சார்ஜ்பேக்குகள் மற்றும் விசாரணைகளைத் தடுத்தல்

உங்கள் ஸ்டோரில் வாடிக்கையாளர்களைக் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்கும்போது, சார்ஜ்பேக்குகள் அல்லது விசாரணைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. சில சார்ஜ்பேக்குகள் மற்றும் விசாரணைகளைத் தடுக்க, நீங்கள் சில பொதுவான வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

  • நீங்கள் அவற்றை நிறைவேற்றுவதற்கு முன், சந்தேகத்திற்குரிய ஆர்டர்களை விசாரிக்கவும்.
  • உங்கள் ஸ்டோரில் உங்கள் தொடர்பாளர் தகவலைக் கண்டறிவது எளிதாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
  • வாடிக்கையாளர்கள் ஏதேனும் சிக்கல்கள் தொடர்பாக உங்களைத் தொடர்புகொள்ளும்போது அவர்களுக்கு விரைவாகப் பதிலளிக்கவும்.
  • உங்கள் ஸ்டோரின் கொள்கைகள் பற்றி வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தவும்.
  • ஷிப்பிங் செயல்முறை முழுவதும் உங்கள் வாடிக்கையாளர்களுக்குப் புதுப்பிப்புகளை வழங்கவும். உங்களால் முடிந்தவரை ஆன்லைன் கண்காணிப்பு மற்றும் டெலிவரி உறுதிப்படுத்தலைப் பயன்படுத்தவும்.

நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்தினால், தகராறு முறைகளை அடையாளம் காணவும், எந்தத் தடுப்புப் படிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் உங்கள் சார்ஜ்பேக் வீதத்தைக் கண்காணிக்கலாம்.

நேரடி விற்பனைக்கு, Shopify POS-க்கான மோசடித் தடுப்பு நடைமுறைகளை மதிப்பாய்வு செய்யவும்.

காரணத்தின் அடிப்படையில் சார்ஜ்பேக்குகளைத் தடுத்தல்

பல்வேறு வகையான சார்ஜ்பேக்குகள் மற்றும் விசாரணைகளையும் குறிப்பிட்ட வழிகளில் தடுக்கலாம்:

