உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல்
தனிப்பட்ட பயன்முறையைச் செயல்படுத்துவதன் அல்லது முடக்குவதன் மூலம் உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான அணுகலை நீங்கள் நிர்வகிக்கலாம். தனிப்பட்ட பயன்முறையில், உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் பக்கங்கள் அனைத்தும் பார்வையாளர்கள் மற்றும் தேடுபொறிகளிடமிருந்து மறைக்கப்படும், அதற்குப் பதிலாக உங்கள் ஆன்லைன் ஸ்டோர் தனிப்பயனாக்கக்கூடிய லேண்டிங் பக்கத்தைக் காண்பிக்கும். உங்கள் ஸ்டோரின் லேண்டிங் பக்கத்தில் கடவுச்சொல் உள்ளது, தனிப்பட்ட பயன்முறை செயலில் இருக்கும்போது பார்வையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அணுக அனுமதிப்பதற்காக அதை நீங்கள் அவர்களுடன் பகிரலாம்.
நீங்கள் முதன்முதலில் Shopify திட்டத்திற்குப் பதிவுசெய்யும்போது, உங்கள் ஸ்டோர் அணுகல் இயல்புநிலையாகத் தனிப்பட்ட பயன்முறைக்குக் கட்டுப்படுத்தப்படும். தேவையான அமைவுப் படிகளை முடித்த பிறகு, அணுகலைப் பொதுநிலைக்கு மாற்ற உங்கள் ஸ்டோரை அறிமுகப்படுத்தலாம். அறிமுகத்திற்கு உங்கள் ஸ்டோரைத் தயார் செய்வது குறித்து மேலும் அறிக.
உங்கள் Shopify நிர்வாகியின் ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தில் உள்ள அணுகல் அமைவு மெனுவிலிருந்து உங்கள் அணுகல் பயன்முறையை மாற்றலாம், மேலும் உங்கள் கடவுச்சொல் போன்ற கூடுதல் தனிப்பட்ட பயன்முறை அமைப்புகளை ஆன்லைன் ஸ்டோர் > விருப்பத்தேர்வுகள் பக்கத்திலிருந்து நிர்வகிக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் அணுகல் பயன்முறையை மாற்றுதல்
அணுகல் அமைவு மெனு உங்கள் Shopify நிர்வாகியின் ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தில் கிடைக்கிறது, மேலும் இது உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தற்போதைய அணுகல் நிலையைக் காண்பிக்கும். உங்கள் ஸ்டோர் தனிப்பட்ட பயன்முறையில் இருந்தால், மெனுவில் தனிப்பட்டவை என்ற லேபிள் காண்பிக்கப்படும். இல்லையெனில், மெனுவில்
பொது என்ற லேபிள் காண்பிக்கப்படும்.
உங்கள் ஸ்டோரின் அணுகல் பயன்முறையை மாற்றவும் உங்கள் ஸ்டோரின் கடவுச்சொல்லைப் புதுப்பிக்கவும் இந்த மெனுவைப் பயன்படுத்தலாம். B2B வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அணுகலைக் கட்டுப்படுத்துவது போன்ற கூடுதல் தனிப்பட்ட பயன்முறை அமைப்புகளை நிர்வகிக்க, ஆன்லைன் ஸ்டோர் > விருப்பத்தேர்வுகள் என்பதற்குச் செல்லவும்.
படிகள்:
உங்கள் ஸ்டோரைப் பொதுநிலைக்கு மாற்றுதல்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
தனிப்பட்டவை என்பதைக் கிளிக் செய்யவும்.
பொது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்டோரைத் தனிப்பட்டதாக மாற்றுதல்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
பொது என்பதைக் கிளிக் செய்யவும்.
தனிப்பட்டவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: கடவுச்சொல் புலத்தில், உங்கள் கடவுச்சொல்லைப் புதுப்பிக்கவும்.
புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
தனிப்பட்ட பயன்முறை விருப்பத்தேர்வுகளை நிர்வகித்தல்
உங்கள் Shopify நிர்வாகியின் ஆன்லைன் ஸ்டோர் > விருப்பத்தேர்வுகள் பக்கத்திலிருந்து, உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான தனிப்பட்ட பயன்முறையைச் செயல்படுத்தலாம், பார்வையாளர்கள் உங்கள் ஸ்டோரை அணுகப் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம் மற்றும் விருப்பத்தேர்வாக உங்கள் ஸ்டோரின் கடவுச்சொல் பக்கத்தில் தனிப்பயன் செய்தியைச் சேர்க்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் > விருப்பத்தேர்வுகள் என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அணுகல் பிரிவில், தனிப்பட்ட பயன்முறை அமைப்பைச் செயல்படுத்தவும்.
கடவுச்சொல் புலத்தில், உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்குச் சேர்த்து, அணுகலைக் கட்டுப்படுத்த நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை உள்ளிடவும். உங்கள் Shopify நிர்வாகியில் உள்நுழைய நீங்கள் பயன்படுத்தும் அதே கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்.
விரும்பினால்: உங்கள் பார்வையாளர்களுக்கான மெசேஜ் புலத்தில், கடவுச்சொல் பக்கத்தில் பார்வையாளர்களுக்குக் காட்ட விரும்பும் மெசேஜை உள்ளிடவும். நீங்கள் எந்த மெசேஜையும் காட்ட விரும்பவில்லை எனில், இந்தப் புலத்தை காலியாக விடவும்.
விரும்பினால்: உங்கள் ஸ்டோரின் அணுகலை B2B வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என வரம்பிட, B2B வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அணுகலைக் கட்டுப்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
கடவுச்சொல் பாதுகாப்பு பிரிவில், விருப்பத்தேர்வுகள் என்பதைத் தட்டவும்.
கடவுச்சொல் பாதுகாப்பு அமைப்பைச் செயல்படுத்தவும்.
விரும்பினால்: கடவுச்சொல் புலத்தில், உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்குச் சேர்த்து, அணுகலைக் கட்டுப்படுத்த நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை உள்ளிடவும். உங்கள் Shopify நிர்வாகியில் உள்நுழைய நீங்கள் பயன்படுத்தும் அதே கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்.
விரும்பினால்: உங்கள் பார்வையாளர்களுக்கான மெசேஜ் புலத்தில், கடவுச்சொல் பக்கத்தில் பார்வையாளர்களுக்குக் காட்ட விரும்பும் மெசேஜை உள்ளிடவும். நீங்கள் எந்த மெசேஜையும் காட்ட விரும்பவில்லை எனில், இந்தப் புலத்தை காலியாக விடவும்.
விரும்பினால்: உங்கள் ஸ்டோரின் அணுகலை B2B வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என வரம்பிட, B2B வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அணுகலைக் கட்டுப்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
உங்கள் கடவுச்சொல் பக்க வார்ப்புருவைத் தனிப்பயனாக்குதல்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் தனிப்பட்ட பயன்முறை செயலில் இருக்கும்போது, வாடிக்கையாளர் உங்கள் இணையதளத்தைப் பார்வையிட்டால், கடவுச்சொல் பக்கம் லேண்டிங் பக்கமாகக் காண்பிக்கப்படும்.
இயல்பாக, கடவுச்சொல் பக்கமானது தீம் எடிட்டரில் பிரத்தியேக கடவுச்சொல் ஹெடர் மற்றும் கடவுச்சொல் அடிப்பகுதி பிரிவுகளைக் கொண்டிருக்கும், அத்துடன் இப்பக்கம் மின்னஞ்சல் பதிவு பேனர் பிரிவையும் கொண்டிருக்கும்.
