பேமெண்ட் பெறுதல்

Shopify ஆதரிக்கும் பேமெண்ட் முறைகள் அனைத்தும் உங்கள் பரிவர்த்தனைகளைச் செயலாக்க மூன்றாம் தரப்பு வழங்குநர்களையே நம்பியுள்ளன. இந்த வழங்குநர்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கலாம், மேலும் அவர்களின் சேவையைப் பயன்படுத்தி நீங்கள் விற்கக்கூடிய தயாரிப்புகள் குறித்த விதிகளையும் செயல்படுத்தலாம். பேமெண்ட் முறையை நீங்கள் அமைக்கும்போது, அந்தச் சேவையை வழங்கும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு அவர்களின் விதிகளையும் கட்டணங்களையும் நீங்கள் புரிந்துகொண்டிருப்பதை உறுதிசெய்யவும்.

பேமெண்ட்டை நீங்கள் எவ்வாறு பெறுகிறீர்கள்

கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளை ஏற்க நீங்கள் பேமெண்ட் வழங்குநரை அமைக்கும்போது, ஒவ்வொரு பேமெண்ட்டும் செயலாக்கப்பட வேண்டும், எனவே வாடிக்கையாளர் தம் ஆர்டருக்காகப் பணம் செலுத்துவதற்கும், நீங்கள் பேமெண்ட்டைப் பெறுவதற்கும் இடையே பொதுவாகக் காலதாமதம் ஏற்படும். பேமெண்ட் செயலாக்கப்பட்ட பிறகு, கொள்முதல் தொகை உங்களின் வணிகர் கணக்கிற்கு மாற்றப்படும்.

PayPal Express Checkout போன்ற சில பேமெண்ட் வழங்குநர்கள் உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து உங்களுக்கு நிதியை மாற்றுவதற்கான பிரத்தியேக முறைகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் எவ்வாறு பேமெண்ட் செலுத்துகிறார்கள் என்பதை உறுதிசெய்ய, நீங்கள் பயன்படுத்தும் பேமெண்ட் வழங்குநரிடம் சரிபார்க்கவும்.

மணி ஆரடர்கள் அல்லது வங்கிப் பரிமாற்றங்கள் போன்ற மேனுவல் பேமெண்ட்டுகளை உங்கள் ஆன்லைன் செக்அவுட்டிற்கு வெளியே நீங்கள் ஏற்கலாம். உங்களின் பேமெண்ட் வழங்குநராக Shopify Payments ஐ நீங்கள் செயல்படுத்தவில்லை எனில், Shopify மூலம் நிதி ரீதியாகத் தரகு செய்யப்படாத அனைத்து ஆர்டர்களுக்கும் உங்களிடம் மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் வசூலிக்கப்படும். Shopify இன் செக்அவுட் சிஸ்டத்தின் வழியாகச் செல்லும் அனைத்து ஆர்டர்களும் இதில் அடங்கும்.

நீங்கள் Shopify Payments ஐச் செயல்படுத்தியிருந்தால், Shopify Payments அல்லது குறிப்பிட்ட விரைவான செக்அவுட்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும்போது நீங்கள் பேஅவுட்டுகளைப் பெறுவீர்கள். மூன்றாம் தரப்புக் கட்டண நுழைவாயில்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தினால், உங்களின் Shopify நிர்வாகியில் பேஅவுட் தகவலைப் பார்க்க முடியாது.

