Fraud Control செயலி

Fraud Control செயலி ஐகான்
Shopify App Store-இலிருந்து Fraud Control-ஐ நிறுவவும்.

Fraud Control செயலியானது உங்கள் Shopify நிர்வாகியில் ஒரு டாஷ்போர்டை உருவாக்கி காட்டுகிறது, இது உங்கள் ஸ்டோரில் நடைபெறும் மோசடி அல்லது சாத்தியமான மோசடி தொடர்பான பகுப்பாய்வைக் காட்டுகிறது. இந்த டாஷ்போர்டு சார்ஜ்பேக்குகள், Shopify Protect, மோசடி காரணமாக ரத்துசெய்யப்பட்ட ஆர்டர்கள் மற்றும் உங்கள் ஸ்டோர் எதிர்கொள்ளும் பொதுவான ஆபத்து நிலை குறித்த விவரங்களை வழங்குகிறது.

நீங்கள் Shopify App Store-இலிருந்து Fraud Control-ஐ நிறுவலாம். Fraud Control செயலியானது மூன்றாம் தரப்பு மோசடிக் கட்டுப்பாட்டுச் செயலிகளுடன் முரண்படாது, மேலும் மற்ற மோசடிச் செயலிகளின் பயன்பாட்டையும் பாதிக்காது.

Shopify Payments கிடைக்கும் இடங்களிலுள்ள அனைத்து ஸ்டோர் திட்டங்களுக்கும் Fraud Control கிடைக்கும். உங்கள் கட்டணச் செயலியாக Shopify Payments-ஐப் பயன்படுத்தாவிட்டால் சில தரவுகள் கிடைக்காது.

Fraud Control டாஷ்போர்டு

நீங்கள் Fraud Control செயலியை நிறுவிய பிறகு, உங்கள் Shopify நிர்வாகியில் செயலிகள் > Fraud Control என்பதற்குச் செல்வதன் மூலம் டாஷ்போர்டைப் பார்க்கலாம். Fraud Control டாஷ்போர்டானது மோசடியால் ஏற்படும் உங்கள் ஆபத்தின் நிலை குறித்த தகவல்களுடன் பின்வரும் தகவல்களையும் உள்ளடக்கிய டாஷ்போர்டைக் காட்டுகிறது:

  • ஏற்பு விகிதம்: நீங்கள் தேர்ந்தெடுத்த தேதிக்கான வரம்பில் உள்ள அனைத்து ஆர்டர்களிலும் Shopify-இன் மோசடி பகுப்பாய்வு மூலம் குறைந்த ஆபத்து அல்லது நடுத்தர ஆபத்து என குறிக்கப்பட்ட ஆர்டர்களின் சதவீதம்.
  • அதிக ஆபத்துள்ள ஆர்டர்கள்: நீங்கள் தேர்ந்தெடுத்த தேதிக்கான வரம்பில் உள்ள அனைத்து ஆர்டர்களிலும் Shopify-இன் மோசடி பகுப்பாய்வு மூலம் அதிக ஆபத்துள்ளவை எனக் குறிக்கப்பட்ட ஆர்டர்களின் சதவீதம்.
  • மோசடியான சார்ஜ்பேக்குகள்: நீங்கள் தேர்ந்தெடுத்த தேதிக்கான வரம்பில் உள்ள அனைத்து சார்ஜ்பேக்குகளிலும் மோசடியானவை எனக் குறிக்கப்பட்ட சார்ஜ்பேக்குகளின் சதவீதம்.
  • Shopify Protect பாதுகாப்பு: நீங்கள் தேர்ந்தெடுத்த தேதிக்கான வரம்பில் உள்ள Shopify Protect மூலம் மோசடியான சார்ஜ்பேக்குகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட அனைத்து ஆர்டர்களின் மொத்த மதிப்பு. நிறைவேற்றத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்தத் தரவு பத்து நாட்கள் தாமதமாகக் கிடைக்கும்.
  • Shopify Protect காப்பீடு: நீங்கள் தேர்ந்தெடுத்த தேதிக்கான வரம்பில் உள்ள தகராறில் இருக்கும் மற்றும் Shopify Protect மூலம் பாதுகாக்கப்பட்ட அனைத்து ஆர்டர்களின் மொத்த மதிப்பு.
  • மோசடி காரணமாக ரத்துசெய்யப்பட்ட ஆர்டர்கள்: நீங்கள் தேர்ந்தெடுத்த தேதிக்கான வரம்பில் மோசடியான செயல்பாடு காரணமாக பணியாளர்கள் அல்லது செயலிகளால் பணம் திரும்பியளிக்கப்பட்ட அனைத்து ஆர்டர்களின் மொத்த மதிப்பு.

