Shopify Plus திட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கான விரிவாக்க ஸ்டோர்களின் மேலோட்டம்

விரிவாக்க ஸ்டோர்கள் என்பவை உங்கள் Shopify Plus திட்டத்தில் உள்ள அதே நிறுவனம் மற்றும் ஒப்பந்தத்தின் கீழ் வரும் கூடுதல் .myshopify.com ஸ்டோர்களாகும். இதைப் பயன்படுத்தி, தனித்துவமான அமைப்புகள், உள்ளமைவுகள் மற்றும் ஸ்டோர்ஃபிரண்ட்களைக் கொண்ட தனித்தனி ஸ்டோர்களை நீங்கள் உருவாக்கலாம். அத்துடன், பயனர்கள் மற்றும் பில்லிங்கிற்கான நிர்வாகத்தை நிறுவன அளவில் மையப்படுத்திப் பராமரிக்கலாம்.

உங்கள் வணிகத்திற்கான சிறப்புச் சூழல்கள் அல்லது நோக்கங்களுக்காகப் பிரத்யேகக் கடைகளை உருவாக்க விரிவாக்க ஸ்டோர்கள் உங்களை அனுமதிக்கின்றன:

  • சர்வதேச விரிவாக்கம்: வேறு மொழி, பிராந்தியம் அல்லது நாணயத்தில் வழங்கப்படும் அதே பிராண்ட்/பெயர் மற்றும் தயாரிப்புகள்.
  • தயாரிப்பு வரிசை விரிவாக்கங்கள்: தற்போதைய தயாரிப்பு வழங்கல்களை விரிவுபடுத்துவதற்கான வழியாக, அதே பிராண்டுகளில் வெவ்வேறு தயாரிப்புகளை வழங்குதல். எடுத்துக்காட்டாக, கேம்பிங் டெண்ட்களில் இருந்து கூலர்களுக்கு விரிவுபடுத்துதல்.
  • B2B ஸ்டோர்கள்: மொத்த விற்பனை வாடிக்கையாளர்களுக்கான, அதே தயாரிப்புகள் மற்றும் பிராண்டுகளைக் கொண்ட ஸ்டோர்கள்.
  • பணியாளர் அல்லது VIP ஸ்டோர்கள்: முக்கிய வணிகத்தின் ஒரு பகுதியாக இருக்கும், உறுப்பினர்களுக்கான அல்லது பணியாளர் வெகுமதி ஸ்டோர்கள்.
  • நேரடிச் சில்லறை விற்பனை இருப்பிடங்கள்: ஆன்லைன் பரிவர்த்தனைகள் ஏதுமில்லாத 100% நேரடிச் சில்லறை விற்பனை ஸ்டோர்கள்.

Shopify Plus திட்டத்தில் உள்ள விரிவாக்க ஸ்டோர்களுக்கான பரிசீலனைகள்

விரிவாக்க ஸ்டோர்களை அமைப்பதற்கு முன், உங்கள் Shopify Plus திட்ட நிறுவனத்திற்குள் அவை எவ்வாறு செயல்படும் என்பது குறித்த பின்வரும் பரிசீலனைகளைச் சரிபார்க்கவும்:

  • அனைத்து ஸ்டோர்களிலும் பயனர்களையும் பில்லிங்கையும் மையப்படுத்தி நிர்வகிக்க உங்கள் நிறுவன அமைப்புகள் அனுமதித்தாலும், ஒவ்வொரு தனிப்பட்ட ஸ்டோரும் அதன் சொந்தத் தனித்தனி தரவு, அமைப்புகள் மற்றும் உள்ளமைவுகளுடன் முற்றிலும் சுதந்திரமாகச் செயல்படுகிறது.
  • ஸ்டோர் அமைப்புகள், தயாரிப்புகள், சேகரிப்புகள் மற்றும் சரக்கு இருப்பு ஆகியவை ஸ்டோர்களுக்கிடையே ஒத்திசைக்கப்படுவதில்லை. இயல்பாக அவை தரவைப் பகிர்ந்துகொள்வதில்லை.
  • ஒரு குறிப்பிட்ட ஸ்டோரில் செய்யப்படும் மாற்றங்கள் நிறுவனத்தில் உள்ள பிற ஸ்டோர்களில் பிரதிபலிக்காது. இருப்பினும், தேவைப்பட்டால் ஸ்டோர்களுக்கிடையே சரக்கு இருப்பு போன்ற குறிப்பிட்ட தரவை ஒத்திசைக்க, நீங்கள் மூன்றாம் தரப்புச் செயலிகள் அல்லது நிறுவன வளத் திட்டமிடல் (ERP) சிஸ்டங்களைப் பயன்படுத்தலாம்.
  • செயலிகள் ஒட்டுமொத்த நிறுவனத்திற்குப் பதிலாக, ஒவ்வொரு ஸ்டோருக்கும் தனித்தனியாக பில் செய்யப்படுகின்றன.
  • ஒவ்வொரு தனிப்பட்ட தயாரிப்பு ஸ்டோருக்கும் தீம் உரிமங்கள் தேவை. ஸ்டேஜிங் ஸ்டோர்களுக்கு விலக்கு உண்டு.
  • ஒரு ஸ்டோரை உருவாக்கும் செயல்பாட்டின்போது, உங்கள் புதிய ஸ்டோருக்கான நோக்கத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நோக்கம், உங்கள் ஸ்டோரின் பில்லிங் அல்லது அமைப்பைப் பாதிக்கலாம், ஆனால் அதன் அம்சங்களையோ திறன்களையோ கட்டுப்படுத்தாது. எந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது என்பதில் உங்களுக்கு உறுதியில்லை எனில், Shopify Plus ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
  • நீங்கள் ஒரு ஸ்டோரை உருவாக்கும்போது, அது வழக்கமாக உடனடியாக உங்கள் நிறுவனத்தில் சேர்க்கப்படும். இருப்பினும், கோரப்பட்ட ஸ்டோர் உங்கள் ஒப்பந்த வரம்புகளை மீறினால், அதற்குப் பதிலாக ஒரு சோதனை ஸ்டோர் உருவாக்கப்படும். கூடுதல் ஸ்டோரைச் சேர்க்க Shopify Plus-ற்குக் கோரிக்கை அனுப்பப்பட்டு, கூடுதல் கட்டணத்தை அங்கீகரிக்க உங்களிடம் கேட்கப்படும். சில நாட்களுக்குள் உங்கள் கோரிக்கை செயல்படுத்தப்பட்டு, உங்கள் சோதனை ஸ்டோர் மேம்படுத்தப்படும். இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை நீங்கள் பெறுவீர்கள்.
  • நீங்கள் ஒரு தீமைப் புதிய ஸ்டோரில் இறக்குமதி செய்யும்போது, அந்தத் தீமில் ஹார்ட்கோட் செய்யப்பட்டுள்ள கோப்புகளுக்கான எந்தவொரு குறிப்பும், தற்போதுள்ள அசல் ஸ்டோரில் உள்ள கோப்புகளையே தொடர்ந்து சுட்டிக்காட்டும். அசல் ஸ்டோரில் உள்ள கோப்பு நீக்கப்பட்டால், உங்கள் புதிய ஸ்டோரின் தீமில் அந்தக் கோப்பிற்கான இணைப்பு துண்டிக்கப்படும். இணைப்புகள் துண்டிக்கப்படுவதைத் தடுக்க, தீம்களை இறக்குமதி செய்யும்போது கோப்புகளையும் இறக்குமதி செய்வதை உறுதிசெய்யவும். அத்துடன், உங்கள் புதிய ஸ்டோரில் உள்ள கோப்புகளைச் சுட்டிக்காட்டும் வகையில், உங்கள் தீமில் உள்ள URLகளையும் புதுப்பிக்கவும்.

கிடைக்கும் ஸ்டோர்களின் எண்ணிக்கை

Shopify Plus திட்ட நிறுவனங்கள், கூடுதல் செலவின்றித் தங்கள் ஒப்பந்தத்தில் அதிகபட்சமாகப் பத்து ஸ்டோர்களைக் கொண்டிருக்கலாம்:

  • ஒரு பிரதான ஸ்டோர்.
  • ஒன்பது விரிவாக்க ஸ்டோர்கள்.
  • ஸ்டேஜிங் ஸ்டோர்கள் பத்து ஸ்டோர் வரம்பிற்குள் கணக்கிடப்படாது.