கடவுச்சொல் ஹெடர் பிரிவு, உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் மற்ற பகுதிகளுக்கு நீங்கள் அமைத்துள்ளதைவிட வித்தியாசமான ஹெடரை கடவுச்சொல் பக்கத்தில் காண்பிக்கும்.
மின்னஞ்சல் பதிவு பேனர் பிரிவு, வாடிக்கையாளர்கள் கடவுச்சொல் பக்கத்திலிருந்தே உங்கள் மின்னஞ்சல் சந்தைப்படுத்தலுக்குச் சந்தாதாரராகும் வழியை வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோர் எப்போது திறக்கப்படும் என்பது போன்ற உங்கள் வணிகம் குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் கடவுச்சொல் பக்க வார்ப்புரு அமைப்புகளைத் திருத்துதல்
தீம் எடிட்டர் மூலம் உரை, நிறங்கள், தட்டச்சுக்கலை போன்ற உங்கள் கடவுச்சொல் பக்க உள்ளடக்கத்தைத் திருத்தலாம்.
ஒவ்வொரு தீமுக்குமான பிரத்தியேகத் தனிப்பயனாக்க அமைப்புகள், உங்கள் தீம் டெவலப்பர் மற்றும் தீமின் பதிப்பைப் பொறுத்தது. உங்கள் தீமின் பதிப்பைக் கண்டறிவது குறித்து மேலும் அறிக.
உங்கள் ஸ்டோர் தனிப்பட்ட பயன்முறையில் இருந்தால், ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தில் உள்ள அணுகல் அமைப்புகள் மெனுவின் மாதிரிக்காட்சியானது உங்கள் கடவுச்சொல் பக்கத்தைக் காண்பிக்கும். தீம் எடிட்டரில் உங்கள் கடவுச்சொல் பக்கத்தை நேரடியாகத் திறக்க, அந்த மாதிரிக்காட்சியில் உள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
முகப்புப் பக்கம் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, கடவுச்சொல் என்பதைக் கிளிக் செய்யவும்.
கடவுச்சொல் பக்கத்திலுள்ள பிரிவுகளைத் திருத்த, பின்வரும் படிகளை மேற்கொள்ளவும்:
- நீங்கள் திருத்த விரும்பும் பிரிவைக் கிளிக் செய்யவும். பெரும்பாலான தீம்களில் ஹெடர், உள்ளடக்கம் அல்லது வார்ப்புரு மற்றும் அடிப்பகுதிப் பிரிவுகள் இருக்கும்.
- பிரிவின் அமைப்புகளிலும் விருப்பத்தேர்வுகளிலும் தேவையான மாற்றங்களைச் செய்யவும்.
- விரும்பினால்: உங்கள் கடவுச்சொல் பக்கத்தில் பிற பிரிவுகளையும் பிளாக்குகளையும் சேர்க்கவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் கடவுச்சொல் பக்கத்தைத் தனிப்பயனாக்க, தட்டச்சுக்கலை, நிறம், சமூக ஊடகம் மற்றும் ஃபேவிகான் அமைப்புகள் போன்ற உங்கள் தீம் அமைப்புகளைத் திருத்தலாம். இந்த அமைப்புகள் உங்கள் தீமின் மற்ற பகுதிகளுக்கும் பொருந்தும். தீம் அமைப்புகளைத் திருத்த, பின்வரும் படிகளை மேற்கொள்ளவும்:
- தீம் அமைப்புகள் கியர் ஐகானைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் திருத்த விரும்பும் அமைப்புகள் வகையைக் கிளிக் செய்யவும்.
- தீம் அமைப்புகளில் மாற்றங்களைச் செய்யவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
அனைத்து தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.
முகப்புப் பக்கம் கீழ்தோன்றும் மெனுவைத் தட்டி, கடவுச்சொல் என்பதைத் தட்டவும்.