வெவ்வேறு பேமெண்ட் வழங்குநர்கள் மற்றும் அவர்களின் வகைகளின் விளக்கங்கள், ஒவ்வொரு வழங்குநருடனும் வாடிக்கையாளர்கள் எவ்வாறு பேமெண்ட்டுகளைச் செலுத்துகிறார்கள், அத்துடன் ஒவ்வொரு வழங்குநரிடமிருந்தும் நீங்கள் எவ்வாறு பேமெண்ட் பெறுகிறீர்கள்.
பேமெண்ட் வழங்குநர்வழங்குநர் வகைவாடிக்கையாளர் எவ்வாறு பணம் செலுத்துகிறார்பேமெண்ட்டை நீங்கள் எவ்வாறு பெறுகிறீர்கள்
Shopify Paymentsகட்டண நுழைவாயில்Shopify Payments ஐப் பயன்படுத்துதல்Shopify Payments வழியாக
Apple Payவிரைவான செக்அவுட்Apple Pay ஐப் பயன்படுத்துதல்Shopify Payments வழியாக
Amazon Payகட்டண நுழைவாயில்Amazon Payஐப் பயன்படுத்துதல்Amazon மூலம்
Shopify Payments-இல் Amazon Payவிரைவான செக்அவுட்Amazon Payஐப் பயன்படுத்துதல்Shopify Payments வழியாக
Google Payவிரைவான செக்அவுட்Google Payஐப் பயன்படுத்துதல்Shopify Payments வழியாக
PayPal Express Checkoutவிரைவான செக்அவுட்PayPal-ஐப் பயன்படுத்துதல்PayPal மூலம்
PayPal Walletவிரைவான செக்அவுட்PayPal-ஐப் பயன்படுத்துதல்பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு மட்டும் Shopify Payments மூலம்
Shop Payவிரைவான செக்அவுட்Shop Payஐப் பயன்படுத்துதல்Shopify Payments வழியாக
Shop Pay Installmentsகட்டண நுழைவாயில்Shop Payஐப் பயன்படுத்துதல்Shopify Payments வழியாக

Shopify Payments மூலம் நீங்கள் எவ்வளவு அடிக்கடி பணம் பெறுகிறீர்கள்

நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்தினால், Shopify Payments ஆர்டர்களில் இருந்து பேஅவுட்களை நீங்கள் எப்போது பெறுவீர்கள் என்பதைப் பார்க்கவும், உள்ளமைக்கவும் உங்கள் பேஅவுட் நேரத்தைச் சரிபார்க்கலாம். கிரெடிட் கார்டு ஆர்டர்களுக்கான பேஅவுட்களை நீங்கள் எப்போது பெறுவீர்கள் என்பது குறித்து பிற கட்டண வழங்குநர்கள் தங்களுக்கெனச் சொந்தமாக விதிகளைக் கொண்டுள்ளனர். உங்களுக்கு எவ்வளவு அடிக்கடி பணம் செலுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வழங்குநரிடம் சரிபார்க்கவும்.

பேஅவுட் அனுப்பப்பட்ட பிறகு, அதை உடனடியாக உங்கள் வங்கி பெறாமல் போகலாம். பேஅவுட் அனுப்பப்பட்ட பிறகு, உங்கள் வங்கிக் கணக்கில் அதை டெபாசிட் செய்ய உங்கள் வங்கிக்கு ஐந்து நாட்கள் வரை ஆகலாம். உங்கள் வங்கிக்குப் பேஅவுட்கள் வருவதற்கும், அந்த நிதியை உங்கள் கணக்கிற்கு உங்கள் வங்கி மாற்றுவதற்கும் இடையிலான நேரத்தை Shopify கட்டுப்படுத்தாது. உங்கள் பேஅவுட்கள் தாமதமானால், உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.

நீங்கள் வங்கிகளை மாற்றினால் அல்லது உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் மாறினால், உங்கள் Shopify Payments அமைப்புகளில் தகவலைப் புதுப்பிக்கலாம். உங்கள் வங்கிக் கணக்குத் தகவலைத் திருத்துவது குறித்து மேலும் அறிக.

Shop Pay Installments

Shop Pay Installments-ஐப் பயன்படுத்திப் பெறப்பட்ட ஆர்டருக்கான பேமெண்ட்டைப் பெற்ற பிறகு, Shop Pay Installments-ஐப் பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட கட்டணம் நீங்கலாக, உங்கள் ஆர்டருக்கான முழுக் கட்டணமும் உங்களின் பிற Shopify Payments பரிவர்த்தனைகளுடன் வழங்கப்படும்.

இந்த ஆர்டர்களுக்கான பேஅவுட்கள் உங்கள் Shopify Payments பேஅவுட்களுடன் சேர்க்கப்படும். Shop Pay Installments கட்டணத்தில் நிலையான Shopify Payments கிரெடிட் கார்டு கட்டணம் அடங்கும். உங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து நீங்கள் பேமெண்ட்டுகளை வசூலிக்க வேண்டியதில்லை.

Shop Pay Installments பற்றி மேலும் அறிக.