பத்துக்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் வேண்டுமெனில், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ள வேண்டும்.

நிலையான Shopify Plus திட்ட ஒப்பந்தங்களில் உள்ள விரிவாக்க ஸ்டோர்களுக்கான தகுதித் தேவைகள்

ஸ்டோர் ஆன்லைனில் செயல்பட்டாலும் அல்லது நேரடிச் சில்லறை விற்பனை இருப்பிடமாகச் செயல்பட்டாலும், விரிவாக்க ஸ்டோர்களுக்கான தேவைகள் ஒன்றே. விரிவாக்க ஸ்டோர்கள் பின்வரும் அனைத்து நிபந்தனைகளுக்கும் இணங்க வேண்டும்:

  • பிரதான பிராண்டின் விரிவாக்கங்களாக இருக்க வேண்டும்.
  • ஸ்டோர் பெயர் மற்றும் பிற பிராண்டிங்கைப் பொறுத்தவரை பிரதான பிராண்டைப் போலவே இருக்க வேண்டும்.
  • பிரதான பிராண்டில் உள்ள அதே வகையான பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • பில்லிங் நாணயம் USD அல்லது INR என அமைக்கப்பட்டிருக்க வேண்டும். USD அல்லது INR இல் பில் செய்யப்படும் ஸ்டோர்களை மட்டுமே Plus ஒப்பந்தத்தில் சேர்க்க முடியும்.

விரிவாக்க ஸ்டோருக்கான உங்கள் பில்லிங் நாணயத்தை மாற்றுதல்

உங்கள் ஸ்டோர் USD அல்லது INR தவிர வேறு பில்லிங் நாணயத்தைப் பயன்படுத்தினால், உங்கள் Plus ஒப்பந்தத்தில் ஸ்டோரைச் சேர்ப்பதற்கு முன்பு அதை மாற்ற வேண்டும். உங்கள் பில்லிங் நாணயத்தை மாற்றுவது, நிலுவையில் உள்ள எந்தவொரு கட்டணத்தையும் உடனடியாக பில் செய்யும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பில்லிங் என்பதற்குச் செல்லவும்.
  2. பேமெண்ட் விவரங்கள் பிரிவில், பில்லிங் நாணயம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பில்லிங் நாணயத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் புதிய பில்லிங் நாணயத்திற்கு USD அல்லது INR என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. நிலுவையில் உள்ள கட்டணங்கள் ஏதேனும் உள்ளதா எனச் சரிபார்த்து, உறுதிசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட விரிவாக்க ஸ்டோர் வகைகள்

பின்வரும் விரிவாக்க ஸ்டோர் வகைகள் தானாகவே தகுதிபெறும்:

  • சர்வதேச ஸ்டோர்கள்: வெவ்வேறு மொழிகள், பிராந்தியம் அல்லது நாணயத்தில் உள்ள அதே பிராண்ட்/பெயர் மற்றும் தயாரிப்புகள். எடுத்துக்காட்டாக, abc123.com, abc123.ca, abc123.com.au.
  • B2B மொத்த விற்பனை ஸ்டோர்கள்: பிரதான பிராண்டில் உள்ள அதே தயாரிப்புகள், இதற்குப் பயனர் உள்நுழைவும் B2B நிறுவனத் தொடர்பும் தேவை. ஒரு ஒப்பந்தத்திற்கு ஒரு இலவச B2B ஸ்டோர் என்ற வரம்பு உண்டு.
  • மொத்த விற்பனை வணிகர்களுக்கான D2C ஸ்டோர்கள்: பிரத்யேகமாக மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள், அதே தயாரிப்புகளுடன் நுகர்வோருக்கு நேரடியாக விற்கும் (D2C) ஸ்டோர்ஃபிரண்டை உருவாக்க விரும்பினால் இதைப் பயன்படுத்தலாம். ஒரு ஒப்பந்தத்திற்கு 1 இலவச B2C ஸ்டோர் என்ற வரம்பு உண்டு.
  • பணியாளர்-மட்டுமான ஸ்டோர்கள்: முக்கிய வணிகத்தின் ஒரு பகுதியாக, அதே பிராண்டைப் பிரதிபலிக்கும் பொதுமக்களுக்குக் கிடைக்காத ஸ்டோர்கள்.
  • நேரடிச் சில்லறை விற்பனை இருப்பிடங்கள்: ஆன்லைன் பரிவர்த்தனைகள் ஏதுமில்லாத 100% நேரடிச் சில்லறை விற்பனை. பிரதான பிராண்டைப் போலவே அதே பிராண்டிங், பெயர் மற்றும் தயாரிப்புகளைக் கொண்டிருக்கும்.

