தீம் ஆதரவுத் தனிப்பயனாக்கங்கள்

கட்டணம் செலுத்தும் ஒவ்வொரு Shopify கணக்கும் Shopify தீம் ஆதரவுச் சேவையிடமிருந்து 60 நிமிட வடிவமைப்பு நேரத்தைப் பெறும். உங்கள் ஸ்டோர் விற்பனையைச் செய்ய உதவக்கூடிய குறிப்பிட்ட அம்சங்களை ஒரு தீமில் சேர்க்க இந்த வடிவமைப்பு நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Shopify ஆதரவுச் சேவையின் மூலம் இணக்கமான தீம்களில் பின்வரும் தனிப்பயனாக்கங்களைச் செய்யலாம். இணக்கமாக இருக்க, தீம்களின் ஒவ்வொரு பக்கத்திலும் பிரிவுகள் இருக்க வேண்டும். உங்கள் பிசினஸுக்கு எந்தெந்தத் தனிப்பயனாக்கங்கள் உதவக்கூடும் என்பதைத் தீர்மானிக்க, ஆதரிக்கப்படும் ஒவ்வொரு தனிப்பயனாக்கத்தின் விளக்கத்தையும் மதிப்பாய்வு செய்யவும்.

இந்தப் பக்கத்தில்

கார்ட் பையில் நேராக உள்ள இரண்டாவது கைப்பிடியை எப்போதும் காண்பி

வடிவமைப்பு நேரம்: 15 நிமிடங்கள்

கார்ட்டுக்கான பை ஐகானில் நேராக உள்ள ஒரு இரண்டாவது கைப்பிடி உள்ளது, இது கார்ட்டில் ஒரு தயாரிப்பு சேர்க்கப்படும்போது மட்டுமே காட்டப்படும்.

இந்தத் தனிப்பயனாக்கம் இரண்டாவது கைப்பிடியை எப்போதும் காண்பிக்கும், இதனால் கார்ட்டில் ஒரு தயாரிப்பைச் சேர்ப்பதற்கு முன்பும் பின்பும் ஐகான் ஒரே மாதிரியாக இருக்கும்.

குறிப்பிட்ட வடிவமைப்புத் தேவைகளைக் கொண்ட ஸ்டோர்களில் இந்தத் தனிப்பயனாக்கம் சிறப்பாகச் செயல்படும்.

பை ஐகானில் நேராக உள்ள இரண்டாவது கைப்பிடி எப்போதும் காட்டப்படும்படி Shopify ஆதரவுச் சேவையால் அதைத் தனிப்பயனாக்க முடியும்.

தயாரிப்புப் பக்கத்தில் மாறுபாட்டுக்கான சரக்கு இருப்பைக் காண்பி

வடிவமைப்பு நேரம்: 15 நிமிடங்கள்

தயாரிப்புப் பக்கங்களில் சரக்கு இருப்பு நிலைகள் காட்டப்படாது.

இந்தத் தனிப்பயனாக்கம் தற்போதைய மாறுபாட்டிற்குக் கிடைக்கும் சரக்கு இருப்பின் அளவைத் தயாரிப்புப் பக்கத்தில் காண்பிக்கும், மேலும் புதிய மாறுபாடு தேர்ந்தெடுக்கப்படும்போது சரக்கு இருப்பைப் புதுப்பிக்கும்.

தயாரிப்புப் பக்கத்தில் தயாரிப்புக்கான சரக்கு இருப்பைச் சேர்ப்பதன் மூலம், குறைவான அளவே தயாரிப்புகள் கிடைக்கும்போது, வாடிக்கையாளர்கள் நன்கு தகவலறிந்து வாங்கும் முடிவுகளை எடுக்க உதவலாம், அத்துடன் வாங்குவதற்கான உற்சாகத்தையும் அவசரத்தையும் உருவாக்கலாம்.

குறைந்த அளவு சரக்கு இருப்பு உள்ள ஸ்டோர்களுக்கு அல்லது ஒரே நேரத்தில் அதிக அளவு தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்கும் ஸ்டோர்களுக்கு இந்தத் தனிப்பயனாக்கம் சிறப்பாகச் செயல்படும்.

Shopify இல் சரக்கு இருப்பைக் கண்காணிக்காத ஸ்டோர்கள், டிஜிட்டல் தயாரிப்புகளை விற்கும் ஸ்டோர்கள் அல்லது சரக்கு இருப்பு பூஜ்ஜியத்தை எட்டிய பின்பும் தொடர்ந்து விற்கக்கூடிய தயாரிப்புகளைக் கொண்ட ஸ்டோர்களில் மாறுபாட்டுக்கான சரக்கு இருப்பைக் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

“விற்றுத்தீர்ந்தது” மற்றும் “விற்பனை” பேட்ஜ்களின் நிலையை மாற்று

வடிவமைப்பு நேரம்: 15 நிமிடங்கள்

ஒரு தயாரிப்பு விற்றுத்தீரும்போது அல்லது விற்பனையில் இருக்கும்போது, தொடர்புடைய பேட்ஜ் தயாரிப்புக் கார்டின் கீழ் இடது மூலையில் காட்டப்படும்.