உங்களுக்கு எவ்வளவு பேஅவுட் கிடைக்கும்

ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு உங்களிடம் பல மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் வசூலிக்கப்படலாம். கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, வழங்குநர், பெறுநர் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனம் ஆகிய அனைவரும் தங்களின் சேவைகளைப் பயன்படுத்தியதற்காகச் சிறிய கட்டணத்தை வசூலிப்பார்கள்.

Shopify Payments மூலம் செயலாக்கப்படும் ஆர்டர்களுக்கு உங்களிடம் மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது. உங்களின் Shopify சந்தாத் திட்டத்தைப் பொறுத்து கிரெடிட் கார்டு செயலாக்கக் கட்டணங்களைச் செலுத்துவீர்கள். Shopify-உடன் மூன்றாம் தரப்புக் கட்டண வழங்குநரை நீங்கள் பயன்படுத்தினால், உங்களிடம் மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படும். மூன்றாம் தரப்பு வழங்குநருடன் சேர்த்து Shopify Payments-ஐயும் பயன்படுத்தினால், ஒவ்வொரு பரிவர்த்தனையையும் எந்த வழங்குநர் செயலாக்குகிறார் என்பதைப் பொறுத்துக் கட்டணங்கள் மாறுபடும்.

கிரெடிட் கார்டு பேமெண்ட் எவ்வாறு செயலாக்கப்படுகிறது

வாடிக்கையாளர் தனது ஆன்லைன் ஆர்டருக்குக் கிரெடிட் கார்டைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும்போது, உங்கள் வணிகர் கணக்கில் நிதி சேர்க்கப்படுவதற்கு முன்பு அந்தப் பேமெண்ட் செயலாக்கப்பட வேண்டும். உங்கள் கட்டண வழங்குநரால் உங்களுக்கான கிரெடிட் கார்டு செயலாக்கம் செய்யப்படுகிறது.

இந்தச் செயலாக்கம் நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது: அங்கீகரித்தல், பெறுதல், தீர்வு செய்தல் மற்றும் நிதியுதவி.

அங்கீகரித்தல்

உங்கள் ஸ்டோரில் ஆர்டருக்குப் பணம் செலுத்த வாடிக்கையாளர் தங்களின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறார். கிரெடிட் கார்டு செல்லுபடியானதா என்பதை உறுதிசெய்ய, நீங்கள் அமைத்த கட்டண வழங்குநர், கிரெடிட் கார்டு வழங்குநரிடம் சரிபார்ப்பார். கார்டு செல்லுபடியாகும் மற்றும் போதுமான நிதி இருந்தால், பேமெண்ட்டை வழங்குநர் அங்கீகரிப்பார். இந்த நிலையில் நிதி எதுவும் மாற்றப்படாது.

பெறுதல்

பேமெண்ட் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அது பெறப்பட வேண்டும். பேமெண்ட்டைப் பெறுவதன் மூலம் பரிவர்த்தனை விவரங்கள் பெறுநருக்கு அனுப்பப்படும், இது உங்கள் வணிகத்தின் சார்பாகக் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைச் செயலாக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனமாகும்.

தீர்வு செய்தல்

பெறுநர் பேமெண்ட் விவரங்களை மதிப்பாய்வு செய்து, வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டைச் செயலாக்கும் நிறுவனத்திடமிருந்து தேவையான நிதியைக் கோருவார்.

கிரெடிட் கார்டு நிறுவனம் பரிவர்த்தனைத் தகவலை கார்டு வழங்குநருக்கு அனுப்பும். கார்டு வழங்குநர் மொத்தப் பரிவர்த்தனைத் தொகையிலிருந்து ஒரு சிறிய கட்டணத்தைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையைக் கிரெடிட் கார்டு நிறுவனத்திற்குத் திருப்பி அனுப்புவார். கார்டு நிறுவனம் தங்களது கட்டணத்தைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையைப் பெறுநருக்கு அனுப்பும்.

நிதியுதவி

பெறுநர் தொகையிலிருந்து ஒரு சிறிய கட்டணத்தைக் கழித்துவிட்டு, இறுதித் தொகையை உங்கள் வணிகர் கணக்கிற்கு மாற்றுவார்.