Apple Pay-ஐச் செயல்படுத்துதல்
Apple Pay விரைவான செக்அவுட் செயல்முறையை வழங்குகிறது, இதன்மூலம் வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணம் செலுத்தலாம். நீங்கள் Apple Pay-ஐச் செயல்படுத்தும்போது, அது உங்கள் Shopify Checkout இன் பேமெண்ட்டுகள் பிரிவில் ஒரு கட்டண முறையாகக் காட்டப்படும்.
வாடிக்கையாளர் தனது ஆர்டருக்கு Apple Pay மூலம் பணம் செலுத்தும்போது, அவர்கள் தங்கள் கிரெடிட் கார்டு தகவல் அல்லது ஷிப்பிங் முகவரியை மேனுவலாக உள்ளிடத் தேவையில்லை. வாடிக்கையாளர் Apple Pay பொத்தானைத் தட்டலாம் அல்லது கிளிக் செய்யலாம், இணக்கமான சாதனத்தில் கைரேகையை ஸ்கேன் செய்யலாம் அல்லது Face ID-ஐப் பயன்படுத்தலாம், பின்னர் அவர்களின் சாதனம் கட்டண வழங்குநருக்குக் கட்டணத் தகவலை அனுப்பும்.
Apple Pay மூலம் பேமெண்ட்டுகளைப் பெற நீங்கள் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. கட்டண வழங்குநர் விதிக்கும் வழக்கமான செயலாக்கக் கட்டணங்களை மட்டும் நீங்கள் தொடர்ந்து செலுத்துவீர்கள். விரைவான செக்அவுட்கள் பற்றி மேலும் அறிக.
இந்தப் பக்கத்தில்
தேவைகள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு Apple Pay-ஐச் செயல்படுத்த, நீங்கள் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- நீங்கள் Apple Pay-ஐ ஆதரிக்கும் கிரெடிட் கார்டு கட்டண வழங்குநரைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் Apple Pay உடன் Shopify Payments-ஐப் பயன்படுத்தலாம். மாற்றாக, அமைப்புகள் > பேமெண்ட்டுகள் என்பதில் உள்ள மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்களின் பட்டியலில் Apple Pay-ஐத் தேடலாம்.
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் டொமைனில் நீங்கள் SSL-ஐச் செயல்படுத்தி இருக்க வேண்டும்.
- உங்கள் ஸ்டோர் Apple இன் ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
Apple Pay-ஐ ஆதரிக்கும் சாதனங்கள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் Apple Pay மூலம் பணம் செலுத்த, உங்கள் வாடிக்கையாளர்கள் Apple Pay உடன் இணக்கமான சாதனங்களில் ஒன்றில் Safari-ஐப் பயன்படுத்த வேண்டும்.
சந்தாக்களுக்கான தேவைகள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் மூலம் சந்தா தயாரிப்புகளை வாங்கும் போது வாடிக்கையாளர்களை Apple Pay-ஐப் பயன்படுத்த அனுமதிக்க, நிலையான Apple Pay தேவைகளுக்குப் புறம்பாகக் கூடுதல் தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்:
- நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்த வேண்டும்.
- வாடிக்கையாளர்கள் Mastercard அல்லது Visa கார்டு மூலம் பணம் செலுத்த வேண்டும்.
சில சந்தாச் செயலிகள் சந்தாத் தயாரிப்புகளுக்கான Apple Pay போன்ற விரைவான செக்அவுட்களை ஆதரிக்காமல் இருக்கலாம். நீங்கள் சந்தாச் செயலியைப் பயன்படுத்தினால், செயலியின் ஆவணங்களை மதிப்பாய்வு செய்யவும் அல்லது Apple Pay உடனும் இணக்கமாக இருப்பதை உறுதிசெய்ய, செயலியை உருவாக்குபவரைத் தொடர்புகொள்ளவும்.