இந்தத் தனிப்பயனாக்கம், தயாரிப்பு கார்டுகளில் உள்ள பேட்ஜ்களின் நிலையை மாற்றுவதற்கான அமைப்பைத் தீம் எடிட்டரில் சேர்க்கிறது. பேட்ஜ்களைத் தயாரிப்புப் படத்தின் நான்கு மூலைகளில் ஒன்றுக்கு நகர்த்தலாம்.

தற்போதைய பேட்ஜ் நிலையானது தயாரிப்பின் முக்கியமான காட்சித் தகவல்களின் மேல் வரும் பட்சத்தில், இந்தத் தனிப்பயனாக்கம் அத்தகைய ஸ்டோர்களுக்குச் சிறப்பாகச் செயல்படும்.

பட பேனர் உரையை மாற்று

வடிவமைப்பு நேரம்: 15 நிமிடங்கள்

பட பேனர் பிரிவில் உள்ள உரை மையத்தில் காட்டப்படும், உரைக்குப் பின்னால் உள்ள பெட்டியானது முற்றிலும் ஒளிபுகாத வகையில் இருக்கும்.

இந்தத் தனிப்பயனாக்கம், உரையின் நிலை மற்றும் பெட்டியின் ஒளிபுகாத்தன்மையைக் கட்டுப்படுத்துவதற்கான அமைப்புகளை உங்கள் தீம் எடிட்டரில் சேர்க்கிறது.

உங்கள் ஸ்டோரில் பட பேனர்களைப் பயன்படுத்தும் போது, படத்திலுள்ள முக்கியமான பகுதியை உரை அல்லது பெட்டி மறைப்பதாக இருந்தால், அத்தகைய சமயங்களில் இந்தத் தனிப்பயனாக்கம் சிறப்பாகச் செயல்படும்.

ஹெடரில் மொழி மற்றும் நாடு தேர்வியைச் சேர்

வடிவமைப்பு நேரம்: 30 நிமிடங்கள்

ஸ்டோர்ஃபிரண்ட் மொழி மற்றும் நாடு தேர்வி, அடிப்பகுதிப் பிரிவில் மட்டுமே காட்டப்படும்.

இந்தத் தனிப்பயனாக்கம் மொழி மற்றும் நாடு தேர்வியை ஹெடர் பிரிவிலும் சேர்க்கும்.

உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள, அத்துடன் வாடிக்கையாளர்கள் ஸ்டோர்ஃபிரண்ட் மொழி மற்றும் நாட்டை மாற்ற முடியும் என்பதை முன்னிலைப்படுத்த விரும்பும் ஸ்டோர்களுக்கு இந்தத் தனிப்பயனாக்கம் சிறப்பாகச் செயல்படும்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஒரே மொழியைப் பேசும் மற்றும் ஒரே நாட்டில் வசிக்கும் ஸ்டோர்களில் இதனைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது ஹெடர் பிரிவைத் தேவையில்லாமல் ஆக்கிரமிக்கும்.

மாற்று ஸ்டிக்கி ஹெடர்

வடிவமைப்பு நேரம்: 15 நிமிடங்கள்

Dawn இன் ஸ்டிக்கி ஹெடர் அமைப்பு என்பது ஒரு பகுதியான ஸ்டிக்கி ஹெடர் ஆகும், அதாவது வாடிக்கையாளர் மேல்நோக்கி ஸ்க்ரோல் செய்யும் போது மட்டுமே காட்டப்படும் நிலையான ஹெடர் இதுவாகும்.

இந்தத் தனிப்பயனாக்கம், ஸ்டிக்கி ஹெடரை எல்லா நேரங்களிலும் காட்டுவதற்கான அமைப்பைச் சேர்க்கிறது. இரண்டு விதமான ஸ்டிக்கி ஹெடர்களும், செங்குத்து இடைவெளியைச் சேமிக்க அறிவிப்புப் பட்டியை மறைக்கின்றன, இது சிறிய திரைகளில் முக்கியமானதாகும்.

எல்லா நேரங்களிலும் ஹெடர் உள்ளடக்கங்கள் காட்டப்பட வேண்டிய ஸ்டோர்களுக்கு அல்லது நிறைய உள்ளடக்கங்கள் உள்ள, மேலும் பக்கத்தின் உச்சிக்குத் திரும்ப அதிக நேரம் ஸ்க்ரோல் செய்ய வேண்டிய பக்கங்களுக்கு இந்தத் தனிப்பயனாக்கம் சிறப்பாகச் செயல்படும்.