கடவுச்சொல் பக்கத்திலுள்ள பிரிவுகளைத் திருத்த, பிரிவுகள் என்பதைத் தட்டி, பின்வரும் படிகளை மேற்கொள்ளவும்:
- நீங்கள் திருத்த விரும்பும் பிரிவைத் தட்டவும். பெரும்பாலான தீம்களில் ஹெடர், உள்ளடக்கம் அல்லது வார்ப்புரு மற்றும் அடிப்பகுதிப் பிரிவுகள் இருக்கும்.
- பிரிவின் அமைப்புகளிலும் விருப்பத்தேர்வுகளிலும் தேவையான மாற்றங்களைச் செய்யவும்.
- விரும்பினால்: உங்கள் கடவுச்சொல் பக்கத்தில் பிற பிரிவுகளையும் பிளாக்குகளையும் சேர்க்கவும்.
- சேமி என்பதைத் தட்டவும்.
உங்கள் கடவுச்சொல் பக்கத்தைத் தனிப்பயனாக்க, தட்டச்சுக்கலை, நிறம், சமூக ஊடகம் மற்றும் ஃபேவிகான் அமைப்புகள் போன்ற உங்கள் தீம் அமைப்புகளைத் திருத்தலாம். இந்த அமைப்புகள் உங்கள் தீமின் மற்ற பகுதிகளுக்கும் பொருந்தும். தீம் அமைப்புகளைத் திருத்த, பின்வரும் படிகளை மேற்கொள்ளவும்:
அல்லது
என்பதைத் தட்டி, தீம் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
- நீங்கள் திருத்த விரும்பும் அமைப்புகள் வகையைத் தட்டவும்.
- தீம் அமைப்புகளில் மாற்றங்களைச் செய்யவும்.
- சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
உங்கள் கடவுச்சொல் பக்களுக்கான தீம் குறியீட்டைத் திருத்துதல்
தீம் அமைப்புகளில் கிடைக்காத தனிப்பயனாக்கங்களைச் செய்ய விரும்பினால், உங்கள் கடவுச்சொல் பக்கத்திற்கான தீம் குறியீட்டைத் திருத்தலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, செயல்பாடுகள் மெனுவைத் திறக்க
பொத்தானைக் கிளிக் செய்து, குறியீட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
sections கோப்பகத்தில், நீங்கள் திருத்த விரும்பும்
.liquidகோப்பைக் கிளிக் செய்யவும்.password-headerஅல்லதுpassword-footerஉள்ள கோப்புப் பெயர்களைத் தேடவும்.கோப்பில் உங்கள் குறியீடு மாற்றங்களைச் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
அனைத்து தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, செயல்பாடுகள் மெனுவைத் திறக்க
பொத்தானைத் தட்டி, குறியீட்டைத் திருத்து என்பதைத் தட்டவும்.
sections கோப்பகத்தில், நீங்கள் திருத்த விரும்பும்
.liquidகோப்பைத் தட்டவும்.password-headerஅல்லதுpassword-footerஉள்ள கோப்புப் பெயர்களைத் தேடவும்.கோப்பில் உங்கள் குறியீடு மாற்றங்களைச் செய்யவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
password.liquid வார்ப்புரு குறித்து மேலும் அறிய, password.liquid என்பதைப் பார்க்கவும்.
உங்கள் கடவுச்சொல் பக்கத்தில் அடிப்பகுதியை மறைத்தல்
உங்கள் கடவுச்சொல் பக்கத்தில் அடிப்பகுதிப் பிரிவை மறைக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் > விருப்பத்தேர்வுகள் என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர் அணுகல் > தனிப்பட்ட பயன்முறை பிரிவில் உள்ள உங்கள் பார்வையாளர்களுக்கான செய்தி புலத்தைக் கண்டறிந்து, அந்தப் புலத்தில் ஏற்கெனவே உள்ள உள்ளடக்கத்திற்கு மேலேயோ கீழேயோ பின்வரும் குறியீட்டை ஒட்டவும்:
<style>footer { display: none; }</style>- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.