✘ | ✔ | ✔ |
| Planet செயலி தனிப்பயனாக்கக்கூடிய Planet பேட்ஜ் மற்றும் சந்தைப்படுத்தல் அசெட்களை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் சேர்ப்பதன் மூலம், கார்பன்-நடுநிலை ஷிப்பிங்கிற்கான உங்கள் அர்ப்பணிப்பை வெளிக்காட்டுங்கள். | ✘ | ✔ | ✔ |
| தீம் பிளாக்குகள் தீம் பிளாக்குகள் மூலம் உங்கள் பிரிவுகள் மற்றும் பிளாக்குகளில் மேம்பட்ட தனிப்பயனாக்கங்களை உருவாக்குங்கள். | ✘ | ✘ | ✔ |
உங்கள் தீம் கட்டமைப்புப் பதிப்பைத் தீர்மானியுங்கள்
பின்வரும் சமயங்களில் உங்கள் தீம் எந்தக் கட்டமைப்புப் பதிப்பைப் பயன்படுத்துகிறது என்பதை நீங்கள் அறிய விரும்பலாம்:
- ஒரு செயலியோ செயலியின் அம்சமோ உங்கள் தீமுடன் இணக்கமாக உள்ளதா என்பதைத் தீர்மானிக்க முயற்சிக்கும்போது.
- சில தீம் கட்டமைப்புப் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும் அம்சங்களில் ஒன்றைப் பயன்படுத்த நீங்கள் விரும்பும்போது.
- தீம் பிளாக்குகளை ஆதரிக்கும் தீம்களில் மட்டுமே கிடைக்கும் அம்சங்களில் ஒன்றைப் பயன்படுத்த நீங்கள் விரும்பும்போது.
- ஒரு குறிப்பிட்ட தனிப்பயனாக்க டுடோரியல் உங்கள் தீமுக்குப் பொருந்துமா என்பதை நீங்கள் அறிய விரும்பும்போது.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் பகுதிக்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புகள் > இயல்புநிலைத் தயாரிப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இயல்புநிலைத் தயாரிப்பு வார்ப்புருவைத் திறக்கும்.
தயாரிப்பு வார்ப்புருப் பிரிவுகளுக்குக் கீழே உள்ள பக்கப்பட்டியை மதிப்பாய்வு செய்யவும். ஒவ்வொரு பக்கத்திலும் பிரிவுகளுடன் இணக்கமான தீம் உங்களிடம் இருந்தால், பிரிவுப் பட்டியலுக்குக் கீழே பிரிவைச் சேர் பொத்தான் தோன்றும்.
பிரிவைச் சேர் பொத்தான் எதுவும் தோன்றவில்லை என்றால், உங்களிடம் வின்டேஜ் பிரிவுகள் கொண்ட தீம் அல்லது வின்டேஜ் பிரிவுகளற்ற தீம் இருக்கலாம். உங்கள் தீம் எந்த வின்டேஜ் கட்டமைப்புப் பதிப்பைப் பயன்படுத்துகிறது என்பதை அறிய, உங்கள் வின்டேஜ் தீம் கட்டமைப்புப் பதிப்பைத் தீர்மானித்தல் என்பதில் உள்ள படிகளைப் பின்பற்றவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
தீம்களை நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.
வார்ப்புருக்கள் என்பதைத் தட்டவும்.
தயாரிப்புகள் > இயல்புநிலைத் தயாரிப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இயல்புநிலைத் தயாரிப்பு வார்ப்புருவைத் திறக்கும்.
தயாரிப்பு வார்ப்புருப் பிரிவுகளுக்குக் கீழே உள்ள பக்கப்பட்டியை மதிப்பாய்வு செய்யவும். ஒவ்வொரு பக்கத்திலும் பிரிவுகளுடன் இணக்கமான தீம் உங்களிடம் இருந்தால், பிரிவுப் பட்டியலுக்குக் கீழே பிரிவைச் சேர் பொத்தான் தோன்றும்.
பிரிவைச் சேர் பொத்தான் எதுவும் தோன்றவில்லை என்றால், உங்களிடம் வின்டேஜ் பிரிவுகள் கொண்ட தீம் அல்லது வின்டேஜ் பிரிவுகளற்ற தீம் இருக்கலாம். உங்கள் தீம் எந்த வின்டேஜ் கட்டமைப்புப் பதிப்பைப் பயன்படுத்துகிறது என்பதை அறிய, உங்கள் வின்டேஜ் தீம் கட்டமைப்புப் பதிப்பைத் தீர்மானித்தல் என்பதில் உள்ள படிகளைப் பின்பற்றவும்.

வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், உங்கள் தீமின் சில பகுதிகள் மற்றவை ஆதரிக்காத அம்சங்களை ஆதரிக்கலாம். உதாரணமாக, உங்கள் தயாரிப்பு வார்ப்புருக்கள் பிரிவுகளைச் சேர்ப்பதையும் அகற்றுவதையும் ஆதரிக்கலாம், ஆனால் உங்கள் சேகரிப்பு வார்ப்புருக்கள் ஆதரிக்காமல் போகலாம். சில அம்சங்கள் செயல்படுவதற்கு JSON வார்ப்புருக்கள் தேவை என்பதே இதற்குக் காரணம். உங்கள் தீமைப் பகுதியாக மட்டுமே நீங்கள் நகர்த்தியிருந்தால், அல்லது Shopify Theme Store-க்கு வெளியே உங்கள் தீமைப் பெற்றிருந்து, தீம் டெவலப்பர் அனைத்துப் பக்கங்களுக்கும் JSON வார்ப்புருக்களைச் சேர்க்கவில்லை என்றால், அனைத்துப் பக்கங்களுக்குமான JSON வார்ப்புருக்கள் உங்களிடம் இல்லாமல் இருக்கலாம்.
உங்கள் வின்டேஜ் தீம் கட்டமைப்புப் பதிப்பைத் தீர்மானித்தல்
நீங்கள் வின்டேஜ் தீமைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, நீங்கள் பிரிவுகள் கொண்ட அல்லது பிரிவுகளற்ற தீமைப் பயன்படுத்துகிறீர்களா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் தீமுக்கு எந்தெந்தத் தனிப்பயனாக்கங்கள் உள்ளன என்பதையும், எந்தவொரு தீம் தனிப்பயனாக்க டுடோரியல்களிலும் எந்தெந்தப் படிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள இது உதவுகிறது.
தீம் எடிட்டரில் உங்கள் தீம் கட்டமைப்புப் பதிப்பைத் தீர்மானிக்க ஒரு வழி, உங்கள் முகப்புப் பக்கத்தின் தளவமைப்பை வரிசைப்படுத்த உங்களால் இழுத்து விட முடியுமா என்பதைச் சரிபார்ப்பதாகும். உங்களால் கூறுகளை இழுத்து விட முடிந்தால், உங்களிடம் பிரிவுகள் கொண்ட தீம் உள்ளது.
நீங்கள் எந்தப் பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்ய, உங்கள் தீம் குறியீட்டிற்குள் உள்ள Sections கோப்புறையைச் சரிபார்க்கவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் பகுதிக்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, செயல்கள் மெனுவைத் திறக்க
பொத்தானைக் கிளிக் செய்து, அதன்பிறகு குறியீட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
பக்கப்பட்டியில் உள்ள கோப்புறைக் கட்டமைப்பைச் சரிபார்க்கவும்:
- Sections கோப்பகத்தில் கோப்புகள் இருந்தால், நீங்கள் பிரிவுகள் கொண்ட தீமைப் பயன்படுத்துகிறீர்கள்.
- Sections கோப்பகத்தில் கோப்புகள் எதுவும் இல்லை என்றால், நீங்கள் பிரிவுகளற்ற தீமைப் பயன்படுத்துகிறீர்கள்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
அனைத்துத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, செயல்கள் மெனுவைத் திறக்க
பொத்தானைத் தட்டி, அதன்பிறகு குறியீட்டைத் திருத்து என்பதைத் தட்டவும்.
பக்கப்பட்டியில் உள்ள கோப்புறைக் கட்டமைப்பைச் சரிபார்க்கவும்:
- Sections கோப்பகத்தில் கோப்புகள் இருந்தால், நீங்கள் பிரிவுகள் கொண்ட தீமைப் பயன்படுத்துகிறீர்கள்.
- Sections கோப்பகத்தில் கோப்புகள் எதுவும் இல்லை என்றால், நீங்கள் பிரிவுகளற்ற தீமைப் பயன்படுத்துகிறீர்கள்.