மற்றொரு ஸ்டோரைச் சேர்

பின்வரும் இரண்டு முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி, Shopify Plus திட்டத்தில் உங்கள் நிறுவனத்தில் நீங்கள் விரிவாக்க ஸ்டோர்களைச் சேர்க்கலாம்:

ஏற்கெனவே உள்ள ஸ்டோரில் இருந்து தரவை இறக்குமதி செய்தல்

நீங்கள் ஒரு ஸ்டோரை உருவாக்கும்போது, உங்கள் நிறுவனத்தில் ஏற்கெனவே உள்ள ஒரு ஸ்டோரில் இருந்து பின்வரும் தரவை இறக்குமதி செய்யலாம்:

  • தீம்கள்: நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்டோரில் உள்ள தீம்களை உள்ளடக்கியது.
  • தயாரிப்புகள் மற்றும் தொகுப்புகள்: நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்டோரில் உள்ள அனைத்துத் தயாரிப்புகள், மாறுபாடுகள், தொகுப்புகள் மற்றும் அவற்றின் மெட்டாஃபீல்டுகளை (குறிப்பு வகைகள் மற்றும் வகை மெட்டாஃபீல்டுகள் நீங்கலாக) உள்ளடக்கியது.
  • கோப்புகள்: நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்டோரில் பதிவேற்றிய அனைத்துப் படங்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகளை உள்ளடக்கியது.

ஸ்டோரை உருவாக்கும்போது மட்டுமே உங்கள் நிறுவனத்தில் உள்ள மற்றொரு ஸ்டோரில் இருந்து தரவை நீங்கள் இறக்குமதி செய்ய முடியும். ஸ்டோரை உருவாக்கிய பிறகு, உங்களால் தரவை இறக்குமதி செய்ய முடியாது; உங்கள் ஸ்டோர் தரவை நீங்கள்தான் கைமுறையாக நிர்வகிக்க வேண்டும்.

புதிய ஸ்டோரை உருவாக்கு

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள நிறுவனம் பிரிவில் நீங்கள் ஒரு விரிவாக்க ஸ்டோரை உருவாக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > நிறுவனம் என்பதற்குச் செல்லவும்.

  2. ஸ்டோரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. ஸ்டோர் வகை பிரிவில், ஸ்டோர் ஸ்டேஜிங் (Staging) அல்லது புரொடக்‌ஷன் (Production) ஆகியவற்றுள் எதற்காக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. சுயவிவரம் பிரிவில், ஒரு பெயரையும் ஸ்டோர் URL-ஐயும் உள்ளிடவும்.

  5. விருப்பத்திற்குரியது: உள் பெயர் மற்றும் ஐகான் பிரிவில், ஸ்டோருக்கான ஒரு பெயரையும் இரண்டு அல்லது மூன்று எழுத்துகள் கொண்ட முதலெழுத்துகளையும் (initial) உள்ளிடவும். இந்தப் பிரிவில் நீங்கள் உள்ளிடும் பெயரும் முதலெழுத்துகளும் Shopify நிர்வாகிக்குள் மட்டுமே காண்பிக்கப்படும், வாடிக்கையாளர்களுக்குக் காண்பிக்கப்படாது.