எல்லா நேரங்களிலும் பக்கத்தின் முழு உள்ளடக்கமும் காட்டப்படும் ஸ்டோர்களில் இதைத் தவிர்க்க வேண்டும்.

சேகரிப்புப் பக்கங்களில் கிடைக்கும் மாறுபாடு விருப்பங்களைக் காட்டு

வடிவமைப்பு நேரம்: 15 நிமிடங்கள்

இந்தத் தனிப்பயனாக்கம், சேகரிப்புப் பக்கங்களில் கிடைக்கும் மாறுபாடு விருப்பங்களை மற்ற தயாரிப்புத் தகவல்களுக்குக் கீழே உரையாகக் காட்டுகிறது, இதனால் வாடிக்கையாளர்கள் தயாரிப்பு விவரங்களைக் கிளிக் செய்வதற்கு முன்பாக விருப்பங்களை விரைவாக மேலோட்டமாகப் பார்க்க முடியும்.

ஒரே மாதிரியான பல மாறுபாடுகளைக் கொண்ட ஸ்டோர்களுக்கு இந்தத் தனிப்பயனாக்கம் சிறப்பாகச் செயல்படும்.

சிறிய அளவிலான தயாரிப்பு அட்டவணையைக் கொண்டுள்ள ஸ்டோர்களில் அல்லது பெரும்பாலான தயாரிப்புகளில் ஒற்றை மாறுபாடு அல்லது குறைந்த எண்ணிக்கையிலான மாறுபாடுகள் உள்ள ஸ்டோர்களில் இதனைத் தவிர்க்க வேண்டும்.

தயாரிப்புப் பக்கத்தில் மாறுபாடு SKU ஐக் காட்டு

வடிவமைப்பு நேரம்: 15 நிமிடங்கள்

தயாரிப்புப் பக்கங்களில் மாறுபாடு SKU காட்டப்படாது.

இந்தத் தனிப்பயனாக்கம் தயாரிப்புப் பக்கத்தில் SKU ஐக் காட்டுகிறது, புதிய மாறுபாடு தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு முறையும் இது மாறும்.

மீண்டும் மீண்டும் வரும் பல வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஸ்டோர்களுக்கு அல்லது ஒரு உற்பத்தியாளரால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளை விற்கும் ஸ்டோர்களுக்கு இந்தத் தனிப்பயனாக்கம் சிறப்பாகச் செயல்படும்.

அடிப்பகுதியில் உள்ள சமூக ஊடக ஐகான்களில் LinkedIn ஐச் சேர்

வடிவமைப்பு நேரம்: 15 நிமிடங்கள்

சில சமூக ஊடக ஐகான்கள் (LinkedIn போன்றவை) தீமிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்தத் தனிப்பயனாக்கம் உங்கள் ஸ்டோரின் அடிப்பகுதியில் உள்ள மற்ற சமூக ஊடக ஐகான்களுடன் LinkedIn லோகோவையும் காட்டுகிறது.

கிஃப்ட் கார்டு படத்தினை மாற்று

வடிவமைப்பு நேரம்: 15 நிமிடங்கள்

இந்தத் தனிப்பயனாக்கம் இயல்புநிலை கிஃப்ட் கார்டு படத்திற்குப் பதிலாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் படத்தைப் பயன்படுத்தும்.

சிறப்பு நிகழ்வுகள் அல்லது விடுமுறை நாட்களில் கிஃப்ட் கார்டு விற்பனையை எதிர்பார்க்கும் ஸ்டோர்களுக்கு இந்தத் தனிப்பயனாக்கம் சிறப்பாகச் செயல்படும்.

"எங்களைப் பற்றி எப்படித் தெரிந்துகொண்டீர்கள்" என்பதை கார்ட் பக்கத்தில் சேர்

வடிவமைப்பு நேரம்: 15 நிமிடங்கள்

உங்கள் ஸ்டோரைப் பற்றி எங்கே தெரிந்துகொண்டீர்கள் என வாடிக்கையாளர்களிடம் கேட்கும் படிவத்தை, இந்தத் தனிப்பயனாக்கம் கார்ட் பக்கத்தில் சேர்க்கிறது. இந்தப் படிவத்தை விருப்பத்திற்கேற்ப நிரப்புமாறோ அல்லது கட்டாயம் நிரப்புமாறோ அமைக்கலாம்.

பல பிளாட்ஃபார்ம்களில் விளம்பரம் செய்யும் மற்றும் கூடுதல் தரவைச் சேகரிக்க விரும்பும் ஸ்டோர்களுக்கு இந்தத் தனிப்பயனாக்கம் சிறப்பாகச் செயல்படும்.