விரைவான செக்அவுட்கள் மற்றும் விரைவான செக்அவுட் பொத்தான்கள்
விரைவான செக்அவுட்கள் அல்லது எக்ஸ்பிரஸ் செக்அவுட்கள், வாடிக்கையாளரின் பேமெண்ட் மற்றும் ஷிப்பிங் விவரங்களைச் சேமிக்கின்றன; இதனால் மீண்டும் வரும் வாடிக்கையாளர்கள் தமது ஆர்டர்களுக்கான பேமெண்ட்டை மிக விரைவாக முடிக்க முடியும். விரைவான செக்அவுட் முறையை வழங்கும் ஒரு ஸ்டோருக்கு வாடிக்கையாளர் மீண்டும் வரும்போது, செக்அவுட்டில் அவர்களின் விவரங்கள் தானாகவே நிரப்பப்படும்.
சில விரைவான செக்அவுட் முறைகள், தயாரிப்புப் பக்கங்களில் விரைவான செக்அவுட் பொத்தான்களைப் பயன்படுத்தலாம். விரைவான செக்அவுட் பொத்தான்களைப் பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் கார்ட்டைத் தவிர்த்துவிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட விரைவான செக்அவுட் முறையைப் பயன்படுத்தித் தயாரிப்புப் பக்கத்திலிருந்து நேரடியாகச் செக்அவுட்டிற்குச் செல்லலாம். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் விரைவான செக்அவுட் பொத்தான்களை எப்படிக் காண்பிப்பது என அறிக.
Shop Pay-க்கும் Apple Pay, Google Pay, Amazon Pay, PayPal போன்ற விருப்பங்களை வழங்கும் பிற கட்டண வழங்குநர்களுக்கும் உங்கள் Shopify Checkout-இல் விரைவான செக்அவுட் பொத்தான்களைச் செயல்படுத்தலாம். PayPal-இன் விரைவான செக்அவுட் விருப்பங்கள் குறித்து மேலும் அறிய, ஆதரிக்கப்படும் PayPal வழங்குநர்களைப் பார்க்கவும்.
விரைவான செக்அவுட் பொத்தான்கள், உங்கள் வாடிக்கையாளரின் செக்அவுட் அனுபவத்தின் தொடக்கத்தில் Express Checkout பிரிவில் காண்பிக்கப்படும்; மேலும் உங்கள் வாடிக்கையாளருக்கான வேகமான செக்அவுட் முறையைக் காண்பிக்கும்படி அவை மாறும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். ஒரு கட்டண முறைக்காக உங்கள் வாடிக்கையாளரின் கணக்குக் கண்டறியப்பட்டால், உங்கள் கணக்கைப் பயன்படுத்தவும் என்பது காட்டப்படும்.
விரைவான செக்அவுட்கள் மூலம் நடக்கும் உங்கள் விற்பனையைத் தடமறிய, கட்டண முறையின்படி ஃபில்டர் செய்யப்பட்ட பேமெண்ட்டுகளின் நிதி அறிக்கையை நீங்கள் பார்க்கலாம்.