உங்கள் ஸ்டோர் Shopify Payments-ஐப் பயன்படுத்தவில்லை எனில், ஏற்பு விகிதம், அதிக ஆபத்துள்ள ஆர்டர்கள் மற்றும் மோசடி காரணமாக ரத்துசெய்யப்பட்ட ஆர்டர்கள் ஆகியவற்றுக்கான தரவை மட்டுமே உங்களால் அணுக முடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பீட்டுக் காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த மதிப்புகளில் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதையும் டாஷ்போர்டு காட்டுகிறது.

நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்தினால், உங்கள் ஸ்டோரின் சார்ஜ்பேக் நல நிலையை உங்களால் அணுக முடியும். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அமைத்துள்ள தரநிலைகளின் அடிப்படையில் பின்வரும் நிலைகள் அமைந்துள்ளன:

  • நல்ல நிலை: உங்கள் ஸ்டோரில் உள்ள சார்ஜ்பேக்குகளின் எண்ணிக்கை மொத்த ஆர்டர்களின் எண்ணிக்கையில் 0.4%-க்கும் குறைவாக இருப்பதை இந்த நிலை குறிக்கிறது. உங்கள் ஸ்டோரின் ஆபத்து நிலை சராசரிக்கும் குறைவாகவே உள்ளது.
  • ஆபத்தில் உள்ளது: உங்கள் ஸ்டோரில் உள்ள சார்ஜ்பேக்குகளின் எண்ணிக்கை மொத்த ஆர்டர்களின் எண்ணிக்கையில் 0.4% முதல் 0.6% வரை இருப்பதை இந்த நிலை குறிக்கிறது. உங்கள் ஸ்டோரின் ஆபத்து நிலை சராசரியாக உள்ளது, அத்துடன் மோசடியான செயல்பாடு காரணமாக உங்கள் ஸ்டோர் ஆபத்தில் இருக்கலாம் என்பதையும் இது குறிக்கலாம்.
  • அதிகரித்த ஆபத்து: உங்கள் ஸ்டோரில் உள்ள சார்ஜ்பேக்குகளின் எண்ணிக்கை மொத்த ஆர்டர்களின் எண்ணிக்கையில் 0.6%-க்கும் அதிகமாக இருப்பதை இந்த நிலை குறிக்கிறது. உங்கள் ஸ்டோரின் ஆபத்து நிலை சராசரியை விட அதிகமாக உள்ளது, அத்துடன் உங்கள் ஸ்டோரில் இருக்க வேண்டியதை விட அதிக ஆபத்து இருக்கலாம் என்பதையும் இது குறிக்கலாம்.

இந்தப் பிரிவுகள் எதிலேனும் விரிவாக்கப்பட்ட பார்வையைத் திறக்க, நீங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் பிரிவிலுள்ள விளக்கப்பட ஐகானைக் கிளிக் செய்யவும்.

தேதியின்படி ஃபில்டர் செய்

உங்களுக்கு எந்தத் தேதிக்கான வரம்பில் தகவல் தேவையோ அந்தத் தேதிக்கான வரம்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இயல்பான தேதிக்கான வரம்பு 30 நாட்கள் ஆகும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Fraud Control என்பதற்குச் செல்லவும்.

  2. தேதியைக் காட்டும் குறிகாட்டியைக் கிளிக் செய்யவும்.

  3. தேதிக்கான வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்:

    • தேதிக்கான வரம்பு விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
    • தொடக்கத் தேதியையும் முடிவுத் தேதியையும் தேர்ந்தெடுப்பதன் மூலம் பிரத்தியேகத் தேதிக்கான வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒப்பீட்டுத் தேதிக்கான வரம்பு

தேதிக்கான வரம்பிற்கு அடுத்து ஒப்பீட்டுத் தேதிக்கான வரம்பு காட்டப்படும். Fraud control செயலியானது உங்களின் தற்போதைய தரவை அதே நீளமுடைய முந்தைய காலப்பகுதியின் தரவுடன் ஒப்பிடுகிறது.

எடுத்துக்காட்டாக, மே 8, 2023 அன்று உங்கள் தேதிக்கான வரம்பாக கடைசி 90 நாட்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். டாஷ்போர்டில் காட்டப்படும் தரவு பிப்ரவரி 7, 2023 முதல் மே 7, 2023 வரையிலானது. ஒப்பீட்டுத் தேதிக்கான வரம்பு நவம்பர் 10, 2022 முதல் பிப்ரவரி 6, 2023 வரையிலான முந்தைய 90 நாட்களாக இருக்கும்.