உங்கள் ஸ்டோர் அணுகலானது பிரைவேட் பயன்முறையில் அமைக்கப்பட்டிருந்தால், டிஜிட்டல் சந்தா தயாரிப்புகளுக்கு உங்கள் வாடிக்கையாளர்களால் பணம் செலுத்த முடியாது. உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான அணுகலை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.
Apple Pay-ஐச் செயல்படுத்து
நீங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து, உங்கள் கட்டண வழங்குநர் Apple Pay-ஐ வழங்கினால், உங்கள் Shopify நிர்வாகியிலேயே உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான Apple Pay-ஐச் செயல்படுத்தலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பேமெண்ட்டுகள் என்பதற்குச் செல்லவும்.
உங்கள் கிரெடிட் கார்டு கட்டண வழங்குநருக்கான பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
வாலட்கள் பிரிவில், Apple Pay-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்பு
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், பேமெண்ட்டுகள் என்பதைத் தட்டவும்.
உங்கள் கிரெடிட் கார்டு கட்டண வழங்குநருக்கான பிரிவில், நிர்வகி என்பதைத் தட்டவும்.
வாலட்கள் பிரிவில், Apple Pay-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
ஃபிரான்ஸில் Shopify Payments-ஐப் பயன்படுத்தும்போது Apple Pay-ஐச் செயல்படுத்துதல்
உங்கள் வணிகம் ஃபிரான்ஸை மையமாகக் கொண்டிருந்தும், நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்துபவராகவும் இருந்தால், உங்கள் Shopify நிர்வாகியிலேயே உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான Apple Pay-ஐச் செயல்படுத்தலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பேமெண்ட்டுகள் என்பதற்குச் செல்லவும்.
Shopify Payments பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
மேம்பட்ட அமைப்புகள் பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
வாலட்கள் பிரிவில், Apple Pay என்பதற்கு செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்பு
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், பேமெண்ட்டுகள் என்பதைத் தட்டவும்.
Shopify Payments பிரிவில், நிர்வகி என்பதைத் தட்டவும்.
மேம்பட்ட அமைப்புகள் பிரிவில், நிர்வகி என்பதைத் தட்டவும்.
வாலட்கள் பிரிவில், Apple Pay என்பதற்கு செயல்படுத்து என்பதைத் தட்டவும்.
வாடிக்கையாளர் அனுபவம்
ஒரு வாடிக்கையாளர் இணக்கமான சாதனத்தைப் பயன்படுத்தி உங்கள் ஆன்லைன் ஸ்டோரைப் பார்வையிடும்போது, Apple Pay லோகோவுடன் கூடிய விரைவான செக்அவுட் பொத்தான் காட்டப்படும்.
Apple Pay மூலம் பொருட்களை வாங்க வாடிக்கையாளர் அந்தப் பொத்தானைத் தட்டலாம் அல்லது கிளிக் செய்யலாம். தங்களது Apple Pay வாலட்டில் அவர்கள் சேர்த்த ஷிப்பிங் மற்றும் பில்லிங் தகவல் காட்டப்படும்; அத்துடன் ஆர்டருக்கான செலவு, ஷிப்பிங் கட்டணங்கள் மற்றும் வரிகள் ஆகியவையும் காட்டப்படும். அதன்பிறகு வாடிக்கையாளர் அந்தப் பர்ச்சேஸை அங்கீகரிக்க வேண்டும். வாடிக்கையாளர் எந்த வகையான இணக்கமான சாதனத்தைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து, இந்த அங்கீகாரச் செயல்முறை மாறுபடும்.
உங்கள் செக்அவுட் அமைப்புகளில் நிறுவனத்தின் பெயர் புலத்தை கட்டாயம் என அமைத்தால், Apple Pay வாலட்டில் நிறுவனத்தின் பெயர் இல்லாத வாடிக்கையாளர்கள், தங்கள் ஆர்டரை முடிப்பதற்கு முன்பாக உங்கள் செக்அவுட்டில் அதை உள்ளிட வேண்டும்.
Apple Pay செயலில் இருக்கும்போது, அது Shopify Checkout இன் பேமெண்ட்டுகள் பிரிவில் ஒரு கட்டண முறையாகவும் காட்டப்படும்.