  6. விருப்பத்திற்குரியது: தரவை இறக்குமதி செய்ய, ஏற்கெனவே உள்ள ஸ்டோரில் இருந்து தரவை இறக்குமதி செய் பிரிவில், ஸ்டோரைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்து, ஸ்டோரைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. விருப்பத்திற்குரியது: பின்வரும் படிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவுசெய்வதன் மூலம், உங்கள் புதிய ஸ்டோருக்கு நகலெடுக்க விரும்பும் தரவைத் தேர்ந்தெடுக்கவும்:

    • தீமைத் தேர்ந்தெடுக்க, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
      • நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்டோரில் ஒன்றுக்கு மேற்பட்ட தீம்கள் இருந்தால், நீங்கள் நகலெடுக்க விரும்பும் தீம்களைத் தேர்ந்தெடுக்க தீம்களைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
      • நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்டோரில் ஒரே ஒரு தீம் மட்டுமே இருந்தால், அந்தத் தீமை நகலெடுக்க தீம்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • அனைத்துத் தயாரிப்புகள், மாறுபாடுகள் மற்றும் அவற்றின் மெட்டாஃபீல்டுகளை (குறிப்பு வகைகள் நீங்கலாக) நகலெடுக்க தயாரிப்புகள் மற்றும் தொகுப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • அனைத்துப் படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட எல்லாக் கோப்புகளையும் நகலெடுக்க கோப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. ஸ்டோரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஏற்கெனவே உள்ள ஸ்டோரைச் சேர்

சோதனை ஸ்டோர், ஏற்கெனவே உள்ள ஸ்டோர் அல்லது கூட்டாளர் உருவாக்கிய ஸ்டோர் போன்ற உங்களிடம் ஏற்கெனவே உள்ள ஒரு ஸ்டோரை விரிவாக்க ஸ்டோராகச் சேர்க்க விரும்பினால், கைமுறையான செயல்முறை மூலம் இதற்குக் கோரிக்கை விடுக்கலாம்.

ஒரு ஸ்டோரைச் சேர்க்க நீங்கள் பின்வரும் முன்நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • இரு ஸ்டோர்களின் கடையின் உரிமையாளர்களும் இந்தக் கோரிக்கையைத் தொடங்கியிருக்க வேண்டும் அல்லது உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்:
    • பிரதான பில்லிங் ஸ்டோரின் கடையின் உரிமையாளர் அல்லது நிறுவன உரிமையாளர்.
    • கோரப்பட்ட விரிவாக்க ஸ்டோரின் கடையின் உரிமையாளர்.
  • ஸ்டோர்களுக்கு வெவ்வேறு கடையின் உரிமையாளர்கள் இருந்தால், இந்தக் கோரிக்கையானது மின்னஞ்சலுக்கு மாற்றப்பட வேண்டும். அதில் இரு உரிமையாளர்களும் நகலில் (CC) சேர்க்கப்பட்டு, அனைவரும்-பதிலளி (reply-all) மின்னஞ்சல் மூலம் கோரிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

படிகள்:

  1. உங்களின் உத்தேசிக்கப்பட்ட விரிவாக்க ஸ்டோர் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிசெய்யவும்.
  2. உங்களின் கோரிக்கையுடன் Shopify Plus ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
  3. இரு கணக்கு உரிமையாளர்களிடமிருந்தும் உறுதிப்படுத்தலை வழங்கவும்.
  4. Shopify-இன் மதிப்பாய்வு மற்றும் ஒப்புதலுக்காகக் காத்திருக்கவும்.

தகுதிபெறாத ஸ்டோர்களுக்கான மாற்று விருப்பத்தேர்வுகள்

நீங்கள் முன்மொழிந்த ஸ்டோர் விரிவாக்க ஸ்டோருக்கான வரன்முறைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், நீங்கள் பல-பிராண்ட் ஒப்பந்தத்திற்குத் தகுதிபெறலாம். இது ஒரு நிறுவனத்தின் கீழ் பல பிராண்டுகளை அனுமதிக்கிறது, ஆனால் ஒவ்வொரு பிராண்டுக்கும் அதன் சொந்த தனித்தனி Shopify Plus திட்டச் சந்தா இருக்க வேண்டும். பல-பிராண்ட் விருப்பத்தேர்வுகள் மற்றும் விலை நிர்ணய விவரங்களைப் பற்றி விவாதிக்க Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.