ஒப்பீட்டுத் தேதிக்கான வரம்பானது உங்கள் தரவிற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் தேதிக்கான வரம்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும், மேலும் இதை மாற்ற முடியாது. இருப்பினும், நீங்கள் விரும்பினால் ஒப்பீட்டை அகற்றலாம்.

ஒப்பீட்டுத் தேதிக்கான வரம்பை அகற்று

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Fraud Control என்பதற்குச் செல்லவும்.

  2. தேதிக்கான வரம்பில் ஒப்பிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. ஒப்பீடு இல்லை என்பதைக் கிளிக் செய்யவும்.

Fraud Control செக்அவுட் விதிகள்

Fraud Control செக்அவுட் விதிகள், மோசடியானவை எனச் சந்தேகிக்கப்படும் ஆர்டர்களை வடிகட்டவும் தடுக்கவும் உங்களை அனுமதிக்கின்றன. நீங்கள் வரையறுக்கும் விதிகளின் தொகுப்பின் அடிப்படையில், செக்அவுட்கள் ஆர்டர்களாவதை இந்தச் செயலி தடுக்கும்.

Fraud Control செக்அவுட் விதிகள் உங்கள் வணிகத்தைப் பல வழிகளில் பாதுகாக்க உதவும்:

  • உள்ளமைந்த மோசடி பகுப்பாய்வு வழங்குவதற்கும் மேலாக, கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கலாம்.
  • மின்னஞ்சல்களுக்கு வடிப்பான்களை உருவாக்கலாம்.
  • முகவரிப் பண்புக்கூறுகளுக்கு வடிப்பான்களை உருவாக்கலாம்.
  • IP முகவரிகளுக்கு வடிப்பான்களை உருவாக்கலாம்.

விதிகளை அமைத்தல்

விதிகள் மோசடியைத் தடுப்பதை உறுதிசெய்ய கவனமாக உருவாக்கப்பட வேண்டும், அதே சமயம் முறையான செக்அவுட்களைத் தடுப்பதைத் தவிர்க்க வேண்டும். சார்ஜ்பேக்குகள் நடக்காது என்பதையோ அல்லது ஸ்டோரில் சார்ஜ்பேக்குகளுக்கு எதிரான உத்தரவாதத்தையோ இந்த விதிகள் வழங்காது.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Fraud Control என்பதற்குச் செல்லவும்.

  2. விதிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. விதியை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. புதிய விதி பக்கத்தில், செக்அவுட் நிபந்தனைகள் பிரிவில் உங்கள் விதியை உள்ளமைக்கவும். ஒவ்வொரு விதியும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செக்அவுட் நிபந்தனைகளைக் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, அத்தகைய குறிப்பிட்ட நிபந்தனைகளைக் கொண்ட ஆர்டர்களைத் தடுப்பதற்கான விதியை உருவாக்க IP முகவரி மற்றும் ZIP குறியீடு ஆகிய இரண்டையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

  5. பயன்படுத்தப்படும் செக்அவுட் நிபந்தனைகளின் அடிப்படையில் விதியின் பெயர் புதுப்பிக்கப்படும், இதைத் திருத்த முடியாது.

  6. அனைத்துப் புலங்களையும் சேர்த்த பிறகு சேமி என்பதைக் கிளிக் செய்யலாம்.

  7. இது தானாகவே விதியை இயக்கிச் செயலாக்கும்.

  8. (விரும்பினால்) நீங்கள் குறிப்புகளை அல்லது விதியின் விளக்கத்தைச் சேர்க்கலாம்.

விதியை நீக்குதல் அல்லது முடக்குதல்

  1. விதிகள் பக்கத்திலிருந்து, நீங்கள் முடக்க அல்லது நீக்க விரும்பும் விதிகளின் தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும்.
  2. நீக்கு அல்லது முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும், இது உடனடியாக அந்த விதியை முடக்கும் அல்லது நீக்கும்.

Fraud Control செக்அவுட் விதிகள் FAQ

Fraud Control செக்அவுட் விதிகளால் மோசடியை முழுவதுமாகத் தடுக்க முடியுமா?

இல்லை. உங்களுக்கு ஒருபோதும் மோசடியான ஆர்டர் வராது என்று Fraud Control ஆல் உத்தரவாதம் அளிக்க முடியாது. செயலியில் நீங்கள் உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட விதியுடன் பொருந்தினால் மட்டுமே, செக்அவுட் மோசடியானதா இல்லையா என்பதை அதனால் கணிக்க முடியும். முடிந்தால், ஆர்டரை நிறைவேற்றுவதற்கு முன்பு அதன் மோசடி பகுப்பாய்வை மதிப்பாய்வு செய்யவும்.