சிக்கல் தீர்த்தல்
Apple Pay அமைப்பில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தாலோ அல்லது உங்கள் வாடிக்கையாளர்கள் செக்அவுட்டின் போது ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டாலோ, பின்வரும் பொதுவான சிக்கல்களையும் தீர்வுகளையும் மதிப்பாய்வு செய்யவும்.
உங்கள் Shopify நிர்வாகியில் Apple Pay காட்டப்படவில்லை
நீங்கள் Cybersource, Authorize.net அல்லது First Data Payeezy-ஐப் பயன்படுத்தினால், மேலும் உங்கள் Shopify நிர்வாகியில் Apple Pay-ஐச் செயல்படுத்தும் விருப்பம் உங்களிடம் இல்லை எனில், நெட்வொர்க் டோக்கனைசேஷனை இயக்குமாறு உங்கள் கட்டணச் செயலியிடம் நீங்கள் கேட்க வேண்டும். நீங்கள் Stripe-ஐப் பயன்படுத்தினால், உங்கள் Stripe டாஷ்போர்டில் இருந்து Apple Pay-க்குரிய சேவை விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் கட்டணச் செயலி யார் என்று உங்களுக்குத் தெரியவில்லை எனில், உங்கள் வங்கியை அல்லது உங்கள் வணிகர் கணக்கு வழங்குநரைத் தொடர்புகொள்ள வேண்டும்.
செக்அவுட்டில் Apple Pay பொத்தான் காட்டப்படவில்லை
செக்அவுட்டில் Apple Pay பொத்தான் காட்டப்படவில்லை எனில், Apple Pay-ஐப் பயன்படுத்துவதற்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்.
உங்கள் வாடிக்கையாளர் அவர்களின் ஆர்டருக்குப் பணம் செலுத்த வாங்கு பொத்தானைப் பயன்படுத்தினால், வாங்கு பொத்தான் விற்பனைச் சேனல் ஆதரிக்காத காரணத்தால் Apple Pay வழங்கப்படாது.
கார்ட் இழுப்பறையில் Apple Pay பொத்தான் காட்டப்படவில்லை
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் கார்ட் இழுப்பறை அல்லது கார்ட் பாப்-அப் இருந்தால், Apple Pay பொத்தான் காட்டப்படாமல் போகலாம். கார்ட் இழுப்பறையில் பொத்தான் காட்டப்படுவதை உறுதிப்படுத்த உங்கள் தீமில் Javascript-ஐச் சேர்க்கலாம்.
Apple Pay பொத்தான் காட்டப்படுகிறது, ஆனால் பதிலளிக்கக்கூடியதாக இல்லை
ஆதரிக்கப்படும் Apple லேப்டாப்பை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் சாதனத்தில் உள்ள Apple Pay வாலட்டைச் சரிபார்த்து, லேப்டாப்பின் மூடி திறந்திருப்பதை உறுதிசெய்யவும். உங்கள் லேப்டாப் குளோஸ்டு-டிஸ்ப்ளே (closed-display) பயன்முறையில் இருந்தால், Apple Pay பொத்தான் பதிலளிக்கக்கூடியதாக இல்லாமல் போகலாம்.
உங்கள் வாடிக்கையாளரால் தள்ளுபடிக் குறியீட்டை உள்ளிட முடியவில்லை
Apple Pay பொத்தானைக் கிளிக் செய்வதற்கு முன், செக்அவுட் பக்கத்தில் தள்ளுபடிக் குறியீட்டை உள்ளிட்டால் மட்டுமே உங்கள் வாடிக்கையாளர்கள் Apple Pay-உடன் தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்த முடியும். கார்ட் பக்கத்தில் Apple Pay பொத்தானைச் சேர்த்தால், தள்ளுபடிக் குறியீட்டை உள்ளிட உங்கள் வாடிக்கையாளர்களால் செக்அவுட் பக்கத்திற்குச் செல்ல முடியாது. Apple Pay-உடன் வாடிக்கையாளர்கள் தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய, செக்அவுட் பக்கத்தில் Apple Pay பொத்தானைக் காட்ட வேண்டும்.