சார்ஜ்பேக்குகள் மற்றும் விசாரணைகளுக்கான காரணங்கள், அவற்றைத் தடுக்கும் விதம்
சார்ஜ்பேக் அல்லது விசாரணைக்கான காரணம்இதன் அர்த்தம்இதைத் தடுப்பது எப்படி
மோசடியானதுவாடிக்கையாளர் இந்தக் கட்டணத்தை அங்கீகரிக்கவில்லை. இதுவே சார்ஜ்பேக் பெறுவதற்கான மிகவும் பொதுவான காரணமாகும், மேலும் கார்டு தொலைந்துபோனால் அல்லது திருடப்பட்டால் இது நிகழக்கூடும்.
  • உங்கள் பில்லிங் அறிக்கை உரை வாடிக்கையாளர்களுக்கு எளிதில் அடையாளம் காணக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்யவும். நீங்கள் உங்கள் ஸ்டோரின் பெயர் அல்லது டொமைன் பெயரைப் பயன்படுத்த வேண்டும், அப்போதுதான் வாடிக்கையாளர் அதைத் தங்கள் கிரெடிட் கார்டு பில்லில் கண்டறிய முடியும். நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்துகிறீர்கள் எனில், Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் பில்லிங் அறிக்கை உரையை அமைக்கலாம்.
  • வாடிக்கையாளர்கள் எதற்காகப் பணம் செலுத்தினர் என்பதை அவர்களுக்கு நினைவூட்ட, பேமெண்ட்டின்போது ரசீதுகளை அனுப்பவும்.
  • நீங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது கனடாவிற்குப் பொருட்களை ஷிப்பிங் செய்தால், AVS சரிபார்ப்பில் தேர்ச்சி பெறும் ஆர்டர்களுக்கு மட்டுமே தயாரிப்புகளை ஷிப்பிங் செய்வது குறித்துப் பரிசீலிக்கவும். AVS சரிபார்ப்பில் தேர்ச்சி பெறாத முகவரிக்கு ஷிப்பிங் செய்வதற்கு முன்பு வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளவும் முடியும்.
அடையாளம் காணப்படாததுகார்டு அறிக்கையில் உள்ள வணிகரின் பெயரையோ இடத்தையோ வாடிக்கையாளரால் அடையாளம் காண முடியவில்லை. மோசடிக் குறியீட்டிற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்களோ, அதே வழியில் இதற்கும் பதிலளிக்கவும்.
  • உங்கள் வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு பில்லில் காட்டப்படும் பில்லிங் அறிக்கையைத் திருத்துவதை உறுதிசெய்யவும். வாடிக்கையாளர் என்ன வாங்கினார் என்பதை நினைவில் கொள்ளும் வகையில், உங்கள் ஸ்டோரின் பெயர் அல்லது டொமைனை அமைக்க வேண்டும். நீங்கள் Shopify Paymentsஐப் பயன்படுத்தினால், Shopify நிர்வாகியிலிருந்து பில்லிங் அறிக்கை உரையை அமைக்கலாம்.
இரட்டிப்புஒரே தயாரிப்பு அல்லது சேவைக்குத் தன்னிடம் இருமுறை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வாடிக்கையாளர் நம்புகிறார்.
  • தவறுதலாக இருமுறைக் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், கட்டணத் திருப்பலைத் தடுக்க, இரண்டாவது கட்டணத்தை உடனடியாகத் திரும்பப்பெறச் செய்து, நடந்ததை வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்த அவரைத் தொடர்புகொள்ளவும்.
  • உங்கள் ஸ்டோரில் உள்ள வெவ்வேறு தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கு ஒரே மாதிரியான விலை நிர்ணயிக்கப்பட்டு, ஆனால் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் (இதன் மூலம், பல பரிவர்த்தனைகளை இரட்டிப்புக் கட்டணம் என்று வாடிக்கையாளர் தவறாகப் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது), ஒவ்வொரு தயாரிப்பு அல்லது சேவை என்ன என்பதையும் அதற்கான கட்டணங்கள் தனித்தனியாக வசூலிக்கப்படுவதையும் ரசீதுகளும் தயாரிப்பு விளக்கங்களும் தெளிவாகக் குறிப்பிடுகின்றனவா என்பதை உறுதிசெய்து, வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவும். இந்த விவரங்களை உங்கள் ஸ்டோரின் கொள்கைகள் அல்லது FAQ பக்கங்களிலும் ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்களிலும் சேர்ப்பதையும் கருத்தில் கொள்ளவும்.
