PayPal Express Checkout
கிரெடிட் கார்டுகள், வங்கிக் கணக்குகள், வாங்குபவரின் கிரெடிட் அல்லது PayPal கணக்கு இருப்புகள் போன்ற பல்வேறு கட்டண முறைகளின் மூலம் பேமெண்ட்டுகளை ஏற்க, PayPal Express Checkout உங்களை அனுமதிக்கிறது. உங்கள் Shopify ஸ்டோருடன் PayPal Express Checkout-ஐ இணைத்து, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு விரைவான செக்அவுட் பேமெண்ட் தீர்வாக இதை வழங்கலாம்.
உங்கள் Shopify ஸ்டோரை உருவாக்கும்போது, PayPal Express Checkout கணக்கை நீங்கள் தானாகவே பெறுவீர்கள். இந்தக் கணக்கை அமைக்க Shopify உங்கள் மின்னஞ்சலைக் கேட்கும், பிறகு அது PayPal-உடன் பகிரப்படும். உங்கள் PayPal Express Checkout கணக்கின் அமைவை உடனடியாக முடிப்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் PayPal Express Checkout-ஐப் பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரி பொதுவில் தெரிவதைத் தவிர்க்க, அதை உங்கள் Shopify நிர்வாகியின் பேமெண்ட்டுகள் அமைப்பிலிருந்து முடக்கலாம்.
பாதுகாப்புக்காக, கடையின் உரிமையாளர் மட்டுமே உங்கள் ஸ்டோரின் PayPal Express தகவலைத் திருத்த முடியும்.