Mac-இல் Apple Pay மூலம் செக்அவுட் செய்யும்போது உங்கள் வாடிக்கையாளர் பிழையைப் பெறுகிறார்
Mac-இல் Apple Pay மூலம் செக்அவுட் செய்ய முயலும்போது உங்கள் வாடிக்கையாளர் பிழைச் செய்தியைப் பெற்றால், அவர்களது ஃபோனுக்கும் கம்ப்யூட்டருக்கும் இடையே தொடர்புகொள்வதில் சிக்கல் இருக்கலாம். இணைப்பைச் சரிபார்க்க, ஃபோனும் கம்ப்யூட்டரும் பின்வரும் அமைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை வாடிக்கையாளர் உறுதிசெய்ய வேண்டும்:
- ஃபோனும் கம்ப்யூட்டரும் ஒன்றுக்கொன்று அருகருகே உள்ளன
- புளூடூத் இயக்கப்பட்டுள்ளது
- ஃபோன் மற்றும் கம்ப்யூட்டர் ஆகிய இரண்டும் ஒரே iCloud கணக்கில் உள்நுழைந்துள்ளன
Apple Pay-ஐப் பயன்படுத்தும்போது கைவிடப்பட்ட செக்அவுட்களில் நாணயப் பிழையைப் பெறுகிறீர்கள்
கைவிடப்பட்ட செக்அவுட்டின் கட்டண நிகழ்வுகளில் "Credit card Apple Pay currency not equal to transaction currency" என்பதைப் போன்ற பிழைச் செய்தியைக் கவனித்தால், பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
- உங்கள் சர்வதேசச் சந்தைகளும் நாணயங்களும் சரியாக அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும். உள்ளூர் நாணயங்களில் விலை நிர்ணயம் செய்தல் மற்றும் உங்கள் பல நாணய அமைப்பைச் சோதித்தல் குறித்து மேலும் அறிக.
- உங்கள் வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு, அவர்களின் Apple Pay கணக்கு குறித்த பின்வரும் விவரங்களை உறுதிசெய்யச் சொல்லவும்:
- அவர்களின் Apple Pay கணக்கு எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை ஆதரிக்கிறது.
- அவர்களின் Apple Pay சுயவிவரத்தில் (நாட்டின் விவரங்கள் போன்ற) விடுபட்ட தகவல் எதுவும் இல்லை.
- அவர்களின் கிரெடிட் கார்டில் அவர்களின் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. வங்கியானது அந்த கார்டில் செய்யப்படும் பரிவர்த்தனைகளையும் தடைசெய்திருக்கலாம், அதை வங்கியும் வாடிக்கையாளரும் பேசித் தீர்க்க வேண்டும்.
செக்அவுட்டை நிறைவுசெய்ய உங்கள் வாடிக்கையாளர் வேறொரு கட்டண முறையை முயற்சிக்க அல்லது வேறு கார்டைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.
ஷிப்பிங் வரம்புகள்
Apple Pay-இலிருந்து பகுதியளவு அஞ்சல் குறியீடு மட்டுமே கிடைப்பதன் காரணமாக, கனடாவின் சில தொலைதூரப் பிராந்தியங்களில் கேரியரால் கணக்கிடப்படும் ஷிப்பிங் கட்டணங்கள் தவறாகக் கணக்கிடப்படலாம். பெரும்பாலான கனடிய முகவரிகள் இந்தச் சிக்கலால் பாதிக்கப்படுவதில்லை.
Apple Pay-ஐ ஏற்பதற்கான பிற வழிகள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோர் செக்அவுட் மூலம் Apple Pay-ஐ ஏற்பது மட்டுமின்றி, நேரிலும் மொபைல் செயலிகள் மூலமாகவும் Apple Pay பேமெண்ட்டுகளை நீங்கள் ஏற்கலாம்.