சந்தா ரத்துசெய்யப்பட்டதுவாடிக்கையாளரின் கூற்றுப்படி, சந்தாவை ரத்துசெய்த பிறகும் அதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடர் கட்டணத்திற்கும் முன்பாக வாடிக்கையாளர் ஒரு நினைவூட்டலை எதிர்பார்த்தார், ஆனால் அதைப் பெறவில்லை என்பதையும் இது குறிக்கலாம்.
  • வாடிக்கையாளர் கேட்கும்போது உடனடியாக அவரது சந்தாக்களை ரத்துசெய்து, ரத்துசெய்ததற்கான உறுதிப்படுத்தலை அவருக்கு வழங்கவும்.
  • வாடிக்கையாளர்கள் தொடர் கட்டணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்கள் என்பதையும் ஒவ்வொரு கட்டணத்திற்கும் முன்பாக அவர்களுக்கு நினைவூட்டலை அனுப்புவீர்கள் என்பதையும் உங்கள் பதிவுப் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடவும்.
  • உங்கள் ஸ்டோரில் சந்தா ரத்துசெய்தல் கொள்கையைச் சேர்க்கவும்.
தயாரிப்பு கிடைக்கப்பெறவில்லைவாங்கிய பொருட்களோ சேவைகளோ தற்குக் கிடைக்கவில்லை என வாடிக்கையாளர் கூறுகிறார்.
  • ஆர்டருக்கான பேமெண்ட்டை வசூலித்தவுடன் கூடிய விரைவில் தயாரிப்புகளை ஷிப்பிங் செய்யவும்.
  • ஷிப்பிங் மற்றும் விநியோகத் தேதிகளை உங்களால் முடிந்தவரைத் துல்லியமாகக் கணிக்கவும் அல்லது ஷிப்பிங் நிறுவனத்திடமிருந்து பெற்ற கண்காணிப்புத் தகவலை வாடிக்கையாளருக்கு வழங்கவும்.
  • ஷிப்பிங் தாமதமானால், உங்கள் வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு அவர்களின் ஆர்டரின் நிலையைத் தெரியப்படுத்தவும்.
தயாரிப்பு ஏற்கத்தக்கதல்லதயாரிப்பு கிடைக்கப்பெற்றது, ஆனால் அதில் குறைபாடு உள்ளது, சேதமடைந்துள்ளது அல்லது விவரிக்கப்பட்டபடி இல்லை.
  • உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் படங்களும் விளக்கங்களும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதிசெய்யவும்.
  • நீங்கள் பருப்பொருட்களை ஷிப்பிங் செய்கிறீர்கள் என்றால், போக்குவரத்தின்போது அவை சேதமடையாமல் பாதுகாக்கும் வகையில் தயாரிப்புகளைப் பேக் செய்து ஷிப்பிங் செய்வதை உறுதிசெய்யவும்.
  • வாடிக்கையாளர்களுக்கு விரைந்து பதிலளிக்கவும், குறைபாடுள்ள அல்லது சேதமடைந்த தயாரிப்புகளை மாற்றித் தரவும்.
கிரெடிட் செயலாக்கப்படவில்லைவாங்கிய தயாரிப்பு திருப்பியளிக்கப்பட்டுவிட்டது அல்லது உங்களுடனான பரிவர்த்தனை ரத்துசெய்யப்பட்டுவிட்டது என்று வாடிக்கையாளர் உங்களுக்குத் தெரிவித்துள்ளார், ஆனால் அதற்கான பணத்தையோ கிரெடிட்டையோ நீங்கள் இன்னும் அவருக்கு வழங்கவில்லை.
  • தெளிவான திருப்பியளிப்புக் கொள்கையைக் கொண்டிருக்கவும், மேலும் அதை உங்கள் ஸ்டோரில் எளிதாகக் கண்டறியும் வகையில் அமைக்கவும்.
  • கூடிய விரைவில் பணத்தைத் திரும்பப்பெறுதல்களை வழங்குவதை உறுதிசெய்யவும்.
பொதுவானவைபெரும்பாலான கட்டணத் திருப்பல்களைப் போலல்லாமல், இந்த வகையான கட்டணத் திருப்பல் விவரிக்கப்பட்ட குறிப்பிட்ட வகைகளின் கீழ் வராது.
  • மற்ற கட்டணத் திருப்பல் காரணங்களுக்காக வழங்கப்பட்ட பரிந்துரைகள் இதற்கும் உதவக்கூடும்.

Shopify POS மூலம் மோசடி அபாயத்தைக் குறைத்தல்

வாடிக்கையாளர் உங்கள் ஸ்டோரில் இருந்தாலும்கூட, கார்டு விவரங்களை மேனுவலாக உள்ளிட்டுச் செய்யப்படும் பேமெண்ட்டுகள், கார்டு இல்லாத பரிவர்த்தனைகளாகக் கருதப்படும். இவை கூடுதல் மோசடி அபாயத்தைக் கொண்டுள்ளன.

Shopify POSஐப் பயன்படுத்தும்போது மோசடி அபாயத்தைக் குறைக்க:

இந்த நடைமுறைகள் அனைத்துக் கட்டணத் திருப்பல்களையும் தடுத்துவிடாது. அதைப் பெற்றால், கட்டணத் திருப்பல் அல்லது விசாரணையைத் தீர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளவும்.