தீம் கட்டமைப்பு

உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் ஒட்டுமொத்தத் தளவமைப்பை உங்கள் தீம் கட்டுப்படுத்துகிறது. உங்கள் ஸ்டோரில் குறிப்பிட்ட பக்கங்கள் அல்லது பக்க வகைகளில் உள்ளடக்கம் எப்படிக் காட்டப்படும் என்பதைக் குறிப்பிட, உங்கள் தீம் வார்ப்புருக்களைப் பயன்படுத்துகிறது. ஒரு வார்ப்புரு பிரிவுகளால் ஆனது, அந்தப் பிரிவுகள் பிளாக்குகளைக் கொண்டவை. பிரிவுகள் மற்றும் பிளாக்குகள் என்பவை உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தளவமைப்பைத் தனிப்பயனாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய கூறுகளாகும்.

பிரிவுகளையும் அவற்றுள் உள்ள பிளாக்குகளையும் சேர்ப்பதன், அகற்றுவதன், மற்றும் மறுவரிசைப்படுத்துவதன் மூலம் வார்ப்புருக்கள் தனிப்பயனாக்கப்படுகின்றன. ஒவ்வொரு வார்ப்புருவிற்கும் 25 பிரிவுகள் வரை இருக்கலாம், மேலும் ஒவ்வொரு வார்ப்புருவிலும் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து அதிகபட்சம் 1250 பிளாக்குகள் வரை இருக்கலாம். எல்லாப் பிரிவுகளிலும் தனிப்பயனாக்குவதற்கான தனிப்பட்ட பிளாக்குகள் இருக்காது.

எடுத்துக்காட்டாக, நீங்கள் தனித்துவமான கைவினைப் பொருட்களைத் தயாரித்தால், நீங்கள் ஏற்கெனவே விற்றுவிட்ட அனைத்துத் தயாரிப்புகளுக்கும் பயன்படுத்த விற்பனைக்கு அல்ல என்ற தயாரிப்பு வார்ப்புருவை உருவாக்கலாம். இந்த வார்ப்புருவில் தயாரிப்புத் தகவல் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகள் என இரண்டு பிரிவுகள் இருக்கலாம். ஒரு தயாரிப்பை வாங்க முடியாது எனில், அளவுத் தேர்வி அல்லது வாங்குவதற்கான பொத்தான்கள் போன்றவற்றுக்கான தேவையிருக்காது என்பதால் தயாரிப்புத் தகவல் பிரிவில் தலைப்பு மற்றும் விளக்கப் பிளாக்குகள் மட்டுமே இருக்கலாம்.

தீம் எடிட்டர் அல்லது உங்கள் Shopify நிர்வாகியைப் பயன்படுத்திச் சேமிக்கப்பட்ட வார்ப்புருக்களைப் புதிய அல்லது இருக்கும் பக்கங்களுக்கும் தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தலாம். கிஃப்ட் கார்டு மற்றும் செக்அவுட் பக்கங்களைத் தவிர, உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் எந்தப் பக்கத்திலும் பிரிவுகளைத் தனிப்பயனாக்கலாம் மற்றும் சேர்க்கலாம்.

இந்தப் பிரிவில்