நேரில் Apple Pay
நீங்கள் Shopify POS-ஐயும், WisePad 3 கார்டு ரீடர், Tap & Chip ரீடர் அல்லது Chipper 2X BT கார்டு ரீடர் போன்ற ஆதரிக்கப்படும் கார்டு ரீடரையும் பயன்படுத்தும்போது நேரில் Apple Pay கிடைக்கிறது. இந்த அம்சம் iPhone-இல் Tap to Pay உடனும் வேலை செய்கிறது. எந்தவொரு ஆதரிக்கப்படும் கார்டு ரீடரிலும் வாடிக்கையாளர்கள் தங்களின் iPhone அல்லது Apple Watch-ஐத் தட்டி Apple Pay மூலம் பணம் செலுத்தலாம். பேமெண்ட் உடனடியாகச் செயலாக்கப்படும், மேலும் வாடிக்கையாளர் தனது கிரெடிட் கார்டை வழங்கவோ, தனது iOS சாதனத்தின் கீபோர்டைப் பயன்படுத்திக் கட்டண விவரங்களை உள்ளிடவோ தேவையில்லை.
Apple Pay Cash
உங்கள் வணிகம் அமெரிக்காவில் அமைந்திருந்து, ஆதரிக்கப்படும் கார்டு ரீடருடன் நீங்கள் Shopify POS-ஐப் பயன்படுத்தினால் Apple Pay Cash கிடைக்கும். iPhone அல்லது Apple Watch-ஐப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் Apple Pay Cash கார்டு மூலம் பணம் செலுத்தும் விருப்பத்தை நீங்கள் வழங்கலாம். நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தால், அவர்கள் Discover-ஐ ஆதரிக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க உங்கள் கட்டண வழங்குநரைக் கலந்தாலோசிக்கவும்.
மொபைல் செயலிகளில் Apple Pay
உங்கள் ஸ்டோரில் iOS Buy SDK-ஐப் பயன்படுத்தும் iOS செயலி இருந்தால் Apple Pay கிடைக்கும்.
FAQ
Apple Pay செயல்பாடு, கிரெடிட் கார்டு இணக்கத்தன்மை மற்றும் ஆர்டர் காட்சி ஆகியவை குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பின்வருமாறு.
Apple Pay மூலம் எனது வாடிக்கையாளர்கள் எந்தக் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாம்?
Apple Pay-ஐப் பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்கும்போது எந்தக் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு கட்டண வழங்குநரே தீர்மானிக்கிறார். Apple Pay-ஐப் பயன்படுத்த, உங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் கிரெடிட் கார்டு தகவலைத் தங்கள் Apple Pay வாலட்டில் சேர்க்க வேண்டும். வாடிக்கையாளர் தனது Apple Pay வாலட்டில் சேர்க்கும் கிரெடிட் கார்டு வகையை நீங்கள் பயன்படுத்தும் கட்டண வழங்குநர் ஏற்கவில்லை எனில், அந்த வாடிக்கையாளரால் Apple Pay-ஐப் பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை வாங்க முடியாது.
Apple Pay ஆர்டர் எப்படிக் காட்டப்படும்?
Apple Pay-ஐப் பயன்படுத்த, உங்கள் கட்டணச் செயலி நெட்வொர்க் டோக்கனைசேஷனை ஆதரிக்க வேண்டும். இதன் விளைவாக, ஆர்டரின் கட்டண விவரங்களில் உள்ள வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் காட்டப்படமாட்டாது. அதற்குப் பதிலாக, வாடிக்கையாளரின் Apple Pay சாதனக் கணக்கு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களே காட்டப்படும்.
செக்அவுட்டில் நான் Apple Pay-ஐ மட்டும் ஏற்க முடியுமா?
செக்அவுட்டில் Apple Pay-ஐ வழங்க, உங்கள் Shopify Payments கணக்கில் குறைந்தபட்சம் ஒரு கிரெடிட் கார்டு வகையாவது செயலில் இருக்க வேண்டும்.