வாடிக்கையாளரின் ஆர்டர் Fraud Control இல் அமைக்கப்பட்ட விதியுடன் பொருந்துகிறது என்பது அவருக்குத் தெரியவருமா?

இல்லை. வாடிக்கையாளரின் ஆர்டர் மோசடியானதாகத் தோன்றினால் Fraud Control வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காது. செக்அவுட் செயல்முறையின் போது, தடுக்கப்பட்ட செக்அவுட்டிற்கு 'செக்அவுட்டை நிறைவுசெய்ய முடியவில்லை, வாங்குபவர் கடையின் உரிமையாளரைத் தொடர்புகொள்ள வேண்டும்' என்ற பிழைச் செய்தி காட்டப்படும். தடுக்கப்பட்ட செக்அவுட்கள் உங்கள் ஸ்டோரின் கைவிடப்பட்ட செக்அவுட்கள் பிரிவில் காட்டப்படும்.

Shopify Flow

உங்கள் ஸ்டோரில் மோசடியான செயல்பாட்டை நிர்வகிக்க நீங்கள் செலவிடும் நேரத்தையும் முயற்சியையும் குறைக்க Shopify Flow இல் தானியங்குச் செயல்களைப் பயன்படுத்தலாம். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள Fraud Control செயலிப் பக்கத்திலிருந்து, முன்வடிவமைக்கப்பட்ட பல Shopify Flow வார்ப்புருக்களை நீங்கள் நிறுவலாம்:

  • அதிக ஆபத்துள்ள ஆர்டர்களின் பேமெண்ட்டை மேனுவலாகப் பெறுதல்: ஆர்டரின் ஆபத்து நிலை அதிகம் என இருந்தால், ஆர்டரின் பேமெண்ட் தானாகவே பெறப்படுவதை இந்த வார்ப்புரு நிறுத்துகிறது.
  • அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை ரத்துசெய்து மீளிருப்பு செய்தல்: இந்த வார்ப்புரு அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை ரத்துசெய்கிறது, ஆர்டர் செய்யப்பட்ட உருப்படிகளை உங்கள் சரக்கு இருப்பில் மீண்டும் சேர்க்கிறது, மேலும் ஆர்டர் ரத்துசெய்யப்பட்டது குறித்து வாடிக்கையாளருக்கு அறிவிக்கிறது.
  • தவறான மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து வரும் ஆர்டர்களை ரத்துசெய்தல்: முந்தைய மோசடியான ஆர்டர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஆர்டர் செய்யப்பட்டால், இந்த வார்ப்புரு அந்த ஆர்டருக்கு டேக்குகளைச் சேர்த்து அதை ரத்துசெய்யும்.
  • வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் ஆர்டர்களை ஒரு நாளைக்கு ஐந்து என்ற அளவில் கட்டுப்படுத்துதல்: வாடிக்கையாளர் ஒரே நாளில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆர்டர்களைச் செய்தால், அவருடைய எல்லா ஆர்டர்களையும் இந்த வார்ப்புரு ரத்துசெய்யும்.
  • சார்ஜ்பேக் குறித்து உங்கள் குழுவுக்கு அறிவித்தல்: உங்கள் ஸ்டோரில் சார்ஜ்பேக் பெறப்பட்டால், இந்த வார்ப்புரு பணியாளர் உறுப்பினர்களுக்கு உள்ளக மின்னஞ்சலை அனுப்பும்.
  • அதிக ஆபத்துள்ள ஆர்டர்கள் குறித்த அறிவிப்பைப் பெறுதல்: பேமெண்ட் பெறப்படுவதற்கு முன்பு அதிக ஆபத்துள்ள ஆர்டர் கிடைத்தால், இந்த வார்ப்புரு பணியாளர் உறுப்பினர்களுக்கு உள்ளக மின்னஞ்சலை அனுப்பும்.
  • "ரிட்டர்னைத் தவறாகப் பயன்படுத்தும்" வாடிக்கையாளர்கள் குறித்து அறிவிப்பைப் பெறுதல்: பல ரிட்டர்ன்களைச் செய்த வாடிக்கையாளரால் ஆர்டர் செய்யப்பட்டால், இந்த வார்ப்புரு ஆர்டருக்கு டேக்குகளைச் சேர்த்து பணியாளர் உறுப்பினர்களுக்கு உள்ளக மின்னஞ்சலை அனுப்பும்.

Shopify Flow இல் பணிப்பாய்வுகளை உருவாக்கிய அனுபவம் உங்களுக்கு இருந்தால், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப இந்த வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்கலாம் அல்லது சொந்தமாக இடர் மேலாண்மைப் பணிப்பாய்வை உருவாக்கலாம்.